இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, August 03, 2012

விதவைப் பெண்களை மனிதாபிமானம் இல்லாமல் துண்டு துண்டாக வெட்டும் நாடு உருப்படுமா?

மிகவும் அதிர்ச்சியான இன்றைய செய்தியை படித்ததும் நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா அல்லது சைத்தான்களின் தேசத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.

பெண்களின் நலனை பாதுகாக்க தனியாக ஒரு மத்திய அமைச்சகமும், அதுவும் போதாது என்று தேசிய பெண்கள் நல வாரியமும், மாநில மகளிர் நல வாரியங்களும் வைத்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இந்திய நாட்டில் வயதான ஏழை விதவைத் தாய்மார்கள் இறந்ததும் உடலை பல துண்டுகளாக வெட்டி சாக்குப் பையில் கட்டி வீசி எறியும் கொடுங்கோன்மை நடந்துகொண்டிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
August 03, 2012 NDTV
New Delhi: The Supreme Court today expressed shock over the manner in which the bodies of deceased Vrindavan widows were disposed by chopping into pieces and packing in gunny bags.

The Court said "It is shocking" and directed the Chief Medical Officer of Civil hospital of Mathura to ensure last rites of any deceased women in the shelter homes be performed per their religion.

It also pulled up the National Commission for Women and its Uttar Pradesh counterpart for their apathy to the pitiable condition of Virandavan widows and asked the state government to provide adequate food and hygienic living environment for them.


A bench of justices DK Jain and Madan B Lokur directed the two commissions to file their affidavits within two weeks explaining as to what they have done or propose to do for the widows, living in "pathetic" condition in the holy city. The bench also directed the state government to provide medical facilities for the widows.

It directed the Vrindavan Chief Medical Officer to ensure that a team of doctors visits the widows' shelter at least twice a week.

Recording the statement of state government's counsel, the bench said a committee of State Probationary Officer and Social Welfare Officer would ensure that proper food and drinking water are supplied to the widows' home.

The court passed the order on pleas seeking its direction to the Centre and the state government to provide shelter and other necessary facilities to the widows in the city who have been abandoned by their family members.

The court had earlier issued notices on the petitions highlighting the plight of widows who have been living in Vrindavan and begging at temples and then huddling together in hovels, which they call their homes.

The court had on May 9 appointed a seven-member panel to collect data on their socio-economic conditions. The committee headed by chairman of Mathura District Legal Services Authority had earlier submitted its report saying the widows are "highly vulnerable" groups and are living in "pathetic" conditions.

The petitioner NGOs pointed out to the court that the widows, who congregate for around seven to eight hours for Bhajans, get only Rs. 18 a day.

The NGO had also told the court that a majority of the 1,000-odd widows interviewed in Vrindavan by the NCW have children who do not care for them.

In a report to the Supreme Court, the NCW recommended fixing of liability on the children under the Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007.

It had said an estimated 2000 widows were living like beggars in ashrams dotting the two holy cities of Mathura and Vrindavan and were being sexually exploited.

NCW's second report to the court said 81 per cent of these women were illiterate.
இந்துக்கள் புனிதமான நகரம் என்று கூறிக்கொள்ளும் மதுராவில் உள்ள பிருந்தாவனம் என்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதான ஏழை விதவைத் தாய்மார்களின் நிலைதான் இப்படி இருக்கிறது என்று அறியும்போது உடல் பதை பதைக்கிறது.

பல காலமாக பண்பிலும், கலாச்சாரத்திலும், பெண்களை போற்றுவதிலும் பெருமை மிக்கவர்கள் என்று உலகெங்கும் (போலியாக) பெருமையடித்துக்கொள்ளும் இந்தியநாட்டில் விதவைப் பெண்களை இப்படி நடத்துகிறார்கள் என்றால் இந்தியர்கள் வாழும் வாழ்க்கை போலியானதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசியல்வாதிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதைவிட ஊழல் செய்து பண மூட்டையை எந்த நாட்டில் பதுக்குவது என்று திட்டம் வகுப்பதற்குத்தான் நேரத்தை செலவழிக்கிறார்கள் என்று தினந்தோரும் வரும் செய்திகள் காட்டுகின்றன. இதுபோன்ற சூழலில் ஆதரவற்ற இந்த ஏழை விதவைத் தாய்மார்களின் துயரமான நிலையை யார்தான் கண்டுகொள்வார்கள்?

