இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 30, 2010

பெண் அதிகாரிகளை துன்புறுத்தாதீர்

இப்போதெல்லாம் பெண் அதிகாரிகளுக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் அதிகரித்துவிட்டது. பெண்களை எப்போதுதான் இந்த சமுதாயம் நிம்மதியாக வாழவிடுமோ என்று தெரியவில்லை. ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் தட்டுத்தடுமாறி கல்வி கற்று ஒரு நல்ல அரசாங்கப் பணியைப் பெற்றபிறகு லஞ்சம் வாங்கி நிம்மதியாக வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த சமுதாயத்தில் வழிஇல்லை. என்ன கொடுமை!


உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
10/1/2010 தினகரன்

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சீலியம்பட்டியை சேர்ந்தவர் ராணி. இவர் தனது மகள் கலைச்செல்விக்கு திருமண உதவித்தொகை கேட்டு ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது ஊர் நல அலுவலர் ஜானகி ரூ1000 லஞ்சம் கேட்டுள்ளார். ராணியும் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், திருமணப் பதிவு சான்றிதழை பரிந்துரை செய்ய மேலும் ரூ500ஐ ஜானகி கேட்டுள்ளார். ஓரிரு நாட்களில் தருவதாக கூறிவிட்டு வந்த ராணி, அது பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக துணை எஸ்பி சந்திரமௌலி ஆலோசனையின் பேரில், அலுவலகத்துக்கு சென்ற ராணி ரசாயனம் தடவிய க்ஷீ 500ஐ நேற்று ஜானகியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜானகியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

=========

பெண்ணுக்குப் பெண்தான் எதிரி!
இதை மேற்கண்ட செய்தியை விவரிக்க இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். எதில் லாபம் கிடைக்கிறதோ அந்தப் பக்கத்தில் சேர்ந்துகொண்டு பெண்ணுரிமை என்று குரல் கொடுக்கலாம்.

  • ஒரு பெண் தன் மகளுக்காக அரசாங்க நிதியுதவி கேட்டு அரசாங்க அதிகாரியான மற்றொரு பெண்ணை அனுகினால் அவர் உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் கடமையையாவது செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் தன்னிடம் உதவிகேட்டு வந்தப் பெண்ணிடம் லஞ்சம் கேட்டு துன்புறுத்தியிருக்கிறார்.
  • மேற்கண்ட செய்தியை நவீன “பெண்ணுரிமை” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு இப்படியும் சொல்லலாம்: ஒரு பெண் கல்வி கற்று பலத்த போட்டிகளுக்கிடைய ஆண்களைப் பின்னுக்குத்தள்ளி அரசாங்கப் பணியையும் பெற்று சாதனை புரிந்து ஆணுக்கு நிகராக லஞ்சம் வாங்கலாம் என்று முயற்சி செய்யும்போது அவரை மற்றொரு பெண் ஊழல் புகாரில் சிக்கவைத்துவிட்டார். என்ன கொடுமை! ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை மற்றொரு பெண்ணே அழித்துவிட்டாரே.
பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்களுக்கு ஆதரவாக “பெண்ணுரிமை” என்று குரல் கொடுக்கும் கூட்டம் இதில் எந்தவகையைச் சேர்ந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு கொடுமை நடக்கிறது. மதுபான விடுதியில் சுதந்திரம் இல்லை என்று பொய்வழக்குப்போடும் பெண்களுக்காக கூக்குரல் இடும் இந்ததக் கூட்டம் எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.




Wednesday, September 29, 2010

பெண் அதிகாரியை துன்புறுத்திய ஆண் !

பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒரு பெண் அதிகாரி செய்திருக்கும் அரும்பெரும் உதவியை பின்வரும் செய்தியில் படித்து மகிழுங்கள்.

உதவித் தொகை பெற லஞ்சம் பெண் அலுவலர் கைது
செப்டம்பர் 30,2010 தினமலர்

திருவண்ணாமலை : அரசு உதவித் தொகை பெற 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊர்நல அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கன்னுகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன்(30). இவருக்கும் ரேவதி என்பவருக்கும் 2004ல் திருமணம் நடந்தது; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் அரசு உதவி தொகை பெற விண்ணப்பத்துடன், இரு நாட்களுக்கு முன் கந்தன் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊர் நல அலுவலர் முனியம்மாள் (54), என்பவரிடம் மனுவை கொடுத்தார். முனியம்மாள், "விண்ணப்பத்தை சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க 4,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும், தற்போது விண்ணப்பத்துடன் 2,000 ரூபாய் தர வேண்டும்' என, கேட்டுள்ளார்.

கந்தன், பணம் தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார். பின், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அறிவுரைப்படி நேற்று முன்தினம் மாலை கந்தன் பி.டி.ஓ., அலுவலகத்தில் முனியம்மாளிடம் 2,000 ரூபாய் பணம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முனியம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
=======

இந்த செய்தியை “பெண்ணுரிமை” என்ற பெயரில் இப்படியும் சொல்லலாம்: கிராமங்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகளை ஆண்கள் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துகிறார்கள்!

இந்தியாவில் 80% பேர் ஊழல்வாதிகள் என்று சில நாட்களுக்கு முன்புதான் செய்தி வந்திருந்தது. அப்படியிருக்கும்போது ஒரு பெண் அதிகாரி லஞ்சம் கேட்டால் அவரை இப்படியா போலிஸில் மாட்டிவிடுவது. அவர் ஒரு பெண் என்ற காரணத்தால்தானே இப்படி செய்கிறார்கள். ஆண்களின் அராஜகம் ஒழிக!

இப்படித்தான் பொய் வழக்குப்போடும் மருமகள்களுக்கும் பெண்கள் அமைப்புகள் ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டில். பெண் தவறு செய்யலாம் அதை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது. அப்படி அதை சுட்டிக் காட்டினால் அதற்குப் பெயர்தான் ஆணாதிக்கம். இதுதான் 21ம் நூற்றாண்டின் புதிய பெண்ணியவாதத்தின் கோட்பாடு.



Tuesday, September 28, 2010

வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை

யார் வந்து எப்படிப் புகார் கொடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி கண்ணை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அனுப்பி பல குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை நண்பர்கள் அவர்கள் எழுதும் வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை என்று நிரூபித்துவிட்டார்கள். பின்வரும் செய்தியைப் படித்துவிட்டு அது சரிதான் என்று நீங்களும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது

செப்டம்பர் 28,2010 தினமலர்

கரூர் : கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கரூர், செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). இவரது மனைவி லட்சுமி ஸ்ரீ (24). இருவருக்கும் திருமணமாகி நான்காண்டாகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், விரக்தியடைந்த லட்சுமி ஸ்ரீ, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். குடும்ப பிரச்னை என்பதால், இவ்வழக்கு கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுதாகர், லட்சுமி ஸ்ரீ ஆகியோரை வரவழைத்து ஏட்டு லதா கவுன்சிலிங் செய்தார். இதில், கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையாக சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர்.

அப்போது, கோவை புதூர் பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரியும் லட்சுமி ஸ்ரீயின் அண்ணன் ஆனந்தராஜ் (30), போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, சுதாகர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏட்டு லதாவிடம் வாக்குவாதம் செய்தார். "கணவன், மனைவியே சமரசமாக செல்ல ஒத்துக்கொண்ட பின், வழக்கு பதிவு செய்ய முடியாது' என, ஏட்டு லதா கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், லதாவை உதைத்து, தாக்கிவிட்டு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு ஓடியுள்ளார். லதாவுக்கு, கை, கால், முகம், பல்லில் காயம் ஏற்பட்டடு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தப்பியோடிய ஆனந்தராஜை ஏட்டுக்கள் ராஜாமணி, சாமுவேல் ஆகியோர் டூவீலரில் துரத்திச் சென்று பிடித்தனர். ஆனந்தராஜை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



Monday, September 27, 2010

கணவனைக் கொல்ல ஒரு லட்ச ரூபாய் போதும்!

கணவனை ஒழித்துக்கட்ட இரண்டு வழிகள்.

1. காவல்துறையைப் பயன்படுத்தி பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனின் வாழ்க்கையை சிதைப்பது. கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் தள்ளலாம். இந்த முறையில் அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை, மகளிர் சங்கங்களின் ஆதரவு கிடைக்கும்.

2. கூலிப்படை வைத்து குறைந்த செலவில் ஆளையே “காலி” செய்துவிடுவது. அதிக செலவு கிடையாது ஒரு லட்சம் கொடுத்தால் போதும்!

எந்தவழி பிடித்திருக்கிறதோஅந்த வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள் புத்திசாலிப்பெண்கள்.

பின்வரும் இரண்டு செய்திகளையும் கவனித்தால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு கணவன் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு செய்தியில் காதல் மனைவி கூலிப்படை வைத்து ஆளையே கொன்றுவிட்டார். இரண்டு செய்திகளிலும் அடிப்படை விஷயம் கருத்து வேறுபாடு மட்டுமே. ஆனால் முதல் செய்தியில் வரதட்சணை என்ற சாயம் பூசி கூலிப்படைக்கு பதிலாக காவல்துறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது செய்தியில் காவல்துறைக்குப் பதிலாக கூலிப்படையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

செய்தி 1

காவல்துறையைப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை சிறைக்கு அனுப்பிய மனைவி

தினமலர் செப்டம்பர் 27,2010

செஞ்சி : செஞ்சி அருகே மனைவியை மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி; இவரது மகள் சரண்யா(28). கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மெக்கானிக் வாசுதேவன்(30). மூன்றாண்டுகளுக்கு முன் சரண்யாவுக்கும், வாசுதேவனுக்கும் திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்தாண்டு விழுப்புரம் மகளிர் போலீசில் கணவர் மீது சரண்யா புகார் கொடுத்தார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு வாசுதேவன் பதிலளிக்கவில்லை. கடந்த ஜூலை 1ம் தேதி விழுப்புரத்தில் மாவட்ட சட்டப் பணி குழு மூலம் நடந்த கவுன்சிலிங்கில் மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதில், இருவரும் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டனர்.

அன்று இரவு 10 மணிக்கு கொத்தமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு செல்லும் வழியில் சரண்யாவிடம், "என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை; நான் தற்கொலை செய்து கொண்டேன்' என எழுதி கையெழுத்து போட்டுத் தருமாறு கத்தியை காட்டி வாசுதேவன் மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்த சரண்யா கையெழுத்து போட்டு கொடுத்தார்.

பின்னர் வீட்டிற்குள் செல்ல முயன்ற சரண்யாவை, அவரது கணவன் வாசுதேவன், மாமியார் அன்பழகி(45) மாமனார் கிருஷ்ணமூர்த்தி(50) வாசுதேவனின் சகோதரர் வரதன் (24) ஆகியோர், வீட்டிற்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதுடன், அன்றிரவு மாட்டுக் கொட்டகையில் சரண்யாவை தங்க வைத்தனர்.

அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, "எனது குடும்ப விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்' என சரண்யா கூறியுள்ளார். இது குறித்து செஞ்சி மகளிர் போலீசில் கடந்த 25ம் தேதி சரண்யா அளித்த புகாரின் பேரில் வாசுதேவன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீதும் வரதட்சணை கொடுமை, தரக்குறைவாக திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி 2


கூலிப்படையை ஏவி கணவனை மனைவியே கொன்றது அம்பலம்

9/28/2010 தினகரன்

சென்னை : திருவான்மியூர் அடுத்த கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லட்சுமி (38). இவரது மகள் சவுமியா (20). இவரும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (25) என்பவரும் 2 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தாய் லட்சுமியுடன் காஞ்சிபுரம் சி.வி.எம்.ஏ. நகரில் குடியேறினார் சவுமியா. இதற்கு சுமதி என்பவர் உதவி செய்தார்.

