எத்துறையிலும் முன்னேறுவோம் என்று சவால் விடும் அளவிற்கு போலிஸ், சிபிஐ, இராணுவம், பாஸ்போர்ட் உயர் அதிகாரி என எல்லாதுறைகளிலும் கொடிகட்டி பறக்கும் இவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இவர்களது முன்னேற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது.இவர்களுக்கு எந்த ஒரு ஒதுக்கீடும் தேவையில்லை. எங்கிருந்தாலும் இவர்கள் ஒளிவீசி பிரகாசமாக முன்னேறுவார்கள். படித்தப் பெண்கள் சட்டங்களைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் கிரிமினல் வேலைகள் செய்வது என்பதை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்தக்காலத்தில் வரதட்சணை சட்டங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இளம் மனைவியர் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்றவர்களைத்தான் ஒடுக்கப்பட்டவர்களாக நினைத்து அரசாங்கம் பல சலுகைகள் செய்துகொண்டிருக்கிறது.கிராமப்புறங்களில் வாழும் உண்மையான அப்பாவிப்பெண்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை.
தினமலர் மார்ச் 12,2010 பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் சி.பி.ஐ., அதிகாரி போல் நடித்து, "ரியல் எஸ்டேட்' உரிமையாளரிடம் பணம் பறித்த, "டிப்-டாப்' பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள சீலக்காம்பட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் (எ) தம்பு; பொள்ளாச்சி சுற்றுப் பகுதிகளில், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகிறார். பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர், தம்புவுக்கு போன் செய்து சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் பொள்ளாச்சி வந்திருப்பதாகவும், தம்புவை பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.அதேபோன்று, தம்புவுக்கு நேற்று முன்தினம் புதிய எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. போனில் பேசிய பெண் தன்னை, சி.பி.ஐ., அதிகாரி சூர்யகலா என்று அறிமுகம் செய்து, "ரியல் எஸ்டேட் வியாபாரத்திற்கு எப்படி பணம் வந்தது, எப்படி சொந்தமாக கார் வாங்கினாய், வருமானவரி முறையாக செலுத்தியுள்ளாயா' என்று சரமாரியாக கேள்வி கேட்டு விசாரித்துள்ளார்.
மறுபடியும் மாலையில் போன் செய்து, பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் திப்பம்பட்டி அருகே நிற்பதாகவும், நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்றும், வெள்ளை நிற டீ சர்ட்டும், நீல நிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருப்பதாகவும் அடையாளம் கூறினார்.அதன்படி, மாலை 6.00 மணிக்கு திப்பம்பட்டிக்கு சென்று ரோட்டோரத்தில் தனியாக காத்திருந்த, சி.பி.ஐ., அதிகாரி சூர்யகலாவை சந்தித்தார்."செய்யும் தொழிலுக்கு முறையாக வருமான வரி செலுத்தவில்லை, அதை கண்டுகொள்ளாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், வீட்டில், சி.பி.ஐ., ரெய்டு நடத்தும்' என, "டிப்-டாப்' பெண்மணி மிரட்டியுள்ளார்.அவரது பேச்சு தோரணையை பார்த்து நிஜ அதிகாரி என்று நம்பிய தம்பு, பாக்கெட்டில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். மீண்டும் போன் செய்யும் போது மீதிப்பணத்தை கொடுக்க வேண்டும் என்று சூர்யகலா எச்சரித்துள்ளார்."டிப்-டாப்' பெண்ணுடன் தம்பு பேசிக்கொண்டிருப்பதை பார்த்த திப்பம்பட்டியைச் சேர்ந்தவர்கள், "அந்த அம்மாவை உங்களுக்கு தெரியுமா? திப்பம்பட்டி ரேஷன் கடையில் கடந்த இரண்டு நாட்களாக அந்த அம்மா விசாரணை செய்து வருகிறார். கோவையில் இருந்து வந்திருக்கும் சிவில் சப்ளை அதிகாரி எனக் கூறி, ரேஷன் கடை பணியாளர்களை மிரட்டி, பொருட்கள் வாங்குபவர்களிடமும் விசாரித்து வருகிறார்' என்று கூறியுள்ளனர்.இதனால் சந்தேகமடைந்த அவர் அந்த பெண்ணை உடனடியாக விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல் கொடுத்ததால், கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
