இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, December 27, 2012

காவல்துறை சொன்னால் இளம் பெண்கள் கேட்பார்களா?

பல தவறான குடும்ப அழிப்பு சட்டங்கள் மூலம் கூட்டுக் குடும்பங்களை ஒழித்து வயதில் மூத்தவர்களை பொய் வரதட்சணை வழக்குகள் மூலம் வீட்டை விட்டே விரட்டியடித்துவிட்டார்கள். 

இப்போது குடும்பங்களில் அறிவுரை சொல்ல மூத்தவர்கள் யாரும் கிடையாது.  அதனால் இளம்பெண்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்கள்.  இது அவர்களின் தவறு கிடையாது. குடும்பங்களில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனதுதான் காரணம்.

ஆனால், இதுபோன்ற திசைகெட்டு செல்லும் பெண்களை சரியாக தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல பெண்கள் நல வாரியமும், பெண்கள் அமைச்சகமும் புதுப் புது சட்டங்களை இயற்றி வருகிறார்கள்.  இவர்களது இப்போதைய புதிய சட்டப்படி பெண்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அதனை விமர்சனம் செய்தால் “பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின்” கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.



மகளை நல்வழிப்படுத்த முயற்சிக்கும் தந்தை மீது “குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின்” கீழ் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பலாம்.  இவையெல்லாம் பெண்ணுரிமை என்கிறார்கள்.

இப்போது  பிரதமர் காவல்துறையை பெண்களுக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்.  அவர்கள் என்ன புத்திமதி சொல்ல முடியும்? அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று உலகத்திற்கு சொல்லிய இந்திய நாட்டில் குடும்பங்களை ஒழித்துவிட்டு காவல்துறை மூலம் பெண்களுக்கு புத்திமதி சொல்லச் சொல்கிறார்கள். நல்ல வேடிக்கை!!! இன்னும் நிறைய இருக்கிறது. ஒவ்வொன்றாக பார்க்கத்தானே போகிறோம்.
தினமலர் 27 டிசம்பர் 2012

புதுடில்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் இளம் பெண்களுக்கு பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது குறித்து சில அறிவுரைகளை வழங்கிட வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் டில்லியில் ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனை கண்டித்து டில்லியில் முக்கிய பகுதிகளில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு போலீசார் அறிவுரை வழங்க வேண்டும்
இந்நிலையில் ஐ.பி.எஸ். அந்தஸ்து பெற்ற அதிகாரிகள் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அவர்களிடம் உரையாற்றிய பிரதமர் ‌மன்மோகன்சிங் கூறியதாவது: போலீஸ் என்றால் பொதுமக்களிடையே தவறான கண்ணோட்டம் ஏற்படக்கூடாது. இதனை தவிர்க்க வேண்டும். போலீசாரின் பணி சட்டம் ,ஒழுங்கை பாதுகாப்பது தான். இதில் அவர்களுக்கு தலையாய பொறுப்பு உள்ளது. அதே நேரத்தில் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படக்கூடாது. மனித உரிமை பாதுகாக்க வேண்டும்.நாட்டில் உள்ள பல்வேறு சமூக குற்றங்களை தடுப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானது. பாலியல் பலாத்கார சம்பவங்கள் உள்‌ளிட்ட சமூக குற்றங்கள் நடப்பது ஏன் என்பன குறித்து மனதத்துவ ரீதியில் கண்டறிய வேண்டும்.

இது போன்ற கொடூர செயல்கள் கொண்ட மனப்போக்கினை ஒழித்து கட்ட வேண்டியது அவசியம்.நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்திட போலீசார் பெண்‌களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.



மேலும் பொது இடத்தில் பெண்கள் நடந்து ‌கொள்ள வேண்டியது குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கியும், எது நல்லது? , எது கெட்டது? என்பதனை போலீசார் எடுத்து கூற வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு போலீசார் நல்ல ஆலோசகராக , நண்பனாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் ‌மன்மோகன்சிங் கூறினார்.

கொசுறு செய்தி:
ஆந்திர மாநில காவல்துறை தலைவர் சொன்னது: பெண்கள் கற்பழிப்புக்கு காரணம் ஆண்களல்ல

Sunday, December 23, 2012

கணவன்களைக் கொல்ல வசதியான நாடு இந்தியாவா!

