இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, January 06, 2011

கடவுளை தண்டிக்க ஒரு கடவுள் வேண்டும்

குடும்பப் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்றவர்கள் மகளிர் காவல் நிலையங்களை நாடும்போது அவர்களை அன்பாக நடத்தி அவர்களின் பிரச்சனைகளை அன்பான அகிம்சை வழியில் தீர்த்துவைத்து தங்களை நாடி வந்தவர்களின் குடும்பம் சந்தோஷமாக திரும்பிச் செல்வதைக் கண்டு உள்ளம் பூரித்திடும் பூலோக சொர்க்கம் அல்லவா மகளிர் காவல் நிலையங்கள்.

குடும்பப் பிரச்சனை காரணமாக அவசரப்பட்டு பொய் வரதட்சணைப் புகார் கொடுக்கும் பெண்களை அன்பாக நடத்தி அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி தவறை உணரவைத்து குடும்பங்கள் சிதையாமல் போற்றிப் பாதுகாக்கும் நடமாடும் தெய்வங்கள் அல்லவா பெண் காவலர்கள்.

மருமகள் அவசரப்பட்டு தவறாக ஒரு பொய் வரதட்சணை புகாரினை கணவனின் குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் பதிவு செய்யவந்தால் பொய் வரதட்சணை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை அழைத்து மிகவும் கனிவாக விசாரணை செய்து நேர்மையான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி பல குடும்பங்கள் சிதையாமல் பாதுகாக்கும் கண்ணியமிக்கவர்கள் அல்லவா பெண் காவலர்கள்.

இதுபோன்ற பொய் வரதட்சணை வழக்குகளில் பல வயதான பெண்களும், உடல் நலம் குன்றிய வயதானவர்களும், இளம் பெண்களும், குழந்தைகளும் சிக்கவைக்கப்படும்போது வழக்கின் உண்மை தண்மையை ஆராய்து இதுபோன்ற அப்பாவிகளின் கண்ணியம் சிதையாமல் அவர்களை பாதுகாக்கும் குலதெய்வங்களாயிற்றே பெண் காவலர்கள்.

கடவுள் ஒரே ஒரு நாள் மகளிர் காவல்நிலைய வாசலில் நின்றுகொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் கண்டால் ஏதோ ஒரு காரணத்தால் சிதையும் தருவாயில் இருக்கும் பல குடும்பங்கள் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்த பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு எப்படி சந்தோஷமாக கைகோர்த்துக்கொண்டு திரும்பிச்செல்கிறார்கள் என்றும் அதற்காக இந்தப் பெண் காவலர்கள் எத்தனை பாடுபட்டு இதுபோன்ற குடும்பப் பிரச்சனைகளில் சிக்கும் அப்பாவிக் குழந்தைகளின் நலன் கருதி இந்தப் பிரச்சனைகளை ஒரு மலரைப் போல மென்மையாக எப்படிக் கையாளுகிறார்கள் என்றும் உணரமுடியும்.

இதுபோன்ற பண்பான காவல்தெய்வங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு பிரச்சனைகளை கொடுக்கும் கடவுளுக்கு கொஞ்சமும் இரக்கமே கிடையாதா? இந்தக் கடவுளை தண்டிக்க ஒரு கடவுள் வரவேண்டும்.


தினமலர் ஜனவரி 07, 2010

மதுரை : மதுரையில் பெண்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெண் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் இருவரின் தற்கொலை போலீஸ் துறையை மட்டுமல்லாது, அனைத்து துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க, பெண் போலீசாருக்கு முறையான கவுன்சிலிங் கொடுத்து பாதிக்கப்பட்டோரின் மனநலத்தை காப்பது போலீஸ் துறை முக்கிய கடமை.

மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 - 40 வயது பெண்கள் தீக்குளித்தல், தூக்கு, விஷம் சாப்பிட்டு தற்கொலை முடிவை அதிகமாக தேடியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 354 பேர். 2009ம் ஆண்டு 399 பேர். இதில் செல்லூரில் மட்டும் 68 பேர். 2010ல் செல்லூரில் 46 பெண்கள் தற்கொலை முடிவை தேடியுள்ளனர். விவாகரத்து, கணவருடன் தகராறு, பொருளாதார பின்னடைவு, குடும்ப பிரச்னைகளால் தான் பெரும்பாலும் பெண்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர். இப்பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாவர்கள் படிக்காதவர்கவே அதிகம் இருந்தனர். ஆனால் சமீபத்தில் படித்த, பட்டம் பெற்ற, அரசு வேலைகளில் இருக்கும் பெண்களும் இந்த விபரீத முடிவை தேடுவது அதிகரித்து வருவது வேதனையான விஷயம்.மேலூர் எஸ்.ஐ., எஸ்தர் ராணி(33) மதுரை புதூர் மண்மலை மேட்டிலுள்ள வீட்டில் டிச. 23ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். நாகமலைப்புதுக்கோட்டை எஸ்.ஐ., ரங்கநாயகி, மதுரை வைகை வடகரையில் அப்பார்ட்மென்ட் வீட்டில் ஜன., 5ல் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இந்த இரு சம்பவங்களும் மதுரை மாவட்ட போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஸ்டேஷன்களில் ஆண் போலீசாருக்கு சமமாக பெண் போலீசாருக்கும் பணிகள் வழங்கப்படுகின்றன. ஆண்களே தனியாக செல்ல தயங்கும் பாதுகாப்பற்ற இடங்களிலும் பெண் போலீசார் இரவில் தனியாக செல்லும் சூழல், இடைவெளியின்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுதல், ஓய்வின்மை, அதிகாரிகளின் நெருக்கடி இதனால் ஏற்படும் மனச்சோர்வு, மனஅழுத்தம், தாழ்வுமனப்பான்மை போன்ற பல காரணங்களும் குடும்ப பிரச்னைகளும் தான் பெண் போலீசாருக்கு தற்கொலை முடிவை தேடும் நிலையை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், மனநல டாக்டரிடம் கருத்து கேட்டோம்:

சமுதாயத்திலும் பிரச்னை: தென் மண்டல ஐ.ஜி.,கிருஷ்ணமூர்த்தி: பெண்களிடம் விழிப்புணர்வு தேவை. மேலைநாட்டு கலாசாரத்தை பின்பற்றினால் அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். சிலர் பல ஆண்டுகள் ஆண்களுடன் தொடர்பு வைத்துவிட்டு, பின் திருமணம் என வரும் போது யாரையாவது ஒருவரை தேர்வு செய்கின்றனர். அவர்கள் தங்களுடன் ஒத்துப்போகவில்லை என தகராறுகளில் ஈடுபடுவதும், பிரச்னைகளில் நேரத்தை செலவு செய்வதும், முடிவில் விவாகரத்து என செல்கிறது. சமுதாயம் குறித்த விழிப்புணர்வை அனைத்து நிலையிலும் ஏற்படுத்த வேண்டும். பெண் போலீசாருக்கு இது போன்ற பிரச்னைகளுக்கு கவுன்சிலிங் ஆரம்பிப்பது புதிது அல்ல. தற்கொலை முடிவை எடுக்கும் அளவிற்கு போலீஸ் துறையில் பணி நெருக்கடி இல்லை. தென் மண்டலத்தில் அனைத்து போலீசாருக்கும் விரைவில் சிறந்த மனோதத்துவ நிபுணர்களைக் கொண்டு பயிற்சி நடத்தப்படும்.

பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்
: மனோகர், மதுரை, எஸ்.பி., :பெண் போலீசாருக்கு ஏற்படும் பிரச்னை குறித்து அவர்கள் புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு என்ன பிரச்னை இருந்தாலும் என்னிடம் நேரில் தெரிவிக்க வாரந்தோறும் செவ்வாய்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட, குடும்ப, பணி தொடர்பான எந்த பிரச்னைகளானாலும் தெரிவிக்கலாம். தைரியமாக தங்கள் புகார்களை தெரிவித்து பலர் பிரச்னைகளில் இருந்து விடுபட்டுள்ளனர். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பெண் போலீசாரின் வீடுகள் அருகே ஸ்டேஷன்கள், பாதுகாப்பு பணியில் கூட பெண் போலீசார் தனிமைப்பட்டு விடக்கூடாது என ஒரு குழுவாகவே நியமிக்கப்படுகின்றனர். மனதில் வைக்காமல் பிரச்னைகளை தைரியமாக எடுத்துக்கூறி நிவாரணத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, தற்கொலை முடிவு எல்லாம் கோழைத்தனமானது.

