இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, June 30, 2010

மனைவி உடையான் துப்பாக்கிக்கு அஞ்சான்!

கீழுள்ள செய்தியைப் படிப்பதற்கு முன்பு இந்த சட்டத்தைப் படித்துக்கொள்ளுங்கள். பிறகு செய்தியில் சொல்லப்பட்டுள்ள பெண் இந்திய சட்டப்படி எந்தத்தவறும் செய்யவில்லை என்று உங்களுக்கே புலப்படும்.

IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man (எந்த கேனைப் பயலாவது தனது மனைவி அடுத்தவனுடன் சல்லாபம் செய்ய அனுமதி தருவானா? என்ன ஒரு விந்தையான சட்டம் !), such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

மனைவியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற விவசாயி கைது
ஜூன் 30,2010 தினமலர்

ஓசூர்: அஞ்செட்டி அருகே கள்ளக்காதல் தகராறில், கள்ளக் காதலனை, காதலியின் கணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த மாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிக்கய்யா (37). அவரது மனைவி ராதா (32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு அருகே வசிப்பவர் விவசாயி அண்ணாதுரை (34). அவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

அண்ணாதுரைக்கும், ராதாவுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவன் இல்லாத நேரங்களில் ராதா, அண்ணாதுரையுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை உறவினர்கள் மூலம் கேட்டறிந்த சிக்கய்யா, மனைவியை கண்டித்ததோடு, அண்ணாதுரையை வீட்டுக்கு வரக்கூடாது என, எச்சரித்தார். ஆனால், அண்ணாதுரை, சிக்கய்யா வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டுக்கு சென்று ராதாவுடன் உல்லாசமாக இருந்தார்.

நேற்று முன்தினம் சிக்கய்யா வெளியூர் செல்வதாகக் கூறி விட்டு, வீட்டை விட்டு சென்றார். இரவு 9 மணிக்கு திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் அண்ணாதுரையும், ராதாவும் ஒன்றாக இருந்தனர். சிக்கய்யாவை பார்த்ததும், அண்ணாதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆத்திரமடைந்த சிக்கய்யா, மனைவியை அடித்ததோடு, வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அண்ணாதுரை வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த அவரை, சிக்கய்யா நாட்டுத் துப்பாக்கியால் 17 முறை கோபம் தணியும் வரை சுட்டார். அதில், அண்ணாதுரை சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். சிக்கய்யா அங்கு இருந்து தப்பியோடி தலைமறைவானார்.

தகவல் அறிந்த அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் அண்ணாதுரையை சிக்கய்யா துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. நேற்று காலை அஞ்செட்டியில் இருந்து வெளியூர் தப்பிச் செல்ல முயன்ற சிக்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கணவர் இந்திய சட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார் போலிருக்கிறது. கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணை தண்டிக்கக்கூடாது என்று இந்திய சட்டமே சொல்லியிருக்கிறது. அதனால்தான் சட்டத்தை மதித்து கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆணை மட்டும் இந்த அப்பாவி கொன்றிருக்கிறார் போலிருக்கிறது.



Monday, June 28, 2010

வரதட்சணை கொடுப்பது தவறு என்று சொன்ன ஒரு உண்மையான பெண் நீதிபதி!

1961ல் இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி வரதட்சணை கொடுப்பதும் தவறு என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அப்படி இந்த சட்டத்தின் மூலம் ஒருவர் கூட தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் பெண்கள் அமைப்புகள் வரதட்சணைக் கொடுமை இன்னும் நாட்டில் இருக்கிறது என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டத்தை மதிப்பதும் கிடையாது, ஒழுங்காக செயல்படுத்துவதும் கிடையாது. இதுதான் இந்திய நாட்டு சட்டங்களின் நடைமுறை. இதனால்தான் நாட்டில் பல அவலநிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ஏதோ ஒரு சிலர் மட்டுமே நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நாட்டில் இன்றும் எப்போதாவது மழை பொழிகிறது.
தில்லியில் உள்ள ஒரு பெண்நீதிபதி வரதட்சணைகொடுப்பவரும் தண்டிக்கப்படவேண்டும் என்று சட்டத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி நீதிபதி என்ற பதவிக்கு உரிய மரியாதையை கொடுத்திருக்கிறார். இதுபோல அனைத்து காவல் மற்றும் நீதித்துறையை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதித்து ஒழுங்காக செயல்படுத்தினால்தான் நாட்டில் பெண்களின் நிலை உயரும்.

