இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, January 30, 2011

சோரம்போகும் பாசக்கார மருமகள்கள்

தன்னாட்சி பெற்றதாக நினைத்துக்கொள்ளும் இளம் மருமகள்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் பாருங்கள்! புருசனை நம்புவதில்லை, வயதில் மூத்த மாமனார் மாமியாரை மதிப்பதில்லை.

இதுபோன்ற மருமகள்கள் மாமியார் குடும்பத்தை அழிப்பதாக நினைத்துக்கொண்டு கடைசியில் காசைக்கொடுத்து போலிச் சாமியார்களிடம் சோரம் போகிறார்கள். அல்லது கணவன் மீது பொய் வழக்குப்போட்டு காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் தங்களைத் தாங்களே அலங்கரித்துக்காட்டும் கிளுகிளுப்பான காட்சிப் பொருளாக தினம் தினம் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற மருமகள்களைப் பற்றி காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று ஒருநாள் அங்கு சென்று கவனித்துப்பாருங்கள். உங்கள் காதுகள் கூசும்!

தினகரன் 31 ஜனவரி 2011

கோவை : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட மோசடி ஜோதிடரின் பூஜை அறையில் இருந்து பல பெண்களின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டன. அவை செய்வினை வைப்பதற்காக மருமகள்கள் கொடுத்த, மாமியார்களின் போட்டோக்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி அருகே உள்ள சிவிஜி நகரில் வசிப்பவர் வி.டி.ஈஸ்வரன். ஹம்சவேணி ஜோதிட சித்த மருத்துவ மாந்த்ரீக நிலையம் நடத்தி வந்தார். ஜோதிடம் பார்க்க சென்ற ஒரு பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தது தொடர்பாக போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர். தற்போது, இவர் மீது ஏராளமானோர் புகார் செய்து வருகின்றனர்.

புகார் அளித்தவர்கள் சொன்ன தகவல்படி ஜோதிடர் ஈஸ்வரன் மாதம் ஸீ3 லட்சம் வரை சம்பாதித்ததாக தெரிகிறது. அவரது பூஜை அறையில் இருந்து 300க்கும் மேற்பட்ட காதல்ஜோடிகளின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காதலன் அல்லது காதலியை வசியப்படுத்துவதற்காக அவர்கள் கொடுத்த போட்டோக்கள்தான் அவை என்பது தெரியவந்தது. மேலும், பல மாமியார்களின் போட்டோக்களும் இருந்தன. அவை, செய்வினை வைப்பதற்காக மருமகள்கள் கொடுத்ததாக ஈஸ்வரன் கூறியிருக்கிறார்.




Saturday, January 29, 2011

“சுதந்திரக்” கதை சொல்லும் படங்கள் - காணத்தவறாதீர்!

ஆளும் வர்க்கம், ஆளப்படும் வர்க்கம், அதிகார வர்க்கம் என அனைத்து தரப்பிலும் இருக்கும் பெண்களுக்கும் அளவிற்கு அதிகமாகவே சுதந்திரமும், உரிமையும் கிடைத்துவிட்டது என்பதைத்தான் இந்தப் படங்கள் காட்டுகின்றன.

பின்வரும் படங்கள் ஒரு சிறு துளி மட்டுமே. இந்தப் படங்களை விளக்குவதற்கு வார்த்தையும் தேவையோ?

ஆளும் வர்க்கம்...
தினமலர் ஜூலை 21, 2010
நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.

அதிகார வர்க்கம்....
1) சீருடைப் பணியிலும்...
தினமலர் டிசம்பர் 23,2010

ஜனவரி 25,2011 தினமலர்

ஆளப்படும் வர்க்கம்...
“அப்பாவிப் பெண்கள்” என்ற மற்றொரு பெருமைமிக்க பெயரும் இவர்களுக்கு உண்டு...

