இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, March 09, 2011

தொடர்பில்லாத செய்திகள்!

கண்டிப்பாக இந்த இரண்டு செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என நினைக்கிறேன்!

பெண் விமானியை கண்டு பயணிகள் அலறல்
தினமலர் பிப்ரவரி 26,2011

புதுடில்லி: பெண் விமானியை கண்டு பயணிகள் அலறியதால் புதுடில்லி விமான நிலையம் பரபரப்படைந்தது.

இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 6இ 179 என்ற விமானம் புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாரானது. காலை 8.10 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமான நிலையம் கடும் பனிப்பொழிவாக காணப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்படுவது தாமதமானது.ஒருவழியாக பனி மூட்டம் குறைய துவங்கிய உடன் சுமார் 9.40 மணியளவில் மீண்டும் விமானம் புறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பயணிகள் தங்களது இருக்கையில்வந்தமர்ந்தனர். பின்னர் விமானத்தை இயக்குபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.அதில் பெண் விமானியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிருப்தியடைந்த பயணிகள் தங்களின் பயணம் குறித்து முணுமுணுக்கத் துவங்கினர். இதில் ஒரு பயணி தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்து சென்று பெண் விமானி விமானத்தை இயக்க கூடாது. பெண் ஒருவர் விமானம் ஓட்டினால் பயணம் முழுமையாக இருக்காது என்றும் இவரை நம்பி நாங்கள் எப்படி பயணம் செய்ய முடியும் என்று கூறினார். இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் விமான நிறுவன ஊழியர்கள் முயற்சி செய்தனர்.இருப்பினும் பயணிகள் சமாதானம் அடையாததால் செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மாற்று ஏற்பாடாக ஆண் விமான ஒட்டி மூலம் விமானம் இயக்கப்பட்டது. இதனால் சுமார் 40 நிமடங்கள் விமானநிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

போலி சான்றிதழ் தந்த பெண் பைலட் கைது
தினமலர் மார்ச் 10,2011

புதுடில்லி : விமானத்தை தரையிறக்கும்போது சரியான முறையில் செயல்படாததால் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் விமானி, போலி சான்றிதழ் கொடுத்து விமானிக்கான உரிமம் பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, டில்லி போலீசார் அவரை கைது செய்தனர்.

டில்லியை சேர்ந்த பர்மிந்தர் கவுர் என்ற பெண், தனியார் விமான நிறுவனத்தில் பெண் விமானியாக வேலைக்கு சேர்ந்தார். இவர் கடந்தாண்டு ஓட்டிச் சென்ற விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், உடனடியாக கோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பர்மிந்தர் கவுர் சரியான முறையில் செயல்படாததால், விமானம் பயங்கர சத்தத்துடன் தரையிறக்கப்பட்டது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான நிறுவனம், அவரிடம் விசாரணை நடத்தியது. அதில் விமானிக்கான தேர்வில் அவர் முழுமை பெறவில்லை என்று கூறி பணிநீக்கம் செய்தது. மேலும் விசாரணையில், விமானிக்கான சான்றிதழே போலியானது என தெரியவந்தது. விமானியாவதற்கு, சிவில் விமான போக்குவரத்து துறை நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் தான் உரிமம் பெற முடியும். ஆனால், விமானிக்கான தேர்வில் வெற்றி பெற்றது போல், போலி சான்றிதழை பர்மிந்தர் கவுர் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, சிவில் விமான போக்குவரத்து துறையின் டைரக்டர் ஜெனரல் கொடுத்த புகாரின் பேரில், டில்லி போலீசார் கீர்த்தி நகரில் வசித்த அவரை கைது செய்தனர்.
====


Saturday, March 05, 2011

கூலிக்கு “ஆள்” தேடிய அப்பாவி மனைவி!

இரண்டு சுவாரஸ்யமான செய்திகள் இன்று வந்திருக்கின்றன. புராணக் கதைகளில் கணவனை எமனிடமிருந்து காப்பாற்ற பல பத்தினிகள் போராடி எமனையே வெற்றி பெற்றதாகவும் அந்த பத்தினி தெய்வங்களை இப்போதும் தெய்வமாக வணங்கும் வழக்கம் பல ஊர்களில் இருக்கிறது என்று பழைய தலைமுறை மூத்தோர்களுக்கு மட்டும் தெரியும்.

