இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, December 19, 2010

மறைந்துபோகும் கண்கள்

தாய்மையின் பெயரால் பெண்கள் செய்யும் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பின்வரும் செய்தியில் ஒரு இளம் பெண் காதல் திருமணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டு பிறகு தனது சொந்தப் பிரச்சனைக்காக தான் பெற்ற சிசுவையே கிணற்றில் வீசி கொன்றுவிட்டு பெண்களின் சிறப்புத்தன்மையான தாய்மையை முகமூடியாக்கிக்கொண்டு அப்பாவிபோல நாடகமாடியிருக்கிறார். இதுபோலத்தான் நாட்டில் பல பெண்கள் “பெண்மை”, “தாய்மை” போன்றவற்றை முகமூடியாகப் பயன்படுத்தி பெண்கள் பாதுகாப்பு சட்டங்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு பல அப்பாவிகளை துன்புறுத்திவருகிறார்கள்.

குறிப்பாக படித்த நவநாகரீக மங்கைகள் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கணவனையும் அவனது குடும்பத்தையும் பழிவாங்கி வருகிறார்கள். இந்த கேவலமான நிலையைப் பற்றி நாட்டில் பலருக்கும் தெரியவில்லை. உயர்கல்வி கற்ற ஒரு பெண் தனது திருமணத்தில் தான் வரதட்சணை கொடுத்ததாகக் கூறி திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் மீதும் அவனது குடும்பத்தார் மீதும் வரதட்சணை வழக்குப் போடுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு கள்ளக்காதல் அல்லது வேறு ஏதாவது ஒரு வஞ்சகத்தன்மை கண்டிப்பாக இருக்கும். அதை மறைப்பதற்காக போடப்படும் “அப்பாவிப் பெண்” வேஷத்திற்கு போட்டுக்கொள்ளப் பயன்படுத்தப்படும் முகமூடிதான் “வரதட்சணைக் கொடுமை”. இதைப் பலமுறை பல நீதிமன்றங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கின்றன.

பெண்கள் நாட்டின் கண்கள். அதிலும் இந்தியாவில் பல “குருட்டுக் கண்கள்” இருந்துகொண்டுதான் இருக்கின்றன! அதற்கேற்ப சட்டங்களும் குருட்டுத்தனமாகத்தான் ஒருதலைபட்சமாக இருக்கின்றன. உண்மையான பெண்களுக்கு என்றுதான் மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் கொடுப்பார்களோ?


தாய்மையைப் பயன்படுத்தி நேற்று வந்த பொய்யான செய்தி 1


பொள்ளாச்சி: ரோட்டில் நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்த பைக் கொள்ளையர்கள், அவரது ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசி விட்டு தப்பினர். இதில், குழந்தை பரிதாபமாக இறந்தது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் அருகே அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (27). அதே பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரி (24). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனமலையை அடுத்த தாத்தூரிலுள்ள ஒரு கம்பெனியில் பிட்டராக தர்மாராஜ் பணியாற்றி வருகிறார். இவர்கள் தாத்தூரிலேயே வசித்து வருகி ன்றனர்.

ஆனமலைக்கு சென்று விட்டு நேற்று மதியம் தாத்தூர் திரும்பிய காளீஸ்வரி, தனது ஒன்றரை வயது மகன் சவுந்தர்ராஜை தூக்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந் தார். அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென காளீஸ்வரியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலியை பறித்தனர். காளீஸ்வரி ‘திருடன் திருடன்’ என அலறியதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதைப் பார்த்த கொள்ளையர்கள், காளீஸ்வரியின் கையில் இருந்த குழந்தை சவுந்தர்ராஜனை பிடுங்கிக் கொண்டு பைக்கில் புறப்பட்டனர்.

பொதுமக்கள் சிலர் அவர்களை பிடிக்க விரட்டினர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கொள்ளையர்கள், கையில் இருந்த குழந்தையை அங்குள்ள பொது கிணற்றில் வீசி எறிந் தனர். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனடியாக கிணற்றில் இறங்கி குழந்தையை மீட்டனர்.

