இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, February 25, 2010

அப்பாவி போலிஸ் (பகுதி - 4)

போலீஸ் என்றாலே பொது மக்களிடம், மிகுந்த வெறுப்பும், அவநம்பிக்கையுமே தோன்றி நிற்கிறதே... இந்த நிலைக்கு காரணம் என்ன?

இதுவரை நடந்தது....

அப்பாவி போலிஸ் (பகுதி - 1)
அப்பாவி போலிஸ் (பகுதி - 2)
அப்பாவி போலிஸ் (பகுதி - 3)

இனி அப்பாவி போலிஸ் பகுதி - 4

ஊழல் மற்றும் லஞ்சப் புகார் கடந்த மூன்று ஆண்டுகளில் 75 போலீஸார் கைது

ஊழல் மற்றும் லஞ்சப் புகார் தொடர்பாக டெல்லி காவல் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 75 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 45 நாட்களில் மட்டும் லஞ்சம் வாங்கியதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் இருவேறு புகார்களின் கீழ் சிக்கியுள்ளனர்.

கடந்த 2007ம் ஆண்டில் 24 லஞ்ச வழக்குகளில் 32 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2008ம் ஆண்டில் இந்த கைது எண்ணிக்கை 17ஆக குறைந்தது. எனினும், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 24ஆக அதிகரித்துவிட்டது. மொத்தம் 75 போலீசார் கடந்த மூன்றாண்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Sunday, February 21, 2010

ஜனாதிபதியை எதிர்க்கும் பெண்கள் சங்கத்தலைவிகள்

சென்ற ஆண்டு இந்திய ஜனாதிபதி பெணகள் பாதுகாப்பு சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று பெண் வழக்கறிஞர்கள் மாநாட்டில் உரையாற்றினார். ஆனால் அதற்கு பல மகளிர் சங்ககங்களும் மகளிர் வாரியங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதைப்பற்றிய செய்தியும் அதற்கு செய்தித்தாளில் ஒரு வாசகர் எழுதியிருந்த பதிலும் உங்களின் சிந்தனைக்காக தரப்பட்டிருக்கிறது. படித்துவிட்டு நன்கு யோசியுங்கள்.

வரதட்சணை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? ஜனாதிபதி பிரதிபா கருத்துக்கு பெண்கள் எதிர்ப்பு
தினமலர் ஜனவரி 06,2009

புதுடில்லி : "வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டத்தை பெண்களில் சிலர், தவறாகப் பயன்படுத்தி கணவர்களைத் தண்டிக்கின்றனர் என்ற சர்வே தகவல் கூறுகிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் யாவட்மால் பகுதியில், பெண்கள் மாநாடு நடந்தது. பெண்களுக்கு நீதி கிடைக்கிறதா? என்ற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில், பெண் வக்கீல்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியைகளும் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஜனாதிபதி பிரதிபா, "பெண்கள் பாதுகாப்பாக இருக்க, பல வகையில் சட்டங்கள் உள்ளன. ஆனால், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி, கணவர்களை சில பெண் கள் தண்டிப்பதாக சர்வே தகவல்கள் கூறுகின்றன. இப்படி தவறு நேராவண்ணம் வக்கீல்கள் உஷாராக இருக்க வேண்டும்' என்று பேசினார்.

இந்த பேச்சு, இப்போது பெண்கள் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ஜனாதிபதி பிரதிபா அப்படி பேசியிருக்கக் கூடாது. ஏற்கனவே, பெண்களுக்கு சாதகமாக சட்டங்கள் உள்ளதாக கருத்து நிலவும் நிலையில் இப்படி பேசினால், இந்த சட்டங் களால் பெண் கள் பலன் அடைவதாக அர்த்தமாகி விடும்' என்று கூறியுள்ளனர்.

தேசிய குற்ற ஆவணங்களின் படி, கடந்த ஆண்டு இரண்டு லட்சத்து 16 ஆயிரம் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில், 85 - 95 சதவீதம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். "இதை சுட்டிக் காட்டிய பெண்கள் அமைப்பினர், "சட்டம் இருக்கும் போதே இப்படி நேரும் போது, பெண்களுக்கு இந்த சட்டங்களால் பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை' என்று வருத்தப்பட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவி சுதா சுந்தரம் கூறுகையில்,
"பெண்கள் சம்பந்தப்பட்ட பல சட்டங்கள் போதுமான அளவில் அமல்படுத்தப்படுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள சட்டங்களை சரியாக அமல்படுத்தாத நிலையில், ஜனாதிபதியின் கருத்து வேதனையானது' என்று தெரிவித்தார்.