ஒருசில பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்ததால் பணம் கிடைத்துள்ளது. உடல் உழைப்பின்றி எளிதாக பணம் கிடைத்ததால், போலீஸ் போன்று நடித்து பணம் பறிக்க துவங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பேசும் திறமையை பயன்படுத்தி தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்களுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பறித்துள்ளார்.போலீஸ் அதிகாரி போன்று நடித்து பணம் பறித்ததாக, கோவை சிறுமுகை, பேரூர் போலீஸ் ஸ்டேஷன்களில் சூர்யகலா மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சியில், சி.பி.ஐ., அதிகாரி போன்று நடித்து பணம் பறித்துள்ளார்.ஒவ்வொரு இடத்திலும் பெயரை மாற்றி கூறியுள்ளார். கீதா, ராஜேஸ்வரி, சூர்யகலா என்ற பெயர்களில் ஆள் மாறாட்டம் செய்து, அரசு ஊழியர் போன்று நடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே பொழப்பு தான்: சி.பி.ஐ., அதிகாரியாக நடித்த சூர்யகலாவுக்கு, பெற்றோர் நடராஜ் - சத்யா மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். குடும்பத்தை நிர்வாகம் செய்வது சூர்யகலா தான்.
அவர், 15வது வயதில் இருந்து, அரசு அதிகாரிகள் போன்று நடித்துள்ளார்.தனிப்பட்ட பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்ய செல்லும் போது, முக்கிய பிரமுகர்களின் போட்டோக்களை சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் இருந்த மொபைல்போனில் அனைத்து அதிகாரிகளின் மொபைல்போன் எண்களும், அரசியல்வாதிகள், கல்வி நிறுவன உரிமையாளர்களின் போட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
=======================
சண்டிகார்: ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பெண் அதிகாரி ஒருவருக்கு, மோசடி வழக்கு ஒன்றில் ஓராண்டு சிறை தண்டனை வழங்குவதோடு, அவரின் பணிச் சலுகைகளை திரும்ப பெற வேண்டும்' என, ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற
பெண் அதிகாரி மேஜர் டிம்பிள் சிங்லா(37). இவர், ராணுவத்தின் சட்டப் பிரிவில் பணியாற்றினார்.கடந்த 2006ம் ஆண்டு, டேராடூனில், ராணுவ வீரரான ஹவில்தார் சந்திரன் என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றில், ராணுவ கோர்ட்டின் நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக இருக்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், அவர் சந்திரனுக்கு ஒரு வக்கீலின் பெயரை பரிந்துரை செய்ததோடு, அவருக்கு ஆதரவான அதிகாரியான கேப்டன் கமுத் மெய்னி என்பவரை சந்தித்துள்ளார். இது, ராணுவ சட்டப் பிரிவு 52 மற்றும் 63ன் கீழ் குற்றமாக கருதப்படுகிறது.எனவே, வழக்கில் பாரபட்சம் காட்டியதாக டிம்பிள் சிங்லா மீது குற் றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை, ராணுவத்தின் மேற்கு பிரிவைச் சேர்ந்த கர்னல் சஞ்சீவ் ஜோஸ் என்பவர் விசாரித்தார்.இவ்வழக்கில், டிம்பிள் சிங்லா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு காலம் கடும் சிறை தண்டனை மற்றும் அவரின் பணிச்சலுகைகளை திரும்ப பெற, கர்னல் சஞ்சீவ் ஜோஸ் உத்தரவிட்டார்.
தினமலர் July 11, 2009
சண்டிகார்:
உயரதிகாரிகள் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக பொய் புகார் கூறிய பெண் ராணுவ அதிகாரியை, பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும்படி ராணுவ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரியானா, கல்கா என்ற இடத்தில் உள்ள ராணுவ தளவாடப் பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் கேப்டன் பூனம்.