இதை அறிந்த ரமேஷ், 6 மாதத்துக்கு முன் சிவிஎம்ஏ நகருக்கு சென்று, குடும்பம் நடத்த வரும்படி சவுமியாவுக்கு தொந்தரவு கொடுததுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுமியா, கூலிப்படையை ஏவி ரமேசை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சுமதி துணையுடன் காஞ்சிபுரம் தாமல்வார் தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார். சம்பவத்தன்று ரமேசை காஞ்சிபுரத்துக்கு வரவழைத்தார் சவுமியா. அங்கு வந்த அவரை அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு லட்சுமி, சுமதி ஆகியோருடன் கீழம்பிக்கு சவுமியா சென்றார். அங்கு முருகன் என்பவரது காரில் தயாராக இருந்த அமல்ராஜிடம் ரமேசை ஒப்படைத்துவிட்டு, அதே ஆட்டோவில் சவுமியா உட்பட 3 பேரும் காஞ்சிபுரம் திரும்பினர். ரமேசை காரில் அழைத்துக்கொண்டு சின்னையன் சத்திரம் சென்றார் அமல்ராஜ்.

அங்கு ரமேசுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து, மளிகைசெட்டி சத்திரத்தை சேர்ந்த பிலால், மஸ்தான் ஆகியோருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து ரமேசை கொலை செய்துள்ளார் அமல்ராஜ். அவரது சடலத்தை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று தாமல்வார் காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பணம் பங்கு பிரிப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவர் அசோக்குமாருக்கும், கார் டிரைவர் முருக னுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவேலியப்பனிடம் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை அசோக்குமார் விளக்கினார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் படி அமல்ராஜ், பிலால், மஸ்தான், லட்சுமி, சவுமியா, சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.




போலிஸிற்கு ஆசிட் அடித்த வீரப்பெண்கள்

இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் வீசிய பெண்கள்
9/28/2010 தினகரன்

ஷாஹரன்பூர் : உ.பி. மாநிலம் ஷாஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கொத்வாலி போலீஸ் நிலைய போலீசார் நில மோசடி தொடர்பான விசாரணைக்காக நூர்பஸ்தி பகுதிக்கு நேற்று சென்றனர். அங்கு பதுங்கி இருந்த கிரிமினல்களை பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசார் மீது அங்கிருந்த பெண்கள் ஆசிட் வீசினர். இதில் இன்ஸ்பெக்டரின் தலை, முகம் ஆசிட்டால் வெந்தது. அலறி துடித்த அவரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.



Saturday, September 25, 2010

பெண்மையின் பெயரால் ஒரு ஆயுதம்!

ரஷ்ய பெண் உளவாளியின் பிரதான ஆயுதம்

செப்டம்பர் 25,2010 தினமலர்


நியூயார்க்:ரஷ்ய பெண் உளவாளி அன்னா சாப்மன், தனது பெண்மையை ஆயுதமாக பயன்படுத்தியதாக, அவரது முன்னாள் காதலர்கள் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவின் பெண் உளவாளியான அன்னா சாப்மன், அமெரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டுக்குத் திரும்பியுள்ளார். தனது அழகால், மனிதர்களின் மனங்களை வீழ்த்திய அன்னாவுக்கு, "கவர்ச்சி உளவாளி' என்று பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர்.மேலும், தனது பெண்மையை, உளவு வேலைக்கு மிகச் சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியதாக அவரது முன்னாள் காதலர்கள் கூறியுள்ளனர்.இதுகுறித்து, அன்னாவின் மூன்று முன்னாள் காதலர்கள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளனர்.டென்னிஸ் இர்டிட் என்பவர் கூறியதாவது:எதிராளியிடம் தனக்கு வேண்டிய தகவல்களை பெறுவதற்கு, அன்னா தனது பெண்மையை மிகப் பெரிய ஆயுதமாக கையாண்டாள். அதற்காக, அவள் எந்த எல்லைக்கும் போவாள்.

ஆனால், அன்னாவின் ஆரம்ப கட்ட காதல் விளையாட்டுகளான, சிறிய தொடுகை, காதுமடல் அருகே ரகசியமாக கிசுகிசுப்பது, கைகோர்த்துக் கொள்வது, எதேச்சையாக படுவது போன்று உதடுகளால் உதடுகளை உரசுவது போன்றவற் றால், எதிராளி ஆரம்பத்திலேயே கவிழ்ந்துபோவான்.இவ்வாறு இர்டிட் கூறினார்.

ஆன் - லைன் ரியல் எஸ்டேட் வணிகம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் பில் சான்போர்டு கூறுகையில், அன்னாவைப் பற்றி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவளின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்தாலே, டீன் - ஏஜ் இளைஞர்கள் முதல், வயது முதிர்ந்தவர்கள் வரை காதல் வயப்பட்டுவிடுவர். அவளது சிவந்த கூந்தலும், உடல் அமைப்பும், அங்க அசைவுகளுமே என்னை கவர்ந்தன. தனது பணியின் நிமித்தமாக, அவள் மற்றவர்களுடன் செயற்கையான உறவை ஏற்படுத்திக்கொண்டிருக்கலாம், ஆனால், அவள் என்னிடம் உண்மையாக இருந்தாள் என்று தெரிவித்துள்ளார். இவர் 90ம் ஆண்டுகளில், நிகரகுவா, கொலம்பியா மற்றும் பெரு நாடுகளில் உளவாளியாக பணிபுரிந்துள்ளார்.அன்னா மட்டுமல்ல, உளவுப் பணியில் ஈடுபடும் அனைத்து பெண்களுமே, தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற இந்த வழிமுறைகளை கடைபிடித்துள்ளார்கள் என்கிறார் அன்னாவுடன் நீண்ட நாள் தொடர்பில் இருந்த சைன்தியா மர்பி.

=======

இது வெளிநாட்டு வழிமுறை என்று நினைத்து விடாதீர்கள். எல்லா நாட்டிலும் இந்த முறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சர்வதேச “கரன்சி” போன்றது. தேவைக்கேற்றபடி எங்குவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யாருக்கு எதிராகவும் பயன்படுத்தலாம். உளவுப்பணியில் இருக்கும் பெண்கள் மட்டுமல்ல மற்ற பெண்கள் கூட இதை வேறுவிதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

நம்நாட்டில் பெண்மையின் மேன்மையை பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.





Friday, September 24, 2010

குழந்தைகள் நலனில் அக்கறை காட்டினால் லாபம் கிடையாது

சேலம் 53வது வார்டு வேலு புதுத்தெருவில் செயல்பட்டு வரும் சிறிய குழந்தைகள் மையத்தில், குழந்தைகள் அதிகளவில் உள்ளதால் போதிய இடவசதி இல்லாமல், ஒருவர்மேல் ஒருவர் என்று படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியாக சமையலறை வசதி இன்றி, சிறிய வகுப்பறைக்குள் சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள், காஸ் சிலிண்டர் வைத்துள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் நிலையில் உள்ளது.
(தினமலர் படம் 25 செப்டம்பர் 2010)

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை என்று ஒரு தனி அமைச்சகமே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இதற்காக நிதி “ஒதுக்கீடும்” நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கண்ணில் படுவதெல்லாம் பொய் வரதட்சணை வழக்குப் போட்டு நாட்டை சீர்குலைக்கும் “அப்பாவிப்” பெண்கள் மட்டுமே. அவர்களுக்காக அடுக்கடுக்காக பல சட்டங்கள் இயற்றுவதற்குமட்டும்தான் இந்த அலுவலர்கள் வியர்வை சிந்தி உழைப்பார்கள்!

அமைச்சகத்தின் உழைப்பிற்கு ஒரு உதாரணம்:

`Pub bharo' to beat moral police: Renuka Choudhary
Times of India 6 Feb 2009

NEW DELHI: Turning the iconic freedom struggle slogan " jail bharo" on its head, Minister of State for Women and Child Development since Renuka Choudhary on Thursday suggested that the only way to tackle the moral police was to launch a " pub bharo andolan".



பொய் வரதட்சணை வழக்குகள் எவ்வளவு அதிகமாக பதிவு செய்யப்படுகிறதோ அவ்வளவு எண்ணிக்கையில் பெண்கள் இந்தியாவில் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்று புள்ளி விவரம் காட்டி நிதியுதவி பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் எத்தனை FIR பதிவு செய்யப்படுகிறது என்பதை மட்டும்தான் கணக்கில் கொள்ளவேண்டும். அப்போதுதான் அது மிகப்பெரிய எண்ணாகத் தெரியும். வழக்கின் முடிவில் எத்தனை உண்மையானவை என்று எண்ணிப்பார்த்து உண்மையைச் சொன்னால் பிழைக்க முடியாதல்லவா! அதனால் பெண்களைக் காப்பாற்றுகிறேன் என்று புதுப்புது சட்டங்களை இயற்றி அதிக அளவில் பொய் வழக்குகளை உருவாக்கினால் அதிக எண்ணிக்கையில் FIR பதிவுசெய்யப்பட்டு பணமழையாகப் பொழியுமல்லவா.

இதுபோல் குழந்தைகளை வைத்து ஏதாவது பணம் பார்க்கமுடியுமா? அல்லது குழந்தைகள்தான் பொய்வழக்குப் போடுவார்களா?




Monday, September 20, 2010

சாப்பாட்டிற்கு அருகில் செருப்பு


தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைபள்ளியில் தமிழக அரசு மாணவர்களுக்கு வாரம் ஐந்து முட்டை வழங்கும் திட்டத்தை கலெக்டர் அமுதா துவக்கி வைத்தார்.
தினமலரில் வந்த படம் செப்டம்பர் 21, 2010

உணவுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்றால் மூடநம்பிக்கை என்பார்கள். மரியாதைக்காக இல்லையென்றாலும் அறிவியல்பூர்வமாக சுகாதாரத்தையாவது நினைத்திருக்கலாம்.




கள்ளக் காதலை விரும்பும் மகளிர் சங்கங்கள்

ஜூலை 22, 2010 ThatsTamil


IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு பாரபட்சமற்ற கடும் தண்டனை: ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

சென்னை: கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கள்ளத்தொடர்பு குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ஐ திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்ச்சித்தது. இது குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு சுற்றறிக்கைகள் அனுப்பியது. ஆனால், இதற்கு சில பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் போனது. இன்று கள்ளத்தொடர்பு பற்றிய செய்திகள் இல்லாத செய்தித்தாள்களே இல்லை. கள்ளக்காதலன் அல்லது கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்வது சாதாரண விஷயம் ஆகிவிட்டது.

இந்த கள்ளத்தொடர்பால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. உலக அரங்கில் மதிக்கப்படும் இந்திய கலாசாரத்திற்கே இழிவு உண்டாக்கி விடும் போல் இருக்கிறது.

எனவே முதல்வர் கருணாநிதி, வரும் 26-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 ல் திருத்தம் கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். இதன் மூலம் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஆண், பெண் இருவருக்கும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை அளிக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.





Saturday, September 18, 2010

ஊழலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவைப்படுமா?

பெண்கள் எல்லாத்துறையிலும் முன்னேறிவிட்டார்கள். எல்லா அரசாங்கப் பணியிலும் இருக்கிறார்கள். அதுபோலவே எல்லாவிதமான குற்றங்களும் செய்கிறார்கள். ஆனால் இந்திய சட்டங்களின் பார்வையில் மட்டும் பெண்கள் இன்னும் முன்னேறவில்லை. அதனால் அவர்கள் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.


ரூ.4,000 லஞ்சம்: பெண் வி.ஏ.ஓ., கைது
தினமலர் செப்டம்பர் 18,2010

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்ய, நான்காயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, தீத்தாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பொய்யாழி(85). கடந்த 2003ம் ஆண்டு இவர் வாங்கிய, 43 சென்ட் நிலத்தை, பட்டா பெயர் மாற்றம் செய்ய அவரது மகன் வேலுச்சாமி, துறையூர் வி.ஏ.ஓ., வசந்தாவிடம்(52) விண்ணப்பித்தார். அதற்கு வசந்தா, நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் வேலுச்சாமி, புகார் செய்தார்.நேற்று மாலை, கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரிலுள்ள வசந்தா வீட்டில், நான்காயிரம் ரூபாயை வேலுச்சாமி கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., வசந்தாவை கைது செய்தனர்.