மகளிர் சங்கங்களும் வாரியங்களும் பெண்களுக்கு எந்தவகையான போதனைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு சிறுமி அழகாக நடித்துக்காட்டியிருக்கிறார். இது தான் இந்த சங்கங்களின் இன்றைய நிலையா என்ற உண்மையை விஷயம் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த புத்திசாலி சிறுமிக்குப் பாராட்டுக்கள்.





ஜனாதிபதிக்கு "ஜே':
பா.சி.ராமச்சந்திரன், திருவொற்றியூர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "வரதட்சணைக் கொடுமை சட்டம், சில பெண்களால் தவறாகப் பயன்படுத்துவதாக ஒரு சர்வே கூறியிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்' என்று, இந்தியாவின் முதல் பெண்மணியும், நமது ஜனாதிபதியுமான பிரதிபா பாட்டீல் கூறியது, நூற்றுக்கு நூறு உண்மை. மிகப் பெரிய பொறுப்பிலுள்ள ஓர் பெண்மணி கூறியதை, உடனே பெண்கள் அமைப்புகள் கண்டனம் செய்தது, கண்டனத்திற்கு உரியதாகும். அவர் அப்படிச் சொன்னது உண்மை தானா என்று ஆராயாமல், அவர் கருத்தை எதிர்ப்பது தவறானது. ஒரு ஆய்வுத் தகவல் இப்படிச் சொல்கிறதே என்று ஜனாதிபதி வருத்தப் பட்டதையே எதிர்க்கும் பெண்கள், வீட்டில் மாமியாரை எப்படி ஆதரிப்பர்? தங்களுடைய வீட்டில், தன்னைப் பெற்ற அன்னைக்கு ஆதரவாயிருக்கும் பெண்கள், தன்னுடைய கணவரைப் பெற்றதும் ஒரு அன்னையே என்பதை அறியாமல், அவர்களுக்கு எதிராக செயல்படும் பெண்கள் இன்று ஏராளம். கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில், பெண்கள் தங்களுடைய மாமியார், மாமனாருக்கு எதிராகப் போவதை சுப்ரீம் கோர்ட்டே கண்டித்திருக்கிறது. அது மட்டுமல்ல, வரதட்சணைக் கொடுமைச் சட்டம், பாலியல் பலாத்காரச் சட்டம் போன்றவைகளையும் சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி, மாமனார், மாமியார், மேலதிகாரிகள், உடன் பணிபுரிவோர் போன்றவர்களையும் கம்பி எண்ண வைத்திருக்கின்றனர். அதனால் தான், காவல் துறை எந்த ஒரு சட்டத்தையும் பயன்படுத்தும் போது, தீர விசாரித்து கைது செய்ய வேண்டும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம்' என்றெல்லாம் பேசிவிட்டு, செய்யாத தவறுக்காக பெண் உரிமையைப் பயன்படுத்தி ஆண்களையும், பெண்களையும் கைது செய்வது எந்தவிதத்தில் நியாயம்? பல குடும்பங்களில் மருமகள் செய்யும் கொடுமைகளை மாமனார், மாமியார் போன்றோர், காவல் துறைக்குத் தெரிவித்து, மருமகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காததற்குக் காரணம், குடும்ப கவுரவம் பாழாகிவிடக் கூடாது என்பதால் தான். இதை இளம் பெண்கள் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்த குடும்ப அமைப்பு. சரியான நேரத்தில் ஜனாதிபதி கூறியது முற்றிலும் சரியே!

Thursday, February 18, 2010

வெளிநாட்டுப் பெண்களுக்குக் கொடுமை!