விதவைப் பெண்கள், வயதான தாய்மார்கள் இவர்களின் நலனைப் பற்றி ஆண்கள் கவலைப்படமாட்டார்களோ என்று நினைத்துதான் இந்தியாவில் பெண் அமைச்சர் தலைமையில் மத்திய பெண்கள் அமைச்சகம் இருக்கிறது. முழுக்க முழுக்க பெண்கள் நிர்வகிக்கும் தேசிய பெண்கள் வாரியம் இருக்கிறது. இந்த அமைப்புகள் இதுபோன்ற துயராமான சூழலில் இருக்கும் பெண்களின் நலனை பாதுகாக்கும் வேலைகளை செய்யாமல் பெண்களைத் தவறாக வழிநடத்தும் மற்ற எல்லாவித தவறான செயல்களுக்கும் தங்களின் பணத்தையும், நிர்வாகத்தையும் செலவழிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு பணக்கார இளம் பெண் மது விடுதியில் பிறந்தநாள் கொண்டாடி மகிழச் சென்று குடிகார நண்பர்களுக்குள் ஏற்பட் தகராரை தேசிய அளவில் பெரிதுபடுத்தி தேசிய பெண்கள் நல வாரியம் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் கூட வீரமாகக் குரல் கொடுத்தார். ஆனால் ஏழை விதவைத்தாய்மார்களின் நலனை பாதுகாக்க இவர்கள் ஏன் எந்தவித நடவடிக்கையையும் இதுவரை செய்திருக்கவில்லை என்பது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ள இந்த பதிவினைப் படித்துப் பாருங்கள்: பெண்கள் அமைச்சகம் இந்தியப் பெண்களுக்கு என்ன செய்கிறது?
இறந்தது தீவிரவாதியானாலும் அவரது மத முறைப்படி இறுதி அடக்கம் செய்வதுதான் மனிதாபிமான நடைமுறை வழக்கம். ஆனால் அப்பாவி ஏழை விதவைத் தாய்மார்களின் இறுதிச் சடங்கை இப்படி மனிதாபிமானம் இல்லாமல் நடத்தும் நாடு நன்றாக இருக்குமா?
எல்லாவற்றிற்கும் மேலாக இதுபோன்ற கொடுமையை செய்பவர்களுக்கு எந்தவித தண்டனையும் கொடுக்காமல் வெற்றுப்பேச்சுக்களை பேசும் நீதிமன்றம் உண்மையாகவே நீதிதேவதை வாழும் இடமாக இருக்குமா?


Wednesday, July 25, 2012

இந்தியாவில் உயிரினமாகவே கருதப்படாத பெண்ணினம் எது தெரியுமா?

சென்ற வாரம் பண போதையில் மிதந்து மதுசாலையில் பிறந்த நாள் கொண்டாடி மகிழச் சென்ற இளம் பெண்ணுக்கு குடிகார நண்பர்களுடன் நடந்த சண்டைக்கு கொடி பிடித்து போராடிவரும் தேசிய பெண்கள் வாரியமோ, உள்துறை அமைச்சகமோ பின்வரும் படத்தில் இருக்கும் பெண்களுக்காக என்றாவது தீவிரமாக குரல் கொடுத்திருப்பார்களா?

தினமலரில் வந்த படம் 25 ஜூலை 2012
ராக்கெட்டுகளையும், ஏவுகணைகளையும் விட்டு வல்லரசாகிக் கொண்டிருக்கும் நாட்டில் காலில் காலணிகூட இல்லாத பள்ளிச் சிறுமிகள், “டீ” வாங்கிக் கொண்டு செல்லும் அவலம்.

இதுபோலத்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளிலும் கணவனை சிறையில் அடைத்து மருமகளுடன் குதூகலம் அடையும் அரசாங்கமோ, பெண்கள் அமைச்சகமோ, பெண்கள் வாரியமோ, பெண்கள் அமைப்புகளோ அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி இதுவரை ஒரு துளிகூட கவலைப்பட்டதில்லை. இதுபோல் அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளில் அரசாங்கத்தின் உதவியால் அனாதையாக்கப்பட்டு கவனிக்கப்படாத குழந்தைகள் லட்சக் கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பது இருட்டடிக்கப்பட்ட கசப்பான உண்மை.


