இந்தியாவில் வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் தவறான குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ள பல மருமகள்களால் பரவலாக நாடு முழுதும் பயன்படுத்துப்பட்டு வருகிறது என்று அனைவருக்கும் தெரியும். பின்வரும் செய்தியில் மனைவி தனிக்குடுத்தனம் போகவேண்டும் என்று கணவனை வற்புறுத்தியதால் கணவா் விவாகரத்து கேட்டிருக்கிறாா். ஆனால் மனைவியோ கணவா் வீட்டாா் வரதட்சணை கேட்டதால் போலிஸிடம் சென்று கணவனை கவனித்து அறிவுரை கூறுமாறு கூறியதாக சொல்லியிருக்கிறாா். மேலும் தனக்கு வயது 36 இனிமேல் விவாகரத்து செய்து அடுத்து புது வாழ்க்கையை தொடங்குவது என்பது கடினமான காரியம் அதனால் விவாகரத்து கொடுக்கக்கூடாது என்று கேட்டிருக்கிறாா். அவரது சொல்லை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் வழக்கம்போல கணவனை அழைத்து அட்வைஸ் (அல்வா) கொடுத்து அனுப்பியிருக்கிறது.
இந்த செய்தியில் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் என்னவென்றால் சமீபத்தில் பெண்ணின் திருமண வயதை நிா்ணயிப்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயா்த்தினால் பெண் மனப்பக்குவம் அடைந்து மண வாழ்க்கை சரியாக இருக்கும் என்று கருதுகிறாா்கள். ஆனால் பின்வரும் செய்தியை பாா்த்தால் பெண்ணின் திருமண வயதை 35ற்குமேல் உயா்த்தினால் மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டாலும் இதற்குப்பிறகு விவாகரத்து செய்து புது வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்று நீதிமன்றமே முடிவு செய்து பல தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்காமல் பல குடும்பங்களை சிதையாமல் பாதுகாக்கும். அதனால் இந்தியாவில் பெண்ணுக்கு சரியான திருமண வயது 35 என்று நிா்ணயிக்கலாம்.
இந்த செய்தியில் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் என்னவென்றால் சமீபத்தில் பெண்ணின் திருமண வயதை நிா்ணயிப்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயா்த்தினால் பெண் மனப்பக்குவம் அடைந்து மண வாழ்க்கை சரியாக இருக்கும் என்று கருதுகிறாா்கள். ஆனால் பின்வரும் செய்தியை பாா்த்தால் பெண்ணின் திருமண வயதை 35ற்குமேல் உயா்த்தினால் மணவாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டாலும் இதற்குப்பிறகு விவாகரத்து செய்து புது வாழ்க்கையை எப்படி தொடங்குவது என்று நீதிமன்றமே முடிவு செய்து பல தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்காமல் பல குடும்பங்களை சிதையாமல் பாதுகாக்கும். அதனால் இந்தியாவில் பெண்ணுக்கு சரியான திருமண வயது 35 என்று நிா்ணயிக்கலாம்.
அக்டோபர் 28,2014 தினமலா்
பெங்களூரு : திருமணமான மூன்றே மாதங்களில், தம்பதிகளுக்குள் ஒத்துப்போகவில்லை என்று கூறி, விவாகரத்து கேட்ட கணவருக்கு, அறிவுரை கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம்,
விவாகரத்து வழங்க மறுத்தது.
கருத்து வேறுபாடு : தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிஷ், கீதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருக்கு, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 12 நாட்களிலேயே, கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கீதா பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அவரை மீண்டும் அழைத்துவர, கணவர் முயற்சிக்கவில்லை. மாறாக, 3 மாதங்களுக்கு பின்னர், விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், தங்களுக்கு திருமணமாகி, மூன்றே நாளில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று, மனைவி பிடிவாதம் பிடித்தார்; என் பெற்றோருடன், தேவையின்றி சண்டை போட்டார். எங்கள் மீது போலீசாரிடம் பொய்யான புகார் செய்துள்ளார். எனவே, அவருடன் என்னால் வாழ முடியாது என, குறிப்பிட்டிருந்தார். ஆனால், கணவரின் குற்றச்சாட்டை, கீதா மறுத்துள்ளார். கணவர் வீட்டார், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி தொந்தரவு செய்து தாக்கினர். இதுகுறித்து போலீசாரிடம், எந்த புகாரும் செய்யவில்லை. கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவருக்கு அறிவுரை கூறும்படி, போலீசாரிடம் முறையிட்டேன். இதையடுத்து, அவர்கள், என் கணவரை அழைத்து அறிவுரை கூறினர். 15 நாட்களில், அழைத்து செல்வதாக போலீசாரிடம் கணவர் கூறினார்.
கால அவகாசம் : ஆனால், அவ்வாறு செய்யவில்லை. எனக்கு, தற்போது 36 வயது. கணவருக்கு 42 வயது. இது விவகாரத்து பெற, உகந்த வயதல்ல என்றார். இவரது வாதத்தை ஏற்று கொண்ட குடும்பநல நீதிமன்றம், விவகாரத்து வழங்க மறுத்தது. இதை எதிர்த்து கிரிஷ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எந்த பெண்ணாக இருந்தாலும், தன் பிறந்த வீட்டை விட்டு விட்டு, கணவர் வீட்டுக்கு வரும் போது, அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு, மாற்றி கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படும். ஆரம்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள, இத்தகைய கால அவகாசம் அவசியம். வெறும், 12 நாட்களில், கணவர் வீட்டாருடன் ஒன்றிப்போவது சாத்தியமில்லை. இவ்வழக்கில் கணவர் கிரிஷ், மனைவி கீதாவுக்கு புதிய சூழ்நிலையில் ஒன்றி போக வாய்ப்பளிக்கவில்லை. பிறந்த வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர முயற்சிக்கவில்லை. ஆனால், கீதாவோ, கணவர் வீட்டுக்கு செல்ல, ஆர்வமாக உள்ளார். இதற்கான, முயற்சிகளும் செய்துள்ளார் என்பது, அவர் கிரிஷூக்கு அனுப்பிய செய்திகளின் மூலம் உறுதியாகிறது.
ஓராண்டு... : அது மட்டுமல்ல, திருமணமாகி, வெறும் மூன்றே மாதத்தில் விவகாரத்து கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகி ஓராண்டு ஒன்றாக வசித்த பின்னரே, விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கில், குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான். இவ்வாறு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.