இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, August 05, 2010

சொத்துக்காக கணவனைக் கொன்ற மனைவி


பெரம்பலூர்: சொத்தை எழுதித்தர மறுத்த கணவனை, இரும்பு சுத்தியால் அடித்து கொன்ற மனைவி மற்றும் மாமியாருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த சிதம்பரத்தின் (50) மனைவி பெரியம்மாள் (43). பெரியம்மாளுக்கு சிதம்பரம், இரண்டாவது கணவராவார். இவர்களுக்கு, இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் பெயரில் உள்ள சொத்தை, குழந்தைகள் பெயருக்கு எழுதி தருமாறு, பெரியம்மாள் கணவரிடம் கேட்டுள்ளார். "மூன்று பிள்ளையும் எனக்கு பிறக்காததால், நிலத்தை எழுதித்தர முடியாது' என, சிதம்பரம் மறுத்தார். இதை, தன் தாய் செல்லம்மாளிடம் தெரிவித்தார் பெரியம்மாள். இதைக்கேட்ட அவர், "சிதம்பரம் உயிருடன் இருக்கும் வரை, சொத்து கிடைக்காது. இருவரும் சேர்ந்து அவரை கொலை செய்து விடலாம்' என, கூறியுள்ளார். ஏப்., 23, 2007ம் ஆண்டு, இரவு 9 மணிக்கு, வீட்டுக்கு அருகே மாட்டுக் கொட்டகையில் உள்ள கட்டிலில், தூங்கிக் கொண்டிருந்த சிதம்பரத்தை, இருவரும் சேர்ந்து இரும்பு சுத்தியால், தலையில் அடித்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த சிதம்பரத்தை, அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரம்மதேசம் வி.ஏ.ஓ., பெருமாள்சாமி, மங்கலமேடு போலீசில் அளித்த புகாரின்படி, இருவரையும் கைது செய்து போலீசார், சிறையில் அடைத்தனர். பிறகு, இருவரும் ஜாமீனில் வெளி வந்தனர். பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கு, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, "சிதம்பரத்தை கொலை செய்த பெரியம்மாள் மற்றும் இவரது தாய் செல்லம்மாள் ஆகிய இருவருக்கும், தலா ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்' என்றார்.
=================

பணத்திற்காக எதுவும் செய்பவள்தான் கலிகாலத்துப் பெண்ணா? ஆனால் அதையும் நன்றாகத் திட்டமிட்டுத்தான் செய்கிறார்கள்.

Tuesday, August 03, 2010

விவசாயிக்கு உதவிய பெண் சார்பதிவாளர்!

இந்திய விவசாயி நிலத்தை அடமானம் வைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஒரு பெண் அதிகாரி விவசாயியிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார் போலிருக்கிறது. இதுபோன்ற கண்மணிகள்தான் நாட்டிற்குத் தேவையோ?

பெண்கள் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நல்ல கல்வியும் பதவியும் கிடைத்தபிறகு என்ன செய்கிறார்கள்? சட்டங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இல்லாதவரை பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தவறாகத்தான் பயன்படுத்த நினைப்பார்கள். ஏனென்றால் அதுதான் ஆணுக்குச் சமமாக உரிமை கிடைத்ததன் அடையாளம் என்று பெண்ணுரிமை பேசும் கூட்டம் பெண்களுக்குத் தவறான பாடத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது.

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர்

04 Aug 2010 தினமணி

நில அடமானப் பத்திரத்தை பதிவு செய்ய ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நீடாமங்கலம் சார்பதிவாளரையும், அவருக்கு உதவியவரையும் ஊழல் தடுப்புத் துறை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பூவண்ணன் (40), விவசாயி.தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்குவதற்காக தனது நிலத்தின் ஆவணங்களை நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் தாக்கல் செய்து, நில அடமானப்பத்திரம் பதிவு செய்துதர விண்ணப்பித்தார் பூவண்ணன். ஆனால், தேவகி பத்திரப்பதிவு செய்து தராமல் தாமதம் செய்து வந்தாராம்.இந்த நிலையில் பத்திரத்தை பதிவு செய்து தருமாறு தனது நண்பர் நீடாமங்கலம் சோணாப்பேட்டை ஜெயகாந்தனின் உதவியை பூவண்ணன் நாடினாராம். ஜெயகாந்தன் நீடாமங்கலம் சார்பதிவாளர் தேவகியிடம் பேசியதில், பத்திரத்தை பதிவு செய்து தர ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டுமென்று சார்பதிவாளர் தரப்பில் கேட்கப்பட்டதாம். இந்த நிலையில் பூவண்ணன் நாகப்பட்டினம் ஊழல் தடுப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மாணிக்கவாசகத்திடம் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஜெயகாந்தன் லஞ்சப் பணத்தை சார்பதிவாளர் தேவகியிடம் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தேவகியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். உடந்தையாக இருந்த சோணாப்பேட்டை ஜெயகாந்தனும் கைது செய்யப்பட்டார்.





ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்த அரிய உதவி!

சிறுசேமிப்புத் துறை அதிகாரி பணத்தை எப்படி பெரிய அளவில் சேமிப்பது என்று செயல்முறை விளக்கம் கொடுத்திருக்கிறார்!

சிறுசேமிப்பு பிரதிநிதியாக இருந்து சுயமாக உழைத்து சம்பாதிக்க நினைத்த ஒரு பெண்ணுக்கு, அதிகாரியாக இருக்கும் மற்றொரு பெண் வழிகாட்டியாக இல்லாமல் எப்படி நடந்திருக்கிறார் என்று பாருங்கள். பெண்ணால்தான் மற்றொரு பெண்ணுக்கு ஆபத்து. ஆனால் இந்திய சட்டங்கள் ஆண்கள்தான் எப்போதும் பெண்களை துன்புறுத்துவதாக சொல்கிறது.

எங்கும் பெண்கள்! எதிலும் பெண்கள்!! ஆணுக்குப் பெண் சளைத்தவர் அல்லர். எத்துறையிலும் நன்றாகவே முன்னேறிவிட்டார்களே!

லைசென்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது

ஆகஸ்ட் 03,2010 தினமலர்

திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசன்ஸ் புதுப்பிக்க 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரும், கலெக்டர் நேர்முக உதவியாளருமான திலகமணியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி:திருச்சியில் சிறுசேமிப்பு ஏஜன்ட் லைசென்ஸ் புதுப்பிக்க, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனர், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி கனகா, அரசின் சிறுசேமிப்புத்துறை ஏஜன்டாக பணிபுரிகிறார். மூன்றாண்டுக்கு ஒருமுறை, லைசென்சை புதுப்பிக்க வேண்டும்.கடந்த 31ம் தேதியோடு லைசென்ஸ் முடிய உள்ளதால், ஒரு மாதத்துக்கு முன்பே, ஏஜன்ட் லைசென்சை புதுப்பிக்க கனகா, துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.அங்கிருந்து அவரது விண்ணப்பம், திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத்துறை உதவி இயக்குனரின் ஒப்புதலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து கனகா, நேற்று முன்தினம், திருச்சியில் உள்ள சிறுசேமிப்புத் துறை உதவி இயக்குனர் திலகமணியிடம்(46) விவரம் கேட்டார்.அதற்கு அவர், "500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் ஒன்றும், 1,000 ரூபாயும் லஞ்சம் கொடுத்தால் தான், லைசென்சை புதுப்பிக்க முடியும்' என கூறினார். 500 ரூபாய்க்கான தேசிய சேமிப்பு பத்திரம் வாங்கிக் கொடுத்த கனகா, நாளை வந்து 1,000 ரூபாய் தருவதாகக் கூறி, திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி கனகா, நேற்று காலை, சிறுசேமிப்பு உதவி இயக்குனர் திலகமணியிடம் 1,000 ரூபாய் கொடுத்தார். அதை வாங்கும் போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்தனர்.அவரை கைது செய்ததோடு, பொன்னகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி, பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணம், பணம், நகை கைப்பற்றப்பட்டது.திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலகமணி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) என்பது குறிப்பிடத்தக்கது.






பாலியல் வன்கொடுமையை ஆண்கள் ஆதரிக்கிறார்களா?

