இந்த வரிசையில் சமீபத்தில் வந்துள்ள செய்தியில் திருமணத்திற்கு முன்பான உறவின் மூலம் கர்பம் தரித்த பெண் புதுமணமகளாக மாறி திருமணம் செய்து கொண்டு தேனிலவில் கணவனுடன் இருக்கும்போது “வாந்தியும் வயிறுமாக” மாட்டிக்கொண்டார். கணவன் தனது உறவை கண்டுபிடித்துவிட்டானே என்ற ஆத்திரத்தில் பெண்ணுரிமையில் தலையிடும் கணவனை தண்டிக்க எல்லா மருமகள்களும் வழக்கமாக பயன்படுத்தும் “பொய் வரதட்சணைக் கொடுமை வழக்கை” ஆயுதமாக இந்த புதுமணப்பெண்ணும் கையில் எடுத்து வழக்கை போட்டுவிட்டார்.
கடைசியில் இப்போது கணவன் மருத்துவ சான்றுகளுடன் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். கணவனுக்கு இந்த ஜென்மத்தில் நீதிமன்றத்தில் வழக்கை முடித்து நீதி வழங்கமாட்டார்கள் என்பது நீதிமன்றத்தைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
இந்த அப்பாவி மருமகள் செய்த ஒரு சிறு தவறு என்னவென்றால் “திருமணத்திற்கு முன்பான உறவில் பாதுகாப்பை” கடைபிடித்திருக்கவேண்டும். அல்லது திருமணத்திற்கு பிறகு “(கள்ள)காதலை” ஆரம்பித்திருக்கலாம். ஏனென்றால் திருமணத்திற்கு பின்பான கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி என்று இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது. அதனால் அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை இவற்றின் அமோகமான ஆதரவோடு கள்ளக்காதல் புரிந்து களியாட்டம் நடத்தலாம். கள்ளகாதல் என்றால் என்ன என்று தெரியாத அப்பாவிகள் இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
மார்ச் 19,2014 தினமலர்
புதுடில்லி:திருமணத்துக்கு முன், கர்ப்பமானதை மறைத்து, கணவரை ஏமாற்றிய வழக்கில், டில்லியைச் சேர்ந்த பெண்ணுக்கு, செஷன்ஸ் கோர்ட், சம்மன்' அனுப்பியுள்ளது.டில்லி, நஜாப்கார் பகுதியைச் சேர்ந்தவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், 2012ல், திருமணம் நடந்தது. இவர்கள், தேனிலவுக்காக சென்றிருந்தபோது, அந்த பெண்ணுக்கு, வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது; மருத்துவமனைக்கு செல்ல, அந்த பெண் மறுத்து விட்டார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண், தன், தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து, கணவருக்கு, தான், கர்ப்பமாகி விட்டதாக, போன் மூலம் தெரிவித்தார்.இருவரும், மருத்துவமனைக்கு சென்றனர். அந்த பெண்ணுக்கு எடுக்கப்பட்ட, 'ஸ்கேன்' பரிசோதனையில், திருமணத்துக்கு முன்பே, அவர், கர்ப்பமடைந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர், விசாரித்ததில், திருமணத்துக்கு முன், அந்த பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து, அந்த பெண், கணவர் மீது, வரதட்சணை புகார் அளித்தார். இதுகுறித்து, டில்லி விசாரணை கோர்ட்டில் நடந்த வழக்கில், கணவர் கூறிய புகாரை, கோர்ட், ஏற்க மறுத்தது.இதையடுத்து, அவர், டில்லி செஷன்ஸ் கோர்ட்டில், மனு தாக்கல் செய்தார்.அதில், அவர் கூறியிருந்ததாவது:திருமணத்துக்கு முன், அந்த பெண்ணுக்கும், எனக்கும், எந்த சந்திப்பும் நிகழவில்லை. நான், வற்புறுத்தி கேட்டபோதும், பெண் வீட்டார் மறுத்து விட்டனர்.
தேனிலவின் போது, என் மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.'ஸ்கேன்' பரிசோதனையில், கருவின் வளர்ச்சியை கணக்கிட்டு பார்த்தபோது, திருமணத்துக்கு முன், அவர், கர்ப்பமாகியிருந்தது தெரியவந்தது. எனவே, கர்ப்பமானதை மறைத்து, என்னையும், என் குடும்பத்தினரையும் ஏமாற்றிய, என் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில், அவர் கூறியிருந்தார்.இந்த மனு, நீதிபதி அசுதோஷ் குமார், முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:ஸ்கேன் பரிசோதனை அறிக்கைகளை பார்க்கும் போது, அந்த பெண், திருமணத்துக்கு முன், கர்ப்பமானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அப்பட்டமான மோசடி. கணவருக்கு தெரியாமலேயே அல்லது அவரின் ஒப்புதலின்றி, அந்த பெண், கர்ப்பமடைந்துள்ளார். இதனால், அவரின் கணவருக்கு, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.எனவே, அந்த பெண், அடுத்த விசாரணையின்போது, கோர்ட்டில், நேரில் ஆஜராக வேண்டும். இது தொடர்பாக, அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பப்படும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
திருமணத்திற்கு முன்பான ஆண், பெண் உறவு புனிதமானதா?
IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPELLATE JURISDICTION
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]
CRIMINAL APPEAL NO. 913 of 2010
[Arising out of SLP (Crl.) No. 4010 of 2008]
S. Khushboo ... Appellant
Versus
Kanniammal & Anr. ... Respondents
Versus
Kanniammal & Anr. ... Respondents
21. While it is true that the mainstream view in our society is that sexual contact should take place only between marital partners, there is no statutory offence that takes place when adults willingly engage in sexual relations outside the marital setting, with the exception of `adultery' as defined under Section 497 IPC. At this juncture, we may refer to the decision given by this Court in Lata Singh Vs. State of U.P. & Anr., AIR 2006 SC 2522, wherein it was observed that a live-in relationship between two consenting adults of heterogenic sex does not amount to any offence (with the obvious exception of `adultery'), even though it may be perceived as immoral. A major girl is free to marry anyone she likes or "live with anyone she likes". (பெண் விரும்பினால் யாருடனும் சேர்ந்து வாழலாம் அது திருமணம் ஆன ஆணுடனா அல்லது திருமணமாகாத ஆணுடனா என்று சொல்லப்படவில்லை)