இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, July 06, 2010

உங்களைக் காக்கப் போராடும் மாவீரர்கள்

பொய் வரதட்சணை வழக்குகளை பயன்படுத்தி அப்பாவிகளை கைது செய்து சிறையிலடைக்கும் அராஜகத்திற்கு எதிராக அனைத்திந்திய ஆண்கள் பாதுகாப்புக் கழகமும், இந்திய குடும்ப நல அமைப்பும், அன்னையர் பாதுகாப்புக் கழகமும் இணைந்து முக்கியமான நகரங்களில் நடத்திய சிறைநிரப்பும் போராட்டத்தின் சில காட்சிகள்.


மும்பையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டம்




ஹைதராபாத்தில் நடந்த சிறை நிரப்பும் போராட்டக் காட்சி
படங்களை இங்கே காணலாம்


‘Ban police role in marital counselling'
The Hindu 7 July 2010

Harassed lot:All India Forgotten Women's Association president Uma Challa submitting a memorandum

Hyderabad: All India Forgotten Women's Association (AIFWA) on Tuesday demanded the government to ban police involvement in marital counselling as it is a civil matter. Police intervention in marital issues was leading to indiscriminate charges on the accused husband and his family members. On the pretext of “protecting women from cruelty and harassment”, police were abusing the accused, said AIFWA president Uma Challa.

“Nearly five cases are registered against men under IPC section 498 A, 406, 506 in each police station in the city every week. Most cases are baseless and women are misusing the rights provided to them under the Act,” says Mrs. Challa.

This apart, no accused person (man, woman or child) should be arrested based on a mere complaint. Proper investigation should be conducted and written approval of respective zonal Deputy Commissioner of Police should be obtained before arresting any accused person, she demanded.

Jail Bharo campaign

As part of the “Jail Bharo” campaign, AIFWA members in collaboration with All India Men's Welfare Association staged demonstration at Women Police Station, Nampally in the morning. Later, raising slogans and holding placards, the members took out a procession from the Women Police Station to the Commissioner of Police Office, Basheerbagh.

The objective behind the campaign was freeing ordinary male citizens and the humiliation and suffering they undergo after being charged under Dowry Prohibition Act, the demonstrators said. More importantly, family members alleging “dowry torture” against a man, should be equally prosecuted since giving dowry is also a crime, she pointed out.




Sunday, July 04, 2010

உங்களைக் காக்க ஒரு சிறைநிரப்பும் போராட்டம்

பொய்வரதட்சணை வழக்குகள் மூலம் அப்பாவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம். இது மற்றவர்களுக்கான போராட்டம் கிடையாது. உங்களையும் உங்கள் குடும்பத்திலுள்ள பெண்களையும் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் செய்யவேண்டிய கடமை. இப்படியெல்லாம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் அப்பாவிகளை தள்ளியிருக்கிறது. தவறான சட்டங்களை திருத்தவும் மனமில்லை. அப்பாவிகளை காப்பாற்ற வேண்டிய கடமையும் நினைவில் இல்லை.

தவறு செய்யாத அப்பாவிகளை ஆதாரமற்ற ஒரே ஒரு பொய் வழக்கு மூலம் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கின்ற அவலம் ஒருபுறம். அப்பாவிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான நீதி வழங்க பல ஆண்டுகள் (போபால் விஷவாயு சம்பவம், இன்னும் பல....) காலம் கடத்தும் அவலம் மறுபுறம்.

இது எங்குபோய் முடியும் என்று அந்த நீதிதேவதைக்கு மட்டும்தான் தெரியும்!

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்

HYDERABAD: The All India Forgotten Women's Association (AIFWA) along with the All India Men's Welfare Association will stage a demonstration near the Women's Police Station at Basheerbagh on July 6 to pledge their support to the ‘Jail Bharo Andolan' taken up by Maharashtra's activist Ravindra Gangurde.

