இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, October 25, 2011

புது மணப்பெண்ணின் காதலா! காதலாலா!!


சேலம்: ஒரே சமயத்தில் 2 பேரை காதலித்து வந்த பெண் திருமண நாளன்று ஒரு காதலனை ஏமாற்றிவிட்டு மற்றொரு காதலனை மணந்து கொண்டார்.

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தபிரியா. அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். ரமேஷைக் காதலிக்கையிலேயே வசந்தபிரியாவுக்கு மேட்டூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் மீதும் காதல் வந்தது.

இதையடுத்து அவர் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை காதலித்து வந்தார். இந்நிலையில் கணேஷின் வீட்டிற்கு அவர்கள் காதல் தெரிய வந்து திருமணம் நிச்சயம் செய்தனர். கடந்த 19ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தாலியைக் கட்டிவிட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

வசந்தப்பிரியா தனது குடும்பத்தாருடன் கடந்த 18ம் தேதி மேட்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினார். அதிகாலையில் பார்த்தால் மணப்பெண்ணைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் கணேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

அங்கிருந்து ஓட்டம் பிடித்த வசந்தபிரியா தனது இன்னொரு காதலனான ரமேஷை பழினியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் தம்பதி சகிதமாக மேட்டூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கணேஷ் மற்றும் வசந்தபிரியா குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு வசந்தபிரியாவை கணவனுடன் பார்த்த கணேஷ் மனமுடைந்தார். திருமண ஏற்பாடுகளுக்காக செய்த செலவைத் திருப்பித் தருமாறு கணேஷ் குடும்பத்தார் தகராறு செய்தனர். அந்த 2 குடும்பத்தார்களையும் போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த விஷயத்தை மணமகன் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?






Monday, October 17, 2011

தராளமாக லஞ்சம் வாங்கலாம் - மன்னித்து விடுவார்கள்.

இந்தியாவில் தனது கடமையில் தவறி லஞ்சம் வாங்கி சமுதாயத்திற்கு எதிராக குற்றம் இழைத்தால் மன்னித்து விடுவார்கள். ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் போடப்படும் பொய் வரதட்சணை வழக்குகளில் கணவனையும் அவனது குடும்பத்தையும் கொடிய குற்றவாளியாக சித்தரித்து கைது செய்து சிறையில் அடைக்கும் இந்திய சட்டம். இந்த குடும்பப் பிரச்சனைகள் Cognizable, Non-compoundable, Non-bailable என்ற கொடிய சட்டப் பிரிவில் வருகிறது. என்ன ஒரு முரண்பாடு!


சென்னை:""புகார் கொடுக்க வந்தவரிடம், பணம் வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு, கட்டாய ஓய்வு அளித்தது செல்லும்,'' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சரோஜா.புகார் கொடுக்க வருபவர்களிடம், அதன் மீது நடவடிக்கை எடுக்க பணம் கேட்பதாக, இவர் மீது எழுந்த குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டது. இதை அடுத்து செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி., சரோஜாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து, உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில், சரோஜா மனு தாக்கல் செய்தார். பின், இம்மனு ஐகோர்ட் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை அதிகாரியின் அறிக்கையை ஏற்றுக் கொண்டு, சரோஜாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து, செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், லஞ்ச நடவடிக்கைக்கு முறையான தண்டனை, பணி நீக்கம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் மனுதாரரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கட்டாய ஓய்வு அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

முதல் தகவல் அறிக்கையை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டதாகவும், பணம் பெற்ற பின் நகல் அளித்ததாகவும், விசாரணையின் போது சரோஜாவின் முன்னிலையிலேயே சுரேஷ்பாபு என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது சாட்சியம் உறுதியானது. சாட்சியத்தை ஏற்றதற்கான காரணங்களை விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்படி ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியும் செயல்பட்டுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

Thursday, October 13, 2011

வரதட்சணை சட்டங்களைப் பற்றி கிராமப்புறங்களில் விழிப்புணர்ச்சி தேவை!

வரதட்சணை தடுப்புச் சட்டங்களைப் பற்றியும், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்கள் பற்றியும் பல பெண்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லை என்பது பின்வரும் செய்தியின் மூலம் தெரிகிறது.

நகர்ப்புறங்களில் இருக்கும் இந்த சட்ட விழிப்புணர்ச்சி கிராமப் புறங்களில் சரியாக பரவவில்லை போலிருக்கிறது!



விழுப்புரம் : கணவருக்குத் தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மாநிலம், குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரிகரன்; இவரின் மனைவி நிஷாந்தினி,24. இவர்கள், கடந்த 2004ல், காதல் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில மாதங்களில் அரிகரன், வெளிநாட்டில் வேலைக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், நிஷாந்தினிக்கும், விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த பக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி,28, என்பவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. நிஷாந்தினி, தன் முதல் திருமணத்தை மறைத்து, கடந்த ஜூன் 12ம் தேதி, விநாயகமூர்த்தியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், வெளிநாட்டிலிருந்து வந்த அரிகரன், மனைவி இரண்டாம் திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தான் வாங்கிக் கொடுத்த பொருட்களைத் திரும்பத் தருமாறு, நிஷாந்தினியிடம் அவர் கேட்டபோது, இருவரிடையே தகராறு ஏற்பட்டது.

