இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, January 16, 2011

பெண்ணின் எல்லையில்லாத அன்பு

ஈரோடு மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான நீலகிஸ் பின் புறம் மாநகராட்சி சார்பில் ஒரு குப்பை தொட்டி வைக் கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் வழக்கம்போல் இன்று காலை அப்பகுதி மக்கள் குப்பை கொட்டிக்கொண்டு இருந்தனர்.

அப்போது நடுத்தர வயது மதிக்கதக்க ஒரு பெண் தான் கையில் கொண்டு வந்த பச்சை கலர் பிளாஸ்டிக் பையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு அங்கிருந்து வேகமாக நடையை கட்டினாள். இதை அங்கு பேப்பர் பொறுக்கும் தொழிலாளி ராஜேந்திரன் என்பவர் பார்த்து விட்டார்.

சற்றுநேரம் கழித்து அவர் அந்த குப்பைதொட்டிக்கு சென்று அந்த பெண் போட்ட பையை எடுத்து கவிழ்த்தார். அப்போது அதில் இருந்து ஒரு பச்சிளம் பெண் குழந்தையின்உடல் விழுந்தது.இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல்அங்கு காட்டுத்தீ போலபரவியது.

இதற்கிடையே அந்த பகுதியில்வசிக்கும்முஸ்லிம் பெண் ஒருவர் அந்த குழந்தையை கையில் எடுத் தார். அப்போது குழந் தைக்கு சிறுநீர் வந்தது. இதை கண்டு அவர் அந்த குழந்தை உயிருடன் இருப்பதாக கருதி தான் வளர்க்கப்போவதாக எடுத்துக்குகொண்டு அருகில் உள்ள ஆஸ்பத் திக்கு சென்றார்.

டாக்டர் குழந்தையை பாசோதித்துவிட்டு அது ஏற்கனவே இறந்து விட்டதாக தொவித்தார். வீசப்பட்ட அந்தகுழந்தை யின் தொப்புள் கொடிகூட காயவில்லை. சேலை யில் உடலை சுற்றி இருந்தனர். அதன் நெற்றியில் சிறிது காயம் இருந்ததாக கூறப் பட்டது.

எனவே பெண் குழந் தையை அடித்துக் கொன்று அதை குப்பை தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதி கவுன்சிலர் கலைச் செல்வி அந்த குழந்தையின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தார்.

இதுபற்றி ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடும் நேரத்தில் பச்சிளம் பெண் குழந்தையை கொன்று குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.





Wednesday, January 12, 2011

கவர்ச்சியான கல்யாணி!

மூவரை திருமணம் செய்து ஏமாற்றிய "கல்யாண ராணி'’

ஜனவரி 12,2011 தினமலர்


செங்கன்னூர் : மூன்று இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து, பணம், நகைகளை மோசடி செய்த, "கல்யாண ராணி'யை போலீசார் கைது செய்தனர்.

அவரை காணவில்லை என, கணவர் கொடுத்த வழக்கில், கோர்ட் விடுவித்தது என்றாலும், ஒரு மணி நேரத்திற்கு பின், பணம், நகைகளை மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதானார்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், சடையமங்கலத்தைச் சேர்ந்தவர் ஷாலினி (28). இவர் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த பிரமோத் (48) என்பவருடன் வாழ்ந்து வந்தார். தன்னுடன் வாழ்ந்து வந்த ஷாலினியை காணவில்லை என்றும், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் கோரி கேரள ஐகோர்ட்டில் அவர், "ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு தாக்கல் செய்தார்.ஐகோர்ட் உத்தரவின்படி செங்கன்னூர் போலீசார், ஷாலினியை தேடி வந்தனர். பத்திரிகைகளில் ஷாலினியின் படத்தை பார்த்த பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தனது பகுதியில் அப்பெண் இருப்பதாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அவர்களிடம், அப்பெண் இருக்கும் இடத்தை காண்பித்து அப்பெண்ணை பிடிக்க உதவினார்.அப்பெண்ணுடன் இருந்த அவரது மகன் கண்ணன் (5) ஆகியோரை, போலீசார் செங்கன்னூர் கொண்டு சென்று, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல, "திடுக்' தகவல்கள் தெரியவந்தன.

