இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, March 12, 2011

கல்யாணமாம் கல்யாணம்!

டர்பன் : போலி திருமணச் சான்றிதழ் தயாரித்த குற்றத்துக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும், அவரது தாயாருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, தென் ஆப்பிரிக்க கோர்ட் தீர்ப்பு அளித்தது.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர் முனிசாமி ரெட்டி (60). இவருக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவரது வீட்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா அப்பால்சாமி (21) என்ற பெண்ணும், அவரது தாயாரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், 2008ல் விஷம் கலந்த மீன் உணவை சாப்பிட்டதால் முனிசாமி ரெட்டி இறந்தார். அவரது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்காக, முனிசாமி ரெட்டிக்கும், தனக்கும் திருமணம் நடந்தது போன்ற, போலியான திருமணச் சான்றிதழை சமந்தாவும், அவரது தாயாரும் தயார் செய்தனர்.

இந்நிலையில், முனிசாமி ரெட்டியை கொலை செய்ததாகவும், போலி திருமணச் சான்றிதழ் தயார் செய்ததாகவும், சமந்தாவும், அவரது தாயாரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு, தென் ஆப்பிரிக்க கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், முனிசாமி ரெட்டியை, தாயும், மகளும் சேர்ந்து கொலை செய்தனர் என்பதற்கான ஆதாரங்களை போலீஸ் தரப்பில் கோர்ட்டில் நிரூபிக்க தவறியதால், கொலை வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், போலி திருமணச் சான்றிதழ் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சித்த குற்றத்துக்காக, இருவருக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

==========

திருமணத்தின் மூலம் பணம் பறிப்பதில் இதெல்லாம் முப்பாட்டன் காலத்து “டெக்னிக்”. நம்ம ஊரில் இப்போதெல்லாம் “தொழில்நுட்பம்” எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இப்ப இந்தத் தொழில் அரசாங்க அங்கீகாரத்துடன் அமோகமாக சட்டத்தின் துணையோடு நடந்துகொண்டிருக்கிறது. திருமணம் செய்துவிட்டு பிறகு பொய் வரதட்சணை வழக்குப்போட்டு கணவனை அவனது குடும்பத்தோடு சிறைக்கு அனுப்பி பிறகு சட்டம் தெரிந்த இடைத்தரகர்கள் மூலம் கணவனிடம் பேரம்பேசி பெருந்தொகை கொடுத்தால் வழக்கை திரும்பப் பெறுவதாகக் கூறி ஒரு பெருந்தொகையை கறந்துவிடுவார்கள். இதை டில்லி உயர்நீதிமன்றம் 2007லேயே சொல்லிவிட்டது.

Delhi High Court

Crl. Appeal No. 696/2004 Date: 01.11.2007

A failed marriage is not a crime however, the provisions of Section 498A are being used to convert failed marriages into a crime and the people are using this as tool to extract as much monetary benefit as possible. In many cases, where FIRs are filed under Section 498A IPC, petitions are being filed under Section 482 Cr.P.C. for quashing of FIRs after settlements between the parties and the allegations made of cruelties etc. are withdrawn the moment a lump sum payment is received. Involving each of the family members of the husband is another arm in the armory of the complainants of failed marriages. Not only close relatives but distant relatives and even neighbours are being implicated under Section 498A and other provisions of IPC in cases of failed marriages.



Friday, March 11, 2011

தங்க மனசுக்காரி!



தென்மலா : சென்னையைச் சேர்ந்த போலீஸ் எஸ்.பி.,யின் மனைவி என நாடகமாடி, நகை, மொபைல்போனை களவாடிச் சென்ற பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.

கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கு உட்பட, பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர் இவர் என்பது, விசாரணையில் தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (47). இவர், ஆறு பேரை திருமணம் செய்து, அவர்களை விட்டு விலகி தனியே வசித்து வந்தார். ஒரே வீட்டில் வசிக்காமல், பல்வேறு இடங்களில் வாடகை வீடு, லாட்ஜ், தெரிந்தவர்கள் வீடு என, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார். தென்மலா பகுதியைச் சேர்ந்த பாபு, சில ஆண்டுகளுக்கு முன், திருவனந்தபுரம் நேமம் பகுதியில் அப்பெண்ணின் வீட்டுக்கு அருகே வசித்தபோது பழக்கமானவர். அவரிடம், தன் கணவர் சென்னையில் போலீஸ் எஸ்.பி.,யாக பணியாற்றி வருவதாக பொய் சொன்னார். தற்போது பாபு, தென்மலா பகுதியில் வசித்து வருகிறார். முன்பு ஏற்பட்ட பழக்கத்தை வைத்துக் கொண்டு, சீதாலட்சுமி, 4ம் தேதி அதிகாலை 4.00 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரது சகோதரி தேநீர் போடுவதற்காக சமையலறைக்குச் சென்றார். அத்தருணத்தை பயன்படுத்திக் கொண்ட சீதாலட்சுமி, அவரது மொபைல்போன், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார். தேநீர் போட்டுக் கொண்டு வந்த பாபுவின் சகோதரி, அவரை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு தான் மொபைல்போனும், பீரோவில் இருந்த நகைகளும் கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். பாபு, தென்மலா போலீசில் புகார் செய்தார். களவாடிய மொபைல்போன் மூலம் சீதாலட்சுமி பலரை தொடர்பு கொண்டார். அதை, தொடர்ந்து ஆய்வு செய்த போலீசார், அவர், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள லாட்ஜில் தங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். போலீசார் அங்கு சென்று, சீதாலட்சுமியை கைது செய்தனர். பலருடன் வாழ்ந்து வந்த அப்பெண், தன் வீட்டுக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது சீருடையை பயன்படுத்தி, தன்னை எஸ்.ஐ., என கூறிக் கொண்டு நகை கடையில் கொள்ளை அடித்துள்ளார்.

தன்னுடன் வாழ்ந்து வந்த கணவரை கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கிலும் சம்பந்தப்பட்டவர். இவருக்கு இரு குழந்தைகள் உண்டு. ஆடம்பர வாழ்க்கை வாழ, எவ்வித குற்றத்தையும் செய்ய தயாராக இருந்துள்ளார். கைதான சீதாலட்சுமியிடம், மாநிலத்தில் தற்போது பதவியில் உள்ள பெரும்பாலான போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும், தொலைபேசி, மொபைல்போன் எண்கள் இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.
====

பல மருமகள்களும் இதுபோலத்தான் அலைந்து கொண்டிருக்கிறார்கள். தான் நினைத்ததை அடையவேண்டுமென்றால் எந்தவித பொய்யையும் கூசாமல் புகாரில் எழுதித் தருகிறார்கள். இதுபோன்ற மருமகள்களுக்கும் போலிஸ்காரர்களும், வழக்கறிஞர்களும்தான் நண்பர்கள் ;)
=====


Thursday, March 10, 2011

சாராய பாட்டில் + மிக்ஸர் பாக்கெட் =?!@#$%&*

பொதுவாக பொய் வரதட்சணை வழக்குகள் மகளிர் காவல்நிலையங்களில்தான் பதிவுசெய்யப்படும். அங்குதான் கணவனும் அவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் கொல்லாமல் கொல்லப்படுவார்கள்.

இதுபோன்ற பொய் வழக்குகளில் சிக்கும் இளம் அப்பாவிக் கணவன்கள் சிறிது புண்ணியம் செய்திருந்தால் பின்வரும் செய்தியில் இருக்கும் பெண் போலிஸைப்போல இருப்பவரிடம் சிக்கலாம். பொய் கேசில் சிக்குவதற்கும் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

"சரக்கு' போதையில் ஆட்டம் போட்ட பெண் போலீஸ் : ஓசி, "சைடு டிஷ்'க்கு சண்டையிட்டதால், "சஸ்பெண்ட்'
மார்ச் 11,2011 தினமலர்

