பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
நீங்கள் இந்தியரா? நீங்கள் அவசியம் உங்கள் தொலைபேசி குறிப்பேட்டில் குறித்து வைத்திருக்கவேண்டிய எண்கள் கீழே தரப்பட்டுள்ளன. அப்பாவி இந்தியக்குடும்பங்களை நோக்கி குறிவைக்கப்பட்டிருக்கும் சட்ட தீவிரவாதத்திலிருந்து உங்களின் உயிரையும் மானத்தையும் காப்பாற்ற கண்டிப்பாக ஒரு நாள் இது தேவைப்படும்.
தீவிரவாதத்தில் பாதிக்கப்பட்டால் உயிர் அப்போதே போய்விடும். ஆனால் சட்ட தீவிரவாதத்திற்கு பலியானால் உயிரோடு சேர்ந்து மானம் , மரியாதை, பொருள் அனைத்தும் தினம் தினம் சட்ட தீவிரவாதிகளால் கொள்ளையடிக்கப்படும். உதவி செய்ய யாரும் இல்லாமல் அதுவும் உங்கள் கண்ணெதிரேயே உங்களின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியாவதை தினம் தினம் கண்டு நீங்கள் அணு அணுவாக கொல்லப்படுவீர்கள்.
ஐதராபாத் : மனைவியின் பேச்சை கேட்டு போலீஸ் தொல்லைக்கு ஆளான கணவனுக்கு மனித உரிமை கமிஷன் கைகொடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வேணுகோபால் கிருஷ்ணா. இவர் இங்குள்ள ரயில்வே பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். மனைவியுடன் தகராறு ஏற்பட்டு, பல ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போதும், மனைவி மூலம் அவருக்கு பிரச்னைகள் வந்து கொண்டிருந்தன. சமீபத்தில் மாநில மனித உரிமை கமிஷனிடம் அவர் ஒரு புகார் அளித்துள்ளார்."ஐந்து ஆண்டாக நான் மனைவியை பிரிந்து வாழ்கிறேன். என் மீது அவர் தொடுத்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை நான் எதிர்கொண்டு வருகிறேன்.
ஆனால், உள்ளூர் போலீஸ் மூலம் எனக்கு தொடர்ந்து தொல்லை இருந்து வருகிறது. இவர்களின் தொல்லை காரணமாக நான் தெருத்தெருவாக திரிய வேண்டிய நிலை உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று மனுவில் வேணுகோபால் கூறியுள்ளார்.புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி சுபாஷன் ரெட்டி, "திருமணத் தகராறுகளில் தலையிடவேண்டாம்' என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமலரில் வெளியான நாட்டில் உள்ள உண்மை நிலவரத்தை படம் பிடித்துக் காட்டும் கதை. பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று தெளிவாகபடம் பிடித்துக் காட்டும் வித்தியாசமான கதை. இது போன்ற பெண்கள் தான் பெரும்பாலும் தவறான சட்டங்களுக்கு ஆதரவாக கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வேணி - அழகான இளம்பெண், எந்த ஒரு ஆணையும், மீண்டும் ஒரு முறை திரும்பிபார்க்க வைக்கும் கவர்ச்சிகரமான அழகு. அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், அவளது கணவன் ரமேஷ் ஓரளவுக்கு ஓகே. பொருத்தமான ஜோடி என பாராட்டத் தோன்றும்.ரமேசுக்கு சொந்த வியாபாரம், பணபுழக்கம் ஏராளம்; வசதிக்கு குறைவில்லை.போதாக்குறைக்கு வேணி, பெற்றோர்க்கு ஒரே பெண். திருமணமாகி ஐந்துஆண்டுகளாகியும், ரமேஷ் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த குறையை தவிரவேறு எதுவும் இல்லை.
ரமேசின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் குமார்.தனியார் கம்பெனியில் குமாஸ்தா வேலை. வசதி குறைவாக இருந்தாலும், கலகலப்பாகபேசி பழகும் அவனது மனோபாவம் யாரையும் எளிதில் கவர்ந்து விடும். ரமேசின்குடும்பத்தையும் அவன் எளிதில் கவர்ந்ததில் ஆச்சார்யமில்லை. ரமேஷ் வீட்டில்இருக் கும் நேரத்தில், அடிக்கடி வந்து பழக்கம் ஏற்படுத்திக் கொண்டான்குமார். அவர்களுக்கு தேவையான பொருட் களை உடனடியாக கடைக்கு சென்று வாங்கிதந்து, நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான். நாளாக, நாளாக அந்த நெருக்கம்அதிகமாகி, வீட்டில் ரமேஷ் இல்லாத நேரத்திலும் குமார் வந்து செல்லும்போக்கு அதிகமானது.அந்த வட்டாரத்தில்குமாரின்நடத்தையை பற்றி நல்லவிதமாக பேசப்படுவதால், யாரும் குமாரை சந்தேகமாகநினைக்கவில்லை.
அன்று காலை வேணியின் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.வீட்டுக்குள் சென்ற குமாரிடம் மளிகை "லிஸ்ட்' ஒன்றை கொடுத்தாள் வேணி. "அவர்வருவதற்கு இரண்டு நாள் ஆகுமாம்... வீட்டில் ஒரு பொட்டு மளிகை சாமான்இல்லே... வாங்கி வந்துதான் சமையல் பண்ணனும்... பிளீஸ்,'' என்றாள். "இதேஐந்து நிமிடத்தில் வாங்கிட்டு வந்துறேன்,'' என்று கிளம்பினான் குமார்.வாங்கி வந்த மளிகை பொருட்களை இருவரும் சேர்ந்து, வீட்டில் அதற்குரியஇடத்தில் அடுக்கி வைத்தனர்.