ஒடியா புவனேஸ்வரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட தகராறில், பெண் போலீஸ் ஒருவரை அங்கு வசிக்கும் பெண்கள் தாக்கினர்.
(Dinamalar Photo 30 January 2011)


ஆனந்த சுதந்திரம் பெற்றுவிட்ட வருங்காலத் தலைமுறையிலும்...

பொதுமக்கள் கூடும் இடத்தில் அக்கம் பக்கத்தினரை கூட, மறந்து இப்படி காதல் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ள காதலர்கள். இடம்: சென்னை, பெசன்ட் நகர் எலீயாட்ஸ் பீச். (படமும் கருத்தும் - தினமலர் 16 நவம்பர் 2010)

கடைசியில் இந்த எல்லாத்தரப்புப் பெண்களுக்கும் “உரிமையையும், சுதந்திரத்தையும்” வாங்கித் தருவதற்காக செயல்படும் வாரியம்... இது ஆளும் வர்க்கமா, அதிகார வர்க்கமா என்று ஒரு பெரும் குழப்பமே இருக்கிறது....நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.

தேசிய பெண்கள் வாரியத்திற்குள் பணிபுரியும் பெண்களுக்கு வாரியத்தின் தலைவியால் கொடுமை செய்யப்படுவதாக முன்னாள் உறுப்பினர் புகார் செய்கிறார். பெண்களுக்குப்பிரச்சனை வெளியிலிருந்து வருவதில்லை, பெண்கள் வாரியத்திற்குள்ளேயே சகபெண் ஊழியர்களால் தான் பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறதாம்.


இப்போதாவது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என நம்புவீர்களா? இனியும் யாராவது உங்களிடம் வந்து இந்தியாவில் பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் இருக்கிறது என்று சொல்லி அதை நீங்கள் நம்பினால் அந்த முட்டாள்தனத்திற்கு யார் முழுப்பொறுப்பு?



Thursday, January 27, 2011

கல்லூரியில் இதையும் கற்றுத்தருவார்களா?


திருநகர் அருகேயுள்ள விளாச்சேரியில், மூதாட்டிகளுக்கு கையெழுத்து பயிற்சி அளித்த, மதுரைக்கல்லூரிஎன்.எஸ்.எஸ்., மாணவிகள். தினமலர் படம் 27.1.2011


இதேபோல திருமணத்திற்குப் பிறகும் தங்களது வீட்டில் இருக்கும் வயதான மாமியார்களையும் பாசத்துடனும், மரியாதையுடனும் இளம்பெண்கள் நடத்தினால் நாட்டில் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வராது. முதியோர் இல்லங்கள் உருவாகவேண்டிய அவசியமும் இருக்காது அல்லவா?



Tuesday, January 25, 2011

குடியரசில் கொடிகட்டிப் பறக்கும் பெண் அதிகாரிகள்!

பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்ததுகூட தெரியாமல் பல ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருப்பவர்கள் இந்த குடியரசு தினத்திலாவது தெரிந்துகொள்ளுங்கள்.


திருச்சி : திருச்சியில் பத்திரம் பதிவு செய்வதற்கு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள, பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேஷ் கண்ணா (40). சில நாட்களுக்கு முன், உறையூர் பாண்டமங்கலத்தில் உள்ள, தன் இரண்டு வீட்டுமனைகளை, குளித்தலையைச் சேர்ந்த லட்சுமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாருக்கு விற்பனை செய்தார். அவர்களது பெயரில் வீட்டுமனைகளை பதிவுச் செய்து பத்திரம் பெறுவதற்காக, ஜன., 24ம் தேதி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சசிகலாவை (36) அணுகினார். "பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்றால், ஒரு பத்திரத்துக்கு தலா, 10 ஆயிரம் என, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும்; மறு நாள் பணம் கொடுத்தால் தான் பத்திரப் பதிவு செய்ய முடியும்' என்று சசிகலா கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ் கண்ணா, நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்கள், ரசாயனம் பூசப்பட்ட, 20 ஆயிரம் ரூபாயை, ராஜேஷ் கண்ணாவிடம் கொடுத்தனர். நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், சார் பதிவாளர் அலுவலகத்தில் மாறு வேடத்தில் காத்திருந்தனர்.