பெண்கள் மதுசாலையில் சென்று சுதந்திரமாக குடிப்பதற்காக சென்ற ஆண்டு "பார்" நிரப்பும் போராட்டத்தை முன்னின்று நடத்தி சுதந்திரம் வாங்கிக்கொடுத்த பெண்கள் அமைச்சகமும் பெண்கள் வாரியமும் இந்த வெளிநாட்டுப்பெண்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. இவர்கள் மீது மட்டும் ஏன் இத்தனை பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது? இவர்களுக்கு மட்டும் ஏன் கலாச்சாரம் என்ற பெயரில் கசையடி தண்டனைக்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஏன் இந்த பாரபட்சம்?

போலீசாரை தாக்கிய ஈரான் மாணவியர் கைது
பிப்ரவரி 19,2010

பெங்களூரு:மது போதையில், போலீசாரை தாக்கிய, பெங்களூருவில் படிக்கும் ஈரான் நாட்டைச் சேர்ந்த இரு கல்லூரி மாணவியர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு தயானந்த சாகர் கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படிப்பவர் பாசில்.நேஷனல் கல்லூரியில் எம்.பி.ஏ., படிப்பவர் பாத்திமா. இருவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.இருவரும், தங்கள் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டனர். மது குடித்த இருவரும், நேற்று முன்தினம் இரவு 12.45 மணிக்கு, கார் ஓட்டிக் கொண்டு தங்கள்இருப்பிடம் செல்லும் போது, தடுத்த போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்ய முயற்சித்த போது, ஆத்திரமடைந்த இரு மாணவியரும்போலீசாரை தாக்கினர். போட்டோ எடுக்க வந்த பத்திரிகை போட்டோகிராபர்களையும் கீழே தள்ளினர்.இவர்கள் இருவரையும், போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவர் மீதும் ஐ.பி.சி., 353, 324, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு, எப்.ஐ.ஆர்., நகலைபோலீசார் அனுப்பி வைத்தனர்."இவ்விரு மாணவியருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கூடாது' என, பெங்களூருவில் படிக்கும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 25 மாணவ,மாணவியர், போலீஸ் ஸ்டேஷன் வந்து வற்புறுத்தினர். அவர்களது வற்புறுத்தலுக்கு பணியாத போலீசார், வழக்கு பதிவு செய்தனர்.நகர போலீசார்நடவடிக்கையின்படி, மாணவியர் இருவரும்ஈரானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர். அந்நாட்டிற்கு சென்ற பின், அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி. அந்நாட்டு சட்டப்படி, மது குடித்த குற்றத்துக்காக 40 கசையடி வாங்க வேண்டியிருக்கும்.


எப்போதும் எல்லா விஷயங்களிலும் எல்லோரும் சமமே!


அன்று நடந்தது......





NEW DELHI: Turning the iconic freedom struggle slogan “ jail bharo” on its head, Minister of State for Women and Child Development since Renuka Choudhary on Thursday suggested that the only way to tackle the moral police was to launch a “ pub bharo andolan”.

Choudhary has been at loggerheads with the Karnataka government for failing to protect women in the aftermath of the Mangalore pub attack. Not only were women beaten up in a pub last month but young girls have received threats warning them not to wear "noodle straps or tight jeans" and celebrate Valentine's Day.

"How can the state government allow something (hooliganism) like this to go on? I am watching the situation closely. The Centre will have to intervene if the state cannot manage its law and order," Choudhary said.

She added that the youth could cock a snook by going to pubs in droves to make their point. Sources said posters had come up across the city warning young couples from celebrating V-Day and asking shopkeepers not to keep romantic cards and gifts.

Condemning the incident, All India Democratic Women's association (AIDWA) general secretary Sudha Sundararaman said attacks on women in the name of "culture" and "tradition" were on the rise in many parts of the country. "The truth is these phrases are only being used to mask barbaric violence and violation of gender rights," she said.

Meanwhile, the controversy over NCW member Nirmala Venkatesh refuses to die down. Venkatesh had reportedly absolved the miscreants and blamed pub security for the incident. NCW chairperson Girija Vyas has since distanced herself from the report saying it was the opinion of an individual and not that of the commission. Sources said a decision on the report would be taken on Friday at the commission's meeting.

The WCD ministry on Thursday issued a notice to Venkatesh, demanding an explanation for her remarks and for "dereliction of duty".

In a memorandum, AIDWA too has taken exception to Venkatesh's remarks, calling them "unfortunate". It recommended that NCW take steps to ensure that girls were not at the receiving end at Mangalore.