பொருட்களை அடுக்கும் சாக்கில் வேணிதேவையில்லாமல், குமாருக்கு அருகில் வந்து நிற்பதை குமாரால் யூகிக்கமுடிந்தது. விலகி, விலகி சென்றவனை ஒரு கட்டத்தில் வேணி தடுத்து நிறுத்திகேட்டாள் ""என் மேலே ஆசையில்லையா?'' - ஏக்கத்தோடு கேட்டாள்
ஒரு சில வினாடி ஆடிப்போன குமார் சுதாரித்துக் கொண்டு, ""அப்படி எல்லாம் இல்லே,'' என்று நெளிந்தான். "அப்புறம் எப்படியாம்?''என்று கொஞ்சிய வேணி, மேலும் நெருங்கி வரகுமாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அடுத்து ஒரு சில நிமிடங்களில் "எல்லாம்' நடந்து முடிந்தது.இந்தச் சம்பவத்திற்கு பிறகு ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோடு வீட்டுக்குவராமால் இருந்தான் குமார். அவளை ஏறிட்டு பார்ப்பதைக் கூட தவிர்த்தான்.
அன்றுஅதிகாலை வீட்டிலிருந்து எழுந்த குமார் வெளியில் செல்ல புறப்பட்டான். எதிர்வீட்டில் இருந்து ரமேஷ் குரல் கேட்டது.""என்னப்பா... கூப்பிட்டாக் கூடகண்டுக்க மாட்டேங்கிற... நானும், வேணியும் வெளியே போறோம்... நீயும்வர்றே... டிரைவரா,'' என விஷயம் புரியாமல் ஆர்டர் போட்டான். எல்லாம் அவள்ஏற்பாடாக தான் இருக்கும் என்பதை உணர்ந்த குமார் பதில் சொல்வதற்குள், ""சரிசரி... சீக்கிரம் புறப்படு,'' என்று கூறிச் சென்றான் ரமேஷ்.
அன்றுநடந்த சம்பவத்தின் குற்ற உணர்ச்சி குமாரின் மனதை "பிளேடு' கொண்டுஅறுத்தது. "எவ்வளவு நாட்கள் அவர்கள் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன்.உண்ட வீட்டுக்கே துரோகம் செய்து விட்டோமே. அந்தப் பொண்ணுதான்கூப்பிட்டாலும், நமக்கு எங்கே புத்தி போச்சு' என்று தன்னை தானே நொந்துகொண்டவன், "தான் வரவில்லை' என் பதை கூற, ரமேஷ் வீட்டுக்குள் சென்றான்குமார்.
நமட்டுச் சிரிப்புடன்குமாரை வரவேற்ற வேணி, பாத்ரூமில் குளித்துக் கொண்டு இருந்த ரமேசுக்கு, குமார் வந்துள்ள தகவலைசொன்னாள். ""ஹாலில் வெயிட் பண்ணச் சொல்லு... வந்தறேன்...'' என்று குரல்கொடுத்தான் ரமேஷ். ஹாலில் அமர்ந்த குமாரிடம், "என்ன... இந்தப் பக்கம்ஆளையே காணோம்'' என்றாள் வேணி. அதற்கு குமாரிடம் எவ்வித பதிலும் வரவில்லை.குளித்து முடித்து ரமேஷ் வந்த பின், குமாரின் பதிலை ஏற்காமல், அவனைகட்டாயப்படுத்தி தன்னுடன் அழைத்து சென்றான் ரமேஷ்.
அப்பா இல்லாத குடும்பம், இரண்டு தங்கைகள் என, பழியை நினைத்துபயந்தான் குமார். வேணி சொன்னதுபோல ஒரு வாரத்தில் மீண்டும் வெளியூர்கிளம்பினான் ரமேஷ். மிரட்டலுக்கு பயந்து, பகல் நேரத்தில் குமார், வேணிவீட்டுக்கு சென்று வந்தான், எந்த பிரச்னையும் இல்லாமல்.
அன்று... பகலில்முடியாமல் போனதால், இரவில் தங்கும்படி வேணி சொல்ல, மறுத்தான் குமார்.வழக்கம் போல இறுதியில் வேணியின் பேச்சு வென்றது. இரவு வேணியின்வீட்டுக்குள் நுழைந்தான், குமார். கட்டிலில் இருவரும் சாய்ந்த சிறிதுநேரத்தில் வெளியே "காலிங் பெல்' ஓசை கேட்டு வேணி திடுக்கிட்டாள். ஜன்னல்வழியாக பார்த்த போது, கணவன் வெளியே நிற்பது தெரிந்தது. சர்வமும் நடுங்கிப்போனாள் வேணி. குமாரை கட்டிலுக்கு அடியில் மறைந்து கொள்ள சொன்னாள்.
"போனவேலை சீக்கிரமா முடிச்சுருச்சு... அதான் திரும்பிட்டேன்... இன்னும்தூங்கலியா... பெல் அடிச்ச உடனேயே எழுந்திட்டே'' என்றான், ஆச்சரியத்தோடு. "தூக்கம்வரல...'' என்றாள் வேணி. "அவசர அவசரமா கிளம்பி வந்ததுல ரொம்ப டயர்டாஇருக்கு,'' என்று படுக்கையில் விழுந்தான் ரமேஷ், சிறிது நேரத்தில் குறட்டைவிட துவங்கினான். சுமார் 1 மணி நேரம் வரை பொறுத்த வேணி, ரமேஷ் ஆழ்ந்தஉறக்கத்தில் இருப்பதை அறிந்து, கட்டிலுக்கு அடியில் இருந்த குமாரை மெல்லஅழைத் தாள். வெளியே வந்த குமார், வீட்டை விட்டு வெளியேற முயன்றான். அவனைதடுத்து நிறுத்திய வேணி, அவனை பக்கத்து அறைக்கு கட்டாயப்படுத்தி, அழைத்துசென்றாள்; பயமின்றி நடந்து கொண்டாள்.
