இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 30, 2010

பெண் அதிகாரிகளை துன்புறுத்தாதீர்

இப்போதெல்லாம் பெண் அதிகாரிகளுக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் அதிகரித்துவிட்டது. பெண்களை எப்போதுதான் இந்த சமுதாயம் நிம்மதியாக வாழவிடுமோ என்று தெரியவில்லை. ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் தட்டுத்தடுமாறி கல்வி கற்று ஒரு நல்ல அரசாங்கப் பணியைப் பெற்றபிறகு லஞ்சம் வாங்கி நிம்மதியாக வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த சமுதாயத்தில் வழிஇல்லை. என்ன கொடுமை!


உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
10/1/2010 தினகரன்

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சீலியம்பட்டியை சேர்ந்தவர் ராணி. இவர் தனது மகள் கலைச்செல்விக்கு திருமண உதவித்தொகை கேட்டு ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது ஊர் நல அலுவலர் ஜானகி ரூ1000 லஞ்சம் கேட்டுள்ளார். ராணியும் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், திருமணப் பதிவு சான்றிதழை பரிந்துரை செய்ய மேலும் ரூ500ஐ ஜானகி கேட்டுள்ளார். ஓரிரு நாட்களில் தருவதாக கூறிவிட்டு வந்த ராணி, அது பற்றி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக துணை எஸ்பி சந்திரமௌலி ஆலோசனையின் பேரில், அலுவலகத்துக்கு சென்ற ராணி ரசாயனம் தடவிய க்ஷீ 500ஐ நேற்று ஜானகியிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜானகியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

=========

பெண்ணுக்குப் பெண்தான் எதிரி!
இதை மேற்கண்ட செய்தியை விவரிக்க இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். எதில் லாபம் கிடைக்கிறதோ அந்தப் பக்கத்தில் சேர்ந்துகொண்டு பெண்ணுரிமை என்று குரல் கொடுக்கலாம்.

  • ஒரு பெண் தன் மகளுக்காக அரசாங்க நிதியுதவி கேட்டு அரசாங்க அதிகாரியான மற்றொரு பெண்ணை அனுகினால் அவர் உதவி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை குறைந்தபட்சம் கடமையையாவது செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் தன்னிடம் உதவிகேட்டு வந்தப் பெண்ணிடம் லஞ்சம் கேட்டு துன்புறுத்தியிருக்கிறார்.
  • மேற்கண்ட செய்தியை நவீன “பெண்ணுரிமை” என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு இப்படியும் சொல்லலாம்: ஒரு பெண் கல்வி கற்று பலத்த போட்டிகளுக்கிடைய ஆண்களைப் பின்னுக்குத்தள்ளி அரசாங்கப் பணியையும் பெற்று சாதனை புரிந்து ஆணுக்கு நிகராக லஞ்சம் வாங்கலாம் என்று முயற்சி செய்யும்போது அவரை மற்றொரு பெண் ஊழல் புகாரில் சிக்கவைத்துவிட்டார். என்ன கொடுமை! ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை மற்றொரு பெண்ணே அழித்துவிட்டாரே.
பொய் வரதட்சணை வழக்குப்போடும் பெண்களுக்கு ஆதரவாக “பெண்ணுரிமை” என்று குரல் கொடுக்கும் கூட்டம் இதில் எந்தவகையைச் சேர்ந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு கொடுமை நடக்கிறது. மதுபான விடுதியில் சுதந்திரம் இல்லை என்று பொய்வழக்குப்போடும் பெண்களுக்காக கூக்குரல் இடும் இந்ததக் கூட்டம் எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ளுங்கள்.




Wednesday, September 29, 2010

பெண் அதிகாரியை துன்புறுத்திய ஆண் !

பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒரு பெண் அதிகாரி செய்திருக்கும் அரும்பெரும் உதவியை பின்வரும் செய்தியில் படித்து மகிழுங்கள்.

