இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, November 15, 2010

இன்பம் துய்ப்பதில் இருவருக்குமே பங்கு உண்டு அல்லவா?

இன்பத்தை துய்க்கும்போது இருவருமே பாலினம் வித்தியாசம் இல்லாமல் சமமாகவே பெறுகிறார்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது ஆண் மீது மட்டுமே எல்லாப் பழியையும் சுமத்துகிறார்களே? அது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?


பொதுமக்கள் கூடும் இடத்தில் அக்கம் பக்கத்தினரை கூட, மறந்து இப்படி காதல் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ள காதலர்கள். இடம்: சென்னை, பெசன்ட் நகர் எலீயாட்ஸ் பீச். (படமும் கருத்தும் - தினமலர் 16 நவம்பர் 2010)

இதுபோன்ற நடுத்தெருக் காதல் கடைசியில் உடைந்துபோகும்போது ஆண் என்னை ஏமாற்றிக் கற்பழித்துவிட்டான் என்று அபாண்டமாக பழிபோட்டு அந்தப் புகாரையும் நீதிமன்றங்களில் விசாரணை செய்கிறார்களே. இந்தியாவில் இது ஒரு வினோதமான நடைமுறையாகத்தான் இருக்கிறது. சட்டங்களும் பெண்ணை அப்பாவி போலவும் ஆண்தான் எல்லா வன்முறைகளையும் செய்பவன் போலவும் சித்தரிக்கின்றனவே!

இன்பம் துய்ப்பதில் மட்டும் ஆணுக்கும் பெண்ணுக்கு சமமாக 50% கிடைக்கிறது. ஆனால் குற்றத்திற்கு தண்டனை என்று வரும்போது ஆணுக்கு மட்டும் 100% என்றும் பெண்ணுக்கு பாதிக்கப்பட்டவர் என்ற முத்திரை குத்தி அவள் செய்யும் எந்தக்குற்றத்திற்கும் தண்டனை கிடையாது என்று பாரபட்சமாக ஒதுக்கீடு செய்திருக்கிறார்களே அது ஏன்?

இதற்கு ஒரு சிறு உதாரணம் பின்வரும் இணைப்புகளில் இருக்கிறது
கலெக்டரை கல்யாணத் தரகராக்கும் இளம் பெண்கள்!
இளம்பெண்ணின் இரட்டைக் காதலில் சிறையில் தள்ளப்பட்ட ஆண்



AHMEDABAD: A 20-year-old woman has accused her neighbour of luring her into a relationship and leaving her after getting her impregnated. Isanpur police station officials have started search for the accused after registering a rape complaint.

The Vatva resident said she was lured by Irfan Shaikh, her neighbour. They had started seeing each other six months back when Shaikh promised to marry her. "Shaikh emotionally blackmailed her on a number of occasions and used to call her at a guesthouse near Narol circle. When she came for the first time, he forced her into a physical relationship and later blackmailed her on the basis of the incident. One of the rooms of the guesthouse was always booked as Shaikh's room," said an Isanpur police station official.


When the girl informed him during their last meeting on October 30 that she was pregnant with his child, Shaikh cut off all ties and asked her to get aborted for abortion. When she refused, he threatened not to marry her. The girl then approached police on Tuesday.


Read more: Man accused of leaving 20-year-old pregnant lover - The Times of India http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Man-accused-of-leaving-20-year-old-pregnant-lover/articleshow/6904094.cms#ixzz15Q4q5gsl





Friday, November 12, 2010

கிராமங்களில் பணிபுரியும் பெண் அதிகாரியின் அவல நிலை!

பாடுபட்டு நாட்டை மிகவும் நன்றாகவே முன்னேற்றுகிறார்கள் பெண் அதிகாரிகள்.