சென்னை : குடி போதையில் ரகளை செய்து, ஓசி, "சைடு டிஷ்'க்கு கடை ஊழியரை தாக்கிய பெண் போலீஸ்,"சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். சென்னை, மயிலாப்பூர் எலைட் குடியிருப்பில் வசித்து வருபவர் ராணி(32); திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார். திருமணமாகாத நிலையில் இவர், குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

தினசரி குடித்துவிட்டு, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையில் உள்ள மிக்சர் கடையில், "இலவச சைடு டிஷ்' வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இது போல், நேற்று முன்தினம் மாலை, அளவுக்கதிகமாக மது அருந்திய ராணி, ஒரு ஆட்டோ பிடித்து, லாயிட்ஸ் சாலை சென்றார். அங்குள்ள மிக்சர் கடையில், வழக்கமான, "சைடு டிஷ்' கேட்டார். கடை ஊழியர் நடேசன் தர மறுக்கவே, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி, நடேசனின் கையை முறுக்கிய ராணி, போலீஸ் பாணியில் ஒரு உதை கொடுத்தார். இதில், நடேசன் கீழே விழுந்த போது, கையில் கிடைத்த சிப்ஸ் மற்றும் காரத்தை அள்ளி, ஆட்டோவில் போட்டுக் கொண்டு புறப்பட்டார். அப்போது, நடேசன் சத்தம் போட்டதால், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து, ஆட்டோவை நிறுத்தி, ஐஸ் ஹவுஸ் போலீஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்த போலீசாரிடம், போலீஸ் உடையில் இருந்த ராணியை ஒப்படைத்தனர். போலீசார், உடனடியாக ராணியை, ராயப்பேட்டை மருத்துவமனை சென்று, மது அருந்தியதற்கான சான்றிதழ் பெற்று, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பெண் போலீஸ் ஒருவர், போலீஸ் உடையில் இருக்கும் போதே, மது அருந்தி கலாட்டா செய்த விவகாரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. ராணி மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்," சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கடந்த 1997ம் ஆண்டு போலீசில் சேர்ந்த ராணி, திருச்சியில் பணியாற்றி வந்தார். அங்கும், பணியின் போது மது அருந்தியதால், கோவைக்கு மாற்றப்பட்டார். கோவையிலும் அதே நிலை தொடர, அங்கிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====


வீரம் விளைந்த பூமியடா!

பெண் சுதந்திரம், பெண்ணின் வீரம், சுயஉரிமை போன்றவையெல்லாம் இப்போது அளவிற்கு அதிகமாகவே பொங்கிவழிகிறது என்று இந்த 100வது சர்வதேச பெண்கள் தினத்தில் பறைசாற்றுவதுபோல செய்தி வந்திருக்கிறது.

முதல் செய்தியில் கள்ளக்காமத்தில் கணவனை விட்டுவிட்டு ஓடிய மனைவியை ஊர்ப்பெரியவர்கள் கணவருடன் சேர்த்துவைத்திருக்கின்றனர். ஆனால் அவர் மறுபடியும் கள்ளக்காமத்லைவனுடன் ஓடியதோடு மட்டுமல்லாமல் திரும்பி வந்து அழைத்த கணவனை கொன்றுவிடுவேன் என்று மிகுந்த வீரத்துடன் ஒரு பெண் சிங்கம் போல் கர்ஜித்திருக்கிறார். என்னே ஒரு வீரம்!

இரண்டாவது செய்தியில் திருமணமான சில நாட்களிலேயே வீட்டை விட்டு ஓடிப்போய் கள்ளக்காமத்தலைவனுடன் மனைவி தலைமறைவாகிவிட்டதால் கணவனையும் அவனது குடும்பத்தையும் பொய் வரதட்சணை வழக்கில் 4 மாதங்களாக சிறையில் அடைத்துவைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் இந்தியாவில் சிறு கிராமங்களில் நடந்துகொண்டிருக்கின்ற உண்மைச் சம்பவங்கள். இப்போதாவது சொல்லுங்கள் இந்த 100வது சர்வதேச பெண்கள் தினத்தில் இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி வானுயர்ந்து முன்னேறியிருக்கிறது? திருமணம் செய்த ஆண்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது? இதுதான் அனைவரும் விரும்புகின்ற வளர்ச்சியா? இதற்குக் காரணம் யார்?