இவையெல்லாம் இப்போது மூடப்பழக்கம், "Women Empowerment" என்ற பெயரில் ஒதுக்கித் தள்ளப்பட்டுவருகிறது. நல்ல விஷயங்களைச் சொல்லித்தரும் ஆட்களுக்கு இப்போது பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது இந்த சமுதாயத்தில். அதன் விளைவாக இப்போது நாட்டில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பின்வரும் முதல் செய்தியைப் பாருங்கள். கள்ளக்காமத்தை கணவன் தட்டிக்கேட்டதால் அவனை கொல்வதற்கு கூலிக்கு ஆள் எங்கு கிடைப்பான் என்று தெரியாமல் ஒரு மனைவி மிகவும் தவித்திருக்கிறார். இதுபோன்ற பெண்களைத்தான் இப்போது ஒன்றும் தெரியாத “அப்பாவி” (கணவனைக் கொல்ல கூலிப்படை எங்கு கிடைக்கும் என்றுகூட தெரியாதவர் அப்பாவிதானே!) என்று சித்தரித்து சட்டங்கள் பாதுகாப்பு கொடுக்கின்றன.

இதுபோன்றவர்களை மட்டுமே ஆதரிப்போம் என்று ஒரு கூட்டம் நாட்டில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் தங்கள் வீட்டுப் பெண்களையும் இதுபோன்ற தவறுசெய்யும் பெண்களையும் ஒன்றாகக் கருதி பெண்ணை எப்படி குறை சொல்வது என்று நல்லது, கெட்டதைக்கூட வேறுபடுத்தி பார்க்கத்தெரியாமல் முட்டாள்தனமாக தன்னை முற்போக்குவாதி என்று கூறிக்கொள்ளும்!


குறிஞ்சிப்பாடி: கள்ளத் தொடர்பை தட்டிக் கேட்ட கணவரை கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, வடலூர் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த பழைய நெய்வேலியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவரது மனைவி சங்கீதா(29). கடந்த 26ம் தேதி வேலைக்காக ஆந்திரா செல்வதாகக் கூறிவிட்டு செந்தில்குமார் வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் 27ம் தேதி காலை, வடலூர் ஞானசபை திடலில் இறந்து கிடந்தார். வடலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

செந்தில்குமார் மனைவி சங்கீதா, வடலூர் அடுத்த பார்வதிபுரம் சுரேஷ் (41), வேல்முருகன்(42) ஆகியோர் திட்டமிட்டு செந்தில்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், செந்தில்குமார் வீட்டில் வாடகைக்கு இருந்த ராஜேஷ் என்பவருக்கும், சங்கீதாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 26ம் தேதி இருவருக்கும் நடந்த தகராறில் உன்னையும், ராஜேஷையும் கொலை செய்வேன் என, கூறியுள்ளார்.

இந்நிலையில், சங்கீதா தனது உறவினர் வேல்முருகனிடம், கணவர் செந்தில்குமார் மிரட்டியதை கூறி, அவரை கொலை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பரா என விசாரித்தார். வேல்முருகன், வடலூர் பார்வதிபுரம் முத்துகிருஷ்ணன் மகன் சுரேஷ் என்பவரை அறிமுகம் செய்து வைத்து 1,000 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, 26ம் தேதி இரவு சபை திடலில் குடித்துக் கொண்டு இருந்த செந்தில்குமாரை, சுரேஷிடம் வேல்முருகன் அடையாளம் காட்டிவிட்டு சென்று விட்டார். குடிபோதையில் இருந்த செந்தில்குமாரை, சுரேஷ் கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.


இரண்டாவது செய்தி சற்று வித்தியாசமானது...

முதல் செய்தியில் மனைவியின் கள்ளக்காமத்தை தட்டிக்கேட்டதால் கணவர் கொல்லப்பட்டார். சரி கள்ளக்காமத்தில் ஈடுபடுபவர்களை இந்திய சட்டங்கள் எப்படி தண்டிக்கிறது என்று பார்த்தால் கள்ளக்காமத்தில் ஈடுபடும் ஆண் மட்டுமே தண்டிக்கப்படக்கூடியவர் ஆனால் கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண் ஒரு “அப்பாவி” என்றும் அவரை தண்டிக்க யாருக்குமே அதிகாரம் கிடையாது என்று சித்தரிக்கிறது.


497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.