படுகாயமடைந்த குழந்தையை ஆனமலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து, ஆனமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

======

முகத்திரையைக் கிழித்துக்காட்டும் இன்றைய உண்மை செய்தி 2

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தாத்தூரை சேர்ந்த தர்மராஜ் மனைவி காளீஸ்வரி(24). இவர் நேற்று மதியம் ஆனைமலைக்கு சென்றுவிட்டு, ஒன்றரை வயது மகன் சவுந்தர்ராஜை தூக்கி கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு கிணறுக்கு சற்று தொலைவில் திடீரென காளீஸ்வரி கூச்சல் போட்டார். பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தனது 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டதாகவும், குழந்தையை கிணற்றில் வீசி சென்று விட்டதாகவும் கூறி கதறி அழுதார்.

ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பைக்கில் வந்த வாலிபர்கள் பற்றி விசாரித்தபோது காளீஸ்வரி முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் போலீசாரிடம் காளீஸ்வரி கூறியதாவது: நானும் தர்மராஜும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இதனால் இருவரது பெற்றோரும் எங்களை ஒதுக்கி வைத்தனர். எனது பெற்றோர் என்னை பார்க்க வருவதில்லை. இதனால் மனம் உடைந்தேன். ஒரு ஜோதிடரிடம் கேட்டபோது, இந்த குழந்தை பிறந்தநேரம் சரியில்லை. அதனால்தான் குடும்பத்துடன் சேர முடியவில்லை என தெரிவித்தார். பெற்றோரிடம் சேருவதற்காக குழந்தையை கிணற்றில் வீசினேன் என்று கூறி உள்ளார்.

இதுபோன்ற வஞ்சக எண்ணம் கொண்டவர்கள் பொய்வழக்குப்போட கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். தங்களை அபலைப்பெண்ணாக காட்டிக்கொள்வதற்காக தயங்காமல் எந்த வேஷம் வேண்டுமானாலும் போட்டுக்கொள்வார்கள். அதன்விளைவாக வெளிப்படுபவைதான் அப்பாவிகள் மீது போடப்படும் பல பொய் வரதட்சணை வழக்குகளும், பொய் கற்பழிப்பு வழக்குகளும்.

Saturday, December 18, 2010

இன்னுமா பெண்ணுரிமையை பறிக்கும் இழிநிலை?

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பெண்ணுக்கு தன் இஷ்டப்படி நடக்க சுதந்திரம் கொடுக்கப்படவில்லையே!

தினமலர் 18/12/2010

காரக்பூர் : மேற்குவங்கத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில், கிராமத்தினர் ஒன்று திரண்டு நடத்திய தாக்குதலில், இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

காரக்பூர் அருகேயுள்ள மத்கத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், அங்குள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் வெளியூரில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே செங்கல் சூளையில் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவருடன், அந்த பெண்ணுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கள்ளத் தொடர்பை விட்டுவிடுமாறு, அந்த பெண்ணை கிராமவாசிகள் எச்சரித்துள்ளனர். இதை பொருட்படுத்தாமல் அந்த பெண் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளார். ஆத்திரமடைந்த கிராமவாசிகள் வீட்டிலிருந்த அந்த பெண்ணை வெளியில் இழுத்து வந்து, சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில், அப்பெண் படுகாயமடைந்து மயக்க நிலைக்கு சென்றார். பயந்துபோன கிராமவாசிகள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தற்போது, காரக்பூர் மருத்துவமனையில் அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னை தாக்கிய கிராமவாசிகள் 11 பேரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். ஆனால், தாக்குதலில் சம்பந்தப்பட்ட 11 பேரும், தலைமறைவாக உள்ளனர். அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த செங்கல் சூளை தொழிலாளிக்கு, கிராம பஞ்சாயத்தில் ஏற்கனவே 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கள்ளக்காம பாதுகாப்பு சட்டப்படி கள்ளக்காமத்தில் ஈடுபடும் பெண் குற்றவாளியாகக் கருதப்படக்கூடாது. ஆனால் மேலுள்ள செய்தியில் பாருங்கள் என்ன ஒரு அநியாயம். ஒரு பெண் கள்ளக்காமத்தில் ஈடுபட்டார் என்பதற்காக கிராமத்தினர் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை மீறி பெண்ணிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. யாராவது இதை பெண்கள் சங்கங்களின் காதில் போட்டுவிடுங்கள்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.