The movement, as well as the demonstration, will be in protest of ‘arbitrary arrests of ordinary law-abiding citizens' under IPC sections 498A, 304B, Dowry Prohibition Act and other related laws, said Uma Challa, president of All India Forgotten Women's Association, in a press conference here on Sunday.

‘Wife-centric'

Describing the aforementioned acts as ‘wife-centric', Ms. Challa said the arrests without evidence or investigation amounted to violation of rights to life and liberty.

Citing the National Human Rights Commission's observations, a memo issued by the Police Commissioner towards checking arbitrary arrests, and the web page titled ‘Abuse of 498A' on the Police Department's website, she said innocent citizens were nevertheless illegally detained, humiliated and subjected to blackmailing and extortion.

Plea to men

She urged men to free themselves from fear of humiliation and social stigma, and be prepared to court arrests and go to jails, so as to exert pressure on the authorities. The demonstration will be held between 10 a.m. to 11 a.m.



Saturday, July 03, 2010

கள்ளச்சாராய (கள்ளக்) காதலியுடன் ஜல்ஸா செய்த போலிஸ் ஏட்டு

கள்ளச்சாராய (கள்ளக்) காதலியுடன் ஜல்ஸா செய்யும் போலிஸ் ஏட்டு - ரொம்ப காமெடியான விஷயம்! போலிஸ் இப்போதெல்லாம் ரொம்ப அப்பாவியாக இருக்கிறார்களே!

போதையில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த ஏட்டு கைது

ஜூலை 03,2010 தினமலர்

தர்மபுரி : பென்னாகரம் அருகே, கள்ளக்காதலியுடன் போதையில் உல்லாசமாக இருந்த ஏட்டை, போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில், போலீஸ் ஏட்டாக குமரன் (48) பணிபுரிகிறார். இவர், சில ஆண்டுக்கு முன் பென்னாகரம் அடுத்த ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்தார்.

சீலநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த அம்மாசியின் மனைவி சுமதி (37). இவர், அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார். கள்ளச்சாராய "ரெய்டின்' போது, ஏட்டு குமரனுக்கும் சுமதிக்கும் இடையே பழக்கமானது. இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். சாராய தொழில் செய்து வரும் சுமதியின் கணவரும் இதுகுறித்து கண்டு கொள்ளவில்லை.

சில ஆண்டுக்கு முன், ஏரியூரிலிருந்து அதியமான் கோட்டைக்கு, குமரன் மாற்றப்பட்டார். இருப்பினும், இருவருக்கும் இடையேயான உறவு தொடர்ந்தது. கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிக்கு சென்ற குமரனுக்கு, மூன்று நாள் விடுமுறை கிடைத்தது. அந்த மூன்று நாட்களும், அவர் சீலநாயக்கனூரில் சுமதியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, சுமதியின் வீட்டில் குமரன் இருந்த போது, அங்கு அம்மாசியின் தங்கை கணவர் குப்பண்ணன் வந்தார். "நீங்கள் யார், எங்கு வந்தீர்கள்?' என, குமரனிடம் விசாரித்தார். இதில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், போதையில் இருந்த குமரன், கல்லால் குப்பண்ணனை தாக்கினார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குப்பண்ணன் தாக்கப்பட்ட தகவல் கிராம மக்கள் மத்தியில் பரவி, அனைவரும் சுமதியின் வீட்டில் இருந்த குமரனை சுற்றி வளைத்து பிடித்தனர். ஏரியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார், குமரனை கைது செய்து, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.



Friday, July 02, 2010

தனக்கு வந்தால்தான் அந்த இன்பவலியை உணரமுடியுமோ?