கள்ளக்காதல், கணவனின் சொத்தை அபகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் மனைவியருக்கு தடையாக இருக்கும் கணவர்களை கொல்வதற்கும், பொய் வரதட்சணை குற்ற வழக்கு மூலம் சிறையில் அடைப்பதற்கும் பல இந்திய சட்டங்கள் உதவுகின்றன என்பதை நன்கு தெரிந்துகொண்டு பல இந்திய மனைவியர் இந்த வழிமுறைகளை பல காலமாக பக்குவமாக செயல்படுத்தி வருகிறார்கள். 

இந்த ரகசியம் இப்போது உலகளவில் பரவி வேறு நாட்டு மனைவியரும் தங்களது கணவரைக் கொல்ல இந்தியாவிற்கு சுற்றுலா கிளம்பிவிட்டார்கள் போலிருக்கிறது.  சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தனக்குத் தேவையில்லாத கணவனை இந்தியாவில் தூக்கியெறிந்துவிட்டு தனது சுகபோக வாழ்வை  சுவிஸ் நாட்டில் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.  இந்த உண்மைகளை தெரிந்துகொண்ட சுவிஸ் நாட்டு அரசாங்கம் அந்தப் பெண்ணுக்கு சிறைத்தண்டனை அளித்திருக்கிறது.

அது சுவிஸ் நாடு என்பதால் ஆண், பெண் என்ற பேதமின்றி நேர்மையாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.  இந்தியாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம்.  இந்திய அரசாங்கம் இந்த சம்பவம் பற்றி கவலைப்பட்டதாகவோ, எந்த நடவடிக்கையும் எடுத்ததாகவோ செய்தியில் குறிப்பிடப்படவில்லை.  மொத்தத்தில் கணவனைக் கொல்ல ஏற்ற நாடு இந்தியா என்று  எண்ண வைத்துவிட்டார்களே!

டில்லியில் கணவரை தனியாக தவிக்க விட்ட வங்கி அதிகாரிக்கு நான்கு ஆண்டு சிறை
 
டிசம்பர் 24,2012 தினமலர்

லண்டன்:மாற்று திறனாளியான கணவரை, டில்லியில் தனியாக தவிக்க விட்ட, சுவிட்சர்லாந்து வங்கி அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரை சேர்ந்த, 65 வயதான வங்கி அதிகாரி, தனது, 74 வயது கணவரை, 2008ல், இந்தியாவுக்கு சுற்றுலா அழைத்து வந்தார்.

நடக்க முடியாத நிலையில், சக்கர நாற்காலி உதவியுடன் நடமாடும், அவரது கணவரை, டில்லியில் ஒரு வீட்டில் தங்க வைத்து விட்டு, இவர் சுவிட்சர்லாந்தில் சுகபோக வாழ்வு வாழ்ந்தார்.

போதிய ஆதரவில்லாத நிலையில், ஒன்பது மாதத்தில், அவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, டில்லியிலேயே கணவரை அடக்கம் செய்து விட்டார் இந்த வங்கி அதிகாரி.இந்தியாவில், இந்த முதியவரை பராமரித்து வந்த ஊழியர் மூலம், இந்த விஷயம், சுவிஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம், போலீசார் விசாரித்தனர்.

"கணவருக்கு குளிர் ஒத்து கொள்ளாததால், மிதமான வெப்பம் கொண்ட டில்லியில் தங்க வைத்தேன்' என, கூறினார். ஆனால், கணவரை பராமரிக்க மாதம், ஐந்து லட்சம் ரூபாய் செலவிட்டதாக, கணக்கு காட்டிஉள்ளார்.

புதிய சூழலில், போதிய பராமரிப்பின்றி கணவரை இறக்க விட்ட காரணத்துக்காக, இந்த பெண் அதிகாரிக்கு கடந்த ஆண்டு, ஆறு மாதம், சிறை தண்டனை அளிக்கப்பட்டது.ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், இவருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்க கோரினர். இதையடுத்து, தற்போது, வங்கி அதிகாரிக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.


