இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, April 30, 2013

அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!

பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கும் கூட்டம் அதிகமானவுடன் பெண்ணுரிமை எப்படியெல்லாம் தறிகெட்டு அலைகிறது!  காதலனை கைப்பிடிக்க கூலிப்படை வைத்து அத்தை மகனை கொலை செய்திருக்கும் இந்த இளம் பெண்ணின் வீரத்தை என்ன சொல்வது?

கொலை செய்ய தூண்டியது காதல் ; கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது
 
மே 01,2013 தினமலர்


திருப்பூர்: திருப்பூர் அருகே, காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அத்தை மகனை கொலை செய்ய தூண்டிய கல்லூரி மாணவி உட்பட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுட்டன், 27; கட்டட தொழிலாளி. இவருக்கும், இவரது மாமா மகள், அவிநாசியைச் சேர்ந்த, சத்யா, 23, என்பவருக்கும், வரும், 6ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. சத்யா, திருப்பூரில் உள்ள கல்லூரியில், இரண்டாமாண்டு எம்.ஏ., படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த, 25ம் தேதி, குண்டடம், சித்தூர் பிரிவு அருகே, ஆனந்தகுட்டன், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், மொபைல் போன் எதுவும் திருடப்படவில்லை.

இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், ஹேமா தலைமையில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சத்யா, திருப்பூர் செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன், அத்தை மகன் ஆனந்தகுட்டனுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காதலனை மறக்க முடியாத சத்யா, ஆனந்தகுட்டனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த, 25ம் தேதி, திருப்பூருக்கு, ஆனந்தகுட்டனை வரவழைத்து, திருமண விஷயம் எனக் கூறி, மணிகண்டனுடன், ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அவர்களுடன், ஜெய்நகரைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார், 21, விவேக், 21 மற்றும் 10ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார், 16 ஆகியோரும் சென்றுள்ளனர்.

கோமங்கலம் அருகே, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மணிகண்டன், இரும்பு ராடால், ஆனந்தகுட்டனை தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கொலை செய்துள்ளார். உடன் வந்த, மூன்று பேரின் உதவியுடன், உடலை ஆட்டோவில் ஏற்றி, குண்டடம் அருகே வீசி சென்றுள்ளார். இவர்கள், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, தாராபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 ===========

கொசுறு செய்தி:  அமெரிக்காவில் இப்போது கருத்தடை மாத்திரை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் 15 வயது சிறுமி முதல் அனைவருக்கும் தாராளமாக கிடைக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துவிட்டது.  நம்ம ஊருக்கு எப்போது இந்த புதிய பெண்ணுரிமை நடைமுறைக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம். காமத்தீயில் ஏங்கிக் கொண்டிருக்கும் பல இளம்பெண்களுக்கு கலாச்சாரம் கட்டுப்பாடு என்ற பிற்போக்குத்தனத்தால் இதுபோன்ற உரிமைகள் கிடைக்க தாமதமாகிறது.  இந்தியாவிற்கு மேலும் பல புதிய பெண்ணுரிமை சட்டங்கள் தேவைப்படுகிறது. பெண்ணுரிமைவாதிகள் கவனிப்பார்களா?

The U.S. government is moving the morning-after pill over the counter but only those 15 and older can buy it -- an attempt to find middle ground just days before a court-imposed deadline to lift all age restrictions on the emergency contraceptive. (Fox News.com)

Friday, April 19, 2013

மனைவி கையால் கலந்து கொடுக்கும் மதுவை கணவன் அருந்தலாமா?

ஆண்கள் குடித்து மகிழ வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தி வருகிறது.  இந்த இன்பத்திற்கு மேலும் இன்பமூட்ட மனைவி கையால் அந்த மதுவை சரியான விகிதத்தில் கலந்து  அதை வாங்கி அருந்தினால் மேலும் இன்பம் கிடைக்கும் என்று கணவன்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் கணவர்களுக்கு இந்த செய்தி. 

இந்திய கள்ளக் காதல் சட்டப்படி கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவி குற்றவாளி கிடையாது.  இப்படி சட்டமே குற்றவாளி இல்லை என்று சொல்லும்போது கள்ளக் காதலில் ஈடுபடும் மனைவியை கணவன் தடுக்க நினைப்பது சட்டப்படி சரியாகுமா? என்று பல மனைவியர்கள் நினைக்கிறார்கள்.  இப்படி மனைவியின் கள்ளக்காதல் உரிமையில் தலையிட்டு மனைவியின் பெண்ணுரிமையை பறிக்க முற்பட்ட ஒரு கணவருக்கு தக்க பாடம் கற்பிக்க எண்ணிய அவரது மனைவி கணவனுக்கு அன்பாக மது கொடுத்திருக்கிறார்.  அந்த மதுவில் அவர் கலந்தது அன்பா அல்லது இந்திய கள்ளக்காதல் சட்டமா?

