நெல்லை: முதியோர்க்கு கொடுமைகள் இழைக்கப்படும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது,
முதியோர்களை மதிக்காத போக்கு அதிகரித்து வருகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, சொத்துகளை எழுதிவாங்கிவிட்டு விரட்டி அடிப்பது, அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் புறக்கணிப்பது அதிகரித்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது நாடு முழுவதும் 80 மில்லியன் முதியோர்கள் இருந்தனர். 2025-ம் ஆண்டில் 160 மில்லியன், 2040-ம் ஆண்டில் 324 மில்லியன் முதியோர்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வி்ல் முதியோர்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படும் நகரங்களில் சென்னையும், போபாலும் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
பராமரிப்பு இல்லாத முதியோர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் தொலைபேசி எண் 1253 செயல்படுகிறது.
இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினால் எங்கள் நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்து ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவர். அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதுபோன்று வயதான பெற்றோரை வீட்டிலிருந்து விரட்டுவதில் பல மருமகள்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. திருமணமாகி வந்தவுடன் பெரும்பாலான மருமகள்கள் கணவனை மிரட்டி அவனது பெற்றோரை நிராதரவாக விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போகவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அல்லது கணவனை மிரட்டி அவனது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த கட்டளைகளுக்கு அடிபணியாத கணவர்கள் மீதும் அவர்களது வயதான பெற்றோர்கள் மீதும் பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இது காவல்துறை மற்றும் நீதித்துறையின் ஆதரவோடு அமோகமாக நடந்துகொண்டிருக்கும் அவலம்.
தமிழ்நாடு காவல்துறை புள்ளிவிபரப்படி 2007 முதல் 2009 வரை மருமகள்களுக்கு நடந்திருக்கும் கொடுமை என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைப் பாருங்கள்.
S.NO | HEADS | 2007 | 2008 | 2009 |
1 | CRUELTY BY HUSBAND AND HIS RELATIVES (IPC498A) | 1976 | 1648 | 1460 |
2 | DOWRY PROHIBITION ACT | 368 | 262 | 207 |
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையான 6,63,96,000 பேரில் 1,460 குடும்பங்கள் மட்டும்தான் மனைவியை வரதட்சணைக்காக கொடுமை செய்திருக்கின்றனரா? அல்லது 207 கணவர் குடும்பத்தார் மட்டும்தான் வரதட்சணை வாங்கி திருமணம் செய்திருக்கிறார்களா?
இதைப்படிக்கின்ற ஒவ்வொருவரும் மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள். வரதட்சணை வாங்கி திருமணம் செய்தவனும் அவனது குடும்பமும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்த ஆண்கள் மனைவியின் கட்டளைக்கு அடிபணிந்து பெற்றோரை வீட்டை விட்டு விரட்டாததால் அந்த அப்பாவி ஆண்கள் மீதும் அவரது பெற்றோர்கள் மீதும் மட்டும்தான் இந்த பொய் வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்பது தெளிவாகப் புரியும்.
அதனால் இதுபோன்ற மருமகள்கள் போடும் பொய் வரதட்சணை வழக்குகளுக்குப் பயந்து பல கோழையான ஆண்கள் தங்களது பெற்றோரை வீட்டை விட்டு விரட்டும் நிலை அதிகரித்திருக்கிறது என்பதையே மேலுள்ள செய்தி காட்டுகிறது.
இந்த அவலநிலைக்குக் காரணம் மருமகள்கள் தவறாகப் பயன்படுத்துவதற்காகவே அரசாங்கம் கொடுத்திருக்கும் முறையற்ற வரதட்சணை தடுப்புச்சட்டங்கள்தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்த பொய் வழக்குகளால் பல முதியோர்கள் நாடு முழுதும் சொல்லமுடியாத துயரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு வேதனையான உண்மை.
பெற்றோரையும், மூத்தோர்களையும் தவறான சட்டங்கள் மூலம் துன்புறுத்தும்நாடு மிகவிரைவில் சிதைந்துபோகும்.