இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Wednesday, May 30, 2012

498அ x தர்மயுத்தம்: அப்பாவி இந்தியர்களின் வயிற்றெரிச்சல் - புலம்புகிறார் பிரதம மந்திரி

நன்றி: 498அ x தர்மயுத்தம்

498அ x தர்மயுத்தம்: அப்பாவி இந்தியர்களின் வயிற்றெரிச்சல் - புலம்புகிறார் பிரதம மந்திரி

ஊழல் சாம்ராஜ்யத்திற்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே குழு சமீபத்தில் இந்திய பிரதமர் உட்பட பல மத்திய மந்திரிகள் மீது ஊழல் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். இதைக் கண்டு மனம் நொந்துபோன பிரதமர் போதுமான உண்மையை உறுதி செய்யாமல் குற்றம் சாட்டுகிறார்கள் என்று வேதனைப்பட்டு செய்தித்தாளுக்கு அறிக்கை விட்டிருக்கிறார்.

பொய் குற்றச்சாட்டு என்றவுடன் பிரதமருக்கு வலிக்கிறது. ஆனால் தினந்தோறும் பல லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் மீது எந்தவித ஆதாரமும் இன்றி, எந்தவித விசாரணையுமின்றி பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். அதற்குப் பிறகும் எந்தவித புலன் விசாரணையுமின்றி பொய்யான குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் குப்பையாக கொட்டப்பட்டு அப்பாவிகள் தங்கள் மீதுள்ள பொய் வழக்கை எதிர்த்து போராட வாழ்நாள் முழுதும் நீதிமன்றங்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களின் வேதனையைக் கண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இந்த பொய் வழக்குகளை கட்டுப்படுத்துமாறு பல முறை மத்திய அரசிற்கு அறிவுரை கூறியிருக்கிறது. அவற்றையெல்லாம் மத்திய அரசாங்கம் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த 2010ல் கூட இந்திய உச்ச நீதிமன்றம் பொய் வரட்சணை வழக்குகளை இந்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பல அப்பாவிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்பியது. அதை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு விவாகரத்து கேட்கும் பெண்ணுக்கு கணவனின் சொத்தை வாங்கிக் கொடுக்க வழி செய்யும் சட்டத்தை அவசர அவசரமாக மத்திய மந்திரி சபை நிறைவேற்றியிருக்கிறது.
IN THE SUPREME COURT OF INDIA
CRIMINAL APPEAL NO. 1512 OF 2010
(Arising out of SLP (Crl.) No.4684 of 2009)
Preeti Gupta & Another …Appellants
Versus

State of Jharkhand & Another ….Respondents
J U D G M E N T
Dalveer Bhandari, J.

34. Before parting with this case, we would like to observe that a serious relook of the entire provision is warranted by the legislation. It is also a matter of common knowledge that exaggerated versions of the incident are reflected in a large number of complaints. The tendency of over implication is also reflected in a very large number of cases.

35. The criminal trials lead to immense sufferings for all concerned. Even ultimate acquittal in the trial may also not be able to wipe out the deep scars of suffering of ignominy. Unfortunately a large number of these complaints have not only flooded the courts but also have led to enormous social unrest affecting peace, harmony and happiness of the society. It is high time that the legislature must take into consideration the pragmatic realities and make suitable changes in the existing law. It is imperative for the legislature to take into consideration the informed public opinion and the pragmatic realities in consideration and make necessary changes in the relevant provisions of law. We direct the Registry to send a copy of this judgment to the Law Commission and to the Union Law Secretary, Government of India who may place it before the Hon’ble Minister for Law & Justice to take appropriate steps in the larger interest of the society.

இப்போது ஒரு ஊழல் குற்றச்சாட்டு சொன்னவுடனே வலிக்கிறதே, பொய் வரதட்சணை வழக்கில் சிக்கித் தவிக்கும் அப்பாவி பொது மக்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள தானாக இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மட்டுமே வெல்லும்!


குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்விலிருந்து விலக தயார்': மன்மோகன் சிங்

மே 30,2012 தினமலர்
Link
புதுடில்லி: "நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்விலிருந்து விலக, நான் தயாராக இருக்கிறேன்' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டிற்கு, மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நேற்று சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினார்.

அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நான் நிதி அமைச்சராகவும், ராஜ்யசபா எதிர்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறேன். இப்போது, பிரதமராக இருக்கிறேன். எனது வாழ்க்கை, ஒரு திறந்த புத்தகமாகவே இருக்கிறது.நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக, அன்னா ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் துரதிருஷ்டவசமானவை. உண்மையை உறுதி செய்யாமல், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், பொது வாழ்விலிருந்து விலக, நான் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


Monday, May 28, 2012

ஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்

ஃபேஸ் புக் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ தெரியவில்லை. இப்போது அதை பயன்படுத்தி இளம் பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதும், ஆண்கள் இளம் பெண்களை ஏமாற்றுவதும், திருமணமான பெண்கள் கள்ளக் காதலனைத் தேடி குழந்தைகளையும், கணவனையும் விட்டு ஓடுவதும்தான் நடந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு சட்டங்கள்தான் முன்பு ஒருதலைபட்சமாக உதவி செய்து கொண்டிருந்தது. இப்போது ஃபேஸ் புக் இதற்கு நல்ல தளமாக பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் வளர்ச்சிக்கு இணையாக கள்ளக்காதலும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற குடும்பங்களில் பிறக்கும் அப்பாவிக் குழந்தைகள்தான் இந்த வளர்ச்சியில் பாதிக்கப்படுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் செய்தித்தாளில் வந்த செய்தியில் இளம் பெண்கள் ஃபேஸ் புக்கில் அறிமுகமான நபர் கூப்பிட்ட போதெல்லாம் பல ஊர்களுக்கும் சென்று வந்தார்களாம். பிறகு திடீரென்று தனது கற்பு பற்றி நினைவு வந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்களாம் என்று செய்தி வந்திருந்தது. அந்த வரிசையில் இப்போது ஒரு பெண் M.L.A. ஃபேஸ் புக்கில் புரட்சி செய்திருக்கிறார்.


வேலூர் : பேஸ் புக் மூலம் ஏமாந்தது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள், மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கஜித்ரா, "பேஸ்புக்' மூலம், வேலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு என்பவருடன், உல்லாசமாக இருந்து, கற்பை இழந்தார். பின், வேலூர் கூடுதல் எஸ்.பி., முருகேசனிடம் புகார் செய்தார். நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பேஸ் புக் மூலம் கற்பை இழந்த, மேலும் சில பெண்கள், புகார் கொடுக்க வேலூர் வந்திருந்தனர்.


அவர்கள் கூறியதாவது: காயத்ரி, கஜித்ராவை ஏமாற்றிய சதீஷ் மற்றும் ஆனந்த் பாபு, வேறு சில பெண்களையும், அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு நாள், கிழமை என முறை வைத்து, அழைத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்றவாறு பேஸ் புக்கில் தகவல் அனுப்புவர். ஒரு பெண்ணை அழைத்து வருவது, மற்ற பெண்ணுக்கு தெரியாது. இதற்கு ஏற்றபடி, ஊர், லாட்ஜ்களை மாற்றி, மாற்றி தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாசமாக இருந்ததால், இவர்களுக்கு உல்லாசம் மட்டுமே குறிக்கோள் என்ற சந்தேகம், கஜித்ராவுக்கு வந்தது.

இதை காயத்ரி தேவியிடம் சொன்ன போது, அவர் நம்பவில்லை. இதனால், ஆனந்த்பாபுவின் தொடர்பை துண்டித்தபோது தான், வீடியோ பிரச்னை வெடித்து, வேறு வழியின்றி அவர் சொல்லும்படி கேட்க நேர்ந்துள்ளது.ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர், மரைன் இன்ஜினியரிங் படித்து விட்டு, சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனியில் பணிபுரிகிறார். ஆறு மாதம் விடுமுறையில், சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார்.

ஆனந்த்பாபு, பேஸ் புக் விஷயத்தை சொல்லவே, அவரும் சில பெண்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வேலூர், திருவண்ணாமலை, சேலம் என அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளார்.

