இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, June 12, 2011

மகளின் வாழ்வை சீரழிக்கும் இந்தியப் பெற்றோர்கள் - 3

பெற்ற மகளின் வாழ்வை சீரழிப்பதில் பல வகை இருக்கிறது.

பெண்ணைப் பெற்றவர்கள் தங்களின் “ஈகோ”விற்கு பலியாக மகளை ஏவிவிட்டு அவளது கணவன் மீதே பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யவைத்து மகளின் வாழ்வை சீரழிப்பதுதான் பெரும்பாலும் நடைமுறையில் இருந்துகொண்டிருக்கும் மிகவும் பிரபலமான வழக்கம்.

மற்ற வழிமுறைகளை இங்கே காணலாம்:
1. இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி
2. மகளின் வாழ்வை நாசமாக்கும் இந்தியப் பெற்றோர்கள்


ஆனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் புதுப்புது வழிமுறையைக் கண்டுபிடித்து வருகிறார்கள். இது எங்குபோய் முடியும் என்று யாருக்குமே தெரியவில்லை. கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள்தான்.

மகளின் காதல் கணவர் கொலை: சென்னை என்ஜினீயரை கொல்ல ரூ.5 லட்சம் பணம்; மேலும் 2 பேருக்கு தொடர்பு

விழுப்புரம், ஜூன்.12-2011 மாலை மலர்

சென்னை சிந்தாதிரிப் பேட்டை அய்யாவு முதலியார் தெருவை சேர்ந்த என்ஜினீயர் பார்த்தசாரதியும் பெரம்பூரை சேர்ந்த என்ஜினீயர் நரசிம்மனின் மகள் சரண்யாவும் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து சரண்யாவின் தந்தை கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை கொலை செய்தார். தனிப்படை போலீசார் சரண்யாவின் தந்தை நரசிம்மன் மற்றும் ஜானகிராமன், ஹேமந்த் ராம், திலீப், சலுஜா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நரசிம்மன் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என் மகள் சரண்யா காதல் விவகாரம் தெரியவந்ததும் பார்த்தசாரதியை மிரட்டினோம். ஆனால் காதலை கைவிடாமல் அவர் எனது மகளை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சரண்யாவை பிரிந்து செல்லும்படி மிரட்டி வந்தோம். பார்த்தசாரதி கேட்கவில்லை. எனவே தான் சலுஜா மூலம் கூலிப்படையை ஏவி பார்த்தசாரதியை தீர்த்து கட்டி முடிவு செய்தேன்.

ஜானகி ராமன், ஹேமந்ராம், திலீப் ஆகியோரை சலுஜா ஏற்பாடு செய்து கொடுத்தார். பார்த்தசாரதியை மிரட்டி விரட்டிவிடலாம் என நினைத்தோம். இதற்காகவே கூலிப்படை மூலம் காரில் கடத்தினோம். ஆனால் பார்த்தசாரதி பணியாததால் வேறு வழியில்லாமல் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
கூலிப்படையினருக்கு முதலில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அதில் ஜானகிராமன் மோட்டார் சைக்கிள் வாங்கி பார்த்தசாரதி நடவடிக்கைகளை கண்காணித்து வந்தான். கொலை நடந்த பிறகு மேலும் ரூ.4 லட்சம் கொடுத்தேன். மொத்தம் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டு உள்ளது.மேலும் ரூ.5 லட்சம் கேட்டனர். அதையும் கொடுக்க இருந்தேன்.

இந்த நேரத்தில்தான் பார்த்தசாரதி பிணத்தை கண்டுபிடித்த போலீசார் நாங்கள்தான் கொலையாளி என்பதை தெரிந்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலையில் கூலிப்படை தலைவனாக திலீப் செயல்பட்டு வந்துள்ளான். பார்த்தசாரதியை, திலீப், ஜானகிராமன், ஹேமந்தராம் 3 பேர் மட்டுமே காரில் கடத்தி சென்றதாக முதலில் தகவல் வந்தது. ஆனால் மேலும் 2 பேர் அந்த காரில் இருந்து உள்ளனர். அவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே சரண்யா தனது தாயாரும் பார்த்தசாரதி கொலையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக புகார் கூறியுள்ளார். எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

=====

தான் பெற்ற மகளை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் அவளை காதலித்தவனுக்குத் தண்டனை தருவது எந்த வகையில் நியாயமாகும்? இப்படித்தான் இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் பலர் தங்கள் மகள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்காமல் அவளது கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குகளை பதிவு செய்து துன்புறுத்தி வருகிறார்கள். எது எப்படியோ கடைசியில் தங்கள் மகளின் வாழ்வை தாங்களே சீரழித்த திருப்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. இதுதான் இன்றைய மனநிலை.


காவலா காவலா

சமீபத்தில் அமெரிக்க நாட்டில் இந்திய தூதரக அதிகாரியின் மகளை ஒரு வழக்கிற்காக அமெரிக்க போலிஸ் கைது செய்து பிறகு விட்டுவிட்டார்கள். அதற்காக இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. அந்தப் பெண்ணும் அமெரிக்க அரசாங்கத்திடம் பல கோடி நஷ்ட ஈடு கேட்டிருந்தார். அது பற்றிய செய்தியை இங்கே காணலாம் -> அமெரிக்க போலிஸ் செய்தால் கொடுமை! இந்தியப் போலிஸ் செய்தால் சேவை!!.