Friday, December 17, 2010

பேருந்தில் 2 இளம் பெண்கள் செய்த சில்மிஷம்

எல்லா இளம்பெண்களுமே அப்பாவிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அதுபோல கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் குற்றம்சாட்டி வரதட்சணை வழக்கு தொடுக்கும் எல்லா பெண்களும் உண்மையாகவே வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லவும் முடியாது. கீழுள்ள செய்தியைப் படித்தபிறகாவது நம்புங்கள். ஆனால் பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் மட்டும் எல்லாப் பெண்களுமே குற்றம் செய்யத் தெரியாதவர்கள் என்று ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தி ஒருதலைபட்சமாக இருக்கிறது!

ஓடும் பஸ்சில் ரூ.12 லட்சம் அபேஸ் செய்த 2 பெண்கள்

தினமலர் 18/12/2010

புதுச்சேரி:பஸ்சில் பயணம் செய்த, ஓய்வுப் பெற்ற ஏட்டிடம் 12 லட்சம் ரூபாயை திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி காமராஜர் நகரில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் குமாரசாமிநாதன்(40). இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு முருகா தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கைக்குழந்தையுடன் வந்த இரண்டு பெண்கள் ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென கூறியுள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததை ஆட்டோ டிரைவர் கவனித்தார். மருத்துவமனை எதிரில் ரோந்தில் ஈடுபட்டிருந்த தனவந்தரிநகர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இரு பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையில் கட்டு, கட்டாக 12 லட்சம் ரூபாய் பணம் இருந்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த ரேகா(23), சூரியா(25) என்பதும், சென்னையில் இருந்து அரசு பஸ்சில் புதுச்சேரிக்கு வந்தபோது, சக பயணியிடம் 12 லட்சம் ரூபாயை திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்கிடையில் கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற ஏட்டு கலியபெருமாள்(60), பஸ்சில் பயணம் செய்த தன்னிடம் இருந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை யாரோ திருடி விட்டதாக தன்வந்தரி நகர் போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து பெண்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 12 லட்ச ரூபாய் பணத்தை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

டிரைவருக்கு பாராட்டு: தன்வந்தரி நகர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், பணத்தை திருடிய பெண்கள் தொடர்பாக சரியான நேரத்தில் தகவல் தெரிவித்து உதவிய ஆட்டோ டிரைவர் குமாரசாமிநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சீனியர் எஸ்.பி., அதுல் கத்தியார், தெற்கு பகுதி எஸ்.பி., நந்தகோபால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ஆட்டோ டிரைவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினர்.



Thursday, December 16, 2010

போதை தரும் இளம் மனைவி!

பெண்கள் நாட்டின் கண்கள்!

படித்த நகரத்துப் பெண்ணுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் ஆயுதம். படிக்காத கிராமப்புற பெண்ணுக்கு கையில் கிடைப்பதெல்லாம் ஆயுதம்! இந்த இரண்டிலுமே குறி தப்பாமல் சிக்குவது ஆண்கள்தான். ஐயோ பாவம்!



பல்லடம் : திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன்(38). இவரது மனைவி கருப்பாத்தாள்(35). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்குமே குடிப்பழக்கம் உண்டு. நேற்றுமுன்தினம் இரவும் இருவரும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் முற்றியது. ஆத்திரம் அடைந்த கருப்பாத்தாள் உருட்டுக்கட்டையால் கணவனின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில், ரத்தவெள்ளத்தில் சாய்ந்த ராஜனை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜன் இறந்தார். போலீசார் கருப்பாத்தாளை கைது செய்தனர்.