எதேச்சையாகவிழித்த ரமேஷ், அருகில் மனைவி இல்லை என்று தெரிந்து கொண்டு, பாத்ரூமைபார்த்தாள். விளக்கொளி இல்லை; மெல்ல எழுந்து பக்கத்து அறையில் எட்டிப்பார்த்தான்.
"அடிப்பாவி... நான் வீட்டில் இருக்கும் போதே... எனக்குதுரோகம் செய்றீயா?'' என்று கத்தினான். பின்னர் விளக்கு வெளிச்சத்தில்மனைவியுடன் இருப்பவன் குமார் என்று தெரிந்ததும், ஆவேசத்தில் அவனை தாக்கமுயன்றான்.
உஷாரான வேணி, யாரும் எதிர்பாராத வகையில், உடனடியாகசம்பவத்தையே திருப்பினாள். "அய்யோ... நான் மோசம் போயிட்டேங்க... நீங்கதான்எங்கூட இருக்கீங் கன்னு நம்பி... அவனோட படுத்துட்டேன்,'' என அழுது புரளஆரம்பித்தாள்.
கணவனை மேலும் நம்பச் செய்ய, நம்ம இரண்டு பேரையும்ஏமாத்திய இந்த நாயை சும்மா விடக் கூடாது என்று வெளியே வைத்திருந்த இரும்பு "ராடை' எடுத்து, கணவன் கண் எதிரே குமாரின் தலையில் தாக்கினாள் வேணி. இதைசற்றும் எதிர்பாராத குமார், அதே இடத்தில் உயிரிழந்தான்.
இச்சம்பவத்துக்குபிறகு வேணி, ரமேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அருகில்வந்து படுத்தாலும் கணவனுக்கும், இன்னொரு நபருக்கும் வித்தியாசம் தெரியாமல்போகுமா என்று வழக்கின் சுவராசியம் குறித்து பத்திரிக்கைகள் பலவாறாகஎழுதின. இறுதியில் வேணி, ரமேசுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டது.
தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்த வெளிவந்தபின்னரும் வேணியின் மனசாட்சி, அவளை உறுத்திக் கொண்டுதான் உள்ளது. வேணிஇன்றும் வாழ்கிறாள் வெறும் நடைபிணமாக!
************************************ முழுக்கதையை இங்கே சென்று படித்துப் பாருங்கள் : சொல்ல மறந்த கதை
வரதட்சணை வாங்கி திருமணம் செய்த அயோக்கியர்களெல்லாம் வெளியே சந்தோஷமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கும்போது, வரதட்சணையே வாங்காமல் இலட்சியத்திருமணம் செய்த இளைஞர்களெல்லாம் பல மனிதத் தன்மையற்ற மிருகங்களின் பாவச்சுமையை 498A-என்னும்வடிவில் பாரமாக சுமப்பதால் இந்த இலட்சிய இளைஞர்களும் புனித மகாத்மாக்கள் தான்.
கடலூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் காதல் திருமணங்கள் செய்துகொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் புனித வளனார் கல்லூரிச் சாலையில் பத்திரப் பதிவாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீ வினைதீர்த்த விநாயகர் கோயில். இங்கு ஏராளமாகத் திருமணங்கள் நடப்பதால், கல்யாண விநாயகர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் பெரும்பாலான நாள்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அருகில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, இந்த விநாயகர் கோயிலுக்கு வந்து மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு வழிபடுவதை பலர் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.
முறைப்படி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கு நடந்து இருப்பதாக கோயில் குருக்கள் தெரிவித்தார். அதேபோல் பெற்றோர் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்துகொள்ள இங்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. காதல் திருமணம் செய்துகொள்ள இக்கோயிலுக்கு வந்து, பெற்றோரும் பின்தொடர்ந்து வந்து, திருமணம் முடிந்ததைப் பார்த்து ஏமாற்றத்துடன் கண்ணீர் விடும் நிகழ்ச்சிகளும், மாறாக அடிதடியில் இறங்கிய நிகழ்ச்சிகளும் இங்கு சர்வ சாதாரணம்.
இவ்வாறு காதல் திருமணத்தை நடத்தியதன் விளைவாக, பின்னர் போலீஸ் விசாரணையில் குருக்களும் கோயில் நிர்வாகிகளும் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. எனவே இனி இங்கு, காதல் திருமணங்களை அனுமதிப்பது இல்லை என்ற முடிவுக்குக் கோயில் நிர்வாகம் வந்துள்ளது. பெற்றோர்களுடன் வந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்குத் தடையேதும் இல்லை என்றும் கோயில் குருக்கள் தெரிவித்தார்.
எனவே கோயிலின் முன்புறம் இதுகுறித்த அறிவிப்பையும் கோயில் நிர்வாகம் வைத்துள்ளது. "இங்கு திருமணம் செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. மீறித் திருமணம் செய்தால் நிர்வாகம் பொறுப்பு அல்ல' என்று அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ====================== தற்போது செய்தித்தாள்களில் தினமும் வரும் காதல் செய்திகளின் தாக்கம் இது தான். இந்தகாலத்துப் பெண்களின் பெற்றோர்கள் தனது பெண் செய்யும் தவறை மறைப்பதற்காக மாப்பிள்ளையுடன் சேர்த்து கோயில் குருக்கள், கோயிலில் இருக்கும் கடவுள் இவர்கள் மீதும் தங்களது பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்யவும், வரதட்சணை வாங்க உடந்தையாக இருந்ததாகவும் வரதட்சணை கேஸ், 498A போன்றவற்றை பதிவுசெய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இதைப்போன்ற புகார்களை கேட்டு பரிதாபப்படவும், கேசுகளை பதிவுசெய்யவும் சில ஆட்கள் இருக்கிறார்கள். கேட்பவன் "கே"வாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் புகாரில் எழுதித்தரலாம்.