பள்ளிப்பட்டு கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது : ரூ. 500 லஞ்சம் வாங்கிய போது சிக்கினார்

தினமலர் நவம்பர் 12,2010

பள்ளிப்பட்டு : விவசாயியிடம், 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம பெண் நிர்வாக அலுவலர், கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த கேசவராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியப்பரெட்டி மகன் ஏகாம்பரம். இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில், பம்ப் செட்டு வைத்து அதில் விவசாயம் செய்து வருகிறார். விவசாயிகள் பழைய மோட்டார்களை கொடுத்து, இலவசமாக, புதிய மோட்டார்களை பெற்று கொள்ளலாம் என, அரசு அறிவித்தது. இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள, தாலுகா அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும். இந்த மனுவுடன் அந்த நிலத்தின் சிட்டா அடங்கலை இணைத்து தர வேண்டும் இந்த சிட்டா அடங்கலை பெறுவதற்காக, அதே கிராமத்தை சேர்ந்த கிராம பெண் நிர்வாக அலுவலர் நாகமணியை, விவசாயி ஏகாம்பரம் சந்தித்தார். அதற்கு அவர், 500 ரூபாய் லஞ்சம் தந்தால்தான், சிட்டா அடங்கல் தர முடியும் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். ஒரு வாரமாக அலைந்த பின்னரும் பலனில்லாததால், ஏகாம்பரம் ஏமாற்றமடைந்தார். இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் அவர் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனப் பவுடர் தடவிய ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை நாகமணியிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், நாகமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்ச பணத்தை கைப்பற்றினர். இதுபோல் அவர் பெற்ற லஞ்சம் குறித்து, அவரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.



Wednesday, November 10, 2010

இளம்பெண்கள் அடிக்கும் லூட்டி!



திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சகோதரிகள் காதலித்தவர்களுடன் சென்றதால் மனமுடைந்த சகோதரர், உடலில் கரிமருந்தை பூசி, தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி அருகே சாம்பவர் வடகரையைச் சேர்ந்த பால்வண்ணன் மகன் காளிமுத்து(21). இவருக்கு அக்கா, தங்கை உள்ளனர். அக்கா சில ஆண்டுகளுக்கு முன் காதலனுடன் சென்றுவிட்டார். அவரது தங்கைக்குதிருமண ஏற்பாடுகளை காளிமுத்து செய்துவந்தார். தீபாவளியன்று அவரும் தான் காதலித்தவருடன் சென்று விட்டார். இதனால், காளிமுத்து மனமுடைந்தார். தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகளில் இருந்த கரிமருந்துகளை பிரித்தெடுத்து தனது உடம்பில் பூசி, தீவைத்துக் கொண்டார். நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.

======

மகள் வீட்டை விட்டு ஓடியதால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் தந்தையைக் கொன்ற மகன்
தினமலர் நவம்பர் 11,2010

சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் கோவிந்தமணி(62). காங்கிரஸ் பிரமுகர். இவரது மகள் மகாலட்சுமி, காதலருடன் சென்றுவிட்டார். மகள் ஓடிப்போனதற்கு காரணம் வீட்டில் உள்ளவர்கள்தான் என, கோவிந்தமணி திட்டிவந்தார். கோபமுற்ற கோவிந்தமணியின் மகன் தங்கராஜ், தந்தையின் தலையில் உருட்டுக் கட்டையால் தாக்கினார். இதில்அவர் இறந்தார். போலீசார் தங்கராஜை கைது செய்தனர்.

================

நல்லவேளை திருமணத்தன்று ஓடிப்போய் மணமகனை அவமானப்படுத்தவில்லை. அதேபோன்று காதலிப்பதற்கு ஒருவன், கல்யாணம் செய்துகொள்ள ஒருவன் என்று திருமணம் செய்துகொண்டு பிறகு காதலனுடன் செல்வதற்காக அப்பாவிக் கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப் போட்டு அவனது குடும்பத்தை சின்னாபின்னம் செய்யாமல் சொந்த குடும்பத்திற்கே உலை வைத்துவிட்ட இந்தப் பெண்களைப் போல பலர் இதுபோன்று (கள்ளக்) “காதல்” என்ற பெயரில் தன் குடும்பத்தையும், கணவன் குடும்பத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை நாட்கள்தான் “திருமணம்” என்ற பெயரில் கணவன் வீட்டில் புகுந்து பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் கணவனின் குடும்பத்தை சீரழிப்பது என்று பெண்களுக்கும் சலிப்பு ஏற்படுமல்லவா! ஒரு மாறுதலுக்காக “காதல்” என்ற பெயரில் அந்த வேலையை இனி தங்கள் குடும்பத்தில் இருக்கும் ஆண்களுக்கு செய்யலாம் என்று முடிவு செய்திருப்பது ஒரு நல்ல செய்திதான்.
பெண்களின் செயல்கள் எப்போதுமே சரியானதாகத்தான் இருக்கும்!