====

சமீபத்தில் வந்துள்ள செய்தியில் இந்தியாவில் 80% சதவிகிதம் பேர் ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதில் பெண்களுக்கு எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு என்று தெரியவில்லை. குறைவாக இருந்தால் அதை அதிகப்படுத்த சிறப்புச் சட்டங்கள் தேவைப்படலாம்! பெண்ணுரிமை விரும்பிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

One in three Indians "Utterly Corrupt"
Mumbai Mirror, September 09, 2010


Almost one-third of Indians are “utterly corrupt” and half are "borderline”, the outgoing head of the country’s corruption watchdog has said, blaming increased wealth for much of the problem.

20 per cent of Indians are honest, regardless of the temptations
30 per cent Indians are corrupt and 50 per cent are on borderline
Transparency International puts India 84th on its latest corruption perception index




Thursday, September 16, 2010

குழந்தையைக் கொலை செய்யும் பெண்கள்

பெண்ணிற்கு காமம் மேலோங்கி அறிவுக்கண்ணை மறைத்திருக்கும்போது காமத்திற்குத் தடையாக யார் வந்தாலும் கொலை செய்யவும் தயங்கமாட்டாள். தான் பெற்ற குழந்தையாக இருந்தாலும் சரி, கள்ளக்காதலுக்குத்தடையாக இருக்கும் தாலிகட்டிய கணவனாக இருந்தாலும் சரி. கொலை செய்ய அஞ்சமாட்டார்கள் என்பதைத்தான் கீழுள்ள செய்திகள் காட்டியிருக்கின்றது.

"உல்லாசத்திற்கு' இடையூறாக இருந்த குழந்தை கொலை நாடகமாடிய தாய்
தினமலர் செப்டம்பர் 16,2010

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்து நாடகமாடிய தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த அரியூரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி இன்பநிலா (28). இருவரும் சென்னையில் கட்டட வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு வயதில் தமிழ்ச்செல்வன் என்ற குழந்தை இருந்தது. கடந்த 10 மாதத்திற்கு முன், பாபு இறந்து விட்டார். தனது இரண்டு வயது குழந்தையுடன் சென்னையில் தங்கி, சித்தாள் வேலை செய்து வந்தார் இன்பநிலா. அப்போது, உடன் வேலை செய்த சிதம்பரம் அடுத்த கீழகுண்டலபாடி சந்துரு (எ) பாலச்சந்துருவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

கடந்த மாதம் பாலச்சந்துரு, இன்பநிலாவிடம் அரை சவரன் நகையை வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு வந்தவர், சென்னைக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது குழந்தையுடன் இன்பநிலா சிதம்பரம் வந்து பாலச்சந்துருவை சந்தித்து பேசினார். அப்போது பாலச்சந்துரு அரை சவரன் நகையை கொடுத்து பண்ருட்டியில் தங்கச் சொல்லி பஸ் ஏற்றி விட்டு தான் சொந்த ஊருக்கு சென்றார்.

இன்பநிலா, பண்ருட்டிக்கு செல்லாமல் சிதம்பரம் கஞ்சித்தொட்டி பஸ் நிலையத்தில் இறங்கி மீண்டும் பாலச்சந்துருவை தேடி வேளக்குடிக்கு சென்றார். பின், இருவரும் மது அருந்திவிட்டு கொள்ளிடக்கரை ஆற்றில் உல்லாசமாக இருந்தபோது, குழந்தை அழுதுள்ளது. ஆத்திரத்தில் குழந்தையை எட்டி உதைத்ததும், குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. பின், பாலச்சந்துரு, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இன்பநிலா நடந்த சம்பவத்தை மறைத்து நாடகமாடி மருத்துவமனையில் சேர்த்தார். அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து இன்பநிலா, அவரது கள்ளக்காதலன் பாலச்சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்தனர். நாடகமாடிய கல்நெஞ்சக்காரி தனது இன்பத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கல்நெஞ்சத்தோடு கொலை செய்துவிட்டு இன்பநிலா நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.


போலீசாரிடம் இன்பநிலா கூறுகையில், "கணவரிடம் ஏற்பட்ட தகராறில் பெங்களூரில் இருந்து கோபத்தோடு புறப்பட்டு, என்னோடு வேலை பார்த்த வல்லம்படுகை வசந்தியை பார்க்க குழந்தையோடு வந்தேன். வழி தெரியாமல் வேளக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், வழி காட்டுவதாகக் கூறி என்னை அழைத்துச் சென்றனர். ஆள் அரவமற்ற புதர் மறைவில் சென்றபோது, என்னை இறக்கிவிடுமாறு கூச்சலிட்டேன். என்னை கற்பழிக்க முயன்றனர். அப்போது குழந்தை அழுததால் கால்களை பிடித்து தரையில் அடித்து கொன்று, என்னை கற்பழிக்க முயன்றனர்' என்றார். போலீசாரின் முறையான விசாரணையில் பெற்ற மகனையே கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. கல்நெஞ்சம் படைத்த இன்பநிலா, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கிராமப்புறத்துப் பெண்ணே தனது குற்றத்தை மறைக்க இப்படி அழகாக ஒரு கதை எழுதும்போது நகரத்து படித்த பெண்கள் தங்களது குற்றங்களை மறைக்க கணவனின் குடும்பத்தார் மீது எப்படியெல்லாம் பொய் வரதட்சணைப் புகார்களை எழுதுவார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

|||||||||||||||

காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியை
செப்டம்பர் 16, 2010 ThatsTamil

நெல்லூர்: தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததற்காக 6 வயது மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த ஆசிரியையை கைது செய்துள்ளனர் போலீஸார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் வெங்கடாச்சலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சைதன்யா. இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவர் இறந்து விட்டார். 6 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நாகேஷ் என்பவருக்கும், சைதன்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. ஆனால் மகள் இடையூறாக இருப்பதாக உணர்ந்தார் சைதன்யா, இதனால் அவள் மீது கோபம் மூண்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக இரும்புக் கம்பியால் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். குழந்தை கதறித் துடித்து அழும்போது டிவி வால்யூமை அதிகரித்து விடுவார். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு எதுவும் கேட்காது. ஆனால் அடிக்கடி திடீர் திடீரென டிவி சத்தம் அதிகமாக கேட்டதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது சிறுமி உடல் முழுவதும் தீக்காயத்துடன் காணப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், சைதன்யா, தனது குழந்தையை சித்திரவதை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சைதன்யாவை போலீஸார் கைது செய்தனர். கள்ளக்காதலன் நாகேஷும் கைது செய்யப்பட்டார்.

================

இது முன்பு வந்த செய்தி....

கள்ளக்காதலுடன் ஓடிய தாயை பார்த்ததும் அழுத குழந்தைகள்

தினமலர் அக்டோபர் 29, 2009

திண்டுக்கல் : கள்ளக்காதலனுடன் பத்து மாதங்களுக்கு முன்பு ஓடிப்போன தாயை கோர்ட்டில் பார்த்ததும், அவரது இரண்டு ஆண் குழந்தைகளும் கதறி அழுது தங்களுடன் வருமாறு அழைத்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிமந்தையம் செரியன்நகரைச் சேர்ந்தவர் சாமுவேல் (35). இவருக்கும் உஷா (27) என்பவருக்கும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. சாம்பிரசன்னா (5), சுதன் (3) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நர்ஸ் வேலை பார்த்த உஷா தான் படிக்கும் போதே காதலித்த பிரகாஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் ஓடிப்போனார். இது குறித்து சாமுவேல் கள்ளிமந்தையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

சாமுவேல் தனது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று திருவாரூரில் காதலனுடன் தங்கியிருந்த உஷாவை அழைத்து வந்து கள்ளிமந்தையம் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நேற்று உஷாவை திண்டுக்கல் ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டில், கணவனுடன் செல்ல மறுத்த உஷா, தன் தாய் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். கோர்ட் முடிந்து வாசலுக்கு வந்த தாயைப் பார்த்ததும், இரு குழந்தைகளும் கதறி அழுதன. "அம்மா நம்ம வீட்டுக்கு வாம்மா, அப்பாவுடன் சேர்ந்து நாலு பேரும் ஒன்றாக இருக்கலாம்'' என அழைத்தனர். இதனை கேட்டு கோர்ட் ஊழியர்களும், அங்கிருந்தவர்களும் கண் கலங்கினர். ஆனாலும் உஷா தன் கணவனுடன் செல்ல மறுத்து விட்டார். உஷா காதலனுடன் செல்வதற்காகவே என்னுடன் வர மறுக்கிறார். அவரை அழைத்து வந்த காதலன் பிரகாஷ் கோர்ட்டிற்கு வந்திருப்பதாக சாமுவேல் தெரிவித்தார்.

====================


இப்படித்தான் பொய் வரதட்சணை வழக்குகளும் நாட்டில் உருவாகின்றன. தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவன் அவனது குடும்பம், அல்லது தனது சொல்லுக்குக்கு கட்டுப்பட்டு அடிமையாக இருப்பதற்கு ஒத்துவராத கணவன் இவர்களெல்லாம் இப்படித்தான் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்படுகிறார்கள்.




Sunday, September 12, 2010

அன்னை வயிற்றிலிருந்து சிசு செய்த வரதட்சணைக் கொடுமை

அன்னையின் வயிற்றுக்குள் இருக்கும் பிறக்காத கருவாக இருந்தாலும் சரி பிறந்து சில நாட்களே ஆன குழந்தையாக இருந்தாலும் சரி இவையெல்லாம் மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்கின்றன. இந்த அதிசயம் இந்தியாவில் மட்டுமே நடக்கும். அரசாங்கம் கொடுத்திருக்கும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் எத்தனை விதமான ஜாலங்கள் செய்கின்றன!

இந்தியாவில் இருக்கும் அனைத்து பொய் வரதட்சணை வழக்குகளிலும் குறைந்த பட்சம் 5 குடும்ப உறுப்பினர்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு புகாரிலும் குறைந்தபட்சம் 3 பெண்கள் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதுதவிர கர்ப்பிணிகள், சிறுகுழந்தைகள், பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர், திருமணமாகாத இளம் பெண்கள், முதியோர் என்று ஒரு பட்டியலே இருக்கிறது. பொய்வழக்கில் சிக்கும் இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

பெண்களுக்குப் பாதுகாப்புத் தருகிறேன் என்ற பெயரில் பல அப்பாவிப் பெண்களையும் அவர்களது வாழ்க்கையையும் சிதைப்பவைதான் இந்திய நாட்டின் வரதட்சணை மற்றும் மருமகள் பாதுகாப்பு சட்டங்கள். சிதைந்துபோவது உங்கள் குடும்பமாக இருக்கும் வரையில் காவல், நீதித்துறைக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. பூனைப்படை வைத்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும்வரை ஆள்பவர்களுக்கு அப்பாவிகளின் வாழ்க்கை சிதைந்தால் என்ன, குடும்பத்தோடு உயிரே போனால் என்ன. எதற்காகக் கவலைப்படவேண்டும்?


கோர்ட்டில் ஆஜராகுமாறு நிறைமாத கர்ப்பிணிகளை கட்டாயப்படுத்த முடியாது-உயர்நீதிமன்றம்
செப்டம்பர் 12, 2010 ThatsTamil

டெல்லி: நிறைமாத கர்ப்பிணிகளாக இருக்கும் பெண்களை வழக்குக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரதட்சணைக் கொடுமை வழக்கில் ஆஜராகாத, நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது வாரண்ட்டை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

அப்போது நீதிபதி கெளபா பிறப்பித்த உத்தரவில், கீழ்க் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு மிகவும் வேதனை தருகிறது. ஆறு மாத கர்ப்பமாக உள்ள பெண்ணை நேரில் வந்து ஆஜராகுமாறு கூறியிருப்பது மிகவும் தவறானதாகும்.

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது, நேரில் ஆஜராகுமாறு கட்டாயப்படுத்துவது போன்றவை சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றார் அவர்.

சென்ற ஆண்டு இரண்டுமாதக் குழந்தையை வரதட்சணை வழக்கில் சிக்கவைத்து பெருமைப்பட்டது காவல்துறையும், நீதித்துறையும். அதை இந்த வீடியோவில் காணுங்கள்.