உயரதிகாரிகள் மூன்று பேர் தன்னை பாலியல் ரீதியாகவும், மன அளவிலும் தொந்தரவு செய்ததாக ஒரு ஆண்டுக்கு முன்னர் புகார் கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இருந்தாலும், ராணுவ தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு, ராணுவ கோர்ட்டில் நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் ராணுவ கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் பூனம் வக்கீல் அகர்வால் கூறியதாவது: உயரதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டு கூறியது, ராணுவப் பணி தொடர்பான விஷயங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் கேப்டன் பூனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டை கூறியதற்காக பூனத்தை பணியிருந்து டிஸ்மிஸ் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார்.
===================
போலி ஐ.பி.எஸ்., சாருலதா தினமலர் பிப்ரவரி 16,2010சென்னை :போலி ஐ.பி.எஸ்., அதிகாரி சாருலதாவிற்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. அவரது மோசடிகள் குறித்து மேலும் விவரங்களை அறிய, சாருலதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் ஓ.பி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாருலதா(36). பள்ளி இறுதியாண்டு வரை மட்டுமே படித்துள்ள சாருலதா, ஐ.பி.எஸ்., அதிகாரியைப் போல நடித்து, போலீசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றினார்.இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஒருவர், போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை போலீசார், கடந்த வாரம் சாருலதாவை கைது செய்தனர்.சாருலதாவிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டை, யூனிபார்ம், லேப்-டாப், பென் டிரைவ் மற்றும் போலீஸ் ஆட்கள் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.போலி அடையாள அட்டையில், "கே.சவுதாமணி, உதவி இணைக் கமிஷனர், சென்னை நகரம்' என குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அடையாள அட்டை ஆயுதப்படை போலீசார் பயன்படுத்துவது என கூறப்படுகிறது.
போலி அடையாள அட்டை, 1998ம் ஆண்டு பிப்., 27ம் தேதி வழங்கப்பட்டதாக, பச்சை நிறப் பேனாவால் கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்த போலி அடையாள அட்டையை போலீஸ் அதிகாரி ஒருவர் தான் கையெழுத்திட்டு வழங்கியிருக்க வேண்டும் என்று தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போலீஸ் உடல்திறன் தேர்வு சமீபத்தில் நடந்தது. அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவருடன், சாருலதாவும் வலம் வந்தார். அப்போது, சாருலதாவை போலீஸ் அதிகாரி என நினைத்து, வேலை வாங்கித் தருமாறு அணுகியவர்களிடம், ஏமாற்றி பணம் பெற்றிருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சாருலதாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலீஸ் உடை, எஸ்.ஐ., பயன்படுத்துவது என்பதும் தெரியவந்துள்ளது. தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறிக் கொண்ட சாருலதா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எந்த உடை அணிவார்கள் என்பது கூட தெரியாமல், எஸ்.ஐ., அணியும் உடையை அணிந்து வலம் வந்தார்.சாருலதா போலீஸ் உடையில் சில போலீசாருடன் வலம் வந்ததை பார்த்திருப்பதாக பலர், போலீசில் கூறியுள்ளனர். சாருலதாவுடன் வந்தவர்கள் உண்மையான போலீசாரா அல்லது மற்றவர்களை நம்ப வைப்பதற்காக சாருலதாவை சிலரை போலீஸ் உடையில் தன்னுடன் அழைத்து வந்தனரா என்றும் விசாரணை நடக்கிறது.
சாருலதாவுக்கு கபடிப் போட்டி மூலம், முன்னாள் டி.ஜி.பி., ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி, போலீஸ் துறையில் உள்ள பல அதிகாரிகளுடன் சாருலதா நெருங்கிப் பழகினார். இப்பழக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வெளியில் ஐ.பி.எஸ்., அதிகாரி எனக் கூறி போலீசில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஏட்டுகளுக்கு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்குவதற்கு பட்டியல் தயாரானபோது, இடைச்சொருகல்களாக சிலரது பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், இதில் சாருலதாவுக்கும், சில போலீசாருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. எனவே, இந்த கோணத்திலும் விசாரணை நடக்கவுள்ளது.