உதவித் தொகை பெற லஞ்சம் பெண் அலுவலர் கைது
செப்டம்பர் 30,2010 தினமலர்

திருவண்ணாமலை : அரசு உதவித் தொகை பெற 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊர்நல அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கன்னுகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன்(30). இவருக்கும் ரேவதி என்பவருக்கும் 2004ல் திருமணம் நடந்தது; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்படும் அரசு உதவி தொகை பெற விண்ணப்பத்துடன், இரு நாட்களுக்கு முன் கந்தன் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊர் நல அலுவலர் முனியம்மாள் (54), என்பவரிடம் மனுவை கொடுத்தார். முனியம்மாள், "விண்ணப்பத்தை சமூக நலத்துறைக்கு அனுப்பி வைக்க 4,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும், தற்போது விண்ணப்பத்துடன் 2,000 ரூபாய் தர வேண்டும்' என, கேட்டுள்ளார்.

கந்தன், பணம் தயார் செய்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார். பின், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் அறிவுரைப்படி நேற்று முன்தினம் மாலை கந்தன் பி.டி.ஓ., அலுவலகத்தில் முனியம்மாளிடம் 2,000 ரூபாய் பணம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முனியம்மாளை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
=======

இந்த செய்தியை “பெண்ணுரிமை” என்ற பெயரில் இப்படியும் சொல்லலாம்: கிராமங்களில் பணிபுரியும் பெண் அதிகாரிகளை ஆண்கள் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்துகிறார்கள்!

இந்தியாவில் 80% பேர் ஊழல்வாதிகள் என்று சில நாட்களுக்கு முன்புதான் செய்தி வந்திருந்தது. அப்படியிருக்கும்போது ஒரு பெண் அதிகாரி லஞ்சம் கேட்டால் அவரை இப்படியா போலிஸில் மாட்டிவிடுவது. அவர் ஒரு பெண் என்ற காரணத்தால்தானே இப்படி செய்கிறார்கள். ஆண்களின் அராஜகம் ஒழிக!

இப்படித்தான் பொய் வழக்குப்போடும் மருமகள்களுக்கும் பெண்கள் அமைப்புகள் ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நாட்டில். பெண் தவறு செய்யலாம் அதை யாரும் தட்டிக்கேட்கக் கூடாது. அப்படி அதை சுட்டிக் காட்டினால் அதற்குப் பெயர்தான் ஆணாதிக்கம். இதுதான் 21ம் நூற்றாண்டின் புதிய பெண்ணியவாதத்தின் கோட்பாடு.



Tuesday, September 28, 2010

வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை

யார் வந்து எப்படிப் புகார் கொடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பொய் வரதட்சணை வழக்குகளை எழுதி கண்ணை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு குற்றப்பத்திரிக்கை தயார் செய்து அனுப்பி பல குடும்பங்களை சிதைக்கும் காவல்துறை நண்பர்கள் அவர்கள் எழுதும் வரதட்சணை வழக்குகளின் வடிவம் உருண்டை என்று நிரூபித்துவிட்டார்கள். பின்வரும் செய்தியைப் படித்துவிட்டு அது சரிதான் என்று நீங்களும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது

செப்டம்பர் 28,2010 தினமலர்

கரூர் : கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், பெண் ஏட்டுவை தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். கரூர், செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). இவரது மனைவி லட்சுமி ஸ்ரீ (24). இருவருக்கும் திருமணமாகி நான்காண்டாகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், விரக்தியடைந்த லட்சுமி ஸ்ரீ, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். குடும்ப பிரச்னை என்பதால், இவ்வழக்கு கரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுதாகர், லட்சுமி ஸ்ரீ ஆகியோரை வரவழைத்து ஏட்டு லதா கவுன்சிலிங் செய்தார். இதில், கணவன், மனைவி இடையே சமரசம் ஏற்பட்டு ஒற்றுமையாக சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர்.