பெண்களை எப்போதும் இழிநிலையில் இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கூட்டம் சட்டங்களை ஒருதலை பட்சமாக செயல்படுத்தி ஆண்களை குற்றவாளிகளாகக் காட்டி பெண்களை தவறு செய்ய தூண்டி அவர்களை எப்போதும் கீழ்நிலையில் வைத்திருக்கத்தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் பெண்களின் நிலை தரம்தாழ்ந்திருந்தால்தான் வெளிநாடுகளில் இவர்களைக் காட்டி பணம் கேட்கமுடியும். அவர்களும் ஐயோ பாவம் இந்தியாவில் பெண்களின் நிலை மோசமாக இருக்கிறதென்று அந்த பெண்ணுரிமை பேசும் அமைப்புகளுக்கு பணம் தருவார்கள். அதனால்தான் இன்றுவரை அந்த வரதட்சணை தடுப்புச் சட்டம் ஒருதலை பட்சமாக செயல்படுத்தப்படுகிறது.


Giving dowry an equal crime, says court

Express News Service Mon Jun 28 2010

Observing that the anti-dowry law has been reduced to a ''paper tiger'' due to the bride's family giving away dowry in many cases, a court here said they also need to be prosecuted like the groom's family to eliminate the social evil.

New Delhi : While laws prohibiting dowry not only forbid receipt but also giving it, a city court, in a significant observation, held that the brides’ families are to be blamed for rendering the social welfare legislation largely ineffective.

“It is unfortunate that the legislation (Dowry Prohibition Act) has been reduced to a mere paper tiger. What is more unfortunate is that the family of the woman (involved in the marriage) is responsible for the non-accomplishment of this legislation,” Additional Sessions Judge (ASJ) Kamini Lau noted.

To meet the objectives of the law, not only the grooms’ families but also the brides’ must be booked for giving dowry in the name of social obligation, the court said.

“Dowry is a two-way traffic and unless there is a giver there can be no taker... In order to eliminate this evil both the giver and taker have been made liable under the Act. It is not possible to leave one and book the other,” ASJ Lau said.

“It is time this social welfare legislation is ruthlessly implemented and none is permitted to take the shield of social compulsion. This has become all the more necessary in order to check the misuse and abuse of special laws,” she added.

The court also said expensive gifts given by relatives to a couple before and after marriage must be brought to the notice of the authorities for levying of taxes.

The court made the observations while dismissing the plea of a woman seeking to quash criminal proceedings initiated against her family for giving of dowry following a complaint by her husband who faced dowry harassment charges. The woman had challenged the order by a Metropolitan Magistrate in October last year, who had directed the registration of an FIR against her family members for giving dowry for her marriage in April 2008.




Tuesday, June 15, 2010

(கள்ளக்)காதலை எதிர்க்காதீர்கள்

தாயைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்! என்று வீர முழுக்கமிட்ட நாட்டில் இப்போது வயதான தாய்மார்கள் அஞ்சி வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆண்கள் தான் எப்போதும் குற்றம் செய்பவர்கள் என்று ISI முத்திரை குத்தப்பட்டுள்ள நாட்டில் பெண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்று காட்டிவிட்டார் இந்த மருமகள்.


கள்ளக்காதலை எதிர்த்த தாயை கொன்ற மகன், மருமகள் கைது
தினமலர் ஜூன் 16,2010

திருநெல்வேலி: நெல்லை அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த தாயை அடித்துக்கொன்ற மகன், மருமகள் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்துள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ்(48). இவர் வள்ளியூர் பி.எஸ்.என்.எல்.,அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி மல்லிகா(42). அங்குள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு பணியாளராக உள்ளார்.

இருவரும் பணிக்கு சென்ற நிலையில் ஜூன் 3ம் தேதி, கனகராஜின் தாயார் ஈனமுத்தம்மாள்(72), பகலில் ரத்தக்காயத்துடன் கிடந்தார். மருமகள் மல்லிகா, அவரை நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் ஈனமுத்தம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஈனமுத்தம்மாள் அடித்துக்கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. யாரோ மர்மநபர்கள் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்து ஈனமுத்தம்மாளை தாக்கியிருக்கலாம் என மல்லிகா புகார் கொடுத்தார். ஆனால் வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளைபோகவில்லை. இருப்பினும் மல்லிகாவின் புகாரில் சந்தேகம் இருப்பதை உணர்ந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது துப்புதுலங்கியது. கனகராஜின் தம்பி சங்கரபாண்டி, நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். அவருக்கும் மல்லிகாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கனகராஜ் வேலைக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி அண்ணன் வீட்டுக்குவந்துசென்றுள்ளார். சம்பவத்தன்றும் சங்கரபாண்டியும், மல்லிகாவும் ஒன்றாக இருப்பதை பார்த்த ஈனமுத்தம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சங்கரபாண்டி, பெற்ற தாய் என்று கூட பாராமல் கம்பியால் அடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதற்கு மல்லிகாவும் துணையாக இருந்துள்ளார். நேற்று இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Monday, June 14, 2010

குடும்பங்களைக் கலைத்தால் என்ன நடக்கும்?