சாருலதாவின் மோசடி குறித்து முழுமையாக அறிய, அவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கோர்ட் அனுமதி கிடைத்தால், இன்று சாருலதா போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்த மோசடியில் உள்ள போலீஸ் அதிகாரிகளை காப்பாற்ற நினைக்காமல், நியாயமான முறையில் விசாரணை நடந்தால், பல போலீஸ் அதிகாரிகள் இந்த மோசடியில் சிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
சென்னையைச் சேர்ந்த மோகனசுந்தரம் இரண்டு லட்சம் ரூபாய், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அன்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், தொட்டியம் பெரியபள்ளிபாளையத்தைச் சேர்ந்த அசோக்குமார் மூன்று லட்சம் ரூபாய், நாமக்கல்லைச் சேர்ந்த தனசீலன் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த லோகநாதன் 50 ஆயிரம் ரூபாய் சாருலதாவிடம் கொடுத்து ஏமாந்ததாக, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் நேற்று புகார் செய்தனர்.
சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்-பெண் அதிகாரி கைது
தட்ஸ்தமிழ் சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2009சென்னை: ஏஜெண்டுகளிடம் பணம் வசூலித்துக் கொண்டு பாஸ்போர்ட் வழங்கியதாக
சென்னை பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு பெண் புரோக்கரும் கைதாகியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக
சிபிஐ அதிகாரிகளுக்கு
புகார் சென்றது.
ஒரு புரோக்கர் ரூ.13,000 வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வாங்கித் லட்சுமணன் என்பவர் சிபிஐயில் புகார் செய்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை பாஸ்போர்ட் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
நள்ளிரவு வரை நடந்த சோதனையில் பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவரின் காரில் ரூ.5 லட்சம் பணம் இருந்ததாகவும் அதை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியாதகவும் தெரிகிறது. மேலும் இரவிலேயே அந்த அதிகாரியின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த ரெய்டின்போது அங்கிருந்த 24 புரோக்கர்களும் சிக்கினர். டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் பாத்திமா என்பவரும் அடக்கம். இவர் தான் ரூ. 13,000 தந்தால் உடனே பாஸ்போர்ட் வாங்கித் தருபவர் என்கிறார்கள். அவரிடம்
விசாரணை நடத்தியதில், பாஸ்போர்டுக்கு தான் வசூலிக்கும் பணத்தில் தான் ரூ. 4,000த்தை மட்டும் வைத்துக் கொண்டு ரூ.9,000த்தை பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
அவர் கை கைட்டியதையடுத்து அந்த பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இன்று அவரை கைது செய்ததாகத் தெரிகிறது. இதை சிபிஐ உறுதி செய்யவில்லை.
அதே நேரத்தில் பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.
=======================
சென்னை, மதுரை பாஸ்போர்ட் அலுவலகங்களில் ரெய்டு : சி.பி.ஐ., அதிரடியில் சிக்கினார் பெண் அதிகாரிதினமலர் பிப்ரவரி 06,2010சென்னை : சென்னை மற்றும் மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் சி.பி.ஐ., போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக, மதுரை பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி உட்பட எட்டு பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அச்சோதனையின் போது, மண்டல பாஸ் போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரான மற்றொரு பெண் என, இருவர் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் பணம் பெற்றுக் கொண்டும், போலி ஆவணங்களை தயாரித்தும் பாஸ்போர்ட் வழங்குவது தொடர்ந்து வருவதாக சி.பி.ஐ.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
========================
இந்த செய்திகள் எல்லாம் கண்மணிகளின் அரும்பெரும் சாதனைகளை சொல்லும் ஒரு சிறு துளிதான்.