Monday, July 23, 2012

பெருமைக்குரிய பெண்மணி

சமீபத்தில் மதுவிடுதியில் மகிழ்வுறச் சென்ற பெண் சம்பந்தப்பட்ட அடிதடி சம்பவத்திற்கு மத்திய மந்திரி முதல் பெண்கள் நலவாரியம் வரை குரல் எழுப்பி இந்திய பெண்களை தாங்கி நிற்பதாக பெருமைப்பட்டுக்கொண்டார்கள். ஆனால் பெண்களுக்காக உண்மையாக பாடுபடும் பெண்மணிகள் பற்றி சிறிய செய்தி மட்டும்தான் வெளியே வரும். உண்மையாகவே பெண்களுக்காக உழைக்கும் ஒரு பெருமைக்குரிய பெண்மணியின் செய்தி இது.

இதுபோல சமுதாயத்தின் கீழ்நிலையில் இருக்கும் பெண்களுக்காக இந்திய பெண்கள் நல அமைச்சகமும், தேசிய பெண்கள் நல வாரியமும் உண்மையாகவே ஏதாவது செய்திருப்பார்களா? இந்தியப் பெண்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் அமைதியாக பல நல்ல பணிகளை செய்துகொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாழ்வை மேலைநாட்டுக் கலாச்சாரத்துடன் "Women Empowerment" என்ற பெயரில் அழித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இளம் பெண் மதுபான விடுதிக்குச் செல்ல உரிமையில்லையா என்று ஆர்ப்பாட்டமாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்.

தினமலர் ஜூலை 24,2012


நரிக்குறவர் இனத்தின் முன்னேற்றத்திற்காகஉதவும், அதே இனத்தைச் சேர்ந்த ஞானசுந்தரி: நான், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண். என் கணவரை, கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். அவரின் ஊக்குவிப்பால், பி.ஏ., முடித்தேன்.

சிறு வயதில் இருந்தே, எங்கள் மக்கள் படும் கஷ்டத்தை பார்த்தவள் நான். ஏதாவது ஒரு வழியில், அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைப்பேன்; என் கணவருக்கும் அதே எண்ணம் தான். அவர்களின் நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என உறுதியாக நம்பினோம்.

சைதாப்பேட்டையில், 25 நரிக்குறவ குழந்தைகளுக்காக பள்ளியைத் துவக்கினோம். அதை திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விரிவுபடுத்தினோம். இங்கு படித்த எவ்வளவோ பேர், இன்று நல்ல நிலையில் உள்ளனர்.

எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலருக்கும், முறையான விழிப்புணர்வு இல்லை. படிப்பை இன்னும் எட்டாக்கனியாகத் தான் அவர்கள் பார்க்கின்றனர்.

குடும்ப சூழலால் பல பெண்கள், படிக்க முடியாமல் உள்ளனர். அவர்கள் கஷ்டப்பட்டு தான் பிழைப்பை நடத்துகின்றனர். அவர்களுக்கு நிரந்தர வருமானத்தைப் பெருக்கத் தான் பாசிமணிகள் மூலம், விதவிதமான அணிகலன்கள் செய்து விற்க, பயிற்சி அளிக்கிறேன்.

"பேஷன்' நகைகள் செய்வதற்கான மூலப்பொருட்களை, டில்லி, மும்பை, கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து, மொத்தமாக வரவழைக்கிறோம். காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாயத்தை தான், நகைகள் செய்ய பயன்படுத்துகிறோம். அதனால், இந்த நகைகளை அணியும் போது, நம் உடலில், "அலர்ஜி' ஏற்படாது.

எங்கள் நகைகளுக்கு வெளிநாடுகளில், நல்ல வரவேற்பு உள்ளது. அரசு நடத்தும், கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும், எங்களுக்கென்று தனியாக, "ஸ்டால்' ஒதுக்கிக் கொடுத்துள்ளனர்.

எங்களிடம் பயிற்சி எடுத்த பெண்களுக்கு, அரசு மானிய உதவித் தொகை கொடுத்து ஊக்குவித்தால், அவர்கள் செய்து கொடுக்கும் நகைகளை ஏற்றுமதி செய்வதற்கும், நல்ல விலைக்கு விற்பதற்கும் உதவத் தயாராக இருக்கிறோம்.