மனிதர்களின் வாழ்வை சிதைக்கும் முறையற்ற திருமணங்கள் கடைசியில் கடவுளையும் ஒரு கைபார்த்துவிட்டன. என்ன கொடுமையடா சாமி!
குடும்ப வாழ்க்கையில், எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகா விட்டால், அங்கு பிரச்னைகளும், சிக்கல்களுமே உண்டாகின்றன. குடும்பத்தில் சிறு பிரச்னை என்றாலும், போலீஸ், கோர்ட் என்று, நிவாரணம் தேடி வெளி உலகுக்கு வருவது, அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்கு சாதகமாகவே உள்ளதால், ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது.சமூகத்தில் ஆண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.
குடும்ப வன்முறைச் சட்டத்தினால், 2003 முதல் 2006 வரை ஒன்றரை லட்சம் ஆண்கள், நாடு முழுவதும் தற்கொலை செய்துள்ளனர்.
பெண்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இச்சட்டம், தற்போது ஆண்களின் உயிருக்கு பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதாக குமுறுகின்றனர், ஆண்கள் நல அமைப்புகள். ஆண்டு தோறும், இப்புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சின்ன, சின்ன மோதல்கள் கூட, கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழல் பெருகி வருகிறது. இப்பிரச்னைகளுக்கு மூல காரணமே, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான். வழக்குகளாலும், பல்வேறு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களுக்கென அமைப்புகளை உருவாக்கி உரிமைக்கு குரல் கொடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக தற்போது, "ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்' அமைக்கும் அளவிற்கு நிலைமை தீவிரமாகியுள்ளது.
ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, சென்னையில் உள்ள, "ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின்' மாநிலத் தலைவர் அருள் துமிலன் கூறியதாவது:
பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் சமூக பாதுகாப்பிற்காக, இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. பெண் அடிமைத்தனம், பெண்களின் முன்னேற்றம் என்று, பெண்களுக்கே சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; ஆண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றனர்.
எனவே, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு, இச்சங்கத்தின் மூலம், பாதுகாப்பும், சட்ட உதவியும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த அமைப்பின் நோக்கம்.
இதனால், பராம்பரியமான குடும்ப அமைப்புகள் சீர்குலைந்து விடுகின்றன. குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு அருள் துமிலன் கூறினார். ===============
ஒரு பெண்ணால் மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைக்குப் பெயர் தான் பெண் கொடுமை. அதற்கு ஒரு உதாரணம் தான் கீழுள்ள செய்தி. பொய் வரதட்சணை வழக்குகளில் அப்பாவி தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பெண்ணுருவில் இருக்கும் 498A-பேய்களால் செய்யப்படும் கொடுமை தான் பெண் கொடுமை. ==================
ஸ்ரீவில்லிபுத்தூர் : அருப்புக்கோட்டை புளியம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 200 ரூபாய் பெறுவதற்காக, கடந்த 2003 செப்.15ம் தேதி நகராட்சியில் விண்ணப்பித்தார்.அப்போது அருப்புக் கோட்டை நகராட்சியில் சத்துணவு மேற்பார்வையாளராக இருந்தவர் சரஸ்வதி. இவர் ஆறுமுகத்தின் விண்ணப்பத்தை, கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்க 200 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆறுமுகம் இது தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். 2003 செப்.23 ல் மாலை 5மணிக்கு ஆறுமுகம் சரஸ்வதியிடம் 200 ரூபாயை கொடுத்தபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவி., தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி முருகாம்பாள் லஞ்சம் வாங்கிய சரஸ்வதிக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
"திருமணத்தின் போது அன்பளிப்பாக கொடுக்கப்படும் பொருட் களை வழக்கமாக கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களாக எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர வரதட்சணை கணக்கில் கொள்ளக் கூடாது' என்று மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.
வரதட்சணை வாங்குபவர்கள், கொடுப்பவர்கள் அல்லது வரதட்சணை கொடுக்க தூண்டுபவர்கள் ஆகியோருக்கு வரதட்சணை ஒழிப்பு சட்டம், 1986ம் கீழ் ஐந்து ஆண்டுக்கு குறையாத சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.நாக்பூரை சேர்ந்தவர் பூஷண்; இவருடன் பிரச்னை காரணமாக பிரிந்து விட்ட மனைவி, அவர் தந்தை போலீசில் புகார் செய்தனர். வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டது. திருமணத்தின் போது மணமகன் பெற்ற ஏகப்பட்ட பரிசுப்பொருட்களும் வரதட்சணை கணக்கில் சேர்த்து, போலீசில் புகார் செய்திருந்தனர்.இதை எதிர்த்து, மணமகன் மற்றும் அவர் தாய், மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் பெஞ்சில் மனு செய்தனர்.
இதை விசாரித்த கோர்ட், "திருமணத்தின் போது பெறப்படும் பரிசுப்பொருட்களை வரதட்சணையாக கருத முடியாது; அது வழக்கமாக மரபுப்படி அளிக்கப்படும் பரிசுகள் தான். அதனால், ஒருவரின் வாழ்க் கை பொருளாதார தரம் உயர வாய்ப்பில்லை' என்று தெரிவித்தது. ================
இந்தியத் திருமணங்களில் நடக்கும் ஒரு நம்பமுடியாத விஷயம் என்னவென்றால் பெண்ணிற்கு திருமணத்தின் போது அவரது பெற்றோர்கள் தானாகவே முன்வந்து பல பரிசுப்பொருட்களை கொடுப்பார்கள். பிறகு ஏதோ காரணத்தால் திருமணமுறிவு ஏற்படும் சூழல் ஏற்படும் போது அந்த அனைத்துப் பரிசுப்பொருட்களையும் வரதட்சணை என்று பெயர் மாற்றி போலிஸில் புகார் கொடுத்துவிடுவார்கள்.