வாரத்தோறும் பயிற்சி
: போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியம் (மதுரை): மதுரை நகர் பகுதியில் பெண் போலீசார் யாரும் இது போன்ற அபத்தமான முடிவை எடுக்கவில்லை. இந்த சம்பவங்கள் போலீஸ் துறையின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. மதுரை நகர் போலீசாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அணிவகுப்பின் போது, இனி மனநலம் குறித்த சிறப்பு பயிற்சி கூடுதலாக ஒரு மணிநேரம் நடத்தப்படும். சிறந்த நிபுணர்களை கொண்டு தொடர் பயிற்சி மற்றும் யோகா போன்ற வகுப்புகள் மூலம் இது போன்ற அனைத்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்கப்படும்.

மன அழுத்தமே காரணம்
: மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு பேராசிரியர் ராமானுஜம்: போலீஸ் துறை பெண்களுக்கு புதிதான விஷயம். பணி செய்யும் எல்லாப் பெண்களுக்குமே வீட்டுவேலை, அலுவலக வேலை பளுவின் காரணமாக மனஅழுத்தம் ஏற்படும். குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாவிட்டால் கூட, மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவர். போலீஸ் துறையில், கூடுதல் பணிச்சுமை இருக்கும். இதை தாக்குபிடிக்க முடியாமல் இருக்கலாம். அல்லது உயரதிகாரியின் கட்டளைக்கு பணிந்து போகமுடியாத நிலையில் இருக்கலாம். மன அழுத்தம் அதிகரித்து, தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்கின்றனர். மனச்சோர்வாக, எதையும் விரக்தியாக பேசுவதை வைத்து, அவர்களை இனம் காண முடியும். உரிய நேரத்தில் "கவுன்சிலிங்' செய்தால், தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கமுடியும். மதுரை அரசு மருத்துவமனையில், "தற்கொலை தடுப்பு கிளினிக்' செயல்படுகிறது. ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருப்பவர்களை, சரியான விதத்தில் "கவுன்சிலிங்' கொடுக்கிறோம் என்றார்.

காத்திருக்கும் "புதுயுகம்'
: மதுரை மாவட்டத்தில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று மாதங்களுக்கு முன் "புதுயுகம்' அமைப்பு துவக்கப்பட்டது. செல்லூர் மகப்பேறு மருத்துவமனையில் இது செயல்படுகிறது. தினமும் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை இங்கு தற்கொலை எண்ணத்துடன் அவதிப்படும் நபர்களுக்குகவுன்சிலிங் வழங்கப்படுகிறது. செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் மதுரை இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் மூலம் பல பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. புதுயுகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான டாக்டர் சிவரஞ்சனி, "" தற்கொலை முடிவை தேர்வு செய்த பலரை கவுன்சிலிங் மூலம் காப்பாற்றியுள்ளோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்தால், அந்த எண்ணம் மற்றவர்களுக்கும் வந்துவிடும். அதனால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை செய்த குடும்பத்தினரின் வீடுகளுக்கும் சென்று கவுன்சிலிங் கொடுக்கிறோம்.24 மணி நேரமும் இலவச அழைப்பு எண் மூலம் 0452- 258 0011 ல் தொடர்பு கொள்ளலாம். தொழில் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தற்கொலை முடிவை யாராவது எடுத்தால், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவிகள் கிடைக்க வழிகாட்டியாகவும் இம்மையம் செயல்படும்'', என்றார்.



கண்ணகி செய்தது சரியா?

அன்று கண்ணகி தனது கணவனுக்காக மதுரையை எரித்தாள். இன்று மனைவி தனது கள்ளக்காமத்திற்காக கணவனையே கொல்ல முயன்றாள். இந்த இருவரில் யார் புத்திசாலி?

கண்டிப்பாக கண்ணகியை யாரும் புத்திசாலி என்று சொல்லமாட்டார்கள். ஏனென்றால் கணவனுக்காக அவள் எதைச்செய்தாலும் அவையெல்லாம் சரி என்று நினைத்து விட்டாள். இந்தக்காலத்தில் அந்தச் செயலுக்குப் பெயர்தான் சுயசிந்தனையற்ற “பெண்ணடிமைத்தனம்”. தனக்கென்று எதையும் சிந்திக்கத்தெரியவில்லையே!