Thursday, July 19, 2012

பிடிக்காத ஆணை பழிவாங்க இனி தயங்காமல் பொய் கற்பழிப்பு வழக்குகளை போடலாம்! (New Trend!!!!)

பெண்கள் மீதான பாலியல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. அரசாங்கம் எத்தனை சட்டங்கள் எழுதினாலும் அவற்றை செயல்படுத்தும் காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாக இல்லாதவரை சமுதாயத்திற்கு மிகுந்த ஆபத்துதான். அந்த வரிசையில் இன்றைய சட்டதிருத்தம் சமுதாயத்தையே அழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து கடைசி வரை படியுங்கள். மிகவும் ஆச்சரியப்பட்டு போவீர்கள்!! யாராலும் கற்பனைகூட செய்யமுடியாத அளவிற்கு இந்தியாவில் இளம் பெண்கள் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்து பிடிக்காத ஆணை எப்படியெல்லாம் பழிவாங்குகிறார்கள் என்று அப்போதுதான் உங்களுக்குத் தெரியும்.


புதுடில்லி: பாலியல் குற்றத்திற்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று, அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. அத்துடன், ஆசிட் வீசும் நபர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

=====
பெண்கள் மீதான பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆணுக்கு ஆயுள் தண்டனை என்றால் அப்படி ஒரு வழக்கை பொய்யாக ஜோடித்து பொய் கற்பழிப்பு வழக்கு போடும் பெண்ணுக்கு என்ன தண்டனை? இதுவரை எதுவும் இல்லை. அப்படியே இருந்தாலும் நீதிமன்றங்களில் இளம் பெண்ணின் கடைக்கண் பட்டுவிட்டால் பொய் வழக்குப் போடும் பெண்ணிற்கு எந்த தண்டனையையும் நீதிபதி வழங்கமாட்டார். அதுதான் இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது.

மேலே உள்ள செய்தியில் மந்திரிசபை சட்டம் எழுதுவதில் காட்டும் அக்கறையை அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க காட்டுவதில்லை. அல்லது அவர்களே ஓட்டையைப் போட்டுத் தருகிறார்களா என்றும் புரியவில்லை.

சமீபத்தில் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கில் மிகவும் கொடூரமான முறையில் 21 வயது இளம் பெண் பொய் வழக்குப் போட்டிருக்கிறார். தனது கள்ளக்காதலனின் மனைவி தனது கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்ததால் அந்த கள்ளக் காதலனின் மனைவி, அந்த மனைவியின் அண்ணன், அண்ணனின் மனைவி ஆகியோர் மீது ஆட்கடத்தல், கூட்டு சதி, கற்பழிப்பு ஆகிய குற்றங்களை சுமத்தி மிகவும் அருமையாக ஒரு கொடூரமான கற்பழிப்பு வழக்கை ஜோடித்து அனைவர் மீதும் வழக்குத் தொடுத்துவிட்டார். அந்த புகாரை படித்தால் தலையே சுற்றும், அந்த அளவிற்கு ஒரு அருவருப்பான, கொடூரமான கற்பனை.

தன்னுடைய பொய் வழக்கு நம்பும்படியாக இருக்கவேண்டும் என்பதற்காக கற்பனையாக மேலும் இரு ஆண்களின் பெயர்களை சேர்த்து தனது கள்ளக்காதலனின் மனைவியின் அண்ணனோடு சேர்ந்து மூன்று ஆண்கள் ஆறு மாதம் அடைத்துவைத்து மாற்றி மாற்றி கற்பழித்ததாகவும், அதனால் தனக்கு கர்ப்பம் ஏற்பட்டு அதனை அவர்கள் கலைத்ததாகவும் பொய் வழக்கு தொடுத்திருக்கிறார். இந்தக் குற்றத்திற்கு தனது கள்ளக்காதலனின் மனைவியின் அண்ணி உதவி செய்ததாகவும் எழுதியிருக்கிறார்.

இதில் அருமையான விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் டில்லி மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். சட்டங்களையும், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு இந்த வழக்கை அற்புதமாக வடிவமைத்து இந்திய நீதித்துறையை முட்டாளாக்கியிருக்கிறார்.