அவர்கள் கூற்றுப்படி திருமணத்தின்போது பெண்ணை ஒரு துணி கூட இல்லாமல் தான் திருமணம் செய்து அனுப்பியிருக்கவேண்டும் ! ஏனென்றால் அவர்கள் கொடுக்கும் வரதட்சணை புகாரில் திருமணத்தின்போது பெண் உடுத்தியிருந்த உடை முதல் அனைத்து பொருட்களும் மாப்பிள்ளை வீட்டார் கட்டாயப்படுத்தி கேட்ட வரதட்சணையாக லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருக்கும்.
இதில் மற்றொரு காமெடி என்னவென்றால் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் நடந்த தேதி பெரும்பாலும் நிச்சயதார்த்தம் நடந்த தேதியிலிருந்து தான் ஆரம்பிக்கும். எனவே பெண்ணை நிச்சயம் செய்து திருமணம் செய்ததே கிரிமினல் குற்றமாகத்தான் கருதப்படும். ஆகையால் இந்தியாவில் திருமணம் என்பது ஆண்களைப் பொறுத்தவரை ஒரு கிரிமினல் குற்றம் தான். வேண்டுமென்றால் ஒரு நல்ல கைதேர்ந்த "டெம்ப்ளேட் வக்கிலிடம்" 498A புகாருக்கான "டெம்ப்ளேட்டை" வாங்கி படித்துப் பாருங்கள்.
என்ன கலாச்சாரமோ? என்ன பண்பாடோ? நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி தான் இதற்கெல்லாம் விளக்கம் சொல்லவேண்டியிருக்கிறது.
வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய்ப்புகார் கூறி பழிவாங்கும் மனைவிகளுக்காக சட்டத்தை பயன்படுத்தக்கூடாது; புகார் தந்தவுடனே, தீர விசாரிக்காமல் கணவன், அவன் குடும்பத்தினரை கைது செய்யக்கூடாது! - தங்களுக்கு சாதகமாக சட்டப் பிரிவு இருக்கிறது என்று, திட்டமிட்டு "பிளான்' போட்டு அப் பாவி கணவர்களை பழிவாங்கும் மனைவிகளுக்கு எதிராக முதல் முதலாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498 ஏ. வரதட்சணை கொடுமை செய்யும் கணவன், அவர் குடும்பத்தில் உள்ள தந்தை, தாய் உட்பட யாரையும் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது இந்த சட்டப் பிரிவு. வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதால், அவர்கள் புகார் தந்தாலே, இந்த சட்டத்தை பயன் படுத்தி, கணவன், அவன் குடும்பத்தாரை கைது செய்வது போலீஸ் வழக்கம். கைது செய்தபின் தான் எல்லா விசாரணையும் நடக்கும்.
கடந்த சில ஆண்டாக இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக் கள் குவிந்தன. பழிவாங்க துடித்த மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள், அவர்களின் குடும் பத்தார், சமூக நல அமைப்புகள், ஆண்கள் நல அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் அரசுக்கு மனுக்கள் குவிந்தன. "வரதட்சணை கொடுமை செய்யும் ஆண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே சமயம், திட்டமிட்டு கணவனை, அவன் குடும்பத்தினரை பழிவாங்க சில பெண்கள், வரதட்சணை கொடுமை புகார் செய்வது அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில், வரதட்சணை கொடுமைக்காக தண்டிக்கப்பட்ட கணவர்கள் எண்ணிக்கை சதவீதத்தை வைத்தே இதை புரிந்து கொள்ளலாம்; இதனால், அப்பாவி கணவர்களுக்காக மத்திய அரசு , இந்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்' என்று மனுக்களில் கோரப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகமும், சட்ட அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புகள், அரசின் பரிசீலனைக்கு மேலும் வலுவூட்டின."கணவன் குடும்பத்தாரை பழிவாங்க வேண்டும் என்ற எண் ணம் உள்ள பெண்களுக்கு வரதட்சணை கொடுமை புகார் பெரிதும் கைகொடுக்கிறது. அதற் கேற்ப, போலீசும், உடனே 498 ஏ சட்டப்பிரிவு, 406ம் பிரிவை பபயன்படுத்தி உடனே கணவன் குடும்பத்தினரை கைது செய்து விடுகின்றனர். சிறியவர்களை கூட கைது செய்வது சட்டப்படி சரியல்ல. இதுபோன்ற போக் குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்' என்று ஒரு வழக்கில் டில்லி ஐகோர்ட் நீதிபதி கபூர் தன் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதுபோல, சுப்ரீம் கோர்ட்டில் வந்த வழக்கில்,"வரதட்சணை கொடுமை வழக்குகளில் நிரபராதியாக வெளியே வருவோர் அதிகரித்து வருகின்றனர். அதனால், இப்படிப்பட்ட வழக் குகள் ஜோடிக்கப்பட்டு, சிலரால் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. இதை தடுக்க சட்டப் படி பரிசீலிக்க வேண்டும்' என்று நீதிபதி அர்ஜித் பசாயத் கூறினார்.இந்த இரு தீர்ப்புகளும் மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பியது. சட்ட, உள்துறை அமைச்சகம் தீவிர பரிசீலனைக்கு பின், மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. "வரதட்சணை கொடுமை புகார் விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். புகார் தந்ததை ஆதாரமாக வைத்து உடனே, கணவன், அவர் குடும்பத்தினரை கைது செய்யவே கூடாது. தீர விசாரித்து, உயர் அதிகாரி திருப்தி பட்டாலொழிய கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இது தொடர்பாக எல்லா போலீஸ் மண்டலங்களுக்கும் உத்தரவு அனுப்ப வேண்டும்' என்று கடிதத்தில் கூறப் பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலர், இந்த கடிதத்தை மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.