The WCD ministry has received complaints from a group of nearly 500 software professionals who wanted to take out a peace march on February 7 but were denied permission by the state administration.

Sources said that while there was little that the WCD ministry could do, it was "condemnable" that Sri Ram Sene chief Pramod Muthalik could issue threats to the youth without any fear of reprimand despite being on bail.





Sunday, February 14, 2010

தாய்மையும் பெண்மையும்

இனிவரும் காலங்களில் தாய்மை பெண்மை என்ற குணங்களே இல்லாத ஒரு உயிரினமாகத்தான் மனித இனம் இருக்கும் போலிருக்கிறது.


நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், சரஸ்வதி என்பவருக்கும் 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணமாகி 15 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், திருச்சியில் உள்ள அனாதை இல்லத்தில் இருந்து சக்திவேல் (8) என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், சரஸ்வதிக்கு ஷாலினி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில ஆண்டில் சரஸ்வதி இறந்தார். அதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருச்சி மாவட்டம் எம்.களத்தூரை சேர்ந்த அமலா (23) என்ற பெண்ணை, நேரு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ராகவி (3), கவின் (2) என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
கணவர் நேரு தனது முதல் மனைவியின் குழந்தையிடமும், தத்தெடுத்த மகனிடமும் அதிக அளவில் பாசம் வைத்திருந்தார். மேலும், அவர்கள் பெயரில் கணிசமான அளவு பணமும் டிபாசிட் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அமலா, "குழந்தைகளை கொன்று விட்டால் தனது கணவர் தனது குழந்தைகளிடம் பாசம் காட்டுவார்' என எண்ணி அதை செயல்படுத்த முடிவு செய்தார்.

நேற்று அதிகாலை 4 மணிக்கு நேரு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஷாலினி ஆகியோரை ஒன்றன்பின் ஒன்றாக, வீட்டுக்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து அமலா கொலை செய்தார். "யாருக்கும் தன்மேல் சந்தேகம் வரக்கூடாது' என்பதற்காக தனது குழந்தை கவினை தூக்கிக்கொண்டு மருத்துவமனை செல்வதாக கூறிச் சென்றுவிட்டார்.

காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த அமலா, வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் தொட்டியில் குழந்தை இறந்து கிடப்பதாக தனது கணவர் நேருவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதற்குள் செய்தி பரவியதை அடுத்து அக்கம் பக்கத்தில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாசில்தார் குப்புசாமி, எஸ்.ஐ.,க்கள் சுப்ரமணி, லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அமலா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் எழுந்தது.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேற்கண்ட உண்மை வெளியானது. அதை தொடர்ந்து அமலாவை, போலீசார் கைது செய்தனர். சித்தி, இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
===============================

இதுபோன்ற பெண்களுக்குத்தான் பெண்கள் நலத்துறையும் பெண்கள் சங்கங்களும் பெண்ணுரிமை என்ற பெயரில் புதிய சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்மையும் தாய்மையும் இல்லாத உயிரினங்களுக்கு எதற்கு சட்டங்களில் சிறப்புரிமை?

தண்ணீரில் மூழ்கடித்து குழந்தைகளைக் கொன்றது மனிதத் தாய்,
தண்ணீரில் மூழ்காமல் குழந்தைகளைக் காப்பாற்றும் இந்த அற்புதத்தாய் !

Swallow - mother, feeding the baby bird on fly photo

தாய்மைக்கு அர்த்தம் இனி விலங்கினங்களில் மட்டும் தான் காணமுடியும்! ஏனென்றால் அவைகளின் சமுதாயத்தில் தான் கொடூரமான ஒருதலைபட்டசமான சட்டங்கள் என்னும் குடும்ப அழிப்பு முறை கிடையாது. பெண்ணுரிமை என்று பேசி குடும்பங்களை அழிக்கும் சதிகாரக் கூட்டமும் கிடையாது.




Tuesday, February 09, 2010

முதியோர்களின் வாழ்க்கை மருமகள்களின் கையில்

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளை தண்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக இன்று செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது. நாடு எப்படிப்பட்ட கொடுமையான நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. பெற்றவர்களைக் கூட பிள்ளைகள் கவனிக்காமல் போய்விட்டார்கள்.