ஆனால் கடைசியில் நடந்தது என்ன? இவையெல்லாவற்றையும் அந்தப் பெண்ணே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட பிறகும், நீதிபதி அந்தப் பெண்ணுக்கு எந்த தண்டனையும் கொடுக்கவில்லை. அவள் ஒரு இளம் பெண் என்பதால் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்து தண்டனை கொடுக்கவில்லை என்று தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

இது போதாதா? இனி பிடிக்காத ஆண் மீதோ, கள்ளக்காதலுக்கு தடைபோடும் ஆண் மீதோ அற்புதமாக பொய்யான கற்பழிப்பு குற்றச் சாட்டை சுமத்தி இன்று மத்திய அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வாங்கிக்கொடுத்துவிடுவார்கள்!!!! அதற்கு நீதிமன்றங்கள் பெண்களுக்கு உதவுமா என்ற விஷயம் வழக்கை நடத்தும் நீதிபதிகளை பொறுத்தது.

நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பின் முக்கியமான பகுதி. படித்துவிட்டு இந்திய நீதிமன்றங்கள் செயல்படும் விதத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு இளம் பெண் கொடுத்த இந்த பொய்யான கற்பழிப்பு வழக்கில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்பது இரண்டு பெண்கள், ஒரு ஆண், இரண்டு கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்கள்! இவர்களுக்கு நீதி வழங்கப்போவது யார்?


IN THE COURT OF SH. RAKESH TEWARI ASJVI
ROHINI COURTS, DELHI

SC NO.271/10
FIR NO. 895/05

U/S 365/366/342/376(2) IPC
PS Sultan Puri

State
Vs.
1. Ritu @ Gudia w/o Ram Niwas
2. Kishan Pal (discharged vide order dated 08.01.2007)
3. Ram Niwas (Proclaimed Offender)
4. Balvinder (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்
5. Munna (Proclaimed Offender) - கற்பனையாக ஜோடிக்கப்பட்ட ஆண்

Date when committed to the court of Sessions :28.09.2006


Judgment pronounced on :12.07.2012



JUDGMENT:

34. I am conscious of the doctrine of judicial restraint which commands me not to pass such comments which may not be part of the “lis” and at the same time, I am also conscious of the law that nobody has got a right to commit a rape upon a woman even of easy virtue but the theory of rape against the present prosecutrix has been already discarded by me, as discussed above, but despite all restraints at my command, my judicial conscience pricks me that I would be failing in my duty if I do not point out that present prosecutrix, admittedly working in District Courts has no fear or by virtue of her said job her fear has gone out of her mind towards the law and she can play with the law and legal procedures as a master juggler and she can go to any extent by levelling allegations against anyone as I have already held that she has no regard even for the human relations, as discussed above, and in this sense, such kind of alleged victims of rape are potentially dangerous to the society in the sense that from tomorrow onwards the general public as well as the courts will start disbelieving the version given by even the real victims of rape and in the second sense, as she has become fearless, she can level allegations against her colleagues with whom she is working or against any other person of the society with whom she will be having a clash of interest. I have no hesitation in drawing an inference that she is a cold blooded thinker whereby she can implicate any person, having inadvertence towards the consequences and at the same time, she has no repentance over her said false allegations. These comments have been passed with a hope that the said prosecutrix would reform herself in future and it is in this background that I am thinking it inexpedient in the circumstances not to lodge a report against her for the criminal offences she has committed before this court during her said deposition u/s 340 Cr.PC and not reporting the matter to her department for her departmental action because prevention is always better than cure and for further humanitarian reason that she got her job on compassionate ground after her father was murdered.

இந்த தீர்ப்பு தொடர்பாக செய்தித்தாளில் வந்துள்ள செய்தி....