Friday, September 10, 2010

பெண்வழக்கறிஞர் திட்டமிட்டு செய்த கொலை

ஜூலை 15, 2010 ThatsTamil

பெங்களூர்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளையை காதலருடன் சேர்ந்து கொலை செய்த பெண்வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெங்களூர் பனசங்கரியை சேர்ந்தவர் சங்கர நாராயணா. இவர் ஒரு வக்கீல். இவரது மகள் சுபா (28). இவரும் ஒரு வக்கீல்.

சுபா பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தன்னுடன் படித்த அருண் வர்மாவை காதலித்தார். இவரின் காதலுக்கு பெற்றோர் சிவப்பு கொடி காட்டியுள்ளனர். ஆனால், சுபா காதலை மறப்பதாயில்லை.

இதனால் சுபாவின் பெற்றோர் அவர்கள் பக்கத்து வீட்டில் வசித்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிரீஷ் என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயம் ஆனாலும் சுபாவுக்கு, கிரீஷீடன் வாழ விருப்பம் இல்லை.

இதனால் கிரீஷை கொலை செய்ய முடிவெடுத்தார் சுபா. இந்த கொலையை தன் காதலன் மற்றும் அவரின் உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோருடன் கூட்டாக செய்ய திட்டமிட்டார்.

சம்பவத்தன்று விருந்துக்கு போவது போல நாடகமாடி கிரீசை மோட்டார் சைக்கிளில் சுபா அழைத்து சென்றார். அப்போது தாழ்வாகப் பறக்கும் விமானங்களை பார்க்க வேண்டும் என்று கூறி சுபா மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார். கிரீஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுபாவுடன் சேர்ந்து விமானத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அந்த நேரம் அங்கு பதுங்கி இருந்த வெங்கடேஷ் கிரீஷை திடீரென தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் கிரீஷ் உயிரிழந்தார்.

முதலில் கொலைக்கான காரணம் தெரியாமல் குழம்பிய போலீசார், சுபாவின் செல்போனை கைப்பற்றிய பிறகு தான் உண்மை தெரிந்தது. சுபாவிடம் நடத்திய விசாரணை யில் அவரும், காதலனும் சேர்ந்து தான் இந்த கொலையை செய்தார்கள் என்று தெரிய வந்தது.

இதையடுத்து சுபா, அவரது காதலர் அருண் வர்மா, அவரது உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த படுகொலையின் வழக்கு விசாரணை, பெங்களூர் 17-வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெண்டிகொடி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.

===========

பொய் வரதட்சணைப் புகார் எழுதுவது முதல் படுகொலை வரை நன்றாகவே திட்டமிட்டு சட்ட அறிவைப் பயன்படுத்தித்தான் செய்கிறார்கள்!



Wednesday, September 08, 2010

வழக்கறிஞர்களிடையே போட்டியை உருவாக்குங்கள்

ஜூலை 8, 2010 ThatsTamil

பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று பெண் வக்கீலை சக வழக்கறிஞர் ஒருவரே கொடூரமாக குத்திக் கொலை செய்தார். தானும் தற்கொலை க்கு முயன்றபோது அவரை காப்பாற்றிய போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பெங்களூர் விதான சவுதா எதிரே கர்நாடக உயர்நீதிமன்றம் உள்ளது. அங்கு இன்று காலை பெண் வக்கீல் நவீனா என்பவரை ஒருவர் குத்திக்கொலை செய்தார். பின்னர் தனது தொண்டையைக் கிழித்து தற்கொலை செய்து கொள்ளவும் அவர் முயன்றார். அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவரும் ஒரு வக்கீல்தான். பெயர் ராஜப்பா. தொழில் போட்டியில் இந்த செயலை செய்ததாக தெரிகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

வழக்கறிஞர்களிடையே தொழில் போட்டியை உருவாக்கினால் நாடு வளம் பெறும் போலிருக்கிறது! பெரும்பாலான பொய் வரதட்சணை வழக்குகளும் குறையும். எப்படி என்று தெரிந்துகொள்ள பின்வரும் கட்டுரையையும் படியுங்கள்.


நவம்பர் 9, 2008 அன்று தினமலர்-வாரமலரில் வந்த கட்டுரை

"கோர்ட்டுகளுக்கு ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ... லட்சக்கணக்கான கேசுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் கிடக்க, லீவு என்ன லீவு... வெள்ளைக்காரன் நீதிபதி, வக்கீல்களாக இங்கே இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்னும் தொடரணுமா? அவனுகளுக்குத்தான் கோடை வெப்பம் தாங்காதுன்னு, லீவு போட்டுட்டு அவன் ஊருக்கு ஓடினான்... இங்கேயே பொறந்து, இந்த வெயிலிலேயே வளந்த நம்ம ஆளுங்களுக்கு எதுக்கய்யா கோடைவிடுமுறை...' எனப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார் நடுத்தெரு நாராயணன் சார்.

சொத்து சம்பந்தமான அவரது வழக்கு ஒன்று, நீதி மன்றத்துக்குச் சென்று 18 வருடமாகிறதாம்... இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லையாம்... இதுதான் புலம்பலுக்குக் காரணம். அத்துடன், "பாதிக்கப்பட்டோர் கழகம்' என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட 16 பக்க இலவச வெளியீடு ஒன்றையும், என்னிடம் கொடுத்து, "படித்துப்பார்...' என்றார். புத்தகத்தில் இருந்த சில குறிப்புகள்...

"ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிற வன் ஒரு கோழியை இழப்பான்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை; இந்தக் கொடுமைக்கு யார் காரணம்?

பஸ்சில் கண்டக்டர் 25 காசு சில்லரை குறைவாகக் கொடுத்தால் அவரோடு மல்லுக்கட்டுகிறவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆயிரம் பீஸ் கொடுத்தாலும் ஒரு ரசீது வேண்டும் என்று கேட்டுப் பெறத் திராணியில்லை.

சிலர் ரசீது வேண்டும் என்று கேட்டால், "ரசீது தருகிற வழக்கமெல்லாம் கிடையாது!' என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். "பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்!' என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மீது திடீரென்று வழக்கறிஞர்களுக்குக் கரிசனம் ஏற்பட்டது எப்படி?

"ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் போது, முழு அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். பிரதிவாதி பதில் அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட வேண்டும்...' என சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

"இந்த சட்ட திருத்தத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்!' என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிகமான நன்மை தானே இருக்கிறது!


வழக்கறிஞர்கள், எந்த ஒரு வழக்கையும் நீட்டித்துக் கொண்டே போகத்தான் விரும்புகின்றனர். வழக்கறிஞர் என்றாலே வாய்தா வாங்குபவர் என்று பொருள் கொள்ளும்படி கோர்ட்டில் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

ஆவணங்களை மொத்தமாகத் தாக்கல் செய்து விடுவதால், எந்த ஒரு வழக்கும் இரண்டு விசாரணைகளில் முடிந்து விடும். ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து பத்து வருடம், பதினைந்து வருடம் அலைந்து திரியும் பொதுமக்களுக்கு, இரண்டே விசாரணையில் முடிந்து விட்டால் எத்தனை பெரிய ஆதாயம்! ஆனால், வழக்கு உடனடியாக முடிந்து விட்டால் வழக்கறிஞர்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவேதான், இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. போலி ஆவணங்களைத் தயார் செய்வது முழுக்க, முழுக்க தடுக்கப்பட்டு விடும்.

"ரிட் மனு தீர்ப்பின் மீது மேல் முறையீடு, உயர்நீதி மன்றத்தில் கிடையாது. மேல்முறையீடு செய்வதென்றால் இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்!' என திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கே எட்டு வருடம், பத்து வருடம் ஆகிறது. இதன் பிறகு தீர்ப்பாகி, நகல் எடுத்து அப்பீல் தொடர்ந்து முடிய மேலும் பல வருடங்கள் ஆகின்றன.

இந்தச் சட்டத்தால் உயர்நீதி மன்றத்தில் உள்ள பாதி வழக்கறிஞர்களுக்கு வருமானம் போய் விடும். எனவே தான் எதிர்க்கின்றனர். வழக்கறிஞராகத் தொழில் செய்து வருபவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...

வெறுங்கையில் முழம் போடுகிற கதை முன்பு நடந்ததோ, இல்லையோ - இப்போது நடக்கிறது. எந்த முதலுமே போடாமல் லட்சம், லட்சமாக சம்பாதிப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே! வருமான வரித் துறை இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால், வழக்கறிஞர் தொழிலில் போலிகள் நிறைய புகுந்து விட்டனர். இதைக் கட்டுப் படுத்தும் ஒரு சிறு முயற்சி தான் இந்த சட்டம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்.

இந்தியாவை பொறுத்தமட்டில் சிவில் கோர்ட் நடவடிக்கைகள் வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், வழக்கறிஞர்கள் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கின்றனர். உண்மையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் பொதுமக்களைப் பாதிப்பதாக இருந்தால் மேடை போட்டுப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களைக் களத்தில் இறக்க வேண்டியதுதானே!

வழக்கறிஞர்களிடம் இருந்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தங்களை அமல் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நலம் காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஒரு விளம்பர நோட்டீஸ் அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர். இந்த நோட்டீஸில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்திய அரசு சிவில் நடைமுறை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்களை சென்னை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என உள்ளது.

சென்னையில் செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நூற்றுக் கணக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தனித்தமிழ் ஆர்வலர்கள் இவர்கள். இவர்கள் முதலில், இப்படி எழுத்துப் பிழைகளோடு வெளியிட்டு தமிழைப் பாழடித்ததற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தால் நல்லது. பாராளுமன்றம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத இவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடி ஜெயிப்பார்கள் என்று பாமரன் கூட சிரிக்க மாட்டானா?

வழக்கறிஞர்களே, உங்கள் நலனுக்காக நீங்கள் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதில் கொஞ்சமாவது பொதுநலம் கலந்திருக்க வேண்டாமா?


பொதுவாக வழக்கறிஞர்களைப் பற்றி மக்களிடம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இந்தப் போராட்டத்தால் மேலும் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமா? சிந்திப்பீர்!

இப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் கழகம், சென்னை.

— இவ்வாறு அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது; சட்டத் திருத்தங்களால் வழக்குகள் சீக்கிரம் முடியுமென்றால் நல்லது தானே!



மாமனார்கள் ஜாக்கிரதை - மருமகள் வருகிறார்

இதுவரை மாமியார், கணவன் இவர்களை கொலை செய்துவந்த மருமகள்கள் சற்று முன்னேற்றம் அடைந்து இப்போது மாமனாரைக் கொலை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

கள்ளக்காதலை கண்டிக்கும் மாமியார் மற்றும் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் சிக்கவைத்துக்கொண்டிருந்த மருமகள்கள் இப்போது துணிந்து தைரியமாக கொலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த சாதாரண விஷயம்.

ஆனால் மாமனாருக்கு மட்டும் கொஞ்சம் கருணை காட்டி உயிர்ப் பிச்சைக் கொடுத்து கொலை செய்யாமல் வீட்டில் தனியாக இருக்கும்போது கையைப் பிடித்து இழுத்தார், சேலையைப் பிடித்து உருவினார் என்று வரதட்சணைப் புகாருடன் பாலியல் பலாத்காரப் புகாரையும் சேர்த்து கொடுத்துக்கொண்டிருந்த மருமகள்கள் இப்போது தங்களது கருணைப் பார்வையை மறைத்துவிட்டு இப்போது மாமனாரையும் கொலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இந்திய மாமனார்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.

மாமனார்களுக்கு பயன்படுத்துவதற்காகவே இந்திய அரசாங்கம் மருமகள்களுக்கு கீழுள்ள சிறப்புச் சட்டப்பிரிவுகளைக் கொடுத்திருக்கிறது. ஆனாலும் அவையெல்லாம் இப்போது பழையதாகிவிட்டதால் புதிதாக கொலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

  • வரதட்சணைக் கொடுமை
  • பாலியல் பலாத்காரம்
  • குடும்ப வன்முறை

பெண்களுக்கு சொத்தில் சமபங்கு கொடுக்கவேண்டும் என்று இந்தியாவில் சட்டம் போடப்பட்டிருந்தாலும் யாரும் தங்களுடைய மகளுக்கு சொத்தில் சம பங்கு கொடுக்காமல் ஏமாற்றி அதை “வரதட்சணை” என்ற சாயம் பூசி கடைசியில் “வரதட்சணைக் கொடுமை” என்று கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் பழியைப் போட்டு சிறைக்கு அனுப்பி வருகிறார்கள். இதுதான் இன்றைய வரதட்சணை சட்டங்களின் சுருக்கமான விளக்கம்.