India takes up matter of diplomat’s daughter with US
New Delhi/Washington, May 26 (IANS) The Indian government has taken ‘very seriously’ the matter of a diplomat’s daughter being illegally arrested in New York, even as the US administration claimed that family members of diplomats do not enjoy immunity.

இப்போது இந்தியாவில் நடந்திருக்கும் பின்வரும் சம்பவத்திற்கு என்ன இழப்பீடு கொடுக்கமுடியும்? யார் கொடுப்பார்கள்? அப்படியே இழப்பீடு கொடுத்தாலும் இந்த இழப்பினை ஈடுகட்ட முடியுமா? குறைந்த பட்சம் அரசாங்கம் வருத்தமாவது அடையுமா?

இது ஒன்றுமட்டுமல்ல. பல சம்பவங்கள் இப்படி தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்பாவிகள் கையில் சிக்கினால் போதும். அவ்வளவுதான் காவலுக்கும் நீதிக்கும் ஒரே கொண்டாட்டம்தான். இந்தியாவில் போலிஸ் எது செய்தாலும் அது சேவையாகத்தான் கருதப்படும் போலிருக்கிறது!!.



ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 12, 2011 மாலை மலர்

லக்கிம்பூர், ஜூன். 12-

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் நிகாசன் பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்தில் நிர்வாக வசதிக்காக புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் காவலாளி ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவரது 14 வயது மகள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அந்த கட்டிடத்தின் பகுதிக்கு சென்றார். மாலை சென்ற அவர் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.

இது குறித்து அந்த சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே அந்த சிறுமி போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார் போலீஸ் விசாரணையில் அந்த சிறுமியை கற்பழித்து கொன்று பிணத்தை மரத்தில் தொங்க விட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.கே.ராய் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 11 போலீசாரை அவர் சஸ்பெண்டு செய்துள்ளார். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.க்கள் உஸ்மானி, பிடுஷ்ண கோபால் பட்டேல் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

குற்றவாளியான போலீசாரை ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும், தனி நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தி உள்ளது.


பெண்ணுக்குக் கிடைத்திருக்கும் தன்னாட்சியின் முதல்படி

அன்றைய தமிழ்நாட்டில் வேலு நாச்சியார் போன்ற பெருமை மிக்க பெண்கள் வாழ்ந்து பெண்மைக்கு பெருமை சேர்த்தார்கள்.....


இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் (1730) வெள்ளையர்களை ஓட ஓட விரட்டியடித்த வீரத்தாய் வேலு நாச்சியாரின் வரலாற்று நாட்டிய நாடகம், பரதாஸ்ரம் அமைப்பின் சார்பில் சென்னையில் நடந்தது. இதில் நடன கலைஞர்களின் முக்கிய காட்சிகள் பார்பதற்கு தத்ரூபமாக இருந்தது. (நன்றி- தினமலர் செய்திப் படம்)

சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் வேலுநாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை, இராணி மங்கம்மாள் போன்ற பெண்களால் பெருமை அடைந்தது பெண்மை. அவர்கள் வாழ்ந்த இதே தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களின் நிலை இதுதானோ?

(நன்றி தினமலர் கருத்துப்படம்)
ஆண்கள்தான் குடித்துக் கெடுகிறார்கள் நீங்களும் ஏன் குடிக்கிறீர்கள் என்று சொன்னால் பெண்ணுரிமைத் தலைவிகளுக்கு கோபம் வந்துவிடும். ஏன் ஆண் மட்டும்தான் குடிக்கவேண்டுமா? பெண்கள் குடித்தால் தவறா? பெண் என்ன அடிமையா என்று வெகுண்டு எழுவார்கள்.

அதனால் ஆணுக்கு நிகராக பெண்ணும் மதுசாலைக்கு வந்துவிட்டாள். ஆகா! பெண்ணுக்கு ஆனந்த சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்து பெண்ணுரிமை பேசுவோர்களின் மனங்களை மகிழ்விப்போம்!
இதுவே பெண்ணுக்கு கிடைத்திருக்கும் தன்னாட்சியின் (Women Empowerment) முதல்படி என்றுகூட சொல்லாம்.


Wednesday, June 08, 2011

சப்தமில்லாமல் சமுதாயத்தில் நடக்கும் பெண்கொடுமை


கடும் அவதி...! பேரூர் பகுதி மக்களுக்கான "ஜமாபந்தி', கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அலுவலகத்துக்குள் இருந்தவாறு அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், வெளியே கொளுத்திய வெயிலில் நிற்க முடியாமல் நீண்ட நேரம் அவதிப்பட்டனர் பெண்கள். இவர்களுக்காக ஒரு டென்ட் அமைத்து, அமர இருக்கைகளும் வழங்கினால் என்னவாம்? (தினமலர் செய்திப்படம்)
======
இது என்ன மாமியார் கொடுமையா? அல்லது கணவன் செய்யும் கொடுமையா?
எல்லாத் தரப்பு பெண்களுக்கும் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கொடுமைகளை எந்தவகையில் சேர்ப்பார்கள்?

இதுபோல பல கொடுமைகள் பலவகைகளில் தினம் தினம் பெண்களுக்கு எதிராக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவைகளுக்கு எதிராக பெண் விடுதலை விரும்பிகள் யாருமே குரல் கொடுப்பதில்லையே! ஏன்?


Thursday, June 02, 2011

நீதி எங்கே கிடைக்கும்?

காவல் நிலையத்தில் புகார் மனு ஏற்கவில்லை என கூறி சேலம் கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த மகாலெட்சுமி.
(தினமலர் கருத்துப்படம் 2 ஜுன் 2011)


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.