Friday, December 21, 2012

பெண்களை தவறிழைக்கத் தூண்டுவதில் பெரும்பங்கு வகிக்கும் செய்தித்தாட்கள்


இன்றைய செய்தியில் ஏற்கனவே திருமணமான பெண் வேறு ஒரு ஆணை மணந்து அந்த ஆணையும் ஏமாற்றிவிட்டு பெற்ற குழந்தையையும் விட்டுவிட்டு  படிக்கும் வயதில் இருக்கும் ஒரு இளைஞனுடன் ஓடியிருக்கிறார்.  ஆனால் செய்தித்தாள் இந்த செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “திருமணமான பெண்ணுடன் மாணவர் ஓட்டம்”.   எப்படி இருக்கிறது கதை.  வயதில் மூத்த இருமுறை திருமணமான பெண்ணை ஏதோ இந்த இளைஞர் கட்டாயப்படுத்தி இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக செய்தித்தாள் சித்தரித்திருக்கிறது.

இப்படித்தான் மீடியாக்கள் தவறிழைக்கும் பெண்களை அப்பாவி போல சித்தரித்து ஊக்கப்படுத்திவருகிறார்கள்.  அதே சமயம் ஆண்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது உண்மை என்னவென்றுகூட  கவலைப்படாமல் ஆண்களை குற்றவாளி போல சித்தரித்து  பரபரப்பாக  செய்தி வெளியிடுகிறார்கள். 

மொத்தத்தில் பெண்களை சீரழிப்பதில் மீடியாக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.  தெரிந்துகொண்டவர்கள் புரிந்துகொள்வார்கள். 

விலங்குகளிடம் என்றும் மாறாமல் இருக்கும் ஒரு குணமான தாய்மை இப்போது மனிதர்களிடம் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது என்று பின்வரும் செய்தியில் பாருங்கள்.




துவரங்குறிச்சி: திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக உள்ள பெண்ணுடன், இன்ஜினியரிங் படிக்கும் மாணவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகேயுள்ள பில்லுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி, 30. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். இவருக்கும், எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமான, மாலா, 35, என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.மாலாவின் அழகில் மயங்கிய அழகர்சாமி, மாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வீட்டில், வாடகைக்கு குடியிருந்தனர். இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதுராஜேந்திரனின் மகன் கார்த்திக், 18. விராலிமலை அருகேயுள்ள எம்.ஏ.எம்., இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு பி.இ., படித்து வந்தார்.

அழகர்சாமி வேலைக்கு சென்ற பின் வீட்டில் தனியாக இருக்கும் மாலாவுக்கும், "படித்து' கொண்டிருந்த கார்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டது.இருவரும் தனிமையில் சந்தித்து தொடர்பை வலுப்படுத்தி வந்தனர். இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த அழகர்சாமி மற்றும் ராஜேந்திரன், இருவரையும் கடுமையான கண்டித்தனர்.

இவர்கள் சந்திப்பதற்கு தடை விதித்தனர்.ராஜேந்திரன் வீட்டை காலி செய்ய சொன்னதால், அழகர்சாமி வீட்டை காலிச் செய்துவிட்டு, பில்லுப்பட்டிக்கு சென்றுவிட்டார். இதனால் வேதனைக்கு உள்ளான இருவரும், அவ்வப்போது தனிமையில் சந்தித்து, ஊரை விட்டு ஓடிவிட திட்டம் தீட்டினர்.

கடந்த, 15 நாட்களுக்கு முன், மாலா, தனது பெண் குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு, கார்த்திக்குடன் மாயமானார். அழகர்சாமியும், ராஜேந்திரனும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராஜேந்திரன், வளநாடு போலீஸில் புகார் கொடுத்தார்.எஸ்.ஐ., அப்துல் ரகீம் மற்றும் போலீஸார் வழக்குப்பதிந்து, மாயமான கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகின்றனர். ஏற்கனவே, 2 திருமணமாகி, ஒன்றரை வயதில் குழந்தைக்கு தாயான பெண்ணும், இன்ஜினியரிங் மாணவரும் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, December 19, 2012

சோரம் போன மனைவி திருந்துவாளா?

இந்திய கள்ளக்காதல் சட்டப்படி தவறு செய்யும் மனைவி குற்றவாளி கிடையாது.  ஆனால் பின்வரும் செய்தியில் ஒரு கணவர் இந்த விஷயம் தெரியாமல் சோரம் போன மனைவி திருந்துவாள் என்று தனது வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறார்.  