கணவனுக்கு கொலை மிரட்டல் மனைவி, கள்ளக்காதலன் கைது
மார்ச் 11,2011 தினமலர்

செஞ்சி : கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி, கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், முட்டத்தூரை சேர்ந்தவர் முத்து (27). இவரது மனைவி நித்யா (20). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார்.

இவர்கள், கடந்த மாதம் திருப்பூர் அருகே உள்ள தாராபுரத்திற்கு, செங்கல் சூளை வேலைக்குச் சென்றனர். அங்கு முட்டத்தூரை சேர்ந்த எட்டியான் மகன் ராமராஜ் (22) என்பவருடன், நித்யாவிற்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதனால் தலைமறைவான இருவரையும் தேடி, முத்து, முட்டத்தூர் வந்தார். ஊர் பெரியவர்கள் நித்யாவை மீண்டும் முத்துவுடன் சேர்த்து வைத்தனர். அடுத்த சில நாட்களில், நித்யா மீண்டும் ராமராஜனுடன் தலைமறைவானார். கடந்த 9ம் தேதி இரவு 7 மணிக்கு இவர்கள், அனந்தபுரம் கூட்ரோட்டில் நின்றிருந்தனர். இதை பார்த்த முத்து, நித்யாவை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆத்திரமடைந்த ராமராஜனும், நித்யாவும் சேர்ந்து, முத்துவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப் பதிந்து ராமராஜ், நித்யா இருவரையும் கைது செய்தனர்.

=====



KANPUR: Deepika alias Neha, whose in-laws are behind the bars on charges of dowry death since the last four months, was arrested and produced before the court on Monday.

The girl was taken into judicial custody and sent to nari niketan. The judicial official fixed February 22 as next date to hear the case.

Counsel for accused Dinesh Awasthi (Deepika's father-in-law), Sonu Awasthi (husband) and Raman, brother-in-law moved an application before the court to summon the guardians of Deepika and ask them to identify the girl in the court.

Deepika, daughter of Kamlesh Shukla, was married to Sonu Awasthi, a resident of Ganj Gopalpur on July 9, 2010.

She disappeared from her in-laws' house in October, 2010. The girl could not be traced. Hence, her mother Sudha Shukla lodged an FIR and charged her husband and in-laws of dowry death. She identified a woman's body, which was found in Panki canal, as that of Deepika on October 27, 2010.

The Chaubeypur police arrested Dinesh, Sonu and Raman Awasthi on charges of dowry death. Since then, the three accused were in jail. The police completed its investigation and filed chargesheet against them on December 27, 2010. The investigation officer gave a list of 15 witnesses including parents of the girl and brother.

According to defence counsel PN Tripathi, the girl was spotted in Barra locality. Soon it was confirmed that Deepika was alive and living at Barra with her paramour Manish, a resident of Baikunthpur in Bithoor.

Once it was confirmed that Deepika was alive, her parents filed an affidavit in support of accused, claiming them as innocent. The kin of accused and Deepika's mother Sudha Shukla also reported the matter to DIG, who passed the investigation to the circle officer, Chaubeypur. The police claimed to nab her from Chaubeypur railway station and produced her in the court of chief judicial magistrate, Ramabai Nagar.

Since CJM was on leave, judicial magistrate took her in judicial custody and asked her to appear before the court on February 22 to get her statement.