சட்டங்கள் இப்படி இருப்பதால்தான் என்னவோ இந்த இரண்டாவது செய்தியில் கணவரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். இல்லையென்றால் முதல் செய்தியில் இருப்பதுபோல் உயிரைவிடவேண்டியதுதான். சட்டங்கள் சரியாக இல்லையென்றால் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள அப்பாவிக் கணவன்கள் தாங்களே கையில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் நிலைதான் ஏற்படும் என்பதற்கு இந்த செய்தி நல்ல உதாரணம்.



திண்டுக்கல்: திண்டுக்கலில், வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்து, கணவன் கொலை செய்தார்.

திண்டுக்கல் பெரியார் காலனி மகாலட்சுமி நகரில் வசிப்பவர் ராஜா(28); என்.ஜி.ஓ., காலனியில் சலூன் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி(25). இவர்களுக்கு திருமணமாகி, 9 ஆண்டுகளாகிறது. மகாலட்சுமி(6) என்ற குழந்தை உள்ளது.

இதே பகுதியைச் சேர்ந்த மணி(28) என்பவருடன், ராஜாத்திக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கணவனை பிரிந்த ராஜாத்தி, இதே பகுதியில் உள்ள தன் தந்தை முருகன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டில் நேற்று தனியாக இருந்த ராஜாத்தியின் கழுத்தை கத்தியால் அறுத்து, கொலை செய்து விட்டு திண்டுக்கல் தாலுகா போலீசில் ராஜா சரணடைந்தார்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: எனது மனைவிக்கும் இதே பகுதியில் வசிக்கும் மணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நான் பல முறை கண்டித்தும், என் மனைவி கேட்கவில்லை. நேற்று காலை, கள்ளக் காதலனுடன் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையறிந்து அங்கு சென்று, ராஜாத்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இவ்வாறு ராஜா கூறினார். இன்ஸ்பெக்டர் தெய்வம் விசாரிக்கிறார்.
=====


Friday, March 04, 2011

பாசக்கார மனைவிகள்!

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க பெண்கள் கோரிக்கை
தினகரன் 5.3.2011

கும்மிடிப்பூண்டி : டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என, பெண்கள் கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சாணாபுத்தூர் ஊராட்சியில் கொண்டமாநெல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 7 ஆண்டுகளாக இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என, பெண்கள் பல போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து, கடந்த 17ம் தேதி டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு, பெண்கள் மற்றும் ஏராளமான ஆண்கள், மூடியிருந்த டாஸ்மாக் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுக்கடையை மீண்டும் திறக்க வேண்டும் என கோஷமிட்டனர். மூடச்சொன்ன பெண்களே கடையை திறக்கோரி கோஷமிட்டதால், மக்கள் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தனர். தகவலறிந்து, பாதிரிவேடு சப்இன்ஸ்பெக்டர்கள் டில்லிகுமார், ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர்.

‘கொண்டமாநெல்லூர் டாஸ்மாக் கடையை மூடியதால் இங்குள்ள ஆண்கள் 5 கிமீ தூரத்தில் உள்ள ஆந்திர மாநிலம், அரூர் கிராமத்துக்கு சென்று மலிவு விலை மதுவை குடிக்கின்றனர். இதனால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மூடப்பட்ட கொண்டமாநெல்லூர் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்’ என பெண்கள் கூறினர்.

கும்மிடிப்பூண்டி தாசில்தார் மற்றும் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் மனு கொடுங்கள். அவர்கள் பரிந்துரையின்படி, டாஸ்மாக் கடை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சப்இன்ஸ்பெக்டர்கள் கூறினர். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி தாசில்தாரிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.
======


Thursday, March 03, 2011

இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி!

இப்போதெல்லாம் இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி எல்லைகடந்து அளவுக்கு அதிகமாகவே போய்விட்டது. பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டியைப் பற்றி நீதிமன்றங்களே விமர்சிக்கும் அளவிற்கு போய்விட்டது நிலைமை.

இந்த விஷயம் இப்போதுதான் நீதிமன்றங்களின் பார்வைக்கு வந்திருக்கிறது. ஆனால் இது எப்படி இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றி படிப்படியாக அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொண்டால் உங்களுக்கும் அந்த உண்மை புரியும்.

பொதுவாக இந்தியாவில் பெற்றோர்கள் தங்களின் குடும்ப சொத்தை மகனுக்கும், மகளுக்கும் சரிபாதியாக பிரித்து அதை திருமணத்தின்போது மகளுக்கு சீர்வரிசை என்ற பெயரில் கொடுத்து வந்தார்கள்.