செய்தியைப் மேலோட்டமாகப் படித்ததும் ஏதோ ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் ஏற்படும். அப்படித்தான் பல ஆண்டுகளாக ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உண்மையை யாரும் இதுவரை அறிந்திருக்கமாட்டார்கள். இந்தப் பதிவை முழுதுமாக கடைசிவரை படித்துப்பாருங்கள். பிறகு இதுபோல செய்தித்தாள்களில் வரும் செய்தி எப்படி மேலோட்டமாக எழுதப்பட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது என்று உங்களுக்கே புரியும்.



புதுடில்லி : "குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டு வரப்படவுள்ள பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா, பெண்களுக்கு சாதகமாகவும், ஆண்களுக்கு பாதகமாகவும் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, ஆண்களுக்கான அமைப்பு ஒன்று கோரியுள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில், "பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதா' இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இம்மசோதா, "அலுவலகங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை விசாரிக்க, அவற்றின் தலைமையாதிகாரி உட்பட பெண்கள் பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்ட விசாரணை கமிட்டி அமைக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பரிந்துரைக்கிறது. இந்நிலையில் டில்லியை சேர்ந்த "தி சேவ் இந்தியன் பேமிலி பவுண்டேஷன்' என்ற ஆண்களுக்கான அரசு சாரா அமைப்பு ஒன்று, இம்மசோதா தற்போதைய நிலையில் நிறைவேற்றப்பட கூடாதென, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இது குறித்து அவ்வமைப்பின் பொதுச்செயலர் நீலாத்ரி சேகர் தாஸ் கூறியதாவது: பெண்கள் எப்போதும் பொய்யே பேச மாட்டார்கள் என்றும், ஆண்கள் பிறக்கும் போதே "கிரிமினல்'களாக தான் பிறக்கின்றனர் என்றும் அம்மசோதா கருதுகிறது. ஆனால், பெண்களால் ஆண்களும் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இம்மசோதா, பெண்களுக்கே சாதகமாக அமைந்துள்ளது. அதனால், இருபாலினத்தவரையும் சமமாக மதிக்கும் முறையில் மசோதா திருத்தப்பட வேண்டும். இதன் தற்போதைய வடிவம், இந்திய அரசியல் சாசனத்தின் 15வது பிரிவின், மத அல்லது பாலின ரீதியில் பாகுபாடு காட்டப்படக் கூடாதென்ற உரிமைக்கு எதிராக அமைந்துள்ளது. பெண்களுக்கு தேவையில்லாமல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

மசோதா கூறியுள்ள இத்தகைய கமிட்டிகள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஏற்கனவே உள்ளன. அந்த கமிட்டியில் இடம் பெறுபவர்களுக்கான அடிப்படை தகுதியாக, ஒருவர் பெண்கள் நலம் குறித்து கவலை கொள்பவராக இருந்தால் போதும் என்று மசோதா கூறுகிறது. பெண்களே பெரும்பான்மையாக உள்ள கமிட்டியில் எப்படி ஆண்களுக்கான நீதி கிடைக்கும்? ஆண்கள் குற்றம் செய்யக் கூடாதென கூறும் மசோதா, பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர், அவர்களையும் விசாரிக்க வேண்டுமென்பதை ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? பெண்களால், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கற்பனை செய்திகளின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது, அபாயகரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி விடும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும், ஆண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளையும் நடவடிக்கை ரீதியாகவோ, சம்பவ ரீதியாகவோ சம நோக்கில் பார்க்க கூடாதென, அமைச்சகம் கருதுகிறது. இது தவறு. இவ்வாறு நீலாத்ரி சேகர் தாஸ் தெரிவித்தார்.


ஒருதலைபட்சமான முடிவுகள் ஏன் ஆபத்தானது என்று கீழுள்ள வீடியோவில் பாருங்கள் புரியும்.


மேலுள்ள செய்தியில் இந்தியக் குடும்பப் பாதுகாப்பு இயக்கம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்பதற்கான உண்மையையும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை எந்த செய்தித்தாளிலும் வெளிவராது. இந்தியப் பெண்களுக்கும் தெரியாது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களுக்குத் தெரியாமல் உண்மை வேறுவிதமாக திசைதிருப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு உண்மை நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப சட்டங்களை இயற்றவேண்டும். பெண்கள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பெண்கள் நல வாரியத்திற்கு இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சரியான ஆலோசனை வழங்குவதுதான் வேலை. ஆனால், பெண்கள் வாரியத்தில் நடக்கும் விஷயங்களோ மிகவும் நம்பமுடியாதவையாக இருக்கின்றன.