பெண்களுக்கு இருக்கும் சொத்துரிமை பற்றியும் அதை ஒழுங்காக செயல்படுத்தவேண்டும் என்பது பற்றியும் எந்த மகளிர் சங்கமோ அல்லது மகளிர் வாரியமோ, மகளிர் அமைச்சகமோ இதுவரை மூச்சு விட்டது கிடையாது. ஏனென்றால் பெண்களுக்கு சொத்துரிமை கிடைத்தால் பெண்களின் வாழ்வு மேம்பட்டு சமுதாயத்தில் பெண்களின் நிலை உயர்வடைந்துவிடும். ஆனால் பொய் வரதட்சணை வழக்குகள் ஊக்குவிக்கப்பட்டு நாட்டில் பொய் வழக்குகள் பெருகினால் காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர்கள், பெண்ணுக்கு கொடுமை நடக்கிறது என்று ஓலமிட்டு நிதியுதவி பெறும் மகளிர் அமைப்புகள், வாரியங்கள் என்று ஒரு கூட்டத்திற்கே வாழ்வு வளம் பெறுமல்லவா? இதில் எது சிறந்தது? சொத்துரிமையில் ஒரு பெண் வளம் பெறுவதா அல்லது பொய் வழக்குகளால் ஒரு பெருங்கூட்டம் வளம் பெறுவதா?

பல மருமகள்களும் புத்திசாலிகள்தான். தங்களுக்குச் சேரவேண்டிய சொத்தை தன் குடும்பத்திலிருந்து வாங்காமல் புகுந்த வீட்டில் கணவனின் குடும்பத்தைப் பிரித்து எப்படி சொத்தை அபகரிப்பது என்று திட்டமிட்டுத்தான் திருமணமே செய்கிறார்கள். அப்படி தங்களின் கணக்கு ஒத்துவராதபோது கணவன் மற்றும் அவனது குடும்பத்தார் மீது “வரதட்சணைக் கொடுமை” என்று புகார் கொடுத்துவிடுவார்கள். அதற்குத்தான் இந்த சட்டங்கள் இருக்கின்றன என்று பட்டிக்காடு முதல் பட்டிணத்தில் இருக்கும் மருமகள் வரை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

இப்படி கொடுக்கப்படும் வரதட்சணை வழக்குகளின் பின்னணியில் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக தனிக்குடித்தனம் வராத கணவன், சொத்தை பிரித்து வாங்காத கணவன், சகோதரிகளுக்கு உதவி செய்யும் கணவன், மருமகளின் கள்ளக்காதலுக்கு இடையூராக இருக்கும் கணவன் மற்றும் மாமியார், மருமகளின் கள்ளக்காதலை கையும் “கலவுமாக” பார்த்துவிட்ட கணவன் போன்றவர்கள் இப்படித்தான் மருமகள் கொடுக்கும் வரதட்சணை வழக்கில் அப்பாவித்தானமாக சிக்கிக் கொள்கிறார்கள்.

இன்றைய செய்தியில் சொத்தை சரியாகப் பிரித்துக்கொடுத்த ஒரு அப்பாவி மாமனார் மருமகளால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபோல இன்னும் பல செய்திகள் வரும். ஏனென்றால் மருமகள்கள் இந்திய அரசாங்கம் கொடுத்திருக்கும் சட்டங்கள் மூலம் “பெண்ணுரிமை” பெற்றுவிட்டார்கள் அல்லவா! அவர்களும் தங்களது முன்னேற்றத்தை இந்த சமுதாயத்திற்குக் காட்டி நல்ல மதிப்பைப் பெறவேண்டுமென்றால் இப்படி ஏதாவது செய்தால்தான் மகளிர் சங்கத்தில் நாலுபேர் மதிப்பார்கள். பெண்ணுரிமைப் பேரொளி என்று பட்டம் கொடுத்து கவுரவிப்பார்கள்.

சொத்து பிரிப்பதில் தகராறு: மாமனாரை கொன்ற மருமகள்

செப்டம்பர் 09,2010 தினமலர்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில், சொத்தை பிரித்து கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மாமனாரை கட்டையால் அடித்து மருமகள் கொலை செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வநாதநகரைச் சேர்ந்தவர் குமார் (75). இவருக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த விபத்தில் மகன் தர்மராஜ் இறந்தார். தர்மராஜின் மனைவி பாக்கியலட்சுமி (30), இவர்களுடைய மகள் நித்யா (4), குமார் வீட்டிலேயே வசித்து வந்தனர். தன்னுடைய சொத்துக்களை ஆறு பங்குகளாக பிரித்து, 5 பங்குகளை மகள்களுக்கும், மீதி ஒரு பங்கை பேத்தி நித்யா மேஜர் ஆனதும் கிடைக்கும் வகையில் மாமனார் உயில் எழுதி வைத்திருந்தார். மாமனார் தன்னுடைய மகள்களுக்கு சொத்து கொடுத்தது பாக்கியலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இது சம்பந்தமாக இருவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இது தொடர்பாக மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மாமனார் உயிரோடு இருந்தால் தனது மகளான நித்யாவிற்கு எழுதி வைத்த சொத்துக்களையும், அவரது மகள்களுக்கே பிரித்து கொடுத்து விடுவார் எனக்கருதிய பாக்யலட்சுமி, அருகிலிருந்த கட்டையால் மாமனாரின் தலையில் அடித்து கொலை செய்தார். பாக்கியலட்சுமியை ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயராமன் கைது செய்தார்.



Tuesday, September 07, 2010

கணவனை முந்திச் செல்லும் மனைவியர்

எப்போதும் ஆண்தான் எல்லாக் குற்றங்களையும் செய்வான் என்று தவறாக எண்ணிக் கொண்டிருப்பவர்களை விழிப்படையச்செய்யும் வகையில் இப்போதுதான் செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கிறது.

காலம் காலமாக நடந்துவரும் விஷயம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வருகிறது. ஆனால் சட்டங்கள் மட்டும் சமமாக இல்லாமல் பெண்கள் தவறே செய்யாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு இன்னும் இருட்டறையிலேயே இருக்கிறது. இந்திய சட்டங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்போவது யாரோ?

கள்ளக்காதல் மனைவியிடம் சிக்கித்தவிக்கும் இந்தியக் கணவர்களுக்கு இரண்டே வழிகள்தான் இருக்கின்றன

1. மனைவியின் கள்ளக்காதலைத் தட்டிக்கேட்டால் மனைவி கொடுக்கும் பொய் வரதட்சணை வழக்கில் குடும்பத்தோடு சிறைக்குச் செல்லவேண்டும். பெரும்பாலும் படித்த நகரத்து மனைவியர் இந்த வழிமுறையை பின்பற்றுவார்கள்.

2. மனைவி கொஞ்சம் சுறுசுறுப்பான ஆளாக இருந்தால் கணவன் கள்ளக்காதல் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால் கணவனை முந்திக்கொண்டு அவனை உயிரோடு தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.

கள்ளக்காதல் புரிய மனைவிக்கு பாதுகாப்பாக வரதட்சணை மற்றும் மருமகள் பாதுகாப்புச் சட்டங்கள் இருப்பதுபோல இந்தியக் கணவர்களுக்கு ஒழுங்கற்ற மனைவியிடமிருந்து உயிருடன் தப்பிக்க ஏதாவது பாதுகாப்பு இருக்கிறதா? கண்டிப்பாக இந்திய சட்டங்களில் எந்த வழியும் இல்லை. அதனால் ஒன்று பொய் வரதட்சணை வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்லவேண்டும் அல்லது உயிரை விடவேண்டும்.


செப்டம்பர் 08,2010 தினமலர்

திருநெல்வேலி : திருநெல்வேலி, பாப்பாக்குடியை அடுத்த ஓடைக்கரை துலுக்கப் பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(41). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி ஜெயசீலா (39), இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.

ஜெயசீலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன்(62) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த புஷ்பராஜ், குடும்பத்தை பாப்பாக்குடிக்கு மாற்றினார். அதன்பிறகும் ஜெயசீலா, ஜெயபாலன் தொடர்பு நீடித்தது. கடந்த ஜூன் 20 ல் ஜெயசீலாவின் வீட்டிற்கு ஜெயபாலன் வந்தார். அங்கு இருவரும் ஒன்றாக இருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த புஷ்பராஜ் ஆத்திரமுற்று கண்டித்தார். இருவரும் புஷ்பராஜை தாக்கி, துணியால் முகத்தை மூடி, மூச்சு திணறச் செய்து கொலை செய்தனர். அண்ணன் அற்புதராஜூக்கு ஜெயசீலாபோன் செய்து, வரவழைத்தார். அவருடன் சேர்ந்து உடலை எடுத்துச்சென்று ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் அடக்கம் செய்தனர். இதுகுறித்து புஷ்பராஜின் தாயார் மரியா நேற்று பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் மூவரையும் பிடித்து விசாரித்தனர். மூவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். ஜெயசீலா, ஜெயபாலன், அற்புதராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.




மருமகள் கொடுமையிலிருந்து பாதுகாக்க ஒரு சுயஉதவிக் குழு

இந்தியாவில் பல மருமகள்கள் செய்யும் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. இந்த அக்கிரமங்களிலிருந்து அப்பாவிகளைக் காக்க அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்காததால் அன்னையர்கள் ஒன்று கூடி ஒரு சுய உதவிக்குழுவை ஆரம்பித்திருக்கிறார்கள்.

மருமகள்களுக்காக மட்டுமே இருக்கும் இந்திய மருமகள் பாதுகாப்பு சட்டங்கள் போல் ஒருதலைபட்சமாக அல்லாமல் மருமகள் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆண், பெண், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் என அனைவரும் வயது, பாலினம் வித்தியாசம் இல்லாமல் இந்த அன்னையர் கழகத்தைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

அப்பாவிகளைப் பாதுகாக்கவேண்டிய அரசாங்கத்தை பெண் உரிமை என்ற பெயரில் மகளிர் சங்கங்கள் முடக்கிவிட்டதால் அன்னையர்கள் நாட்டையும் அப்பாவிகளையும் பாதுகாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

என்ன ஒரு அவலநிலை!



It's raining pesky daughters-in-law


CHANDIGARH: It seems that the city is flooded with troublesome daughters-in-laws. Within a day of its launch, the Chandigarh unit of All India Mother-in-Law Protection Forum ( AIMPF) received at least 55 calls, mostly from harassed women, claiming they were fed up with the torment of their 'bahus'.

Talking to TOI on Monday evening, unit incharge Manjit Puri claimed that the helpline began ringing as early as 6:45am, and the torrent continued throughout the day, with most of the 'victims' breaking down while relating their woeful tales.

The callers were not from the city alone, but extended to Punjab and Haryana and included mothers-in-law, sisters-in-law and even fathers-in-law, she added.

"While praying to save her from the clutches of her daughter-in-law, one caller said that after her only son got married, things were going smoothly till they came to know about his wife's affair that was still not over. In a dramatic bid, the daughter-in-law tried to commit suicide. Later, she shifted to her parent's house and filed a case for abetment," Puri said.

Another distressed caller reportedly told Puri how her daughter-in-law moved out over a minor altercation. "The girl's relatives then beat up her in-laws and left them locked in a room of their house. When they lodged a complaint, the accused were arrested on minor charges but soon let off," Puri related.

She said most of the complaints were about the tilted laws that worked in favour of the daughters-in-law. "When the girl complains, police takes immediate action. But when the boy complaints, authorities hardly take note," she added.

"It is not just the men who suffer due to false cases under 498A (cruelty for dowry). Even their elderly parents and other family members are dragged to the jail," said Puri, who attended most of the 55 calls.

There were heart-rending calls from mothers who said they couldn't bear to see their sons, husbands and other kin insulted in full public view by scheming daughters-in-law.

"I have asked the callers to attend the next meeting of the forum on September 12. The line of action includes talking to legal experts and informing them about our plight," Puri said.