அதன் பிறகு சில பெண்ணின் சகோதரர்கள் தங்களது பெற்றோர்களுடன் சேர்ந்துகொண்டு தங்களின் சகோதரிகளுக்கு சேரவேண்டிய சரி சமமான சொத்துக்களை கொடுக்காமல் ஏமாற்ற ஆரம்பித்தார்கள். அதன்விளைவாக பெண்களின் சொத்துரிமையை நெறிப்படுத்தும்விதமாக 1950களில் இந்திய அரசாங்கம் பெண்ணுக்கு சம சொத்துரிமை என்ற சட்டத்தை இயற்றியது.

இந்த சட்டத்தை ஏமாற்றி தங்களின் மகளுக்கு சேரவேண்டிய சொத்தை எப்படி கொடுக்காமல் ஏமாற்றலாம் என்று யோசித்த பெற்றோர்களும், சகோதரர்களும் “சீர்வரிசை” என்ற பெயரில் தங்கள் மகள்களுக்குக் கொடுத்து வந்த சொத்துரிமையை “வரதட்சணை” என்று பெயர் மாற்றம் செய்து அதை கொடிய குற்றமாக சித்தரிக்க ஆரம்பித்தார்கள்.

இதுதான் சமயம் என்று “பெண்ணுரிமை” சங்கங்கள் புற்றீசல்போல் கிளம்பி “வரதட்சணை” என்பது பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றம் என்று பெண்கள் சொத்துரிமையை புதிதாக வேறுகோணத்திற்கு திருப்பி பிரச்சனையை ஊதி பெரிதாக்கி “பெண்ணுரிமை” என்ற பெயரில் நிதி ஒதுக்கீடு செய்து “தந்திரமாக இந்தியாவிற்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனிபோல” தங்கள் வியாபாரத்தை மெதுவாகத் துவங்கினார்கள். இதில் போலியான பெண்ணியம் பேசும் பல சுயநல ஆண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த காலகட்டத்தில்தான் பெண்ணுக்கு அவளது குடும்பத்தில் இருந்த சம சொத்துரிமை “வரதட்சணை” என்ற பெயரிலும் “புதிய பெண் விடுதலை” என்ற பெயரிலும் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது.

இது முற்றிலும் பெண்ணின் உடன் பிறந்த ஆண்களும், அவர்களது பெற்றோர்களும் தங்கள் வீட்டு பெண்களுக்கு எதிராக செய்த மிகப்பெரிய சதி எனலாம். இந்த சதித்திட்டத்தை மறைக்கவே இது பிற்காலத்தில் பெண்ணை திருமணம் செய்யும் குடும்பத்தினரை குற்றவாளிபோல சித்தரிக்கும் புதிய ”வரதட்சணை” சட்டங்கள் உருவாகக் காரணமானது.

சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டது முதல் இன்றுவரை இந்திய பெண்கள் சொத்துரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி பெண்ணுக்கு சம சொத்துரிமையை கண்டிப்பாக செயல்படுத்தவேண்டும் என்று பெண்களுக்காக குரல் கொடுத்த அல்லது கொடுக்கும் எந்த அமைப்பையாவது நீங்கள் பார்த்ததுண்டா?

ஆனால் “வரதட்சணை” கொடுமை என்று கூறி அடுக்கடுக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன. இதற்காக பல நிதி ஒதுக்கீடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
  • 1961-ல் வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள்.
  • 1983-ல் IPC 498A என்ற கணவனைக் கண்டதும் கைது செய்யும் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
  • 2005-ல் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் கணவனை வீட்டை விட்டே விரட்டும் சட்டத்தையும் இயற்றிவிட்டார்கள்.
ஆனால் இன்றுவரை வரதட்சணை பிரச்சனையும் ஒழிக்கப்படவில்லை. பெண்ணுக்கு சொத்துரிமையும் கொடுக்கப்படவில்லை. பெண்களுக்கு சம சொத்துரிமை நடைமுறைக்கு வரும்வரை “வரதட்சணை” என்ற சொல்லை மறையாமல் தங்களுக்கு பாதுகாப்பாக வைத்துக்கொண்டுதான் இருப்பார்கள் சுயநலமிகள். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி
யார் யாரோ பெண்களின் பெயரைப் பயன்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்துகொண்டு ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த “பெண் விடுதலை” என்ற சொல் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சி அடைந்து வரதட்சணை தடுப்புச் சட்டம் என்ற பெயரில் பல பெண்கள் தங்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், தன்வழிக்கு வராத கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தை பழிவாங்குவதற்கும் பயன்படுத்தும் ஆயுதமாக மாறிவிட்டது. தங்களுக்கு பிடிக்காதவரை பழிவாங்குவதற்காக இலவச கூலிப்படை போல காவல்துறையும், நீதிமன்றங்களும் இந்த வரதட்சணை சட்டங்கள் மூலம் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்று அவர்களுக்கே தெரியாமல் போகும் அளவிற்கு நாட்டில் பொய் வழக்குகள் அதிகரித்துவிட்டன.