ராஜேஷ் கண்ணாவிடம் இருந்து சசிகலா பணம் வாங்கிய போது கையும், களவுமாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி ராஜசேகரன் முன் சசிகலா ஆஜர்படுத்தப்பட்டார். சசிகலாவை, 15 நாள், ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, வயலூர் சாலையில் உள்ள சசிகலா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அவர் வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்ந்திருந்தது தெரிய வந்தது. அங்கிருந்து, வங்கி கணக்கு புத்தகம் உட்பட முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது.



Monday, January 24, 2011

பையில் பிறந்த குழந்தை!

இப்போதெல்லாம் இந்தியாவில் குழந்தைகள் கருப்பையிலிருந்து பிறக்கிறதா அல்லது ஏதாவது ஒரு பையில் பிறக்கிறதா என்று விஞ்ஞானத்திற்கே சவால் விடும் அளவிற்கு பிறந்த குழந்தைகளை வீதியிலும், குப்பைத்தொட்டியிலும், சாக்கடையிலும் வீசியெறியும் வினோதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

வெளிநாட்டுக் கூட்டு முயற்சியில் இந்திய மக்கள் தொகையைக் குறைக்க இப்படி ஏதாவது ஒரு புது திட்டம் போட்டிருக்கிறார்களா என்றும் தெரியவில்லை!


டிராவல் பேக்கில் ஆண் குழந்தை வீசிச் சென்ற தாய் யார்?
தினகரன் 25.1.2011

சென்னை : பிறந்த ஆண் குழந்தையை டிராவல் பேக்கில் வைத்து ரோட்டில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். எஸ்பிளனேடு பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் நேற்று குழந்தை அழுகுரல் கேட்டது. அங்கு வந்த மாநகர பஸ் கண்டக்டர் சத்தம் கேட்டு தேடினார். அப்போது ரோட்டோரத்தில் கிடந்த டிராவல் பேக்கில் இருந்து சத்தம் வந்ததை கேட்டார். உள்ளே பார்த்தபோது,

பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடிக்கூட வெட்டப்படாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கண்டக்டர் அழுது கொண்டிருந்த குழந்தையை தூக்கி உடல் முழுவதும் இருந்த ரத்தத்தை கழுவினார். அதன் பிறகு எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் அருளிடம் ஒப்படைத்தார்.

பிறந்து சில மணி நேரத்தில் ஈவு இரக்கம் இல்லாமல் குழந்தையை இப்படி தூக்கி வீசிவிட்டு சென்றவர்கள் யார்? கள்ளக்காதலில் பிறந்தா? என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தில் கூடிவிட்டனர். குழந்தையை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என பாசத்தோடு சிலர் கேட்டனர்.

ஆனால் போலீசார், குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர். கொடுங்கையூரில் அன்பு இல்லத்தில் அந்த குழந்தை ஒப்படைக்கப்பட்டது. டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

==========

மேலுள்ள செய்தியைப் பார்க்கும்போது அமெரிக்க நாட்டு பள்ளிச் சிறுமிகள் எவ்வளவோ பரவாயில்லை! பள்ளியில் படிக்குபோதே குழந்தை பெற்றாலும் அதை வீதியில் வீசி எறியாமல் பத்திரமாக பாசமுடன் வளர்க்கிறார்கள். இந்தியாவில் மேலைநாடுகளைப் பார்த்து பாதி விஷயங்களை மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். இப்போதுதான் திருமணம் செய்யாமல் கூடிவாழும் முறையில் அல்லது சரியான திருமண வயதிற்கு முன்பாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையை தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப் பெற்றுக்கொள்ளும் குழந்தையை வீதியில் வீசியெறியாமல் இருக்கும் மனப்பக்குவம் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

விடுதலை விரும்பிகள் இதற்கு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் வகுத்தால் நல்லது.





“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.