இதுபோன்ற பெண்கள் தொடர்பான ஆய்வுக்கு நிதிவேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கணக்கில்லாமல் கொடுக்கிறார்கள். ஆனால் அப்படி ஒதுக்கப்படும் நிதியில் ஆராய்ச்சி உண்மையாகவே நடத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

இது போன்று பல ஆண்டுகளாக நடக்கின்ற இந்த அரிய உண்மையை 2008 - 2009 ஆண்டிற்கான தேசிய மகளிர் வாரியத்தின் வரவு செலவிற்கான தணிக்கை அறிக்கையில் இந்திய தணிக்கை வாரியம் கண்டுபிடித்திருக்கிறது. அந்த உண்மையை கீழே படித்து உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளுக்கு பெண்கள் தொடர்பான ஆராய்சி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு எந்தவித வரவு செலவு கணக்கும் காட்டப்படவில்லை என்றும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எந்த ஆராய்ச்சி முடிவுகளையும் மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்திருக்கிறார். கொடுத்த பணத்தைப் பற்றி மகளிர் வாரியமும் கண்டுகொள்ளவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் மீது ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்




உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது பெண்கள் தொடர்பான பல சட்டங்கள் அடுக்கடுக்காக எப்படி, ஏன் இயற்றப்படுகிறது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். இதுபோன்ற பல வெளிவராத உண்மைகள் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் வெளிவரும். இந்தியாவில் பெண்களை வைத்து நடக்கும் வியாபாரம் மிகவும் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு பலியாக்கப்படுவது அப்பாவி ஆண்கள்.

பெண்களே விழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக இயற்றப்படும் ஒவ்வொரு சட்டத்திற்குப் பின்னாலும் பலகோடி வருமானம் யாருக்கோ கிடைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கடைசியில் அழியப்போவது உங்களது குடும்பங்கள்தான். இப்படி உருவானவைதான் IPC498A, Domestic Violence Act போன்றவை.

தேசிய மகளிர் வாரியத்தில் எந்தவிதமான செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்று மகளிர் வாரிய முன்னாள் உறுப்பினர் ஒருவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.



Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.





Sunday, August 01, 2010

இந்திய மனைவியும் பிச்சைக்காரியும் சமம்?

ஆகஸ்ட் 01,2010, தினமலர்

புதுடில்லி : "கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இல்லத்தரசிகள் பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் அவர்களை பிச்சைக்காரர்களோடும், சிறைவாசிகளோடும் ஒப்பிட்டு கணக்கெடுப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. வருந்தத்தக்க இல்லத்தரசிகளின் மதிப்பை மறுநிர்ணயம் செய்யும் நேரம் இப்போது வந்துள்ளது. பார்லிமென்ட் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், அருண் அகர்வாலும் அவரது 39 வயது மனைவி ரெனுவும் தங்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, உ.பி., மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து நேரிட்டு, ரெனு இறந்து போனார்.அருண், தன் மனைவியின் உயிரிழப்புக்கு , 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்று கோரி, வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாணையமும், அலகாபாத் ஐகோர்ட்டும் அவரது மனுவை நிராகரித்து விட்டன.அவை தமது தீர்ப்பில்,"ரெனு ஓர் இல்லத்தரசி. அவருக்கு மாதந்தோறும் வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், அவரது குடும்பம் அவரைச் சார்ந்தும் இல்லை. அதனால் அவரது மதிப்பு மாதத்துக்கு 1, 250 ரூபாய்தான் பெறும்' என்று கூறிவிட்டன.

மோட்டார் வாகன சட்டம் 1988ன்படி, ஓர் இல்லத்தரசியின் மதிப்பு, அவரது வருமானம் ஈட்டும் கணவரின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அவை சுட்டிக் காட்டியிருந்தன.இதனால் அருண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அவரது வழக்கை ஏற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரெனுவின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ஆறு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டது.மேலும், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:கடந்த 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை, இந்தியாவின் 36 கோடி பெண்களை, வருமானம் ஈட்டாதவர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.

பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் சேர்த்ததைப் போலவே அவர்களோடு இல்லத்தரசிகளையும் சேர்த்தது, உணர்ச்சியற்ற செயல். இது தொழிலாளர்களையும், பெண்களையும் அவமானப்படுத்துவதாகும்.அதேநேரம், இதேபோல் நடக்கும் பாலியல் ரீதியிலான பாகுபாடு நம்மைக் கவலை கொள்ளச் செய்கிறது. ஓர் இல்லத்தரசியின் வீட்டுவேலைகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அவரது பொருளாதார மதிப்பை, மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் இதர சட்டங்கள் வழங்குவதற்கான வழிவகையைக் கொண்டு வர வேண்டிய தருணம் இது. இதுகுறித்து பார்லிமென்ட் சிந்திக்க வேண்டும்.

சட்டங்கள், இல்லத்தரசிகளின் வேலைகளான சமையல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளைக் கவனித்தல், தண்ணீர் எடுத்து வைத்தல் போன்றவற்றை ஒரு வேலையாகவே கருதவில்லை என்பதை ரெனு தொடர்பான வழக்கு நமக்கு காட்டுகிறது. இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் செலவிடும் நேரத்தை ஒரு பணியிலோ அல்லது அவர்களது கல்வியிலோ செலவிட முடியும் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அவர்களது வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான், பெண்கள் மத்தியில் வறுமை அதிகரிக்கவும் சமுதாயத்தில் அவர்களின் துயரம் தொடரவும் காரணமாகின்றன.ஒரு மூன்றாம் நபரை சம்பளத்துக்கு அமர்த்தி வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதை விட, இல்லத்தரசிகளின் பணி மிகவும் உயர்ந்தது. ஒரு சமையல்காரருக்கு தரும் சம்பளம் அல்லது கடையில் வாங்கும் உணவுக்குக் கொடுக்கப்படும் பணம் அல்லது ஒரு குடும்பத்துக்கு வேண்டிய உணவை வாங்க செலவிடப்படும் பணம் என்ற அடிப்படையில் இல்லத்தரசிகளின் சமையல் பணி மதிப்பிடப்பட வேண்டும்.இல்லத்தரசிகளிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருள் கூட, ஓர் இல்லத்தரசி அல்லது பெற்றோர் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

=============

பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் என்று வெளியே பேசிக்கொண்டிருக்கும் கூட்டம் இத்தனை ஆண்டுகள் பெண்களை எப்படி நடத்திவருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். பெண்களுக்கு இயற்றப்படும் சட்டங்களும் இப்படித்தான். பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கையைத்தான் அழிந்துக்கொண்டிருக்கின்றன.

இதுவரை இந்த இழிநிலை தேசிய பெண்கள் வாரியத்திற்கோ, பெண்கள் அமைச்சகத்திற்கோ ஏன் தெரியவில்லை. பொய் வழக்குப் போடும் மருமகள்களை ஊக்குவிக்கும் விதமாக அடுக்கடுக்காக சட்டம் இயற்றும் இந்தக் கூட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் இழிநிலை ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? இந்த உண்மை பெண்களின் உரிமைக்காகப் போராடுகிறோம் என்று சொல்லும் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தங்களின் சுயநலம் காரணமாக அதை மூடிமறைத்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது அப்பாவிப் பெண்கள் தெரிந்துகொள்ளுங்கள் - உங்களை வைத்து எல்லோரும் வியாபாரம்தான் செய்வார்களே தவிர எந்தவிதத்திலும் உங்கள் மரியாதையைக் காப்பாற்றமாட்டார்கள்.

பெண்களுக்குச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றுகிறேன் என்பதும், 33% ஒதுக்கீடு கேட்கிறேன் என்பதும் இதுபோன்றதொரு பிரித்தாலும் வியாபார தந்திரமே. உண்மையாகவே உதவி தேவைப்படும் அப்பாவிப் பெண்களையும், தவறாக சட்டங்களைப் பயன்படுத்தத் துடிக்கும் மேல்தட்டுவர்க்கப் பெண்களையும் பிரித்தாலும் சூழ்ச்சிதான் இன்றைய பெண்சுதந்திர முழக்கங்கள். கடைசியில் அரசியல் தந்திரங்களால்
கேட்பாரற்று சீரழிக்கப்படுவது என்னவோ அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைதான்.




“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.