இந்தக்காலத்தில் தன் விருப்பத்திற்குத் தடையாக வரும் கணவனையும் எதிர்க்கலாம், அதையும் தாண்டி கொல்லவும் செய்யலாம் என்ற தெளிவான சுய சிந்தனையுடன் இருப்பதற்குப் பெயர்தான் சுயமாக சிந்திக்கத் தெரிந்த பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட “சுதந்திரப் பெண்”.

தினமலர் ஜனவரி 07,2011

தூத்துக்குடி:தூத்துக்குடியில், கள்ளக்காதலனோடு சேர்ந்து, கணவர் முகத்தை தலையணையால் அழுத்தி, கொல்ல முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி, தாளமுத்துநகரை அடுத்த அய்யர்விளையைச் சேர்ந்தவர் நடராஜன்(49); மளிகை கடை வியாபாரி. இவரது மனைவி பால்கனி(40). இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில், பால்கனிக்கும், உறவினர் பழனிக்கும்(43), கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதை, நடராஜன் கண்டித்தார்.நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில், பால்கனி வீட்டிற்கு வந்த பழனி, அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, தூக்கத்தில் இருந்து திடீரென கண் விழித்த நடராஜன், அதை பார்த்து விட்டார். அதனால், அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.உடனே பால்கனியும், பழனியும் சேர்ந்து, தலையணையை எடுத்து, நடராஜன் முகத்தில் அழுத்தினர். அதில், அவர் மூச்சுத்திணறி இறந்தது போல நடித்ததால், அவர் இறந்துவிட்டதாக கருதி, இருவரும் வீட்டை விட்டுவெளியேறினர்.சிறிது நேரம் கழித்து எழுந்த நடராஜன், நடந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்தார். அவரை கொலை செய்ய முயன்ற மனைவி பால்கனி, கள்ளக்காதலன் பழனியை போலீசார் கைது செய்தனர்.

Wednesday, January 05, 2011

பெண் “கை” வைக்க ஆரம்பித்தால்!

"டீன்' பதவி ஆசை: சான்றிதழில் திருத்தம் செய்து புனிதமான டாக்டர் தொழிலுக்கு களங்கம்

Dinamalar ஜனவரி 06,2011

"அரசு மருத்துவக் கல்லூரி டீன் பதவிக்கு ஆசைப்பட்டு, கல்வி சான்றிதழில், "கை' வைத்த பேராசிரியை மீது, விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்; முதற்கட்டமாக, "சஸ்பெண்ட்' நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, தமிழக சுகாதாரச் செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில், அறுவை சிகிச்சை பேராசிரியையாக வேலை செய்பவர் பூங்கோதை. சில மாதங்களுக்கு முன், தன்னுடைய சான்றிதழ் காணவில்லை என, புகார் செய்தார்; மாற்று சான்றிதழ் பெற்றார்.அதில், தன்னுடைய பிறந்த ஆண்டை 1953 என்பதற்கு பதிலாக, 1956 என திருத்தம் செய்துள்ளார்.

அதேபோல, பணிக்கால பதிவேட்டிலும் திருத்தம் செய்து, அத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைத்துள்ளார்.இந்த மோசடி காரணமாக, அரசு மருத்துவக் கல்லூரி டீன் பதவி உயர்வுக்கான பட்டியலில், பூங்கோதை பெயர் முதலிடத்துக்கு வந்தது. இதுகுறித்து, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டதால் பாதிக்கப்பட்ட டாக்டர் ஒருவர், அப்போதைய சென்னை மருத்துவக் கல்லூரி டீன் மோகனசுந்தரத்துக்கு புகார் அனுப்பினார்.