வழக்கு குறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியை பார்த்த ஷாலினி, தன் குழந்தையுடன் தப்பியோட முயன்றபோது தான் போலீசாரின் பிடியில் சிக்கினார். இவர், 2010ம் ஆண்டு பத்திரிகையில் வெளிவந்த மறுமணத்திற்கு தயார் என்ற விளம்பரத்தை பார்த்து, பிரமோத் (48) என்பவரை தொடர்பு கொண்டார்.தான், ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் வங்கியில் உதவி மேலாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின் இருவரும், எர்ணாகுளத்தில் வசித்து வந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து நகைகள் மாயமான புகார் காரணமாக அங்கிருந்து இருவரும் செங்கன்னூரில் வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்தனர்.அங்கு பல மோசடி வழக்குகள் இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். அப்போது, டிசம்பர் மாதம் 7ம் தேதி குழந்தையுடன் ஷாலினி மாயமாகி விட்டார். இதுகுறித்து தான் பிரமோத் வழக்கு தொடர்ந்தார். போலீசாரிடம் சிக்கிய ஷாலினி, மேலும் மூவரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

அவரை செங்கன்னூர் போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை காணவில்லை என்று பிரமோத் கொடுத்த மனு மீது தான் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தியதால், கோர்ட் உடனடியாக விடுவித்தது. கோர்ட்டில் இருந்து அவர் விடுதலை பெற்றதும், வக்கீல் வீட்டுக்குச் சென்றார்.இதைஅறிந்த பிரமோத், தனது மூன்று லட்ச ரூபாய், 25 சவரன் நகைகளை ஷாலினி எடுத்துச் சென்று விட்டார் என மீண்டும் ஒரு புகாரை செங்கன்னூர் போலீசில் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார், ஷாலினி சென்ற வக்கீல் வீட்டுக்குச் சென்று காத்திருந்தனர். அவர் வெளியே வந்ததும் போலீசார் அவரை கைது செய்தனர்.கைதாகி உள்ள பெண் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.



Tuesday, January 11, 2011

விதவிதமாக திருமண உறவை அனுபவிக்கும் பெண்கள்

பெண்களுக்கு சட்டங்கள் சாதகமாக இருப்பதால் திருமண உறவை எப்படியெல்லாம் அனுபவித்து மகிழ்கிறார்கள்! ஆண் இதுபோல திருமணத்தை விதவிதமாக அனுபவிக்க நினைத்தால் அவன் மீது பலதார மண தடுப்புச் சட்டம், கற்பழிப்பு, வரதட்சணைக் கொடுமை, பெண் கொடுமை என அடுக்கடுக்காக பல சட்டங்கள் பாய்கின்றன. அதுவே ஒரு பெண் இந்த வேலைகளைச் செய்தால் அந்தப் பெண்ணை ஆதரித்து திரும்பவும் ஆணைத்தான் சட்டங்கள் தண்டிக்கின்றன. விசித்திரமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்!

2 வது கணவர் ஓட்டம் : கர்ப்பிணி மனைவி புகார்
தினமலர் ஜனவரி 11, 2011

இளஞ்செம்பூர் : இளஞ்செம்பூர் அருகே வீரம்பலில் முதல் கணவரை பிரிந்த நிலையில், இரண்டாவதாக மணமுடித்த கணவர் ஓட்டம் பிடித்ததால், கர்ப்பிணி மனைவி ஐகோர்ட் உத்தரவுபடி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இளஞ்செம்பூர் அருகே வீரம்பலை சேர்ந்த முத்துக்குமாரி (23) அதே ஊரை சேர்ந்த ஞானராஜ் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். குழுந்தை ஒன்றும் பிறந்தது. வேலைக்காக ஞானராஜ் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், முத்துகுமாரிக்கும் அதே ஊரை சேர்ந்த இருதயராஜுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதற்கு முத்துக்குமாரி வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்காமல், இருவரையும் கணவன் மனைவியாக சேர்த்து, இருதயராஜிடம் 50 ரூபாய் பத்திரத்தில் , முத்துகுமாரியை பிரியமாட்டேன் என எழுதி வாங்கி கொண்டு, சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ஐந்து மாதங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த இருதயராஜ், முத்துக்குமாரியை கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவானார். தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ,மதுரை ஐகோர்ட் கிளையில் முத்துக்குமாரியின் தந்தை ஞானஒளிவு மனு செய்தார். அதன்படி தலைமறைவான இருதயராஜ் மீது வழக்கு பதிவு செய்ய, மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து ,இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் துரைராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