அப்போது, கோவை புதூர் பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரியும் லட்சுமி ஸ்ரீயின் அண்ணன் ஆனந்தராஜ் (30), போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, சுதாகர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏட்டு லதாவிடம் வாக்குவாதம் செய்தார். "கணவன், மனைவியே சமரசமாக செல்ல ஒத்துக்கொண்ட பின், வழக்கு பதிவு செய்ய முடியாது' என, ஏட்டு லதா கூறியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஆனந்தராஜ், லதாவை உதைத்து, தாக்கிவிட்டு, கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிவிட்டு ஓடியுள்ளார். லதாவுக்கு, கை, கால், முகம், பல்லில் காயம் ஏற்பட்டடு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். தப்பியோடிய ஆனந்தராஜை ஏட்டுக்கள் ராஜாமணி, சாமுவேல் ஆகியோர் டூவீலரில் துரத்திச் சென்று பிடித்தனர். ஆனந்தராஜை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



Monday, September 27, 2010

கணவனைக் கொல்ல ஒரு லட்ச ரூபாய் போதும்!

கணவனை ஒழித்துக்கட்ட இரண்டு வழிகள்.

1. காவல்துறையைப் பயன்படுத்தி பொய் வரதட்சணை வழக்கு மூலம் கணவனின் வாழ்க்கையை சிதைப்பது. கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் தள்ளலாம். இந்த முறையில் அரசாங்கம், காவல்துறை, நீதித்துறை, மகளிர் சங்கங்களின் ஆதரவு கிடைக்கும்.

2. கூலிப்படை வைத்து குறைந்த செலவில் ஆளையே “காலி” செய்துவிடுவது. அதிக செலவு கிடையாது ஒரு லட்சம் கொடுத்தால் போதும்!

எந்தவழி பிடித்திருக்கிறதோஅந்த வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள் புத்திசாலிப்பெண்கள்.

பின்வரும் இரண்டு செய்திகளையும் கவனித்தால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஒரு கணவன் வரதட்சணை வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு செய்தியில் காதல் மனைவி கூலிப்படை வைத்து ஆளையே கொன்றுவிட்டார். இரண்டு செய்திகளிலும் அடிப்படை விஷயம் கருத்து வேறுபாடு மட்டுமே. ஆனால் முதல் செய்தியில் வரதட்சணை என்ற சாயம் பூசி கூலிப்படைக்கு பதிலாக காவல்துறையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது செய்தியில் காவல்துறைக்குப் பதிலாக கூலிப்படையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

செய்தி 1

காவல்துறையைப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை சிறைக்கு அனுப்பிய மனைவி

தினமலர் செப்டம்பர் 27,2010

செஞ்சி : செஞ்சி அருகே மனைவியை மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி; இவரது மகள் சரண்யா(28). கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் மெக்கானிக் வாசுதேவன்(30). மூன்றாண்டுகளுக்கு முன் சரண்யாவுக்கும், வாசுதேவனுக்கும் திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்தாண்டு விழுப்புரம் மகளிர் போலீசில் கணவர் மீது சரண்யா புகார் கொடுத்தார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு வாசுதேவன் பதிலளிக்கவில்லை. கடந்த ஜூலை 1ம் தேதி விழுப்புரத்தில் மாவட்ட சட்டப் பணி குழு மூலம் நடந்த கவுன்சிலிங்கில் மீண்டும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதில், இருவரும் சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டனர்.

அன்று இரவு 10 மணிக்கு கொத்தமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு செல்லும் வழியில் சரண்யாவிடம், "என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை; நான் தற்கொலை செய்து கொண்டேன்' என எழுதி கையெழுத்து போட்டுத் தருமாறு கத்தியை காட்டி வாசுதேவன் மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்த சரண்யா கையெழுத்து போட்டு கொடுத்தார்.