IPC497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man , such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.

கணவரை கொல்ல மதுவில் விஷம்: தவறுதலாக குடித்த மற்றொருவர் பலி
 
ஏப்ரல் 20,2013 தினமலர்

ராமநாதபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, விஷம் கலந்த மது கொடுத்து மனைவி கொல்ல முயன்றார். தவறுதலாக விஷமதுவை மற்றொருவர் குடித்து இறந்தார். இதுதொடர்பாக, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் காட்டூரணியை சேர்ந்தவர் கண்ணன். இவரது நண்பர் முனீஷ்குமார், 27. கட்டட பணி செய்த இருவரும் நண்பர்கள். அடிக்கடி, நண்பர் வீட்டுக்கு சென்றவந்த முனீஷ்குமாருடன், கண்ணன் மனைவி வனிதாவுக்கு, 24, கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த கண்ணன், இருவரையும் கண்டித்தார். கள்ளக்காதலுக்கு, இடையூறாக இருந்த கணவரை, கொலை செய்ய, வனிதா திட்டமிட்டார். இதற்கு, கள்ளக்காதலன் முனீஷ்குமார் உதவினார்.

குடிப் பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி, கண்ணனை கொலை செய்ய, முடிவு செய்தனர். கடந்த 16ம் தேதி, கண்ணன், குடித்து விட்டு, மீதி வைத்திருந்த பிராந்தியில், பூச்சி மருந்தை கலந்தனர்.

அன்று இரவு, மீதி சரக்கை குடிக்க, தேவிப்பட்டினம் அருகே இலந்தைக் கூட்டத்தைச் சேர்ந்த, ராதன் என்பவர் வீட்டிற்கு, அந்த மது பாட்டிலுடன் கண்ணன் சென்றார். அங்கு தாராளமாக மது பறிமாறப்பட்டதால், கண்ணன் கொண்டு சென்ற சரக்கை, யாரும் குடிக்கவில்லை. அது, அங்கேயே கிடந்தது. கடந்த, 17ம் தேதி, ராதன் வீட்டிற்கு சென்ற அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன், வெஸ்லி உட்பட சிலர் மது அருந்தினர். மது விருந்துக்கு, கடைசியாக வந்த ரமேஷ் என்பவருக்கு, சரக்கு கிடைக்கவில்லை. இதனால், கண்ணன் முந்தின நாள் கொடுத்து வைத்திருந்த மதுவை, ரமேஷ் மட்டும் குடித்தார். சிறிது நேரத்தில், அவர் மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம், அவர் இறந்தார். தேவிப்பட்டினம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ரமேஷ் குடித்த மது பாட்டிலை, போலீசார் பரிசோதனைக்கு அனுப்பினர். அதில், விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது. பாட்டிலை கொடுத்த கண்ணனிடம், போலீசார் விசாரித்தனர். தெடர்ந்து நடந்த விசாரணையில், உண்மை வெளியானது. இதையடுத்து, வனிதா மற்றும் முனீஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர்.

Sunday, April 14, 2013

கழிவறையில் வாழ்க்கை - தவறான பாதையில் சரியாக செல்லும் மக்கள்

சமீபத்தில்  நடந்த டில்லி சம்பவத்தை மிகப்பெரிய தேசிய பிரச்சனையாக  பெரிதாக்கி உலக அளவில் பிரபலப்படுத்தி அவசர அவசரமாக பல ஒருதலைபட்சமான சட்டங்களை இயற்றிய அரசாங்கம் இவை எல்லாவற்றிற்கும் ஆணிவேராக இருப்பது “ஊழல்” என்று தெரிந்தாலும் அதனை ஒழிக்க உடனடி சட்டம் இயற்ற பல ஆண்டுகளாக தயக்கம் காட்டிக் கொண்டிருக்கிறது. 

இந்த விஷயம் பலருக்கும் தெரிந்தாலும் வழக்கம்போல நாம் இந்தியர்கள் என்று பெருமையாக ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்கும் குடிகளுக்கு நடுவே மனித நேயம் வளருமா அல்லது தேய்ந்துபோகுமா? என்று எண்ணிப் பார்த்தால் பின்வரும் செய்தியில் பதில் இருக்கிறது.

தேசிய அளவில் புற்றுநோய் போல பரவியுள்ள ஊழலை ஒழிக்க எந்த இந்தியக் குடியும் விளக்கேந்தி சட்டம் இயற்றும்வரை ஓயமாட்டோம் என்று போராடவில்லை! இதுபோன்ற போராட்டங்கள் செய்தித்தாளுக்கு ஒரு நாள் செய்திபோலத்தான் இன்றும் இருக்கிறது.