===============

நாகர்கோவில் : மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவர், மண மேடையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே கடம்பன்குழியைச் சேர்ந்தவர் வினோ (35). இவருக்கும், அஞ்சுகிராமம் பாப்பையன் மகள் ஹெப்சிபாவுக்கும், எட்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோன்சி (8), மிஸ்பா (7) என இரு மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஹெப்சிபா தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், காட்டாத்துறையை சேர்ந்த, சாந்திரி (28) என்ற பெண்ணை, வினோ, இரண்டாம் திருமணம் பேசி, சாமியார் மடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று திருமணம் நடக்க ஏற்பாடானது. இது பற்றி தகவல் கிடைத்த ஹெப்சிபா, தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குச் சென்ற போது வினோ, சாந்திரி கழுத்தில் தாலி கட்டிவிட்டார். மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததற்காக, போலீசார் அவரை கைது செய்தனர். இதனால், திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, சாந்திரி பெற்றோரை வினோ ஏமாற்றியதும் விசாரணையில் தெரிய வந்தது.

============

மேலுள்ள இரண்டு செய்திகளையும் பாருங்கள். முதல் செய்தியில் கணவன் வெளிநாடு சென்றதும் மனைவி இரண்டாவதாக ஒரு ஆளை தேர்வு செய்து சந்தோஷமடைந்து பிறகு அந்த இரண்டாவது ஆள் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதில் ஏமாற்றப்பட்ட முதல் கணவனைப் பற்றி சட்டம் கவலைப் பட்டதா? அல்லது அந்தப் பெண் செய்தது சரியா என்று யாராவது யோசிப்பார்களா?

இரண்டாவது செய்தியில் இதேபோல கணவன் முதல் மனைவியை விட்டு இரண்டாவது திருமணம் செய்ததும் போலிஸ் அவரை கைது செய்துவிட்டார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் சட்டம் ஆண், பெண் இருவரையும் எப்படி வெவ்வேறு விதமாக பார்க்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று புரிந்துகொள்ளவேண்டும். அதுதான் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சரியான சமஉரிமை.



Monday, January 10, 2011

வைகை அணையில் பொங்கிப் பெருகிய தாய்மை!

திங்கட்கிழமை, ஜனவரி 10,2011 மாலை மலர்

ஆண்டிப்பட்டி, ஜன. 10-

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. அணையின் ஆற்றை ஒட்டியுள்ள சலவை செய்யும் பகுதியில் புதருக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அங்கு சலவை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதருக்குள் சென்று பார்த்தனர்.

அங்கு பச்சிளம் ஆண் குழந்தையை எறும்புகள் கடித்து கொண்டிருந்தன. உடனே சலவை தொழிலாளர்கள் குழந்தையை வெளியில் எடுத்து வைகை அணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. குழந்தை தேனி அரசு ஆஸ் பத்திரிக்கு எடுத்து செல்லப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தேனி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3-ந்தேதி இந்த குழந்தை பிறந்துள்ளது. அதற்கான அடையாள அட்டையும் குழந்தையின் கையில் கட்டப்பட்டு இருந் தது. அதில் தாயார் பெயர் முருகேஸ்வரி என்றும் பெரியகுளம் மின்வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி என்றும் எழுதப்பட்டு இருந்தது.