The front, headquartered at Bangalore, was launched on September 6 last year.

The Chandigarh unit began functioning on Sunday.


Read more: It's raining pesky daughters-in-law - The Times of India http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Its-raining-pesky-daughters-in-law/articleshow/6509662.cms#ixzz0yu1DBvjl

=============

http://epaper.hindustantimes.com/PUBLICATIONS/HT/HC/2010/09/07/ArticleHtmls/45-CALLS-FROM-HARASSED-IN-LAWS-IN-24-07092010164006.shtml?Mode=1

Forum to assist mothers-in-law
Tribune News Service

Chandigarh, September 6
A day after the launch of the Chandigarh chapter of the All-India Mother-in-Law Protection Forum (AIMPF), the forum received 45 phone calls on its helpline from elderly women facing dowry harassment cases today.

http://www.tribuneindia.com/2010/20100907/cth2.htm#13


http://timesofindia.indiatimes.com/city/chandigarh/Its-raining-pesky-daughters-in-law/articleshow/6509662.cms

Harassed mothers-in-law in Chandigarh find their voice
Rajesh Deol, Chandigarh, Sep 6, DHNS:

Hoping to help afflicted mothers-in-law (MILs) to find their own voice, the Chandigarh chapter of All India Mother-in-Law Protection Forum (AIMPF) has started functioning in the city.

http://www.deccanherald.com/content/94599/harassed-mothers-law-chandigarh-find.html


Indian Express - ‎
Tue Sep 07, 2010
All-India Mother-in-Law Protection Forum (AIMPF), a social forum created to protect the rights and interests of the mother-in-laws launched its Chandigarh Chapter at the Leisure Valley in Sector 10, here this evening. The forum was started by Neena Dhulia in Bangalore on September 6 last year.

http://newspolitan.com/forum/art/india/bangalore/GE2DMMBVGA4ECVCQ

http://iplextra.indiatimes.com/article/05qG5JlgvI2aP?q=Mother

http://www.internationalnewsandviews.com/2010/09/aimpf-gets-exorbitant-response-helpline-receives-45-calls-in-one-day-calls-started-as-early-as-645-a-m/

http://www.dailypioneer.com/281355/Inbrief.html


http://globeinfowire.com/newly-set-up-aimpf-receives-45-calls-in-a-day/







Monday, September 06, 2010

ஆண்களைக் கொன்று குவிக்கும் (கள்ளக்)காதல் கொலைகள்

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லாததால் கணவர்களும், கள்ளக் காதலர்களும் சண்டையிட்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். கணவன் தன் மனைவியை நல்வழிப்படுத்தக்கூடாதா? கொலைதான் செய்யவேண்டுமா? என்று பலரும் யோசிக்கலாம்.

கணவன் தன் மனைவிக்கு அறிவுரை கூறி திருத்த நினைத்தால் மனைவி அந்தக் கணவனை பொய் வரதட்சணை வழக்கில் சிக்க வைத்துவிடுவார். அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிவிடுவார். இதுபோன்ற அப்பாவிக் கணவர்களை பாதுகாக்க எந்த சட்டங்களும் கிடையாது. ஆனால் கள்ளக்காதல் மனைவிகளை பாதுகாக்க பல சட்டங்கள் இருக்கின்றன. அதனால் தங்களின் உயிரை பாதுகாத்துக்கொள்ள கணவன் வேறுவழியில்லாமல் இதுபோன்ற வழிமுறையை தேர்ந்தெடுக்க இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் தூண்டிவிடுகின்றன.

ஒரு பெண்ணின் கள்ளக் காதலால் ஒரு கணவர் கொலையாளியாக்கப்படுகிறார், மற்றொரு ஆண் கொலைசெய்யப்படுகிறார். அல்லது ஒரு அப்பாவிக் கணவர் மனைவியாலும் அவரது கள்ளக்காதலனாலும் கொல்லப்படுகிறார். பல குழந்தைகள் அனாதையாக்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாகும் மனைவி என்ற ஒரு பெண் “அப்பாவி” என சித்தரிக்கப்படுகிறார். இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் இப்படித்தான் மனைவியரை அப்பாவி என சித்தரித்து பெண்ணுரிமை என்ற பெயரில் ஒருதலைபட்சமான சட்டங்களை மனைவியரின் கையில் ஆயுதமாகக் கொடுத்திருக்கிறது. இதுதான் சட்டங்கள் பெண்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு!

வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் சரக்கான “பெண்ணுரிமை” என்ற பெயரில் இப்படித்தான் மறைமுகமாக பல குடும்பங்கள் அதிகாரப்பூர்வமாக அரசாங்க ஆதரவுடன் இயற்றப்படும் கண்மூடித்தனமான சட்டங்கள் மூலம் வேறறுக்கப்படுகிறது.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


கொடிகட்டிப் பறக்கும் கள்ளக்காதல் கொலைகள்
செப்டம்பர் 07,2010 தினமலர் செய்தி


திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பஸ்சில் வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் முன் சம்பவம் நடந்ததால், கொலையாளிகள் உடனே கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன்(30). இவர் பழநி கோவிலில் செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மனைவி அமுதா(24). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அமுதாவிற்கும், இதே பகுதியில் குடியிருக்கும் தனியார் டூரிஸ்ட் பஸ் டிரைவர் மகேஷûக்கும் (25), கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் பலமுறை கண்டித்துள்ளார். அமுதாவை, மகேஷ் கடந்த 20 நாட்களுக்கு முன் கடத்திச் சென்றதாக ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது. பின், இருவரும் திரும்பி வந்தனர். நேற்று மதியம் 2.30 மணிக்கு மகேஷ் பழநியில் இருந்து தனியார் பஸ்சில் முத்தனம்பட்டி வந்தார். இதே பஸ்சில் பெரியகருப்பனும் வந்தார். ரெட்டியார்சத்திரம் ஸ்டாப்பில் பஸ் நின்ற போது, பெரியகருப்பன் தம்பி ராஜ்குமார் பஸ்சில் ஏறினார். இருவரும் சேர்ந்து மகேஷ் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் முன் பஸ்சில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அலறியடித்து பஸ்சை விட்டு இறங்கி ஓடினர். இதையறிந்த போலீசார் பஸ்சில் ஏறி, ஆயுதங்களுடன் இருந்த பெரியகருப்பன், ராஜ்குமாரை கைது செய்தனர். மகேஷ் உடலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பஸ் கொண்டு வரப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்.ஐ., பிச்சைமணி விசாரித்து வருகின்றனர்.


மனைவியுடன் தொடர்பு: ஆட்டோ டிரைவரை கொன்றவர் வாக்குமூலம்
செப்டம்பர் 07,2010 தினமலர்
விசாரணையில் : என் மனைவி லட்சுமியுடன் ரகுவுக்கு இருந்த தொடர்பை துண்டிக்கும்படி பலமுறை எச்சரித்தேன்.


கணவனை கொலை செய்த மனைவி : கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
செப்டம்பர் 07,2010 தினமலர்

பெரியகுளம் : கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்த மனைவி உட்பட ஐந்து பேருக்கு, பெரியகுளம் விரைவு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.





“சைபர் கிரைம்” செய்யும் “குடும்பப்” பெண்கள்

பெண்கள் இன்னும் முன்னேறவில்லை. அவர்களுக்கு இன்னும் பல விஷயங்கள் தெரியவில்லை. இட ஒதுக்கீடும் சிறப்பு சட்டங்களும் இருந்தால்தான் அவர்கள் வாழ்க்கை வளம்பெறும் என்று சொல்பவர்களுக்கு இந்த செய்தி சவுக்கடியா அல்லது செருப்படியா?

மொபைல் போன் மூலம் குற்றம் செய்யும் பெண்கள்
செப்டம்பர் 06,2010 தினமலர்

கோவை :மொபைல் போனில் பொழுதுபோக்காக வாலிபர்களிடம் பேசி, காதலில் விழ அலைய வைக்கும் பெண்கள் மீது வரும் புகாரின் எண்ணிக்கை கூடி வருவதாக, கோவை சைபர் க்ரைம் போலீசார் "அதிர்ச்சி' தகவல் தெரிவிக்கின்றனர்.

கோவை மாநகர குற்றப்பிரிவின் கீழ் செயல்படும், "சைபர் க்ரைம்' பிரிவுக்கு வரும் புகார்களில், மொபைல்போன் மூலம் ஆபாச அழைப்பு விடுத்தல், "செக்ஸ் மெசேஜ்' மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி, "டார்ச்சர்' கொடுப்பது தான் அதிகம்.பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், தனியார் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு மட்டுமன்றி, முன் பின் அறிமுகமில்லாத மாணவியர், வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்களுக்கும் அனுப்பி தங்களுக்குள் சந்தோஷம் கொள்கின்றனர்.தொடர்ந்து பெறப்படும் ஆபாச அழைப்புகளால் மனவேதனை அடையும் பெண்கள், மாணவியர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தரும் புகாரின் எண்ணிக்கை கூடியுள்ளன.சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, "டார்ச்சர்' கொடுக்கும் ஆசாமிகளை வளைத்து பிடிக்கின்றனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜாலிக்காகவும், ஆர்வ கோளாறு காரணமாகவும் மெசேஜ் அனுப்புவதாகக் கூறி, மன்னிப்பு கேட்டு மன்றாடி தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

சமீபத்தில், கோவை மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்த 160க்கும் மேற்பட்ட புகார்கள், புகார்தாரரின் வேண்டுகோளின்படி எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில், போலீசாரையே திடுக்கிட வைத்துள்ள சில சம்பவங்களும் நடந்துள்ளன. முன் பின் பார்த்திராத வாலிபரை காதல் வலையில் விழ வைத்த திருமணமான பெண், தங்கைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய அக்கா, ஒருதலைக் காதல் வசப்பட்டு, ஆபாச மெசேஜ் அனுப்பிய தனியார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஆகியோரை, சைபர் க்ரைம் போலீசார் பிடித்துள்ளனர்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், பெற்றோருடன் வசிக்கிறார். தனக்கு தெரிந்த வாலிபர் ராகுலுடன் (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு குழையக் குழைய பேசியுள்ளார். அவளது பேச்சில் தன்னை பறிகொடுத்த வாலிபர், நேரில் சந்திக்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிடி கொடுக்காமல் இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என காலம் கடத்தியுள்ளார். தன்னுடன் பேசுவது யார் என்று தெரிந்து கொள்ளாமலே காதலில் விழுந்த வாலிபர், திருமணம் செய்தே ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றுள்ளார். இதை உறுதி செய்த ஸ்வீட்டி தன்னை பெண் பார்க்க வருமாறு சென்னைக்கு அழைத்துள்ளார்.

ஆர்வத்தில் தன் பெற்றோரையும், பக்கத்து வீட்டு நண்பரின் பெற்றோரையும் சென்னை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது, ஸ்வீட்டியின் தோழி ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, "ஸ்வீட்டிக்கு உடல் நலமில்லை. அவளது தோழி வீட்டில் இருக்கிறார். பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இன்னொரு நாளைக்கு வைத்து கொள்ளலாம்' என்று தெரிவிக்க, ராகுல் மற்றும் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் கோவை திரும்பினார்.