முதல் திருமணம் பற்றி விநாயகமூர்த்திக்குத் தெரிந்ததால், மனமுடைந்த நிஷாந்தினி, கடந்த 8ம் தேதி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். பலத்த காயத்துடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். கண்டமங்கலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.



Wednesday, October 12, 2011

என்ன செய்யலாம்?

இது மகாராஷ்டிர மாநிலத்தின் செய்தி....

மும்பை: மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் ஐகோர்ட் நீதிபதியின் மகள் மனிஷா மாஷே லஞ்சம் வாங்கிய வழக்கில்‌ கைது செய்யப்பட்டுள்ளார்.

மகராஷ்டிரா மாநில ஐ‌கோட் முன்னாள் நீதிபதியும் மாநில நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தின் தலைவருமான மாஷேயின் மகள் மணிஷா. இவர் வக்கீலாக தொழில் நடத்தி வருகிறார்.

இவர் தேசியநுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தி்ல் உள்ள வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட நபருக்கு சாதமாக தீர்ப்பு பெற்று தருவதாக கூறியுள்ளார். இதற்காக லஞ்சமாக ரூ.30 லட்சம் தருவது என முடிவானது. இந்த பணத்தை பெறுவதற்காக பு‌னே வந்த மணிஷாவின் ஆதரவாளர்கள் இருவரை சிபிஐயின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது ‌செய்தனர்.

இது குறித்து ‌தொடர்ந்து கண்காணித்து வந்த சிபிஐயினர் அவுரங்காபாத்தில் வைத்து மணிஷாவை கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மணிஷா போனில் பேசிய விவரங்களையும் பதிவு செய்தனர். இவர்கள் அனைவரிடமும் வரும் 18-ம் தேதி வரை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையில் குற்றம் நிருபிக்கப்படும் பட்சத்தில் குறைந்த பட்சம் 6 மாதம் முதல்அதிகபட்சம் ஐந்தாண்டுகள் வரை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.

இது தமிழகத்தின் செய்தி....



Thursday, October 06, 2011

இளம் பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளுங்கள்

அக்டோபர் 07,2011 தினமலர்

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு பிறகு செய்தியைத் தொடர்ந்து படியுங்கள்.



தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »சொல்கிறார்கள்

கருத்துக்கள்...

"பெண்கள் மனோபாவம் மாறிவிட்டது!
' சென்னையில் திருமண தகவல் மையம் நடத்தும், கீதா தெய்வசிகாமணி:

"இவர் தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ, துக்கமோ, இனி, இவர் கூடத்தான்...!' என்று, வருங்காலத் துணையைத் தன் பாதுகாப்பாக நினைக்கும் மனோபாவம், பெண்களிடம் போய்விட்டது. திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு, இன்று முற்றிலும் மாறிவிட்டது. இப்போது, பல பெண்கள் வேலை, "புராஜெக்ட்' என, வெளியூர், வெளிநாடுகளுக்குப் போய் வருவது, சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை வசதி, சுதந்திர மனப்பான்மை போன்றவற்றை, நம் கலாச்சாரத்திலும் எதிர்பார்க்கின்றனர்; தன்னை யாரும் பேச்சில் கூட கட்டுப்படுத்தக் கூடாது என நினைக்கின்றனர்.

இன்றைய பெண்களிடம், "இது நிச்சயம் வெற்றிகரமான திருமணமாக அமையும்' என்ற நம்பிக்கை இல்லை. நல்ல படிப்பு, நல்ல நிறு வனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் போன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கின்றன. எனவே, மணவாழ்க்கை, 40, 50 வயதிலும் சிறப்பாகவே இருக்கும் என நினைக்காமல், "உயரம் இரண்டு இன்ச்' கூடுதலாக எதிர்பார்க்கிறேன்; கலர் கொஞ்சம் பத்தாது' என, ஏதோ சினிமாவிற்கு ஹீரோவை தேர்ந்தெ டுக்கும் பாணியில், கணவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தனக்கு வரப்போகும் கணவர், நன்கு படித்து, வேலையில் இருக்கிறார்; நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்கு அவரது பெற்றோரின் பொறுமை, தியாகம், அன்பு தான் காரணம் என்ற அடிப்படை உண்மையை மறந்துவிட்டு, "பேரன்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது' என்கின்றனர். முதலில், தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வ பலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து, 20 - 24 வயதுகளில் திரு மணம் செய்து கொள் ளும் பெண்கள், நிச்சயம் வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வர் என்பதில் சந்தேகமில்லை!

மாறிவரும் இந்திய இளம் பெண்களின் மனநிலை
அக்டோபர் 07,2011 தினமலர்


“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.