வேலூர் : பெண் போலீசை மணந்து கொண்ட ராணுவ வீரர், அவருக்கு தெரியாமல் மீண்டும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்ற போது, முதல் மனைவி தர்ணா செய்து திருமணத்தை தடுத்து நிறுத்தினார். ராணுவ வீரர் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (40). இவர், டில்லியில் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மாங்காட் டைச் சேர்ந்த சத்யா (26) என்பவருக்கும், திருமணம் செய்ய கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. மூன்று லட்சம் ரூபாய் வரதட்சணையாக கோபால கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இவர்கள் திருமணம், திருவலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு நடக்க இருந்தது. திருமணத்துக்கு இரு வீட்டார் சார்பில், நூற்றுக்கணக்கான உறவினர்கள் வந்திருந்தனர். சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரியும் செந்தில்குமாரி (34) என்பவர், "எனக்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது. தற்போது என்னை விட்டு, விட்டு வேறு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட இருப்பதால், இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என, சிப்காட் மகளிர் போலீசாரிடம் நேற்று காலை 8 மணிக்கும், திருவலம் போலீசாரிடம் காலை 9 மணிக்கும் புகார் செய்தார். செந்தில்குமாரி கொடுத்த புகாரை வாங்க போலீசார் மறுத்தனர். தானும் ஒரு போலீஸ் தான் என்று கூறியதையும் ஏற்கவில்லை. அதிர்ச்சியடைந்த செந்தில்குமாரி, திருமணத்தை தடுக்க நேரடியாக களம் இறங்கினார். ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். திருமண மண்டபத்தின் முன் உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாப்பிள்ளை வீட்டார் தர்ணா செய்த செந்தில்குமாரியை தாக்கினர். செந்தில்குமாரி தர்ணா செய்யும் விவரம் அறிந்த கோபாலகிருஷ்ணன் மணமேடையில் இருந்து அவசர, அவசரமாக சத்யாவுக்கு தாலி கட்ட முயன்றார். செந்தில்குமாரி தர்ணா செய்தது குறித்து தகவல் அறிந்த மணப்பெண் சத்யா, மேடையை விட்டு இறங்கி வந்து விசாரித்த போது, கோபாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்ட விவரம் தெரிந்தது. ஆத்திரமடைந்த சத்யா மண மேடையை விட்டு வெளியேறினார். சத்யாவின் உறவினர்கள், பெற்றோர் தாங்கள் கொடுத்த சீர் வரிசைப் பொருட்களை ஒரு லாரியில் ஏற்றிக் கொண்டு பெண் வீட்டாரும், அவர்களது உறவினர்களுடன் வெளியேறினர். இதனால் திருமணம் நின்றது. இந்த நேரத்தில் கோபாலகிருஷ்ணன் தர்ணா செய்த செந்தில்குமாரியை தாக்கி விட்டு தப்பியோடினார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார், தர்ணா செய்த செந்தில்குமாரியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றினர். தன் தங்கைக்கு திருமணம் நின்று போன வருத்தத்தில் சத்யாவின் அண்ணன் ராமமூர்த்தி (45) அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது, அவர்களது உறவினர்கள் காப்பாற்றினர்.

இது குறித்து பெண் காவலர் செந்தில்குமாரி கூறியது
: பெண் போலீசான என்னைப் பார்த்து பயப்படாமல் காதலிப்பதாக சொன்ன கோபால கிருஷ்ணன் தைரியத்தை பார்த்து, 2007 முதல் அவரை காதலித்தேன். அவருடன் பல இடங்களுக்கு சென்று வந்தேன். கடந்த ஜூன் 20ம் தேதி திருப்பதியில் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வரதட்சணையாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்னிடம் வாங்கிக் கொண்டார். இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்த தகவல் கிடைத்ததும் சிப்காட், திருவலம் போலீசில் புகார் கொடுத்த போது, போலீசான நான் கொடுத்த புகாரையே வாங்க மறுத்து விட்டனர். எனக்கே இந்த கதி என்றால், பொது மக்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய கோபால கிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

தாய் மாமன் மணந்தார்:
சத்யாவின் திருமணம் நின்று போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாமன் முருகேசன், சத்யாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து சத்யாவுக்கும் முருகேசனுக்கும் ஆற்காட்டில் திருமணம் நடந்தது.