புதுடில்லி:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். இதுபோன்ற பொய் புகாரால், உண்மையிலேயே, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிய பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும் இரக்கம் இல்லாமல் போய் விடும்' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது.டில்லியில் கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை, நான்கு ஆண்கள் ஒன்றாக சேர்த்து, கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இந்த குற்றத்துக்கு ஒரு பெண், உடந்தையாக இருந்ததாகவும் கூறி, டில்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண், பொய் வழக்கு தொடர்ந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த, நீதிபதி ஆர்.டி.திவாரி, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை, விடுதலை செய்தார். இதன்பின், தீர்ப்பில் அவர் கூறியதாவது:"தன்னை சிலர், பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொய் புகார் கூறி, வழக்கு தொடரும் பெண்களால், சமுதாயத்துக்கு பெரிய அளவில் அபாயம் ஏற்படும். அவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பொய் புகார்களால், உண்மையிலேயே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, பாதிக்கப்படும் பெண்கள் மீது, கோர்ட்டுக்கும், பொதுமக்களுக்கும், இரக்கம் இல்லாமல் போய் விடும். இதுபோன்று கொடூரமாக சிந்திக்கும் பெண்கள், யார் மீது வேண்டுமானாலும் புகார் கொடுப்பார்கள். பொய் புகார் கூறுகிறோம் என்ற பயமே, இந்த பெண்களுக்கு இல்லை. ஒருவர் மீது, பொய் புகார் தெரிவிப்பதற்காக, எந்த நிலைக்கும் இவர்கள் செல்வார்கள். அதனால், ஏற்படும் பாதிப்பு குறித்து, கவலைப்பட மாட்டார்கள். அதேநேரத்தில், பொய் புகார் கூறுகிறோமே என, வருத்தப்படவும் மாட்டார்கள்.'இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறினார்.



Saturday, July 14, 2012

மதுவிடுதிக்கு இரவில் சென்ற இளம் பெண்னை மானபங்கம் செய்தது குற்றம் என்றால், பகலில் கர்ப்பிணிப் பெண்ணின் கரு அழித்த காவலர்களின் செயல் குற்றம் கிடையாதா?

இன்றைய செய்தியில் மது விடுதிக்கு “பார்ட்டி” கொண்டாட சென்ற இளம் பெண் அவரது நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டு விடுதியைவிட்டு வெளியேறியபோது அந்த ஆண் நண்பர்கள் சாலையில் வழிமறித்து மானபங்கம் செய்ததாக செய்தி வந்திருக்கிறது. பெண்ணை சாலையில் அவமானப்படுத்தியது குற்றம்தான்.

இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க தமிழகத்தில் அரசாங்கமே மதுசாலை நடத்துவதுபோல நாடெங்கும் மத்திய அரசு இளம் பெண்களுக்கென்று தனியாக மதுசாலைகள் அமைத்து இராணுவ பாதுகாப்பு கொடுக்கலாம். அப்போதுதான் “இளம் பெண்களின் உரிமை” பாதுகாக்கப்படும். அரசியலில்தான் பெண்களுக்கு 50% பங்கு கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். இந்த விஷயத்திலாவது அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுத்தால் பல இளம் பெண்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும்.
தினமலர் ஜூலை 13,2012

கவுகாத்தி: அசாமில், 20 பேர் கொண்ட வெறிக் கும்பலால், இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நாடு முழுவதும், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மானபங்கத்தில் ஈடுபட்ட 20 பேரில், இதுவரை, நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது விருந்து:அசாமின் கவுகாத்தி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 9ம் தேதி இரவில், தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, மது விடுதிக்கு சென்றார். அங்கு, அவருக்கும், அங்கிருந்த மற்றும் சிலருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. மது விடுதி ஊழியர்கள், அவர்களை வெளியேற்றினர்.இதையடுத்து, அந்த இளம்பெண், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தார். மது விடுதியில், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும், அவரை பின் தொடர்ந்து வந்தார். அந்த வழியாக சென்ற மேலும் சிலரும், அவரை பின் தொடர்ந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர், மது குடித்திருந்தனர். இளம்பெண்ணை, கேலி, கிண்டல்கள் செய்து கொண்டே, பின் தொடர்ந்து வந்தனர். ஆபாசமாகவும் பேசினர்.

வெறி:திடீரென, அந்த கும்பலில் இருந்தவர்கள், வெறி கொண்டு, அந்த பெண்ணை, கையை பிடித்தும், உடலைத் தொட்டும், தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த பெண் கதறி அழுதும், அவர்கள் விடவில்லை. உடைகளை கிழித்து, விரட்டி விரட்டி மானபங்கப்படுத்தினர்.அரை மணி நேரம், இந்த கொடுமை நீடித்தது. இதற்கு பின்பே, போலீசார் அங்கு வந்தனர். அந்த வெறிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த உள்ளூர் "டிவி' சேனலின் கேமராமேன், அனைத்து கட்சிகளையும் படம்பிடித்தார். இந்த காட்சிகள், உள்ளூர் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. "யூ டியூப்' தளத்திலும், இந்த காட்சி ஒளிபரப்பானது.