அடுத்தடுத்து அவள் யார் என்று தெரிந்து கொள்ள ராகுல் பல முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லை. சில மாதங்களுக்கு முன், சூலூர் போலீசுக்கு வந்த போனில், தனது பெயர் ஸ்வீட்டி என்றும், தன்னை காதலிக்கும் ராகுல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் புகார் செய்ததோடு, தன் காதலனின் மெபைல் எண்ணையும் கொடுத்து இணைப்பை துண்டித்து விட்டாள். போலீசார் விசாரித்ததில் ஸ்வீட்டி கொடுத்த மொபைல் எண்ணுக்கு, சொந்தக்காரர் காதலில் விழுந்த வாலிபர் தான் என தெரிந்தது. ஆத்திரமடைந்த ராகுல், "அவள் யாரென்று தெரியாது. முன் பின் முகத்தை பார்த்ததில்லை. ஆனால், என்னை காதலிப்பதாக கூறி அலைய விட்டு அசிங்கப்படுத்தி விட்டாள். அவளை கண்டுபிடித்து கொடுங்கள்' என, புகார் தெரிவித்துள்ளார்.இது சைபர் க்ரைம் விசாரணைக்கு வந்தது. தீவிர தேடுதலில் ஸ்வீட்டி சிக்கினாள். அவள் வேறு யாருமல்ல. காதலில் விழுந்த ராகுலின் பக்கத்து வீட்டு குடும்ப நண்பரின் மருமகள்; திருமணமானவர். மேலும், அப்பெண்ணிடம் 10 சிம்கார்டுகள் இருந்ததாகவும், ஒவ்வொரு முறை பேசும் போதும் வெவ்வேறு எண்களில் இருந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.காதலில் ஆண்கள் எப்படி விழுகின்றனர் என்பதை அறிந்து கொள்ள, ஜாலிக்காக இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இரு வீட்டாரும் கேட்டுக் கொண்டதால் வழக்குப் பதிவு செய்யவில்லை.

மற்றொரு வழக்கு: மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் விற்பனை மையத்தில் வேலை. இவரது கடைக்கு பொருள் வாங்க வரும் வாலிபரும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தான். இவரது மொபைல் போனை தெரிந்து கொண்ட செல்வி, தொடர்ந்து போன் செய்து, தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.காதல் மெசேஜ், ஆபாச படங்களுடன் கூடிய மெசேஜை தொடர்ந்து அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், சைபர் க்ரைமில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்ததில் செல்வி பிடிபட்டார். விசாரணையில், தினமும் ஒரே பஸ்சில் பயணிக்கும் வாலிபரின் அழகை ரசிப்பதற்காகவே இச்செய்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். வாலிபரின் வேண்டுகோள் காரணமாக செல்வி மன்னிக்கப்பட்டாள்.

இதை விட, மிக மோசமான, தரமில்லாத மெசேஜ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்ததால், மனநிம்மதி இழந்த ஒரு பெண், போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். அந்த வீட்டில் அக்கா, தங்கை இருவர். தங்கை அழகானவர். இதனால் ஆபாச படங்கள், ஆபாச அழைப்புகள் தங்கைக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து பார்த்த போது, அக்காவே தங்கைக்கு மெசேஜ் அனுப்பியது தெரிந்தது. விசாரணையில் பொறாமை தான் காரணம் என தெரிய வந்தது. இதுவும் சமாதானத்தில் முடிந்துள்ளது.

தற்போதைய சூழலில் ஆண்களுக்கு நிகராக, மொபைல் போனில் மெசேஜ், ஆபாச அழைப்பு விடுத்து பெண்களும் சிக்கிக் கொள்கின்றனர் என்பது வெளிப்படையாக நடக்கிறது. போலீசுக்கு வரும் புகார் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.



ஆண்களை வென்றுவிட்ட பெண்கள்!

பட்டி தொட்டி முதல் மாநகரம் வரை பெண்கள் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு எல்லா விஷயத்திலும் முன்னேறிவிட்டார்களே. மிகவும் சந்தோஷப்படவேண்டிய இந்த நேரத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்று ஏன் இன்னும் பலர் கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்? அரசாங்கம் கூட இன்னும் பெண்களுக்காக சிறப்புச் சட்டங்கள் வேண்டும் என்று புதிதுபுதிதாக சட்டங்களை இயற்றிக்கொண்டிருக்கிறதே. நாட்டில் இதுபோல் பெண்கள் அடைந்துவிட்ட முன்னேற்றங்கள் பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லையா?

மது போதையில் சாலையில் கவிழ்ந்த பெண்-விபரீதமாகும் கலாச்சாரம்
சனிக்கிழமை, ஆகஸ்ட் 28, 2010 Thats Tamil

சென்னை : குடிபோதையில் நடக்க முடியாமல் நடுத் தெருவில் விழுந்து அலங்கோலமான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர் நான்கு வாலிபர்கள். அவர்களைப் பிடித்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு அவரது தாயாரை வரவழைத்து கண்டித்து ஒப்படைத்தனர்.

மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடி வைத்த தமிழ்நாட்டில் பெண்களின் நிலை, குறிப்பாக நவ நாகரீக மோகத்தில் திளைத்து நீந்தி வரும் பெண்களின் நிலை பெரும் மோசமாக மாறி வருகிறது.

சென்னை நகரில் குடிபோதையில் மிதக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடக்கும் பெண்களின் நிலையும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் சைதாப்பேட்டைஉள்ளிட்ட சில பகுதிகளில் குடிபோதையில் பெண்கள் தெருவில், சாலையில் விழுந்து மீட்கப்பட்ட கதையை மக்கள் பார்த்தனர். இந்த நிலையில் தி.நகரில் ஒரு கல்லூரி மாணவி குடிபோதையில் கீழே விழுந்து கிடந்தார். பறிபோகவிருந்த அவரது கற்பை மயிரிழையில் போலீஸார் தடுத்து நிறுத்தி மீட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் அமுல்யா. 21 வயதாகும் இவர் கே.கே.நகரைச் சேர்ந்தவர். ராயபுரத்தில் இவருக்கு ஒருகாதலர் இருக்கிறார். இருவரும் தி.நகருக்குச் சென்று அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் செமத்தியாக குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில்காரில் கிளம்பினர்.

அதிகாலை 3 மணியளவில் அந்தப் பெண்ணை, அவரது காதலர் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை முன்பு இறக்கி விட்டு விட்டு கிளம்பினார். காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. அப்படியே கீழே விழுந்து விட்டார்.

அரை குறை உடையுடன், உடைகள் அலங்கோலமாக கிடக்க கீழே விழுந்து கிடந்தார் அந்தப் பெண். அப்போது நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர்.

அலங்கோலான நிலையில் கீழே கிடந்த பெண்ணை நெருங்கி செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கினர். இந்த நிலையில் அந்தப் பகுதி வழியாக போலிஸ் ரோந்து வாகனம் வந்தது. இதைப் பார்த்த நான்கு பேரும் ஓட முயற்சித்தனர். ஆனால் ஒருவரை மட்டும் போலீஸார் பிடித்துவிட்டனர்.

பின்னர் அமுல்யாவை தூக்கி வேனில் போட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். காலை ஆறு மணியளவில் அவருக்கு மயக்கம் தெளிந்தது.தான் எங்கு படுத்திருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பினார். அவரிடம் நடந்ததைக் கூறினர் பெண் போலீஸார். இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து அழுதுள்ளார் அமுல்யா.

பின்னர் போலீஸார் அமுல்யாவின் வீட்டைத் தொடர்பு கொண்டு அவரது தாயாரை அழைத்தனர். அவர் ஓடோடி வந்தார். அவரிடம் அமுல்யாவை ஒப்படைத்த போலீஸார் இனிமேல் இதுபோல நடந்து கொள்ளக் கூடாது என்று கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

அதேபோல அமுல்யாவிடம் செக்ஸ்சில்மிஷத்தில் ஈடுபட முயன்று சிக்கிய வாலிபரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

அமுல்யாவை ஹோட்டலில் வைத்தே இந்தநான்கு பேரும் பார்த்துள்ளனர். நடக்கக் கூட முடியாத நிலையில் அவர் காதலருடன் போவதைப் பார்த்து பின் தொடர்ந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

எங்கே செல்கிறது தமிழ்நாட்டுக் கலாச்சாரம்?


ஆண்களுக்கு நிகராக பெண்கள் குடிப்பது தவறே கிடையாது. மது என்பது ஆண்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு விஷயம் கிடையாது. உண்மையாகவே பெண்களை சமமாக நடத்தவேண்டும் என்று நினைப்பவர்கள் பெண்களுக்காகத் தனியாக மதுசாலை ஆரம்பிக்கவேண்டும். ஆட்சியில் இடஒதுக்கீடு கொடுப்பதற்கு முன் இதுபோன்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளை பெண்களுக்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அப்போதுதான் பெண்கள் சாலையில் உருண்டு கிடக்கும் இதுபோன்ற இழிநிலை பெண்களுக்கு ஏற்படாது. மேலைநாடுகளில் இருப்பதுபோல பலசட்டங்களை பெண்ணுரிமை என்ற பெயரில் இந்தியாவில் புகுத்துபவர்கள் அந்த நாடுகளில் பெண்களுக்கு இருக்கும் இந்த “குடி” உரிமையைமட்டும் ஏன் இந்தியப் பெண்களுக்குக் கொடுக்க மறுக்கிறார்கள்.




Sunday, September 05, 2010

காதல் சுகமாகும்போது குழந்தைகள் சுமையாகலாம்

காதலுக்காக தான் பெற்ற குழந்தைகளையே கொன்ற தாய். இந்தியாவில் பெண்கள் தங்களின் காதலின் புனிதத்தைக் காப்பாற்ற குழந்தைகளின் உயிரையும் பலியிடலாம் போலிருக்கிறது. இதுபோன்ற “அப்பாவிப்” பெண்களைக் காப்பாற்றத்தான் சிறப்புப் பாதுகாப்புச் சட்டங்களும் பின்னாலிருந்து ஆதரவாக கோஷம் போட ஒரு கூட்டமும் இருக்கிறதே.

இந்தியாவில் பெண்கள் எதுசெய்தாலும் சரி, அவர்கள் தவறே செய்யமாட்டார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும், தவறான சட்டங்களும் இருக்கின்ற வரையில் இதுபோன்ற பெண்கள் செய்யும் கொலைகள் காதலின் புனிதத்தைக் காப்பற்றத்தான் என்று தைரியமாகச் சொல்லலாம்.


Woman kills children to elope with her lover
Times of India

JIND: A 35-year-old woman killed her two children aged three and five to elope with her lover, who happened to be her brother-in-law in Julhera village of Jind district. She fled with her lover on August 31, and then killed the children on way near Ambala and dumped their bodies.

Haryana Police have arrested both, the woman and her brother-in-law, from a village in Patiala district of Punjab.








Saturday, September 04, 2010

வரதட்சணை கேட்கும் கணவனுக்குப் பாடம்

கணவன் வரதட்சணைக் கேட்டால் மனைவி கள்ளக்காதலில் ஈடுபடலாம் என்று சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரலாம். பல மருமகள்கள் பொய் வரதட்சணை வழக்குப் போட்டுவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மருமகள் நலனில் அக்கறை உள்ளவர்கள் இந்த புதிய சட்டத்திற்கு வழிவகை செய்தால் பல மருமகள்களின் வாழ்வு ஒளிபெறும்.

பெரும்பாலும் கள்ளக்காதலும் வரதட்சணைக் கொடுமை வழக்குகளும் ஒன்றாக இணைந்தே இருக்கும். இதில் எதன் மூலம் எது ஆரம்பித்தது என்று பிரித்தறிய சிறப்பான பயிற்சி வேண்டும்.

மனைவியின் கள்ளக்காதலன்

செப்டம்பர் 04,2010 தினமலர்

புதுக்கோட்டை : மனைவியின் கள்ளக்காதலனை கூலிப்படையினர் உதவியுடன் வெட்டிக் கொன்ற கணவர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அடுத்த கண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யேசுதாஸ் (42); இவரது மனைவி ஆரோக்கிய ஜெயராணி(38). ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு, பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், வரதட்சணையாக மேலும் நகை, பணம் வாங்கி வருமாறு கணவர் வற்புறுத்தவே, ஆலமங்கலம் கிராமத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். ஆலத்தூர் தெற்கு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் ஜெயக்குமார்(40) என்பவருடன், ஆசிரியை ஆரோக்கிய ஜெயராணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

ஜெயக்குமாருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.கள்ளத்தொடர்பு குறித்து யேசுதாசுக்கு தெரிந்து, மனைவியை கண்டித்தும், இது தொடர்ந்தது. பொறுமையிழந்த யேசுதாஸ், தன் சகோதரர்கள் அருள்(49), ராஜமாணிக்கம்(29) மற்றும் கூலிப்படையினர் உதவியுடன், மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை படுகொலை செய்ய திட்டம் தீட்டினார்.நேற்று அதிகாலை, ஆரோக்கிய ஜெயராணியின் வீட்டுக்குச் சென்ற ஜெயக்குமார், அவருடன் உல்லாசமாக இருந்தார். இதை நேரில் பார்த்த யேசுதாஸ், சகோதரர்கள் மற்றும் கூலிப்படையினர் உதவியுடன், ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். தடுக்க முயன்ற ஆரோக்கிய ஜெயராணிக்கும் அரிவாள் வெட்டு விழுந்து, படுகாயமடைந்த அவரை உறவினர்கள், அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த திருப்புனவாசல் போலீசார், ஜெயக்குமாரின் உடலை மீட்டு, யேசுதாஸ், அவரது சகோதரர்கள் இருவரை கைது செய்தனர். தலைமறைவான கூலிப்படையினர் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



Thursday, September 02, 2010

வழக்குகளை விரைந்து முடிக்க எளிய வழி!