வரதட்சணை கொடுமை புகார் அளித்தால், இந்த சட்டத்தின் கீழ் கணவனுக்கு அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனை தர முடியும். கடந்த 2007ல், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகள் பதிவாயின. அதில், 76 ஆயிரம் வழக்குகளில் தான் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது. 79 சதவீதம் பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவண காப்பக சர்வேயில் தெரியவந்துள்ளது.
"இந்த சட்டப்பிரிவுகளில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டது. ஆனால், பெண்கள் அமைப்புகள் பெரும் போர்க்கொடி தூக்கியதால், இந்த முடிவில் பின்வாங்கி விட்டது.
எனினும், கோர்ட்களின் கருத்துக்களுக்கு பின் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
=============== அரசாங்கம் தவறான சட்டத்தை திருத்தி பல அப்பாவித் தாய்மார்களையும், சகோதரிகளையும், குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிருந்து காப்பாற்ற நினைத்தாலும் அதற்குத் தடையாக இருப்பது பெண்கள் நலனிற்கு பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் அமைப்புகள் தான்.
உலகத்தின் எந்த ஒரு மூலையில் ஒரு அப்பாவிப் பெண் அழுதுகொண்டிருந்தாலும் அதன் பின்னனியில் மற்றொரு பெண் தான் இருப்பாள் என்பதை பெண்கள் அமைப்புகள் நிரூபித்துவிட்டன!
புதுடில்லி : "ஆண்கள் வாக்குறுதியை நம்பி, நெருங்கி விடாதீர்கள்; கற்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு தான்' என்று காதல் செய்யும் பெண்களுக்கு ஐகோர்ட் அறிவுரை தந்துள்ளது.திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து காதலியை கற்பழித்து விட்டார் ஒரு வாலிபர். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தபோது, கோர்ட்டில் முன்ஜாமீன் கோரினார். டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதி கைலாஷ் காம்பீர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் கூறுகையில், "இதில் குற்றம் சாட்டப்பட்டவர், சம்பந்தப்பட்ட பெண்ணுடன், திருமணம் செய்து கொள்வதாக கூறி, உடல் ரீதியாக உறவு கொண்டுள்ளார். எனவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது' என்றார். ஆனால், இதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். "அரசு தரப்பு வக்கீல் சொல்வதை ஏற்க முடியாது; இந்த விஷயத்தில் பெண்கள் தான் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும்' என்று கூறி, முன்ஜாமீன் அளித்தார்.
நீதிபதி மேலும் கூறியதாவது:
தங்களுடன் பழகும் ஆண்களுடன் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு தான். எந்த ஆணையாவது காதலித்து, அதனால், நெருக்கமாக இருக்கலாம் என்று முடிவு செய்வதும், பொறுப்பை தவற விடுவதுமாக இருந்தால் அதற்கு அவர்கள் தான் முழுப்பொறுப்பு. பெண்களுக்கு, தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது; அவர்களின் கன்னித்தன்மையை காத்துக்கொள்வதில் அவர்கள் தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தன்னுடன் பழகும் காதலன் தரும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி, தன்னை உடல் ரீதியாக இழந்து விடக்கூடாது. பெண்கள், இது போன்ற சமயத்தில், உடல் ரீதியான தொடர்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். "நான் உன்னை கைவிட மாட்டேன்; திருமணம் செய்து கொள்வேன்; அப்படியிருக்கும் போது, நாம் விலகி இருக்க வேண்டுமா?' என்று மாய்மாலமாக பேசி, காதலியை கவருவது சிலருக்கு கைவந்த கலை. அதை நம்பி பெண்கள் ஏமாந்து விடக்கூடாது. வாக்குறுதிகளை நம்பி, தங்கள் நிலையை மோசமாக்கி கொள்ளக்கூடாது. அவர்கள் தங்களின் தூய்மையை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும். ஆணிடம் இருந்து காத்துக்கொள்ளும் பொறுப் பும், தைரியமும் பெண்களுக்கு வர வேண்டும். அதில் அவர்கள் அசட்டையாகவோ, தவறான நம்பிக்கையுடனோ இருந்து விடக்கூடாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
=============
மேலுள்ள செய்தி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ள செய்தியைப் படித்த பிறகு இந்த வீடியோவையும் பாருங்கள். அப்போது தான் இந்த நீதியரசர் செத்துக்கொண்டிருக்கும் நீதியை எப்படி காப்பாற்றியிருக்கிறார் என்பது நன்றாகப் புரியும். இவரைப்போல சில நீதி தவறாத சான்றோர்கள் நாட்டில் இருப்பதால் தான் நீதி இன்னும் சட்டப்புத்தகத்திற்கு வெளியேயும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
182 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம் கர்நாடகாவில் குறும்படம் ரெடி தினமலர் - நவம்பர் 01,2009
தாவணகெரே: இந்தியாவின் பாரம்பரியமான கூட்டு குடும்ப கலாசாரம் அழிந்து வரும் காலகட்டத்தில், கர்நாடக மாநிலத்தில், 182 உறுப்பினர்களை கொண்ட கூட்டு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது.கர்நாடக மாநிலம், தார்வாத் மாவட்டம், லோக்கூர் பகுதியில் நரசிங்நாவர் குடும்பம் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 182. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.இந்த குடும்பத்தினர் தற்போது, அழிந்து வரும் கருத்தான கூட்டுக் குடும்ப தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றனர். இவர்களை வைத்து, எழுத்தாளர்களான ஆனந்த் மற்றும் மதுரா கட்டி தம்பதியினர் குறும்படம் ஒன்று எடுத்துள்ளனர். இதற்காக, படப்பிடிப்புக் குழுவினர் ஒரு வாரம், லோக்கூரில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்தனர்.