இந்தக் கணவரின்  செய்கை சமூகத்தின் பார்வைக்கு ஒரு வேடிக்கையாகத்தான் இருக்கும்.  ஆனால் கணவன் தனது மனைவியை தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டால் அந்த மனைவி கணவன் வீட்டு முன் தர்ணா என்று செய்தி வெளியிட்டால் அது கணவன் மனைவிக்கு செய்த கொடுமை என்று மக்கள் பேசுவார்கள்.  விந்தையான சமுதாயம்.

டிசம்பர் 20,2012 தினமலர்

லக்னோ:உத்தர பிரதேசத்தில், "சோரம் போன மனைவி, மனம் திருந்தி வரும் வரை, செய்த தவறுகளுக்காக அவள் மன்னிப்பு கேட்கும் வரை, மரத்திலிருந்து இறங்க மாட்டேன்' என, ஒன்பது மாதங்களாக, கணவர் ஒருவர், மரத்தில் ஏறி, போராட்டம் நடத்தி வருகிறார்.

வாரணாசி அருகே உள்ள ராம்காவ் என்ற இடத்தை சேர்ந்தவர், சஞ்சய், 25. இவர் மனைவி, தாரா, 22. சஞ்சய்க்கு, வாரணாசியில் வேலை சரிவர கிடைக்காததால், மனைவி தாராவுடன், மும்பை சென்றார். அங்கு கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு நாள், வழக்கமாக வரும் நேரத்திற்கு முன்னதாகவே, வீடு திரும்பிய சஞ்சய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி தாரா, பக்கத்து வீட்டு வாலிபருடன், படுக்கையில் இருப்பதை கண்டார்.

நிலைமையை புரிந்து கொண்ட அவர், மனைவியை கண்டித்தார். தாராவுடன் வாரணாசி திரும்பினார். அங்கு சென்ற பிறகும், தம்பதிக்குள் இணக்கமான உறவு இல்லை. மும்பை வாலிபர் நினைவாகவே, தாரா இருந்துள்ளாள்.இதனால், அந்த பெண்ணை, அவளின் தாய் வீட்டில் விட்டு வந்த சஞ்சய், மனைவி தாரா மனம் மாற வேண்டும் என அறிவுறுத்தினார். எனினும், அந்த மும்பை இளைஞனை மறக்க முடியாமல் தாரா தவித்தாள்.இதனால் கோபம் கொண்ட சஞ்சய், அவர்கள் வசிக்கும் ஊரின் வெளிப்பகுதியில் இருந்த, மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டார். மரத்தை விட்டே கீழே இறங்குவதில்லை. உணவு, உறக்கம் எல்லாம் மரத்தில் தான்.இந்த தகவல் அறிந்து, சஞ்சயின் உறவினர்கள், அவர் மனைவி, தாராவிடம் பேசிப்பார்த்தனர்.

அவளும் மனம் மாறவில்லை; சஞ்சயும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.மார்ச், 9ம் தேதி, மரத்தில் ஏறிய சஞ்சய், ஒன்பது மாதங்களாக, தன் போராட்டத்தை கைவிடவில்லை. வலுக்கட்டாயமாக யாராவது இறக்க முயன்றால், "மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டுகிறார்.ஆட்கள் யாரும் அருகில் இல்லாத நேரத்தில், மரத்திலிருந்து கீழே இறங்கி, இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்வதும், பிறகு ஏறி உட்கார்ந்து கொள்வதுமாக, ஒன்பது மாதங்களாக, மரத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தி வரும் சஞ்சயை பார்க்க, ஏராளமானோர் வந்த வண்ணமாக உள்ளனர்.எனினும், அவர் மனைவி தாரா மட்டும் மனம் மாறவேயில்லை; போராட்டம் நடத்தும் கணவன் சஞ்சயை சமாதானப்படுத்தவோ, மும்பை வாலிபனை மறக்கவோ இயலாமல், தன் தாய் வீட்டில் தனித்தே வாழ்கிறாள். இதனால், சஞ்சயின் மர போராட்டம் தொடர்கிறது.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.