அதன் எதிரொலியாக, அரசு கெஜட்டில் பதிவாகி இருந்த பூங்கோதையின் வயது உள்ளிட்ட விவரங்கள், ஆய்வு செய்யப்பட்டது. அதில், பேராசிரியை பூங்கோதை பிறந்த ஆண்டு, 1953 என்று இருப்பது உறுதியானது. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, அவரது பள்ளிப் படிப்பு சான்றிதழ் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன.பள்ளி சான்றிதழிலும் 1953 என பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பூங்கோதை வயது தொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில், அவர் செய்துள்ள மோசடி அம்பலமாகியுள்ளது.இது தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வரும், சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் கனகசபை கூறுகையில், "மருத்துவக் கல்லூரி பேராசிரியை பூங்கோதை, சான்றிதழில் பிறந்த ஆண்டை திருத்தி மோசடி செய்திருப்பது, பள்ளி சான்றிதழ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது."இரண்டொரு நாளில் சுகாதாரச் செயலர் சுப்புராஜ் வசம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். துறை ரீதியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கட்டாய ஓய்வு வழங்கவும் வாய்ப்புள்ளது' என்றார்.சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் கூறுகையில், "பேராசிரியை மீதான அறிக்கை கைக்கு கிடைத்ததும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் உண்டு. முதற்கட்டமாக "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் பதவிக்கு வர வேண்டும் என்றால், ஓய்வு பெறுவதற்கான கால அவகாசம் குறைந்தது ஓராண்டாவது இருக்க வேண்டும். ஆனால், பூங்கோதை ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்களே உள்ளது.எனவே, டீன் பதவிக்கு ஆசைப்பட்டு, திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு, புனிதமான டாக்டர் தொழிலுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார் என, பாதிக்கப்பட்ட டாக்டர்கள் கூறினர்.

======

பணியிடத்தில் பாலியல் கொடுமை தடுப்புச் சட்டம் (THE PROHIBITION OF SEXUAL HARASSMENT OF WOMEN AT WORKPLACE BILL, 2010) என்று ஒரு புது சட்டம் சமீபத்தில் அரசாங்கம் இயற்றியிருப்பதுபற்றி பணிபுரியும் பல பெண்களுக்குத் தெரியாது போலிருக்கிறது! மாமியார் வீட்டில் ஏற்படும் “இன்னல்களை” ஒடுக்க மருமகள்களுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டம் பயன்படுவது போல பணிபுரியும் இடத்தில் ஏற்படும் “சிக்கல்களை” சமாளிக்க இந்த புது சட்டம் பல பெண்களுக்குப் பயன்படும். புத்திசாலிகள் இந்த சட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.

குறிப்பு: வழக்கம்போல் இந்த சட்டமும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும். ஆண்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்த முடியாது.

THE PROHIBITION OF SEXUAL HARASSMENT OF WOMEN AT WORKPLACE BILL, 2010 சட்டத்தின் ஒரு பகுதி

3. At any workplace, no woman, shall be subjected to sexual harassment including unwelcome sexually determined behavior, physical contact, advances, sexually coloured remarks, showing pornography, sexual demand, request for sexual favours or any other unwelcome conduct of sexual nature whether verbal, textual, physical, graphic or electronic or by any other actions, which may include, but is not limited to -

(i) implied or overt promise of preferential treatment in employment; or
(ii) implied or overt threat of detrimental treatment in employment; or
(iii) implied or overt threat about the present or future employment status;
(iv) conduct which interferes with work or creates an intimidating or offensive or hostile work environment; or
(iv) Humiliating conduct constituting health and safety problems.





Tuesday, January 04, 2011

இப்படியும் ஒரு மனைவி, இப்படியும் ஒரு போலிஸ்


நெல்லை: பாளையங்கோட்டையில் பார்வையற்றவர் மனைவியுடன் முன்னாள் காவலர் ஓட்டம் பிடித்துள்ளார். தனது மனைவியை மீட்டுத் தருமாறு கணவர் நெல்லை எஸ்பியிடம் புகார் கொடுத்தார்.

பாளை கக்கன்நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ராஜ்குமார். பார்வையற்றவரான இவர் நேற்று எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் அளித்த மனுவில் குறிப்பி்ட்டுள்ளதாவது,

எனக்கும், கக்கன்நகரைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்பவருக்கும் கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகன் 8-ம் வகுப்பிலும், மகள் 6-ம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். மனைவி சத்துணவு ஊழியராக வேலை செய்தார். நான் பூத் ஒன்றை நடத்துகிறேன்.

எங்கள் பூத்திற்கு சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த சுப்பையா என்பவர் வருவார். அவர் இன்ஸ்பெக்டர் என கூறி பல இடங்களில் மோசடி செய்ததால் டிஸ்மி்ஸ் செய்யப்பட்டார். அவர் என மனைவியுடன் தொடர்பு வைத்தார்.

இதை நான் கண்டித்ததால் என் மனைவியை அழைத்து கொண்டு சென்று விட்டார். நான் அவர்களை பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. மகளிர் காவல் நிலையத்திலும் புகார் செய்தேன். எனவே பார்வையற்ற எனக்கு எனது மனைவியை மீ்ட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.