பின் திலீப், நண்பர்கள் லூயிஸ், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும், பேஸ் புக் மூலம் தகவல் தெரிய வர, அவர்களும் இதே முறையை பின்பற்றி, பல பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில், இவர்கள் உல்லாசமாக இருக்க ஆன செலவுகள் அனைத்தும், அந்தந்த பெண்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கஜித்ரா போல, 16 பெண்கள் சீரழிக்கப்பட்டதாக தெரிகிறது.பேஸ் புக் மோசடியில் சிக்கிய சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர், சில மாதங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில், நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி கைதாகி, ஜாமினில் வந்துள்ளனர். தற்போது, சதீஷ், ஆனந்த்பாபு, திலீப், நித்தியானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர். லூயிஸ், சிங்கப்பூருக்கும், ஆனந்த்ராஜ், பெங்களூருக்கும், சில பெண்களை அழைத்து கொண்டு, உல்லாசமாக இருக்கச் சென்றுள்ளனர். உல்லாசமாக இருக்கும்போது, அதை வீடியோவில் படம் எடுத்தவர் லூயிஸ். இவர் வேலூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரையும் உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

======

திங்கள்கிழமை, மே 28 OneIndia Tamil


சில்சார்: அஸ்ஸாமைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ டாக்டர் ருமி நாத் என்பவர் பேஸ்புக் மூலம் தனக்குக் கிடைத்த காதலரை மணப்பதற்காக தனது கணவரையும் குழந்தையையும் பிரிந்து விட்டு காதலனுடன் ஓடிவிட்டார். மேலும் காதலர் சார்ந்த இஸ்லாம் மதத்திற்கும் அவர் மாறியுள்ளார். அவருக்கும், அவரது காதலருக்கும் திருமணமும் நடந்து விட்டது.

அஸ்ஸாமில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கோலா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏதான் ருமி. இவரது கணவர் பெயர் ராகேஷ் குமார் சிங். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில், பேஸ்புக் மூலம் ஜாக்கி ஜாகிர் என்பவர் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக பழகி வந்தனர். இந்த நிலையில் தனது கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிய ருமி, ஜாகிரையே மணந்து கொண்டு விட்டார்.

முன்னதாக இதுகுறித்து ராகேஷ் குமார் சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில், மருத்துவப் பரிசோதனைக்காக ருமி சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் போயிருந்தபோது அவரை கடத்தி விட்டதாக கூறியிருந்தார். ஆனால் விசாரணையில் இவரது மனைவி, பேஸ்புக் காதலரை மணந்து கொண்ட செய்தி தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதக் கலவரம் வெடித்து விடாமல் தடுப்பதற்காக சில்சார் பகுதியில் சிஆர்பிஎப் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

32 வயதான ருமி, தனது காதலருடன் வங்கதேசத்துக்குப் போய் விட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே ஜாகிரை அவர் மணந்து விட்டார். அவரது திருமண புகைப்படமும் கூட ஏற்கனவே உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஆனால் அதை அப்போது ருமி மறுத்திருந்தார். ஆனால் தற்போது காதலருடன் தலைமறைவாகி விட்ட நிலையில் தனக்கு காதலருடன் கல்யாணம் ஆகி விட்டதை சில நாட்களுக்கு முன்பு அவர் ஒத்துக் கொண்டார்.

இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தது மாநில அமைச்சர் சித்திக் அகமதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து முதல்வர் தருண் கோகாயிடம் முறையிட்டுள்ளார் ராகேஷ் சிங்

தனது இரண்டாவது கல்யாண் குறித்து ருமி கூறுகையில், ஜாகிர்தான் எனது சட்டப்பூர்வமான கணவர். எனக்கும், ராகேஷ் சிங்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விரைவில் நான் விவாகரத்து கோரவுள்ளேன்.

அரசியல் காரணங்களுக்காகத்தான் எனது 2வது கல்யாணத்தை நான் முன்பு மறுத்தேன். சுய விருப்பத்தின் பேரில்தான் நான் மதம் மாறினேன். எனவே இந்து திருமணச் சட்டம் எனக்குப் பொருந்தாது. விரைவில் எனது மகளை நான் எனது பொறுப்பில் சட்டப்படி எடுப்பேன் என்றார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் ருமி. அப்போது அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்தார். இதையடுத்து அவரை பாஜக கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து அவர் காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.