===================

காதலித்தார் என்று சொல்கிறார். ஆனால் காதல் திருமணத்தில் வரதட்சணை கொடுத்தேன் என்கிறார். பெண் போலிஸாக இருந்துகொண்டு 1.5 லட்சம் வரதட்சணைக் கொடுத்து திருமணம் செய்ததாகக் கொஞ்சமும் கூசாமல் வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தூக்கியெறிந்து சட்டத்திற்கு புறம்பாக நடந்ததை “கூலாக” செய்தித்தாளுக்கு பேட்டியளித்திருக்கிறார். போலிஸே சட்டத்தை மீறி வரதட்சணைக் கொடுத்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு போலிஸ் சட்டத்தை மதிக்காதபோது மற்றொரு போலிஸ் இவர் புகார் கொடுக்கும்போது எப்படி சட்டத்தை மதித்து நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்?

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கே (SP) மாதச் சம்பளம்
Rs.18,670-6500. ஆனால் இங்கு செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள வரதட்சணை 1.5 லட்சம்!!!

Designation Pay scale (Rs.)

01 Superintendent of Police 18,670-6500
02 Addl. Supdt. of Police 10,000-325-15,200
03 Dy. Supdt. of Police 8,000-275-13,500
04 Inspector of Police 6,500-200-11,100
05 Sub-Inspector of Police 5,300-150-8,300
06 Head Constable 4,000-100-6000
07 Grade I Police Constable 3,200-85-4900
08 Grade II P.C. 3050-75-3950-80-4,590


மகளிர் காவல்நிலையங்களில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ அப்பாவிப் பெண்களும், ஆண்களும், வயதானவர்களும், குழந்தைகளும் பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். அப்பாவிகளை தரக்குறைவாக நடத்தி பொய் வழக்குகள் பதிவுசெய்து அநாகரிகமாக நடத்தும்போது அந்த அப்பாவிகளுக்கு ஏற்படுவது என்ன இன்பவேதனையா? எந்த ஒரு வரதட்சணை வழக்கும் முறையாக விசாரணை செய்யப்படுவதில்லை. புகார் பொய் என்று தெரிந்தாலும் புகாரில் இருப்பதை அப்படியே “வாந்தியெடுத்து” குற்றப்பத்திரிக்கையாக நீதிமன்றங்களுக்கு அனுப்பி அப்பாவிகளை அலைக்கழிக்கும்போது அந்த அப்பாவிகள் என்ன இன்பத்தில் மூழ்கித் திளைக்கிறார்களா?

மகளிர் காவல் நிலையங்கள் பல அப்பாவிகளின் வாழ்வை சிதைக்கும் கூடாரங்கள். பொய் வரதட்சணை வழக்குகளின் களஞ்சியம். தனக்கு என்று வரும்போதுதான் அந்த வேதனை புரியும். சட்டங்கள் செய்யாததை அப்பாவிகளின் சாபம் தப்பாமல் செய்யும்.



எங்கெங்கு காணிணும் ஓட்டம்தான்!

ஓடிப்போலாமா?

ஜூலை 2, 2010 ThatsTamil.com


வேலூர்: திருப்பத்தூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. டி.கே.ராஜாவின் தம்பி பூபதியின் மகள் தனது கணவரை விட்டு விட்டு காதலனுடன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பூபதி திருப்பத்தூர் நகர பா.ம.க. செயலாளராக உள்ளார். இவரது மகள் ரம்யா(18). இவர் ஒரு கார் டிரைவரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த ரம்யாவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி பழனி என்பவருக்கு கட்டி வைத்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல் ரம்யாவை காணவில்லை. அவரை காதலரான சரவணன் என்பவர் காரில் கூட்டிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ரம்யாவே விருப்பப்பட்டுத்தான் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

தனது மகளை சரவணன் கடத்திச் சென்று விட்டதாக போலீஸில் பூபதி புகார் கொடுத்துள்ளார்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.