நெருப்பு தன் வீட்டுக் கூரையில் எரிந்தால்தான் அனுபவப்பூர்வமாக அந்த வேதனையை உணரமுடியும். அதுவரை அடுத்தவர் வீட்டுக் கூரையில் எரியும் தீ ஒரு வானவேடிக்கைப் போலத்தான் வேடிக்கையாக இருக்கும்.




Sunday, November 07, 2010

தலைவியின் போராட்டத்திற்கு பலன் கிடைத்துவிட்டதா?

>பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சென்ற ஆண்டு பெண்களின் “குடி” உரிமைக்காக அறைகூவல் விடுத்திருந்தார். அவரின் கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டது. மிகவும் சந்தோஷமான விஷயம். தொடர்ந்து வரும் வீடியோவைப் பாருங்கள்.


`Pub bharo' to beat moral police: Renuka Choudhary



NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since Renuka Choudhary on Thursday suggested that the only way to tackle the moral police was to launch a " pub bharo andolan".

Choudhary has been at loggerheads with the Karnataka government for failing to protect women in the aftermath of the Mangalore pub attack. Not only were women beaten up in a pub last month but young girls have received threats warning them not to wear "noodle straps or tight jeans" and celebrate Valentine's Day.


"How can the state government allow something (hooliganism) like this to go on? I am watching the situation closely. The Centre will have to intervene if the state cannot manage its law and order," Choudhary said.


She added that the youth could cock a snook by going to pubs in droves to make their point. Sources said posters had come up across the city warning young couples from celebrating V-Day and asking shopkeepers not to keep romantic cards and gifts.


Condemning the incident, All India Democratic Women's association (AIDWA) general secretary Sudha Sundararaman said attacks on women in the name of "culture" and "tradition" were on the rise in many parts of the country. "The truth is these phrases are only being used to mask barbaric violence and violation of gender rights," she said.


Meanwhile, the controversy over NCW member Nirmala Venkatesh refuses to die down. Venkatesh had reportedly absolved the miscreants and blamed pub security for the incident. NCW chairperson Girija Vyas has since distanced herself from the report saying it was the opinion of an individual and not that of the commission. Sources said a decision on the report would be taken on Friday at the commission's meeting.


The WCD ministry on Thursday issued a notice to Venkatesh, demanding an explanation for her remarks and for "dereliction of duty".

In a memorandum, AIDWA too has taken exception to Venkatesh's remarks, calling them "unfortunate". It recommended that NCW take steps to ensure that girls were not at the receiving end at Mangalore.

The WCD ministry has received complaints from a group of nearly 500 software professionals who wanted to take out a peace march on February 7 but were denied permission by the state administration.


Sources said that while there was little that the WCD ministry could do, it was "condemnable" that Sri Ram Sene chief Pramod Muthalik could issue threats to the youth without any fear of reprimand despite being on bail.


Read more: `Pub bharo' to beat moral police: Renuka Choudhary - The Times of India http://timesofindia.indiatimes.com/Pub_bharo_to_beat_moral_police_Renuka_Choudhary/articleshow/4083214.cms#ixzz14dQ1Y5WA


இது வெளிநாடுகளில் இருக்கும் பெண்ணுரிமை!



இதுபோன்ற பெண் விடுதலையைத்தான் இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்காக பெண்கள் நல விரும்பிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து நாட்டில் பெண்கள் தன்னாட்சி பெற்ற தலைவிகளாக மாற உதவுங்கள்.
==============

இது இந்திய நாட்டு பெண்ணுரிமை!



================



ஆண் குடித்தால் அவன் மட்டும்தான் சாக்கடையில் கிடப்பான். பெண் குடித்தால் அந்தக் குடும்பமே சாக்கடையில் கிடக்கும். பெண்கள் அனைவரும் குடிக்க ஆரம்பித்தால் அந்த நாடே சாக்கடையில் கிடக்கும்.