பின்னர் வீட்டிற்குள் செல்ல முயன்ற சரண்யாவை, அவரது கணவன் வாசுதேவன், மாமியார் அன்பழகி(45) மாமனார் கிருஷ்ணமூர்த்தி(50) வாசுதேவனின் சகோதரர் வரதன் (24) ஆகியோர், வீட்டிற்குள் வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதுடன், அன்றிரவு மாட்டுக் கொட்டகையில் சரண்யாவை தங்க வைத்தனர்.

அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, "எனது குடும்ப விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்' என சரண்யா கூறியுள்ளார். இது குறித்து செஞ்சி மகளிர் போலீசில் கடந்த 25ம் தேதி சரண்யா அளித்த புகாரின் பேரில் வாசுதேவன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீதும் வரதட்சணை கொடுமை, தரக்குறைவாக திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி 2


கூலிப்படையை ஏவி கணவனை மனைவியே கொன்றது அம்பலம்

9/28/2010 தினகரன்

சென்னை : திருவான்மியூர் அடுத்த கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லட்சுமி (38). இவரது மகள் சவுமியா (20). இவரும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (25) என்பவரும் 2 வருடத்துக்கு முன் காதலித்து திருமணம் செய்தனர். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தாய் லட்சுமியுடன் காஞ்சிபுரம் சி.வி.எம்.ஏ. நகரில் குடியேறினார் சவுமியா. இதற்கு சுமதி என்பவர் உதவி செய்தார்.

இதை அறிந்த ரமேஷ், 6 மாதத்துக்கு முன் சிவிஎம்ஏ நகருக்கு சென்று, குடும்பம் நடத்த வரும்படி சவுமியாவுக்கு தொந்தரவு கொடுததுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுமியா, கூலிப்படையை ஏவி ரமேசை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி சுமதி துணையுடன் காஞ்சிபுரம் தாமல்வார் தெருவை சேர்ந்த அமல்ராஜ் என்பவரிடம் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார். சம்பவத்தன்று ரமேசை காஞ்சிபுரத்துக்கு வரவழைத்தார் சவுமியா. அங்கு வந்த அவரை அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு லட்சுமி, சுமதி ஆகியோருடன் கீழம்பிக்கு சவுமியா சென்றார். அங்கு முருகன் என்பவரது காரில் தயாராக இருந்த அமல்ராஜிடம் ரமேசை ஒப்படைத்துவிட்டு, அதே ஆட்டோவில் சவுமியா உட்பட 3 பேரும் காஞ்சிபுரம் திரும்பினர். ரமேசை காரில் அழைத்துக்கொண்டு சின்னையன் சத்திரம் சென்றார் அமல்ராஜ்.

அங்கு ரமேசுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து, மளிகைசெட்டி சத்திரத்தை சேர்ந்த பிலால், மஸ்தான் ஆகியோருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து ரமேசை கொலை செய்துள்ளார் அமல்ராஜ். அவரது சடலத்தை ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று தாமல்வார் காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பணம் பங்கு பிரிப்பது தொடர்பாக ஆட்டோ டிரைவர் அசோக்குமாருக்கும், கார் டிரைவர் முருக னுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவேலியப்பனிடம் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை அசோக்குமார் விளக்கினார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் படி அமல்ராஜ், பிலால், மஸ்தான், லட்சுமி, சவுமியா, சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.




போலிஸிற்கு ஆசிட் அடித்த வீரப்பெண்கள்

இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் வீசிய பெண்கள்
9/28/2010 தினகரன்

ஷாஹரன்பூர் : உ.பி. மாநிலம் ஷாஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கொத்வாலி போலீஸ் நிலைய போலீசார் நில மோசடி தொடர்பான விசாரணைக்காக நூர்பஸ்தி பகுதிக்கு நேற்று சென்றனர். அங்கு பதுங்கி இருந்த கிரிமினல்களை பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசார் மீது அங்கிருந்த பெண்கள் ஆசிட் வீசினர். இதில் இன்ஸ்பெக்டரின் தலை, முகம் ஆசிட்டால் வெந்தது. அலறி துடித்த அவரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.