தேனி போலீஸ் சூப் பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையை புதரில் வீசி சென்ற முருகேஸ்வரியை பிடிக்க போலீசார் பெரியகுளத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

==========


விலங்குகளிடம் இருக்கும் பாசம் கூட மனித இனத்தில் இருப்பதில்லையோ? (படம்- தினமலர் ஜனவரி,11, 2011)

கணவன் வரதட்சணை கேட்டு மிரட்டினான் என்று ஒரு பெண் சொன்னவுடன் கவணவனை அவனது குடும்பத்தோடு சேர்த்து கூண்டோடு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டுப் பிறகுதான் விசாரணையே செய்ய ஆரம்பிக்கிறார்கள். அதுபோல ஒரு பெண் தன்னை காதலன் ஏமாற்றிவிட்டான் என்று கண்ணை கசக்கினால் உடனே அவன் மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளிவிடுகிறார்கள்.

ஆனால் இதுபோன்ற அப்பாவிக் குழந்தைகளை வீசியெறியும் மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது. யாராவது இதுவரை இதுபோன்ற குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது இதுபோன்ற குழந்தைகளை பாதுகாக்க ஏதாவது சிறப்புச் சட்டம் இருக்கிறதா? இதுபோன்ற கொடிய குற்றங்களுக்கு ஆண், பெண் இருவருமே தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் சட்டங்கள் வழக்கம்போல யாராவது ஒரு ஆணைக்காட்டி அவன்தான் இதற்குப் பொறுப்பு என்று பெண்ணை அரவணைத்துத் தட்டிக்கொடுக்கும்.




Sunday, January 09, 2011

சுயஉரிமை பெற்ற பெண்ணின் சாதனை!

புதுடெல்லி, ஜன.9-

டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்த பெண் ஷேனாஸ் (வயது 35). இவர் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்தாள். அதன்பறகு 2-வது திருமணம் செய்தாள். அவருடனும் சில வருடங்களே குடும்பம் நடத்தி அவரையும் விவாகரத்து செய்தாள். 2 கணவர்கள் மூலம் அவளுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகளுக்கு 14 வயதும், 3-வது மகளுக்கு 5 வயதும் ஆகிறது. இந்த நிலையில் 35 வயதான ஷேனாஸ் தன்னை விட 6 வயது குறைந்த 29 வயதான ராகேஷ்குப்தா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இருவரும் கடந்த 3 வருடங்களாக கணவன்-மனைவியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இதற்கிடையே ராகேஷ் குப்தாவை கடந்த அக்டோபர் மாதம் திடீர் என்று காணவில்லை. இதுபற்றி ஷேனாஸ் போலீசில் புகார் செய்தாள். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்தனர்.

ஷேனாசுக்கு சகீல், சாகித் என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எந்த துப்பும் கிடைக்கவில்லை. இவர்கள் ஷேனாஸ் குடியிருக்கும் பகுதியிலேயே வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

இதில் சாகித் பழைய குற்றவாளி என தெரியவந்தது. சந்தேகப்பட்டு அவனது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது சாகித்தின் வீட்டு “செப்டிக் டேங்கில் இருந்து துர்நாற்றம் அடித்தது. சந்தேகப்பட்டு பார்த்த போது அங்கே ஒரு பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அது காணாமல் போன ராகேஷ் குப்தா என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ஷேனாசை பிடித்து விசாரித்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். சம்பவத்தன்று ராகேஷ் குப்தாவிடம் ஷேனாஸ் பணம் கேட்டாள். ஆனால் ராகேஷ் குப்தா டெய்லர் தொழில் பார்த்து வந்ததால் ஷேனாஸ் கேட்ட தொகையை கொடுக்க முடியவில்லை.
இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது கிரிக்கெட் மட்டையால் ஷேனாஸ், ராகேஷ்குப்தாவை தலையில் அடித்தாள். இதில் அவர் செத்துப் போனார். பிணத்தை 24 மணி நேரம் தனது வீட்டிலேயே வைத்து இருந்தாள். மறுநாள் சகோதரர்கள் மூலம் பிணத்தை அங்கிருந்து எடுத்துச் சென்று செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டனர்.

கொலையை மூடி மறைக்க ராகேஷ்குப்தா காணாமல் போய்விட்டதாக ஷேனாஸ் போலீசில் புகார் செய்து நாடகமாடினாள். ஆனால் போலீசார் துப்பு துலக்கி ஷேனாசையும், அவளது சகோதரர் சகீல் ஆகியோரை கைது செய்தனர். சாகித் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள்.





“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.