ஆணும் பெண்ணும் சரிசமமாக களத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. எல்லாமே சமமான பிறகு சட்டங்கள் மட்டும் ஏன் இன்னும் ஆண்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது? ஆண்களை மட்டுமே தண்டிக்கும் வகையில் பெண்களுக்கு மட்டும் சிறப்பான ஒருதலைபட்சமான சட்டங்கள் எதற்கு?




Saturday, November 06, 2010

(கள்ளக்)காதல் படுத்தும் பாடு - திரிசங்கு நிலையில் 2 வயது குழந்தை

கள்ளத்தொடர்பால் அனாதையான பெண் : திரிசங்கு நிலையில் மகன்

தினமலர் நவம்பர் 06,2010

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கள்ளத்தொடர்பால் பெண் ஒருவர் பலியானார். உடலை வாங்க உறவினர்கள் வராததால், இரு நாட்களாக அனாதையாக கிடக்கிறது.

மும்பை தமிழரான கணேஷ் (28), அங்கு பேன்சி கடை வைத்துள்ளார். இவருக்கும்,தேவி என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது; நகுல் (2) என்ற மகன் உள்ளான். கணேஷின் கடையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் கங்கையம்மன் நகரை சேர்ந்த சுரேஷ் (25), வேலை செய்தார். அவருக்கும், தேவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் மகனை அழைத்துக்கொண்டு சுரேஷூடன் தேவி மானாமதுரை வந்தார். ஓரிரு நாட்களில் மானாமதுரை வந்த தேவியின் பெற்றோர், போலீஸ் உதவியுடன், தேவியை மும்பைக்கு அழைத்து சென்றனர். சேலம் ஸ்டேஷனில் ரயில் நின்ற போது, அங்கிருந்து தப்பி மீண்டும் சுரேஷிடம், தேவி தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில், கடந்த அக்., 29 ல் மகளிர் போலீசில், மனைவியை மீட்டு தருமாறு, உறவினர் மூலம் கணவர் கணேஷ் புகார் செய்தார். கணவருடன் செல்ல மறுத்த தேவியை எச்சரித்த போலீசார், இரு நாட்கள் கழித்து விசாரணைக்கு வர உத்தரவிட்டனர். கள்ளத்தொடர்பை பிரித்து விடுவார்கள் என, அஞ்சிய தேவி தீக்குளித்து, மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த நவ.,4 மாலை இறந்தார். இதுகுறித்து போலீசார், தேவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று வரை யாரும் வரவில்லை. கள்ளக்காதலனிடம் உடலை ஒப்படைப்பதில் சட்டச்சிக்கல் இருப்பதால், பிரேத அறையில் தேவியின் உடல் கிடக்கிறது. தாய் இறந்த சோகம் கூட அறியாத சிறுவன் நகுல், தற்போது சுரேஷின் கட்டுப்பாட்டில் உள்ளான்.

================

கள்ளக்காதலில் சிக்கி கடைசியில் அனாதையாக்கப்படும் இதுபோன்ற அபலைப் பெண்களுக்காக பெண்கள் நல வாரியமும், பெண்கள் நல அமைச்சகமும் தனியாக நிதியம் அமைக்கும் நிலை ஏற்படும் போலிருக்கிறது.

தங்களின் காம சுகத்திற்காக அப்பாவிக் குழந்தைகளை அனாதையாக்குபவர்களை யார் தட்டிக் கேட்பது ? கண்டிப்பாக இந்திய சட்டங்களும் பெண்கள் அமைப்புகளும் கள்ளக்காம பெண்களுக்கு ஆதரவு தருவார்களே தவிர இதுபோன்ற அப்பாவிக் குழந்தைகளை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியும் கசப்பான உண்மை.

இல்லையென்றால் ராமாயணக் கதையில் வரும் ராமன், சீதை, ராவணன் என்ற கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டுள்ள பழைய பஞ்சாங்கமான 1860ல் இயற்றப்பட்ட கள்ளஉறவு சட்டத்தை இன்றுவரையும் உரம்போட்டு வளர்த்து கள்ள உறவில் ஈடுபடும் ஆண் மட்டுமே குற்றவாளி என்றும் கள்ள உறவில் ஈடுபடும் பெண்கள் எல்லாம் அப்பாவி கற்புக்கரசிகள் என்றும் தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று சிறு குழந்தைக்குக் கூட தெரியுமே.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.






“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.