எல்லா பொய் வரதட்சணை வழக்குகளிலும் எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் புகாரை பதிவு செய்து அப்பாவிகளை கைது செய்வது. பிறகு விசாரணை எதுவுமே செய்யாமல் கடனே என்று விசாரணை அறிக்கை என்ற பெயரில் முதல் தகவல் அறிக்கையில் இருக்கும் விஷயத்தை அப்படியே காப்பி செய்து நீதிமன்றத்திற்கு அனுப்பி அப்பாவிகளை அலைக்கழிப்பது போன்ற செயல்களை செய்தால் என்ன நடக்கும்? அடுத்தவர் குடும்பத்திலும் அப்பாவிக் கணவன், குழந்தை, வயதான பெற்றோர் என்று எல்லோரும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.


குடும்பச் சண்டை காரணமாக சென்னையில் பெண் போலீஸ்காரர் தீக்குளித்துத் தற்கொலை

Thats Tamil ஜூன் 14, 2010

சென்னை சிந்தாதிரிப்பேட்டை போலீசில் முதல் நிலை காவலராக வேலை பார்த்தவர் சங்கீதா. இவரது கணவர் முத்து கிருஷ்ணன் எழும்பூர் போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ராஜா அண்ணாமலைபுரம் வல்லீஸ்வரர் கார்டன் பகுதியில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் சண்டை நடந்து வந்தது.

நேற்று முன்தினம் காலையும், கணவன் மனைவிக்கு இடையே சண்டை மூண்டது. மனைவியை திட்டி விட்டு முத்துக்கிருஷ்ணன் வெளியே போனார்.

கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனம் உடைந்த சங்கீதா வீ்ட்டில் தீக்குளித்து விட்டார். உடல் கருகிய நிலையில் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குசிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் சங்கீதா.

சங்கீதாவின் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், எனது கணவர் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார் சங்கீதா.

இதுகுறித்து அபிராமபுரம் போலீஸாரும், ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகின்றனர்.

Saturday, June 12, 2010

பொய் சொல்லலாம் வாங்க (இளம் மனைவியருக்கு மட்டும்)

இந்தியாவில் எல்லாமே பெண்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதுவேண்டுமானாலும் செய்யலாம், எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இப்போது நவநாகரீக பெண்களிடையே வளர்ந்து வருகிறது. கீழுள்ள செய்தியில் பாருங்கள் விவாகரத்து வேண்டும் என்பதற்காக ஒரு பெண் பச்சையாக பொய் பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் குழந்தையின் மனதிலும் தந்தைக்கு எதிராக நஞ்சை விதைத்திருக்கிறார்.

இதுபோல நடப்பதற்கு முழுக் காரணம் இந்திய அரசாங்கத்தின் தவறான சட்டங்கள் ஆகும். பெண்கள் எது சொன்னாலும் அதை தலையில் தாங்கிக்கொண்டு உடனடியாக கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சிறையில் அடைக்கும் விதமாக இயற்றப்பட்டுள்ள வரதட்சணை தடுப்புச் சட்டங்களும். பிறகு அந்தப் பெண் பொய் கூறி கணவனின் குடும்பத்தை சிறையில் அடைப்பதற்காகவே சட்டத்தைப் பயன்படுத்தினார் என்று தெரிந்தாலும் அந்தப் பெண்ணை தண்டிக்காமல் தட்டிக்கொடுத்துக் கொண்டிருப்பதும்தான் இதுபோன்ற பொய் சொல்லும் பெண்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டு சட்டங்கள் தந்தையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்திய நாட்டு சட்டங்களைப் பொறுத்தவரை தந்தை என்பவன் ஒரு "Sperm Donor" மட்டுமே. குழந்தைகளின் நலனில் அவனுக்கு எந்தவித உரிமையையும் இந்திய சட்டங்கள் கொடுப்பதில்லை. காவல், நீதிமன்றங்களில் கூட ஒரு பெண் குழந்தையைக் காட்டி கண்ணீர் விட்டால் ஐயோ பாவம் குழந்தையை எடுத்துக்கொள் என்று கூறி தந்தை என்பவன் அவனது குழந்தையைப் பொறுத்தவரை “ஒரு விருந்தாளி” (Visitation only) என்று தீர்ப்பளித்துவிடுகிறார்கள்.