பெண்ணுக்கு சம சொத்துரிமை என்பதை மறைத்து இந்த வரதட்சணை சட்டம் என்ற சூட்டில் பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிருக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு என்று பல வகைகளில் இந்த “வரதட்சணை” தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று தினந்தோறும் வரும் நீதிமன்ற தீர்ப்புகளை கவனித்துப் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

பெண் கொஞ்சம் நன்றாக சம்பாதிக்கும் நிலையில் இருந்தால் இன்னும் ஒருபடி மேலே சென்று அவளது திருமண வாழ்வில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வைத்து அதில் நாலு காசு பார்க்கும் நிலைவரை இப்போது உயர்ந்துவிட்டார்கள் பெண்ணை பெற்றவர்கள்!

இதுதான் “பெண்களுக்கு சம சொத்துரிமை” என்ற சட்டம் “வரதட்சணை தடுப்புச் சட்டமாக” உருமாற்றப்பட்டு இப்போது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் அடித்துக்கொண்டிருக்கும் லூட்டி.

பெண்ணைப் பெற்றவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகரத்து வழக்கில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் இந்த நிலையை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.


IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
Judgment delivered on: 18.02.2011
FAO 439/2003 & Cross Objections No.1788/2003

SMT.SUMAN KHANNA ……Appellant
Vs.
SHRI MUNEESH KHANNA ……Respondent

CORAM:
HON'BLE MR. JUSTICE KAILASH GAMBHIR

22. It is often found that the malaise of the interference of parents in the married life of their daughters has become a major cause playing havoc with the matrimonial lives of young couples. All the parents guide, teach and discipline their daughters and are concerned about her welfare after marriage but it is imperative for the parents to draw a line as the prime concern should be that their daughter is happily settled in a new atmosphere at the husband’s place but not with day–to-day monitoring of the affairs taking place at the matrimonial home of the daughter. Parents should not become uninvited judges of the problems of their daughter, becoming an obstacle in the daughter’s married life, to plant thoughts in her mind and gain control over her and promoting disharmony in her family life. They are expected to advise, support and believe in their upbringing maintaining a discreet silence about the affairs of the matrimonial relationship. The present case is an unfortunate example where the parents of the appellant, instead of putting out the fire have fuelled and fanned it, resulting in the disruption of the sacred bond of marriage.
=====


பெண் அதிகாரிக்கு கொடுமை!

நாட்டில் இப்போதெல்லாம் பெண் அதிகாரிகளை துன்புறுத்தும் செயல் அதிகமாகிவிட்டது. பொய் வழக்குப்போடும் மருமகள்களுக்கு குரல் கொடுக்க ஒரு ஆதரவு கூட்டம் இருப்பதுபோல இந்த “பெண் கொடுமைக்கு” எதிராக குரல் கொடுக்க யாராவது புரட்சியாளர்கள் முன்வருவார்களா?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வணிக முத்திரை குறியீடு பெண் அதிகாரி கைது
மார்ச் 04,2011 தினமலர்

சென்னை : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வணிக முத்திரை குறியீடு தென்மண்டல பெண் அதிகாரியை, சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். சென்னை, அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் தயாகர் நைனார்; வக்கீல். இவரது மனைவி கஸ்தூரி (59); சென்னை, கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில், வணிக முத்திரை குறியீடு தென்மண்டல தலைமை அதிகாரி. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக சென்னை, சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம், சென்னை, பெங்களூரில் உள்ள கஸ்தூரியின் வீடு, மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரே நாளில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, 33 லட்சம் ரூபாய் பணம், குறிப்பிட்ட கால வைப்புத் தொகை 85 லட்சம் ரூபாய், 3.8 கிலோ தங்க நகைகள் மற்றும் சென்னை அடையாறு, திருப்பதி, மும்பை மற்றும் ஆமதாபாத்தில் உள்ள ஆறு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கஸ்தூரி கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., சிறப்பு முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
====


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.