இது குறித்து ஆனந்த் மதுரா கட்டி கூறியதாவது:இந்த குறும்படம், இந்தியா மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய சமூக கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நவீனமயமாக்கல் உட்பட பல்வேறு காரணிகளுக்கு மத்தியிலும், இந்த சிறிய விவசாய குடும்பத்தினர், ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாக வாழ்கின்றனர். இவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த குறும்படத்தில், இந்திய கிராமப்புற கலாசாரமும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலேயே, இவர்கள் தான், மிகப் பெரிய கூட்டுக்குடும்பத்தினர். இவர்கள் அனைவரும் ஒரே சமையலறையிலேயே சமைக் கின்றனர்.இவ்வாறு அவர்கூறினார். இதுகுறித்து ஆனந்த் கட்டி கூறுகையில், "இந்த குறும்படத்தை அடுத்த இரண்டு மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். முதலில் கர்நாடகாவில் வெளியிடுவோம். இது இந்திய கலாசாரத்தை வெளி உலகத்திற்கு காட்டும் நான்காவது குறும்படம்' என்றார்.
==========
இந்தியக் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இனி "டாக்குமெண்டரி படங்களிலும்", வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் சிந்து சமவெளி நாகரித்தைப் பற்றி படிப்பது போலவும் தான் இனி அறிந்து கொள்ள முடியும். கூட்டுக் குடும்பங்களை சிதைக்கும் தவறான சட்டங்கள் இந்திய வாழ்க்கை முறையை அப்படித் தலைகீழாக புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றது.
வயதான பெற்றோர்களில் பெரும்பாலோர் மருமகள் கொடுத்த பொய் வரதட்சணை வழக்குகளால் காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், மற்றும் தங்களது மகனின் சிதைந்து போன வாழ்க்கையை நினைத்து மனம் நொந்து நீதியைத் தேடி கோயில்களிலும் நிம்மதி இழந்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். பொய் புகார்களில் சிக்காத மீதம் இருக்கும் கொஞ்சம் பேர் மருமகள்களால் விரட்டப்பட்டு முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.
இந்த வயதான தாய், தந்தையர்கள் படும் மன வேதனைக்கு இந்த சமுதாயம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போற்றப்பட்ட நாட்டில் இப்போது முறைப்படுத்தப்படாத கொடிய சட்டங்களால் வயதான தாய்மார்களும், தந்தையரும் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பெற்ற தாய், தந்தையை போற்றிப் பாதுகாக்காத சமுதாயம் நிச்சயம் அழிவைத்தான் சந்திக்கும்.
உங்களுக்குத் தெரியுமா? பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தனியாக ஒரு மத்திய அரசு அமைச்சகத் துறையும் , தேசிய அளவில் பெண்கள் நல வாரியமும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பெண்கள் நல வாரியமும் இருக்கின்றன.
இந்த வாரியங்கள் எப்படிப்பட்ட பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைக்காகவும் எந்த வகையான "நற்செயல்கள்" செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இந்த இணைப்பில் சென்று படித்துப் பாருங்கள்:`Pub bharo' to beat moral police: Renuka Choudhary (Times of India News - 6 February 2009)
பழமைவாதம் என்பது வேறு. பண்பாடு என்பது வேறு. பழமைவாதமும் பண்பாடும் இரண்டு துருவங்கள். இந்த வித்தியாசத்தை நன்கு உணர்ந்து கொண்ட பண்புடைய எந்தப் பெண்ணும் "பெண்ணுரிமை" என்ற பெயரில் அற்பத்தனமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
பாவம் அப்பாவி ஆண்கள்! படித்த நகரத்துப் பெண்களை திருமணம் செய்தால் பொய்யான 498A கேஸில் குடும்பத்தோடு மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார்கள். கல்வியறிவில்லாத கிராமப்புற பெண்களை திருமணம் செய்தால் அவளின் கள்ளக்காதலுக்காக கொல்லப்படுகிறார்கள். இன்றைய சமுதாயத்தில் திருமணம் என்பது ஆண்களுக்கு ஒரு ஆபத்தான புதைகுழிபோல் மாறிவிட்டது.
பட்டி தொட்டி முதல் மாநகரம் வரை கள்ளக்காதலும், பொய் வழக்குகளும் பெண்ணுரிமை என்ற பெயரில் தறிகெட்டுத் திக்குத் தெரியாமல் ரத்த ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.இனிவரப்போகும் நாட்களில் ஆறுகளில் தண்ணீர் ஓடாமல் கள்ளக்காதல் மற்றும் பொய்வழக்குப் போடும் மனைவிகள் செய்யும் கொலைகளால் அப்பாவி கணவர்களின் ரத்தம் தான் ஆறாக ஓடப்போகிறது! =====================
திருநெல்வேலி: நெல்லை அருகே கணவனை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்(36). இவருக்கும் கல்லிடைகுறிச்சி அன்னலட்சுமி(29)க்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு முன், அன்னலட்சுமிக்கு கல்லிடைகுறிச்சியை சேர்ந்த உறவினர் முத்துகிருஷ்ணன்(32) என்பவருடன் இருந்த தொடர்பு திருமணத்திற்கு பின் தொடர்ந்தது. உறவினர்கள் என்பதால் ஆரம்பத்தில் இதனை தங்கபாண்டியன் கண்டுகொள்ளவில்லை. பின் மனைவியை கண்டித்தார். இதனால் அன்னலட்சுமியும், முத்துகிருஷ்ணனும் சேர்ந்து தங்கப்பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டனர். 2008 நவம்பர் 13ம் தேதி முத்துகிருஷ்ணன், தங்கப்பாண்டியனை கல்லிடைகுறிச்சி, கன்னடியன்கால் பகுதிக்கு அழைத்துச்சென்று மதுவாங்கி கொடுத்தார். கூலிப்படையாக செயல்படும் வள்ளியூர் கணேசன், பட்டுராஜன், அருணாசலமுத்துபாண்டி, இசக்கிமுத்து ஆகியோர் அங்கு ஏற்கனவே காத்திருந்தனர்.