பொய் வரதட்சணை வழக்கில் சிக்குபவர்களுக்கு இந்த வழிமுறைதான் பலகாலமாக கலங்கரைவிளக்கு போல் இருந்து வழிகாட்டப்படுகிறது. வீடு இரண்டுபட்டால் காவலுக்கும் நீதிக்கும் கொண்டாட்டம்தான்!

வழக்கை முடிவுக்கு கொண்டு வர லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., கைது
செப்டம்பர் 03,2010 தினமலர்

ஆண்டிபட்டி: வழக்கை முடிவுக்கு கொண்டுவர கூடுதல் லஞ்சம் கேட்ட, சிறப்பு எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்தவர் முத்தையா(80). இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி மகன்கள் மலைச்சாமி, செல்வம். இரண்டாவது மனைவி மகள் செல்வி. முத்தையா கடந்த மே மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, க.விலக்கு போலீசில் செல்வி புகார் செய்தார். சிறப்பு எஸ்.ஐ., கருப்பையா வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.

இந்நிலையில் செல்வி கணவர் செந்தில்குமார், தனது மைத்துனர் மற்றும் உறவினர்களுடன் சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெறுவதாக எஸ்.ஐ.,யிடம் தெரிவித்துள்ளார். இதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்நிலையில், மேலும் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று எஸ்.ஐ., நிபந்தனை விதித்துள்ளார். இது குறித்து செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். டி.எஸ்.பி., பாலசுப்பிரமணி ஆலோசனையில், இன்ஸ்பெக்டர் முத்துராஜ், எஸ்.ஐ., கோதண்டராமன், ஏட்டுக்கள் சந்திரசேகரன், சரவணன், ராமகிருஷ்ணன் ஆகியோர், செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர். தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார், எஸ்.ஐ., கருப்பையாவை கைது செய்தனர்.




இந்தியாவில் கடவுளுக்கு "ஓவர்டைம்" வேலை!

தெய்வம் அன்றே கொல்லும் என்று ஒரு செய்தியை செய்தித்தாள் வெளியிட்டிருக்கிறது. தினமும் வரும் கள்ளக்காதல் கொலை செய்திகளைப் பார்க்கும்போது இந்தியாவில் கடவுள் "ஓவர்டைம்" வேலை பார்க்கவேண்டியிருக்குமே!

இதுபோன்ற கள்ளக்காதல் கொலைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒருதலைபட்சமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை இயற்றி கடவுளுக்கே வேலைவாய்ப்புக் கொடுத்து சாதனை புரியும் ஒரே நாடு.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


அன்றே கொல்லும் தெய்வம் : கள்ளக்காதலில் நடந்த ஒரு "நிஜம்'’

செப்டம்பர் 02,2010 தினமலர்

அவினாசி : "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழி பழசாகி விட்டது; தெய்வமும் இன்றே கொல்லும் என்பதை போல, அவினாசி பெருமாநல்லூர் அருகே கள்ளக்காதல் கொலை சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் அன்பு தண்டபாணி, அனுப்பர்பாளையம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால், சீதாலட்சுமி, 5ம் தேதியே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து விசாரணையை துவக்கினர்.அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளியை தேடினர். கொலையுண்ட சீதாலட்சுமியின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை துவங்கியது. ஆரம்பத்தில் குழம்பிய போலீசாருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த விவரங்கள் விசாரணையை வேகப்படுத்தியது. சீதாலட்சுமி போனுக்கு, ஆக., 5ம் தேதி காலை முதல் மாலை 6.00 மணி வரை ஒரே எண்ணில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு வந்துள்ளது; அந்த எண்ணுக்குரிய நபரின் முகவரி குறித்து விசாரித்தனர். அந்த எண், 15 வேலம்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார், ரமேஷ் வீட்டுக்குச் சென்ற போது அதிர்ச்சி காத்திருந்தது. அதே, ஆகஸ்ட் 5ம் இரவு 10.00 மணிக்கு தன் நண்பர் மாதேஷ் உடன் பைக்கில் சென்ற ரமேஷ், அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது.

அவினாசி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருந்தனர். விபத்தில் பலியான ரமேஷுக்கும், கொலையான சீதாலட்சுமிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை துவங்கியது.விபத்தில் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதேஷிடம், போலீசார் தீவிரமாக விசாரித்தனர். ஆனால், விசாரணையில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க முடியாதவாறு மாதேஷ், கோமா நிலைக்கு சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார், சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் விசாரித்தனர். அதில், பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகின.

கள்ளத்தொடர்பு அம்பலம்:
கொலையான சீதாலட்சுமி வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில், லேபர் கான்ட்ராக்டராக ரமேஷ் பணியாற்றியுள்ளான். ஓராண்டாக காதலித்த இருவரும், ஊட்டி, கொடைக்கானல் என்று ஜாலியாக சுற்றியுள்ளனர். ரமேஷை தன் கணவனாகவே பாவித்த சீதாலட்சுமி, அவனின் தங்கை திருமணத்துக்கு பணமும், செலவுக்கு தன் நகைகளையும் கொடுத்துள்ளார். ரமேஷ் வீட்டில், அவனுக்கு பெண் பார்க்கத்துவங்கியதும் சீதாலட்சுமியை கழற்றி விட திட்டமிட்டான். பல நேரத்தில் இதுகுறித்து ரமேஷ் பேசியபோது, இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சீதாலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்ட ரமேஷ், ஆகஸ்ட் 5ம் தேதி அவளை வெளியே அழைத்துச் செல்வதாகக் கூறி, பொங்குபாளையம் - கணக்கம்பாளையம் ரோட்டுக்கு அழைத்துச் சென்றான். பொங்குபாளையம் - கணக்கம்பாளையத்தில் உள்ள பழனிசாமி தோட்டம் பகுதிக்கு அழைத்து வந்தான். அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த கத்தியால், அன்று இரவு 7.45 மணிக்கு அவளது வயிறு மற்றும் கழுத்தில் குத்தியுள்ளான். அவள் இறந்ததை உறுதிப்படுத்தி விட்டு, அங்கிருந்து வீட்டுக்குச் சென்றான். கொலை செய்தபோது அணிந்திருந்த சட்டையை கழற்றி, பைக்கில் வைத்து விட்டு, வேறு சட்டையை அணிந்து புறப்பட்டான். அவினாசி ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் ரத்தக்கறை படிந்த சட்டையை போட்டான். பின், நண்பர்கள் ஜெயராஜ், செல்வமணி, மாதேஷ் ஆகியோருடன் மதுக்கடைக்குச் சென்று மது குடித்துள்ளான். அங்கிருந்து மாதேஷை மட்டும் ஏற்றிக் கொண்டு, தெக்கலூர் சென்றபோது, அவினாசி - ஆட்டையாம் பாளையம் அருகே லாரி மோதி இறந்தான்.

இவ்வழக்கு குறித்து அவினாசி டி.எஸ்.பி., பழனிசாமி கூறியதாவது
: ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த இருவரும் பழகி, பல ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அவ்வப்போது சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்ற ரமேஷ், நகைகளை வாங்கி அடமானம் வைத்து செலவு செய்துள்ளான். கொலை நடந்த அன்று காலை கூட, திருப்பூரில் உள்ள பிரபல வங்கிக்குச் சென்று பணம் எடுத்துள்ளான். இதை வங்கியில் உள்ள கேமரா மூலம் உறுதிப்படுத்தினோம். அவன் அணிந்திருந்த சட்டையை ரத்தக்கறையுடன் குப்பை தொட்டியில் இருந்து கைப்பற்றினோம். கொலை நடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதற்கு முந்தைய ஒரு வாரத்திலும் சீதாலட்சுமி தன் மொபைல் போனில் இருந்து ரமேஷ் எண்ணை தவிர வேறு யாருக்கும் போன் செய்யவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் இருந்து மாலை வரை இருவரும் 900 வினாடி, 1,500 வினாடி, 700 வினாடி என்று இடைவிடாமல் பேசி உள்ளதும் தெரிந்தது. ரமேஷை கணவன் போல் எண்ணி வாழ்ந்த சீதாலட்சுமிக்கு, அவன் திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை. கூடுமானவரைக்கும் சீதாலட்சுமியிடம் பணத்தை பெற்றுக் கொண்ட ரமேஷûக்கு, அவள் மீது வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பு கடைசியில் கொலையில் முடிந்துள்ளது.கொலை நடந்த இரவு 7.02 மணி முதல் 8.00 மணி வரை ரமேஷûக்கு, அவனது நண்பர்கள் தொடர்ந்து போன் செய்துள்ளனர். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. இரவு 8.15 மணிக்கு, "மிஸ்டு காலில்' இருந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு ரமேஷ் பேசியுள்ளான். அதன் பிறகே நண்பர்களுடன் குடித்து விட்டு, பைக்கில் சென்று லாரியில் மோதி இறந்தான். கள்ளக்காதலி சீதாலட்சுமியை கொலை செய்த ரமேஷ், அடுத்த இரண்டரை மணி நேரத்தில் விபத்தில் இறந்தது ஆச்சரியமாகவே உள்ளது. இவ்வாறு டி.எஸ்.பி., பழனிசாமி கூறினார்.

அன்றே கொன்ற தெய்வம்:
"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது பழமொழி. ஆனால், ரமேஷ் - சீதாலட்சுமி விஷயத்தில், இது மாறி விட்டது. கணவனுக்கு துரோகம் இழைத்த சீதாலட்சுமி கொலையான இரண்டரை மணி நேரத்தில் நடந்த விபத்தில் ரமேஷ் உடல் நசுங்கி இறந்துள்ளான். கள்ளக்காதலுக்கு உதவிய ரமேஷின் நண்பன் மாதேஷ், சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி இறந்து விட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.


கடவுளுக்கு வேலை கொடுக்க வரிசையில் காத்திருக்கும் மற்றொரு செய்தி...



கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபரை கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வெங்கடேசன்(28). இவரது மனைவி சுந்தரி(25). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

வெளிநாட்டில் பணிபுரிந்த வெங்டேசன், கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 6ம் தேதி காலை மாதவச்சேரி அருகே ஒரு வயலில் கழுத்தில் ரத்த தழும்புடன் வெங்கடேசன் இறந்து கிடந்தார். வெங்கடேசன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சுந்தரி கொடுத்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று காலை வடக்கனந்தல் வி.ஏ.ஓ., தங்கவேல் முன்னிலையில் இவ்வழக்கு தொடர்பாக வெங்கட்டாம்பேட்டை செம்மலை(27) பெருமாள்(38) முத்து(55) ஏர்வாய்பட்டினம் சிவராம்(40) ஆகிய நான்கு பேரும் சரணடைந்தனர். பின், கச்சிராயபாளையம் போலீசில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில், செம்மலைக்கும், வெங்கடேசன் மனைவி சுந்தரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த வெங்கடேசன், மனைவி சுந்தரியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், கள்ளக்காதலை துண்டித்துக் கொள்ளுமாறு செம்மலையிடம் சுந்தரி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த செம்மலை கடந்த 5ம் தேதி இரவு தனது கூட்டாளிகள் பெருமாள், முத்து, சிவராம் ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசனை மது அருந்த அழைத்துச் சென்றார். பின், அவரை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து, வயல்வெளியில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, கச்சிராயபாளையம் போலீசார், வழக்கில் தொடர்புடைய செம்மலை, பெருமாள், முத்து, சிவராம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.