கடைசியில் பொய் சொல்லி தான் பெற்ற குழந்தைகளின் வாழ்வை அழிக்கும் சதிகாரர்களாகத்தான் பெண்களை இந்திய பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

பச்சைப் பொய் சொல்லும் மனைவி

தினமலர் 12 ஜூலை 2010

மும்பை : குழந்தைகள் "டிவி' பார்ப்பதற்கு தந்தை தடை விதித்ததில் தவறு இல்லை என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.புனேயைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மனைவி விவாகரத்து கேட்டு, மும்பை குடும்ப நல கோர்ட்டில் 2003 ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். மேலும், தனக்கு ஜீவனாம்ச தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்றும், தனது குழந்தைகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்றும் கோரினார்.

இதுதொடர்பாக தொழிலதிபரின் மனைவி, தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு மும்பையில் கடந்த 1991ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி திருமணம் நடந்தது. ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, என் கணவர் வேறுபட்ட குணங்களைக் கொண்டவர் என்று தெரிய வந்தது.அவருக்கு சந்தேக குணமும் இருந்தது. என்னை உறவினர்களுடன் பேசக் கூட அனுமதிக்கமாட்டார். பிறந்த வீட்டுக்கும் அனுப்ப மாட்டார். எதிலும் லேசில் திருப்தி அடையமாட்டார்.

வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும், அதிலும் ஏதாவது குறை கண்டுபிடிப்பார். குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்வார். அவர்களை "டிவி' பார்க்கவே அனுமதிக்க மாட்டார். அப்படியே அனுமதித்தாலும் இந்தி நிகழ்ச்சிகளை மட்டும் சிறிது நேரம் பார்க்க விடுவார். பின்னர், முன்னதாகவே அவர்களை படுக்கைக்கு அனுப்பி விடுவார்.பொம்மைகளை வைத்து, மற்ற குழந்தைகளுடன் விளையாடவும் அனுமதிக்க மாட்டார். பொம்மைகளை எடுத்து மறைத்து வைத்து விடுவார். குழந்தைகளுக்கும், எனக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும் அள வுக்கு அவரது நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக, அவர் தனது 12 வயது மகளை கோர்ட்டில் ஆஜர் படுத்தினார். அந்த சிறுமியும், தாய்க்கு ஆதரவாக சாட்சியமளித்தாள். ஆனால், குறுக்கு விசாரணையின்போது அந்த சிறுமியின் பதிலில் அந்தத் தந்தை, அந்த குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பது தெரிய வந்தது.எனினும், அந்த சிறுமி மைனர் என்பதால் அவளது சாட்சியத்தை கோர்ட் ஏற்கவில்லை. அந்த பெண்ணின் விவாகரத்து மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இதுதொடர்பாக கோர்ட் தனது தீர்ப்பில் கூறியதாவது:அந்த தந்தை குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும் தந்தையாகவும் இருந்துள்ளார். தனது குழந்தைகளை ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் வளர்க்க முனைந்துள்ளார்."டிவி' பார்ப்பதற்கும், எலக்ட்ரானிக் பொம்மைகளை பயன்படுத்துவற்கும் தடை விதித்ததில் எந்தவிதமான தவறும் இல்லை. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டே, அவரது நடவடிக்கைள் இருந்துள்ளன. இதில் மன உளைச்சல் ஏற்படுவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை. மேலும் இந்தப் பெண் குற்றச் சாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் கொடுக்கத் தவறிவிட்டார். துரதிஷ்டவசமாக, அந்த பெண் தனக்கு விவாகரத்து வேண்டும் என்பதற்காக தனது 12 வயது மகளை, தனக்கு ஆதரவாக கட்டாயப்படுத்தி பேச வைத்துள்ளார். அவரின் இந்த செயல் கண்டிக்கத் தக்கது.இவ்வாறு மும்பை ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


விவாகரத்திற்காக சொல்லிய பொய்யை இந்தப் பெண் அப்படியே ஒரு புகாராக எழுதி காவல் நிலையத்தில் கொடுத்திருந்தால் இந்நேரம் IPC498A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்தக் கணவர் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார். அந்தப் புகார் உண்மையில்லை பொய் என்று சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு 5-6 ஆண்டுகள் ஆகியிருக்கும். அதற்குள் கணவன் ஒரு வழி ஆகியிருப்பான். ஆனால் கடைசியில் இதே தீர்ப்பைத்தான் சொல்லுவார்கள். பொய் சொன்ன பெண்ணை கண்டிக்கிறோம் என்று சொல்லிவிட்டு பத்திரமாக அந்தப் பெண்ணை வழியனுப்பி வைப்பார்கள். இதுதான் இந்திய நாட்டு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள். பொம்பள பொய் சொன்னால் தப்பு இல்லை என்று உறுதியாக நம்பும் ஒரே நாடு இந்தியா!

இப்படித்தான் இந்தியாவில் வரதட்சணை வழக்குகள் IPC498A, Dowry Prohibition Act, Domestic Violence Act போன்ற பிரிவுகளில் பதிவுசெய்யப்படுகின்றன.



“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.