சில பிள்ளைகளுக்கு உண்மையாகவே பெற்றோர் மீது பாசமில்லாமல் போயிருக்கலாம். ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் தங்களுக்குத் திருமணமானவுடன் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து பெற்றோரை வீட்டை விட்டு விரட்டும் அவல நிலையில் அடிபணிந்து கிடக்கிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் அரசாங்கம் மருமகள்களுக்கு மட்டும் கொடுத்துள்ள சிறப்பான தவறான சட்டங்கள். ஆம். வயதான பெற்றோரை பராமரிக்கும் ஆண்களுக்கும், பெற்றோர்களுக்கு பணஉதவி செய்யும் ஆண்களுக்கும் அவர்களது மனைவியரால் வரதட்சணை சட்ட மிரட்டல் விடப்பட்டு அந்த உதவிகள் நிறுத்தப்படுகிறது. இந்த கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் பணஉதவி செய்யும் ஆண்கள் அவர்களது வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைசெய்ததாக மருமகள்களால் பொய்வழக்குப் போடப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

அதனால் இந்தியாவில் வயதான பெற்றோர்கள் தங்களது மகன்களால் புறக்கணிக்கப்படவேண்டும் அல்லது மகனின் ஆதரவு கிடைத்தால் மருமகளால் பொய்வழக்குப் போடப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

"தாய்க்குப் பின் தாரம்" என்றால் ஒரு குடும்பத்தில் திருமணமாகி வரும் தாரம் வயதானதாயின் இடத்திலிருந்து ஒரு தாய் போல குடும்பத்தை கவனித்து குடும்பத்திலுள்ள வயதான பெற்றோர்களை ஆதரித்து அன்பாக நடக்கவேண்டும். தனது கணவர் ஒழுங்காக தனது பெற்றோரை பராமரிக்கத் தவறினாலும் குடும்பத்தின் தலைவியாக தாயாக இருந்து கணவனுக்குத் தகுந்த அறிவுரை கூறி வயதானவர்களை கவனிக்கவேண்டும், கணவனின் குடும்பத்தை வழிநடத்தவேண்டும். அதனால் தான் எப்போதும் திருமணமானவுடன் கணவன் மனைவியின் வீட்டிற்கு சென்று வாழாமல், பெண்கள் எப்போதும் கணவனின் வீட்டிற்கு சென்று வாழ்வது மரபாக்கப்பட்டது. இது பெண்மையையும் மனைவி என்ற உறவையும் கவுரவப்படுத்தி சமுதாயத்தில் கொடுக்கப்படும் மரியாதை.

இப்போது இதுபோல் எத்தனை மருமகள்கள் இருக்கிறார்கள்? இந்த கலாச்சார நிலை மாறி பெற்றவர்களைக் காப்பாற்றுவதற்குக் கூட நாட்டில் சட்டம் தேவைப்படும் அவலநிலையை ஏற்படுத்திவிட்டார்கள் போலி பெண்ணடிமைவாதிகள்.

காளான்கள் போல முளைத்திருக்கும் பெண்கள் உரிமைவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சதிகாரக் கூட்டம் இதை பெண்ணடிமைத்தனம் என்று பெயர் சூட்டி மனைவிக்கு சமுதாயத்தில் உள்ள மரியாதையை அழித்து குடும்பத்தின் வழிகாட்டியாக இருக்க வேண்டிய மருமகளை குழி பறிக்கும் ஓநாயாக மாற்றி முதியவர்களை தெருவில் அலையவிட்டு குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். இது தெரியாத அப்பாவி மருமகள்கள் தானும் அழிந்து பல குடும்பங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் மேலும் தவறான பல மருமகள் சார்பு சட்டங்களைப் போடுவதை விட உறவுகளுக்கிடையே அன்பை வளர்க்க முயற்சி செய்யவேண்டும். ஆனால் இந்திய நாட்டில் இதுவரை குடும்பங்களை அழிக்கத்தான் பல சட்டங்களை இயற்றியிருக்கிறார்கள். அந்த சட்டங்களால் ஏற்பட்ட மற்றொரு அவலநிலை தான் இன்று பெற்றவர்களைக் காப்பாற்ற மற்றொரு சட்டம் இயற்றும் இழிநிலை. விலங்கினத்தை விட மோசமாக மனிதர்களை இழிபிறவிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் மனித சட்டங்கள் தான் IPC498A, Domestic Violence Act போன்ற சட்டங்கள்.