இந்த கொடுமையான சம்பவம், தற்போது, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், குற்றம் செய்த 20 பேரில், நான்கு பேர் மட்டுமே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

பெண்கள் ஆணையம்:தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மம்தா சர்மா, இந்த சம்பவத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை, மன்னிக்கவே முடியாது.மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் ஆணையத்தின் சார்பில், ஒரு குழு, இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தவுள்ளது' என்றார். பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமனும், கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் கண்டனம் :"அசாமில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான, இதுபோன்ற சம்பவங்கள், கடும் கண்டனத்துக்குரியவை. இதுபோன்ற செயல்களை, அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.அப்படி எளிதாக எடுத்துக் கொள்வோரும், கண்டனத்துக்கு உரியவர்களே. இந்த விஷயம், மீடியாக்களின் மூலம், என் கவனத்துக்கு வந்துள்ளது. அசாம் முதல்வருடன், இதுகுறித்து பேசியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

விசாரணை கமிஷன்:இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலர் அமிலி சவுத்திரி தலைமையில் ஒரு நபர் அடங்கிய விசாரணைக் கமிஷனை, அசாம் மாநில அரசு அமைத்துள்ளது.

"டிவி' சேனல் விளக்கம்:இந்த சம்பவத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனலின் நிர்வாகி செய்யது ஷாகிர் கூறுகையில், "இளம்பெண் ஒருவரை, ஒரு வெறிக்கும்பல் மானபங்கம் செய்தபோது, அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், கேமராவில் படம் பிடித்தது ஏன் என, எங்களை சிலர் கேட்கின்றனர். 20க்கும் மேற்பட்டோரை, கேமராமேன் ஒருவரால் எப்படி சமாளிக்க முடியும்? மேலும், இளம்பெண் ணை மானபங்கம் செய்தவர்களின் முகங்களை மட்டுமே, தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைத்துத் தான் ஒளிபரப்புகிறோம்' என்றார்.

==============

இந்த செய்தியைக் கண்டு தேசிய மகளிர் வாரியம் பொங்கி எழுந்துவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை விடுகிறார்.

ஆனால், கடந்த ஆண்டு ஆந்திராவில் இருந்த ஒரு மருமகள் தமிழ்நாட்டில் வாழும் கணவனின் அண்ணன் மனைவி மீது வரதட்சணை வழக்கை ஆந்திராவில் பதிவு செய்து ஆந்திர போலிஸ் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளூர் போலிஸிற்கு சட்டப்படி தகவல் சொல்லாமல் அந்தப் பெண்ணை கைது செய்து ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்தப் பெண் ஒரு மருத்துவர், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியும் விடாமல் இரயிலில் அழைத்துச் சென்று கடைசியில் ரயில் பயணத்திலேயே அந்தப் பெண்ணின் கரு கலைந்து போனபிறகு பாதி வழியிலேயே அந்தப் பெண்ணை விட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.

சட்டத்திற்குப் புறம்பாக நடந்த இந்தக் குற்றம் பெண்கள் வாரியத்தின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை? இதுவும்தான் செய்தித்தாளில் வந்தது. எந்த அமைச்சரும் வாய் திறக்கவில்லை, எந்த பெண் அமைப்பும் கொடி பிடிக்கவில்லையே. ஏன்?

கேளிக்கையில் ஈடுபட மதுவிடுதிக்கு இரவில் சென்ற இளம் பெண்னை மானபங்கம் செய்தது மட்டும்தான் பெண்ணுக்கெதிராக இழைக்கப்படும் குற்றமாக இந்தியாவில் கருதப்படுமா? பட்டப் பகலில் நடுவீதியில் கர்ப்பிணிப் பெண்ணின் கரு அழித்த காவலர்களின் செயல் குற்றம் கிடையாதா? கருவிலேயே அழிக்கப்பட்ட சிசுவிற்கு இழைக்கப்பட்டது குற்றம் கிடையாதா? மது சாலைக்குச் சென்று குடித்து கூத்தடித்து மகிழும் பெண்கள் மட்டும்தான் இந்தியாவில் பெண்களாக கருதப்படுவார்களா?


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.