======


இணைந்த கைகள்

உன் எதிரியின் எதிரி உனக்கு நண்பன் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கணவரும், அவரது மனைவியின் கள்ளக்காமத்லைவரும் ஒன்றாக இணைந்து மனைவியை கொன்றிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டால் அதை சரியான முறையில் தீர்த்துவைப்பதற்கு தகுதிவாய்ந்த பெற்றோர்களைக் காண்பது அரிதாகிவிட்டது. இந்தக்காலத்து பெற்றோர்கள் இரண்டு விஷயங்களை நன்றாகச் செய்கிறார்கள்: 1. கணவனுக்கும் மனைவிக்கு ஏதாவது சிறு பிரச்சனை இருந்தால் அதை ஊதிப் பெரிதாக்கிவிடுவது. 2. பெண்ணிற்கு தவறான போதனை செய்து கணவனுக்கு எதிராக பொய் வரதட்சணை வழக்குப் பதிவுசெய்ய வைப்பது.

இந்த இரண்டு சம்பவங்கள்தான் நாட்டில் இப்போது பெரும்பாலான குடும்பங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற தவறான வழிகாட்டுதலில் செல்லும் பெண்கள் தங்கள் வாழ்வை தொலைத்துவிட்டு இயலாமை கலந்த கோபத்தில் கணவனைப் பழிவாங்குவதாக முறையற்ற கள்ளக்காமத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது என்ன நடக்கும் என்பதுதான் பின்வரும் செய்தியாக வந்திருக்கிறது.

சட்டத்தை எழுதிய மேதைகளும், அதை செயல்படுத்திவரும் மேதைகளும் சட்டங்களை பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வழிவகை செய்து தந்திருக்கிறார்கள். ஆனால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்திவிட்டு வழிதவறி, வாழ்க்கை தவறி நிற்கும்போது எல்லோரும் கைகொட்டி சிரிப்பார்கள்.

தினகரன் 11 மார்ச் 2011

சென்னை : செய்யாறு பாலாற்று படுகையோரத்தில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. மணலில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை நாய்கள் தோண்டி வெளியில் எடுத்து போட்டிருந்தன. தகவலறிந்து டிஎஸ்பி ராஜேந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், மாகரல் எஸ்ஐ குமரகுரு, காஞ்சிபுரம் வருவாய் ஆய்வாளர் பிரியா ஆகியோர் சென்று விசாரித்தனர். சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண், தூசி அருகேயுள்ள சின்ன ஏழையாஞ்சேரியை சேர்ந்த கல்பனா (26) என்பதும், கல்பனாவை அவரது கணவர் தமிழ்செல்வன், கள்ளக்காதலன் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததும் தெரிந்தது.

தமிழ்செல்வன் போலீசில் அளித்த வாக்குமூலம்: மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு படப்பையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள். முறைப் பெண்ணான கண்ணகியை 2வது திருமணம் செய்தேன். இதனால் கல்பனாவுக்கு என் மீது ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில், சின்ன ஏழையஞ்சேரியை சேர்ந்த ரமேஷுடன், கல்பனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, கல்பனா தன்னிடம் இருந்த 9 பவுன் நகையை ரமேஷிடம் கொடுத்திருந்தார். 7 பவுனை மட்டும் ரமேஷ் திருப்பி கொடுத்துள்ளார். மீதி 2 பவுனை கேட்டு கல்பனா தொந்தரவு செய்தார். எனக்கும் ரமேஷுக்கும் கல்பனா எதிரியானதால் இருவரும் சேர்ந்து அவளை கொலை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி, எனது 2வது மனைவி கண்ணகியை அவரது வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கல்பனாவை சமாதானம் செய்து அழைத்து வந்தேன். கடந்த 5ம் தேதி, எனது 2 குழந்தைகள் விளையாட சென்றதும் ரமேஷை வீட்டுக்கு வரவழைத்தேன். இருவரும் சேர்ந்து கல்பனாவை தாக்கினோம். கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கினாள். அவள் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றோம். உடலை கோணிப்பையில் கட்டி பைக்கில் ஏற்றி வந்து பாலாற்றில் புதைத்தோம். இவ்வாறு தமிழ்செல்வன் கூறினார். கைதான இருவரையும் போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
====

திருமணம் என்ற புனிதமான உறவில் இணைந்த கைகள் தவறான சட்டங்களால் பிரியும்போது வேறு சில கைகள் தானாக இணைகின்றன!
====


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.