பெற்ற தாய் தந்தையை கண்ணீர் சிந்தவைக்கும் நாடு என்றுமே உருப்படாமல்தான் போகும்.

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு அரசு 'செக்!'
தினமலர் பிப்ரவரி 10,2010


விருதுநகர்:பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு அரசு "செக்' வைத்துள்ளது. சமூக நல அலுவலரிடம் முறையிட்டால், ஜீவனாம்சம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பெற்றோர் முதியோர் பராமரிப்பு சட்டம்: 60 வயதான முதியவர்களை பிள்ளைகள் பராமரிப்பு செய்து கவனிக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசு 2007ம் ஆண்டு பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் நல வாழ்வு சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இது உடனடியாக செயல்படுத்தப்படவில்லை. தற்போது, தமிழக அரசு இந்த சட்டத்திற்கான செயல் வடிவம் தயாரித்துள்ளது. இதற்காக, கலெக்டரை தலைவராக கொண்டு மாவட்ட அளவில் குழு அமைக்கப்படவுள்ளது. இவர்களை கண்காணிக்க, மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது:
60 வயது நிரம்பியவர், தனது சம்பாத்தியத்தில், தேடி வைத்துள்ள சொத்துக்களால், தன்னை பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் போது, ஜீவனாம்சம் பெற தகுதியுடையவராகிறார். 18 வயது நிரம்பிய தனது மகன், மகள் அல்லது உறவினர் ஆகியோரிடம் ஜீவனாம்சம் கேட்கலாம். முதியவர் இறந்த பின், அவரது சொத்துக்கு யார், யார் வாரிசாக வருகிறார்களோ அவர்கள் அடையும் சொத்து விகிதப்படி, அனைவரும் ஜீவனாம்ச தொகையை கொடுக்க வேண்டும். ஒரு முதியவருக்கு குழந்தைகள் இல்லை என்றால், அடுத்தபடியாக அவரது சொத்துக்கு வாரிசாக வரும் உறவினர்கள், நல்ல நிலையில் இருந்து சொத்துக்களை பெறாவிட்டாலும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும். ஜீவனாம்சம் தர மறுப்பவர்களுக்கு, சட்டப்படி ஐயாயிரம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனை வழங்க முடியும். அதிக பட்சமாக, முதியவர் ஒருவருக்கு, மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஜீவனாம்சம் பெற முடியும்.

சமூக அலுவலர்கள் நியமனம்:
பெற்றோர், முதியோர் பராமரிப்பு நல வாழ்வு சட்டத்தின் பராமரிப்பு அலுவலராகவும், செம்மைபடுத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் சமூக நல அலுவலகத்தில் இச்சட்டத்தின் படி, ஜீவனாம்சம் பெற விண்ணப்பிக்கலாம். அதுதவிர, முதியவர் சார்பாக தொண்டு நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள் மனு கொடுக்கலாம்.

நடவடிக்கை:
மனுவை பெறும் சமூக நல அலுவலர்கள் முதியோர்களின் வாரிசுகளை அழைத்து, பெற்றோரை பராமரிப்பு செய்ய கவுன்சிலிங் நடத்துவர். இதில், பிள்ளைகள் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டால், ஜீவனாம்சம் பெற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான குழுவும் அமைக்கப்பட உள்ளது. இதில், கலெக்டர் தலைவராகவும், சமூகநல அலுவலர், ஆர்.டி.ஓ.,தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாகவும் இருப்பர். இந்த குழு, பெற்றோர், முதியோர் நல வாழ்வு சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர்.

தென் மாநிலங்கள் ஆர்வம்:
மத்திய அரசின் இந்த சட்டத்தை, தென் மாநிலங்கள் மட்டுமே ஆர்வம் காட்டி செயல்படுத்த முன் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில், இந்த சட்டம் அமலுக்கு வந்துள் ளது. தற்போது, தமிழ்நாடு, கேர ளா, ஆந்திர மாநிலங்கள் இந்த சட்டத்தை செயல்படுத்த முன் வந்துள்ளன.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.