Tuesday, December 14, 2010

இந்தியாவில் 4 பேரை மணந்த பெண் 5ம் நபருடன் ஓட்டமா?

சபாஷ் சரியான பெண்மணி!

தினமலர் 15/12/2010

கோவை : தனியார் கல்லூரி பஸ் டிரைவரை ஏமாற்றி, நான்காம் திருமணம் செய்து கொண்ட கேரள பெண், அவரையும் உதறிவிட்டு வேறு துணையுடன் ஓட்டம் பிடித்தார். விஷயமறிந்த டிரைவர், விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அருகேயுள்ள கிணத்துக்கடவு, ஏழூர், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணஹரி(27). சில ஆண்டுகளாக மினி பஸ் டிரைவராக வேலை செய்த இவர், சமீபத்தில் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக பணியில் சேர்ந்தார். அப்போது, கேரளாவைச் சேர்ந்த காயத்ரி (25) என்பவருடன் காதல் ஏற்பட்டு ஆறு மாதத்துக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து சென்ற காயத்ரி, வேறு நபருடன் சென்றுவிட்டார். இதனால், விரக்தியடைந்த சரவணஹரி, நேற்று முன் தினம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், சரவணஹரியை திருமணம் செய்து ஏமாற்றிய காயத்ரி, அதற்கு முன் மூவரை திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது அம்பலமானது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: டிரைவர் சரவணஹரியின் தற்கொலைக்கு காரணமான கேரளாவைச் சேர்ந்த காயத்ரி, ஏற்கனவே மூவரை திருமணம் செய்துள்ளார். காயத்ரியை முதலில் திருமணம் செய்த நபர் இறந்துவிட, இரண்டாவதாக வேறு நபரை திருமணம் செய்துள்ளார்; பிறகு, அவரும் இறந்து விட்டார். மூன்றாவதாக திருமணம் செய்த நபர், காயத்ரியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து பிரிந்து சென்றுவிட்டார். இதையறியாத சரவணஹரி, நான்காம் நபராக காயத்ரியை மணந்துள்ளார். சில நாட்களிலேயே காயத்ரியின் நடத்தையில் சந்தேகமடைந்த சரவணஹரி எச்சரித்துள்ளார். இதனால், இவரையும் விட்டுவிட்டு, ஐந்தாவதாக வேறு நபருடன் அவர் சென்று விட்டார். ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்த சரவணஹரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

=========

இந்தப் பெண்மணியின் சாதனை மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து மூன்று கணவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். போலிசிற்கு கொஞ்சமும் சந்தேகமே வரவில்லை. நல்ல புத்திசாலியானப் பெண்மணி!

மேலுள்ள செய்தியில் திருமணமாகி 6 மாதத்திற்குள் கணவன் தற்கொலை செய்துகொண்டார். அதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால் இதுவே திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் மனைவி இறந்துவிட்டால் (இயற்கை மரணமாக இருந்தாலும்) அது வரதட்சணைக் கொலையாக கருதப்பட்டு போலிஸ், RDO விசாரணை செய்து கணவனையும் அவனது குடும்பத்தாரையும் விசாரணை என்ற பெயரில் கைதியாக சிறையில் அடைத்துவிடுவார்கள். பெண்ணின் பெற்றோர் கொஞ்சம் “லஞ்சம்” கொடுத்தால் போதும் அவ்வளவுதான் வழக்கு உறுதிசெய்யப்பட்டு எந்தவித விசாரணையும் இன்றி குற்றப்பத்திரிக்கை தயார் செய்து கணவனை நீதிமன்றதில் சந்தி சிரிக்கவைத்து நடைபிணமாக மாற்றிவிடுவார்கள். இதுதான் இந்திய நடைமுறை. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள் மனைவி இறந்தால் கணவனுக்கு சங்கு!




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.