ஒரு கற்பழிப்பிற்காக அடுக்கடுக்காக பல சட்டங்களை அவசரமாக எழுதிய அரசாங்கம் பல ஆண்டுகளாக ஒழிக்கத்தவறிய ஊழலால் ஒரு அப்பாவிக் குழந்தை பொதுக் கழிவறையில் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? 

இந்திய மண்ணில் பிறந்தால் லஞ்ச ஊழலால் அப்பாவிகளின் வாழ்க்கை கழிவறையில்தான் தள்ளப்படும்  என்று இந்தக் குழந்தை எதிர்காலத்தில் எண்ணிவிடுவதற்குள்ளாவது லஞ்ச, ஊழல் வழக்கில் சிக்குபவருக்கு மரண தண்டனை என்று சட்டம் எழுத  நேர்மையானவர்கள் இருக்கிறார்களா?
இந்த கர்பிணிப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை இனி எந்த ஒரு பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்று லஞ்சத்தை ஒழிக்க உடனடியாக ஒரு கடுமையான சட்டம் எழுதுவார்களா?  அல்லது “இளம் பெண்கள்” மட்டும்தான் பெண்களாக தலைவர்களின் கண்களுக்குத் தெரியுமா?

சேலம்:சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.

சேலம் அரசு மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த லட்சுமி, 27, என்ற பெண் பிரசவத்துக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று அதிகாலை, 4:30 மணியளவில் வந்தார். அவருடன், கணவர் சாமுவேல், 33, குழந்தைகள் வெங்கடேஷ், நவீன் வந்தனர்.பெயர் விவரங்களை வாங்கிய ஊழியர்கள், 1,000 ரூபாய் பணம் இருந்தால் தான் சிகிச்சை கிடைக்கும் என, கூறியுள்ளனர். பணம் கொடுக்க வழியில்லாமல் தவித்த அவர், பழைய பேருந்து நிலையம் அருகே வந்து அமர்ந்துள்ளார். தொடர்ந்து, பிரசவ வலி அதிகரித்ததால், தவித்துள்ளார்.அங்கு வந்த பண்ணாரி என்ற பெண், மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு லட்சுமியை அழைத்துச் சென்று, பிரசவம் பார்த்தார். காலை, 11:00 மணிக்கு, லட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவமனைக்கு லட்சுமி கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து, லட்சுமி கூறியதாவது:விஜயவாடாவில் இருந்து பிழைப்புக்காக, எட்டு மாதத்துக்கு முன், சேலம் வந்தோம். பழைய பேருந்து நிலையம் அருகில் தங்கி, கிடைத்த வேலையை செய்தோம். வெங்கடேஷ், நவீன் என, இரு குழந்தைகள் உள்ளனர்.மூன்றாவதாக கர்ப்பம் தரித்த நான், நேற்று அதிகாலை காலை, 4:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்கு சென்றேன். அங்கிருந்தவர்கள், 1,000 ரூபாய் கேட்டனர். பணம் இல்லை என, கூறியதால், எனக்கு சிகிச்சையளிக்காமல் வெளியில் அனுப்பி விட்டனர்.பழைய பேருந்து நிலையத்தில் பண்ணாரி என்ற பெண், எனக்கு பிரசவம் பார்த்தார்.இவ்வாறு, அவர் கூறினார்.

பண்ணாரி கூறுகையில், ""லட்சுமியின் தவிப்பை உணர்ந்து, நானே பிரசவம் பார்த்து, குழந்தையை வெளியில் எடுத்தேன். தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர்,'' என்றார்.

அரசு மருத்துவமனை டீன் வள்ளிநாயகம் கூறுகையில், ""இந்த பிரச்னை தொடர்பாக, கலெக்டர் விளக்கம் கேட்டுள்ளார். பிரசவ வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர்களிடம், நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.
உதவி கேட்க வந்த இடத்தில் உதவி :

சேலம் மாவட்டம், ஆத்தூர் தேவியாக்குறிச்சியைச் சேர்ந்தவர் பண்ணாரி, 55. மாற்றுத்திறனாளி கணவருக்கு, கலெக்டரிடம் உதவித்தொகை கேட்பதற்காக, சேலம் வந்தார். நாளை (இன்று) நடக்கும் மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், பிரசவ வலியால் தவித்த லட்சுமிக்கு, பண்ணாரி பிரசவம் பார்த்துள்ளார். யாரும் உதவிக்கு வராதபோது, தனி ஆளாக, கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய அவரை, அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.