மதுமயக்கத்தில் இருந்த தங்கப்பாண்டியனை அனைவரும் சேர்ந்து அடித்து கொலைசெய்து கன்னடியன் வாய்க்காலில் போட்டனர். மறுநாள் உடல் கிடப்பதை அறிந்த போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்தனர். ஆனால் துப்புதுலக்கவில்லை. அண்மையில் முத்துகிருஷ்ணன், ஒரு திருட்டுவழக்கு விசாரணையில் தங்கப்பாண்டியனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து முத்துகிருஷ்ணன், அன்னலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கூலிப்படையினரை போலீசார் தேடிவருகின்றனர்.
தினமலர் - வாரமலரில் வந்துள்ள கட்டுரை: November 8, 2009
"நாங்கள் என்ன மோகினிப் பிசாசுகளா... வீட்டுக்கு வரும் மரு மகளிடம் வரதட்சணை பணம் பிடுங்குகிறோமா... அவளை அடித்து நொறுக்குகிறோமா... யாரோ ஒரு சிலரை வைத்து எல்லா மாமியார்களும் அப் படித்தான் என்று முத்திரை குத்துவதா?'
— இப்படி கொதித்துப் போயுள்ள மாமியார்கள், இப்போது முதன் முறை யாக அகில இந்திய அளவில் சங்கம் அமைத்து விட்டனர்.
இந்த சங்கத்துக்கு, "ஆல் இண்டியா மதர் இன் லா ப்ரொடக்ஷன் போரம்' என்று பெயர் வைத்துள்ளனர். இதன் தலைமையகம் பெங்களூரூ நகரில் செயல்படுகிறது. டில்லி, மும்பை, சென்னை உட்பட பல நகரங்களில் இருந்தும் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த மாதம் ஆறாம் தேதி இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது, பெங்களூரூ நகரை சேர்ந்த 50 மாமியார்கள் மட்டும் உறுப்பினராக சேர்ந்தனர்; இப்போது பல நகரங்களில் இருந்தும் 10 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். சங்கத்தின் கோரிக்கைகள் தான் என்ன...
* எல்லா மாமியார்களையும் கெட்டவள் என்று முத்திரை குத்தக்கூடாது.
* மாமியார் மீது குறை சொல்லி மருமகள்புகார் செய்தால், உடனே மாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது போல, மருமகள் மீது மாமியார் தரும் புகார் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக சட்டம் கொண்டு வர வேண்டும்.
* மாமியார்கள் மீது அவதூறு கிளப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* வயதான மாமியார்களை துன்புறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.
* மாமியார் சொத்துக்களுக்கு சட்டப்படி பாது காப்பு வேண்டும்.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நீனா துலியா, இந்த சங்கம் பற்றி கூறியதாவது:
எல்லா மருமகள்களும் கெட்டவர்கள் அல்ல; அதுபோல, எல்லா மாமியார்களும் கெட்டவர்கள் அல்ல; இதை, இந்த சமுதாயம் உணர வேண்டும். எங்களை மட்டும் மருமகள்களை கொல்ல வந்த மோகினிப்பிசாசு போலவும், பணம் பிடுங்கும் கொள்ளைக்காரி போலவும் சித்தரிப்பதை தடுக்க வேண்டும்.
மாமியார் என்றால், பொல்லாதவள் என்ற தவறான முத்திரையை உடைத்தெறிய வேண் டும். இதற்கு அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும். மாமியார்களின் குறையை நேரில் கேட்டு அதை களைய வேண்டும். இதற்காக நாங்கள் மத்திய அரசுக்கு மனு செய்ய உள்ளோம்.
இப்போதைக்கு நாங்கள் போராட்டங்கள் நடந்த தயாரில்லை; ஆனால், மாமியார்கள் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்தவும், மருமகள்களுடன் ஒற்றுமையை காக்கவும் பிரசாரம் செய்ய திட்டமிட் டுள்ளோம். சமீபத்தில் பெங்களூரூ நகரில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம். விரைவில் மற்ற நகரங் களில் நடத்த உள்ளோம்.
போலீஸ் முதல் எங்கு போனாலும், மருமகள்கள் புகார்களுக்கு தான் முக்கியத்துவம் தந்து கவனிக்கின்றனர். பிள்ளையை பெற்று, வளர்த்து ஆளாக்கிய வயதான மாமியார்களது குறைகளை கேட்பதே இல்லை. தேசிய மகளிர் கமிஷன் என்பது எல்லா பெண்களுக்கும் சமமானது தான்; ஆனால், அங்கும் கூட, எங்கள் புகார்களை கண்டுகொள்வதில்லை; மருமகள்கள் புகார்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. "டிவி' சீரியலாகட்டும், சினிமாவாகட்டும், மாமியார் என்றால், வில்லியாகத்தான் சித்தரிக்கின்றனர்; அதுபோல, நாவல்கள், கட்டுரைகள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகளில் கூட, மாமியார்கள் வேண்டாதவர்கள் போல விமர்சிக் கப்படுகின்றனர்.
இந்த நிலைமையை மாற்றுவது தான் எங்கள் குறிக்கோள்; அத்துடன், மருமகள்களை பாதுகாக் கும் அம்மாவாக நாங்கள் இருக்கிறோம் என் பதையும் நிரூபித்துக் காட்டுவோம்... என்கிறார் நீனா.
பெங்களூரூ நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார் இவர்; கணவர், தேயிலை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
பெங்களூரூ நகரில் உள்ள அலுவலகத்தில், வாரம் ஒரு முறை மாமியார்கள் கூடி விவாதிக்கின்றனர். சென்னை உட்பட பல நகரங்களுக்கு சென்று கூட்டங்களை நடத்தவும் மாமியார் சங்கம் திட்டமிட்டுள்ளது.
“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.