Thursday, September 01, 2011

இந்தியாவில் நடக்கும் அரிய வினோதங்கள்!

செய்தித்தாளில் வந்துள்ள பின்வரும் இரண்டு படங்களையும் பாருங்கள் (தினமலர் செய்திப்படம் 3.9.2011).

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் நாட்டிலுள்ள மக்கள் உண்பதற்கு தேவையான உணவுப் பொருட்களை விவசாயம் செய்ய தண்ணீர் கேட்டதற்கு அவருக்கு கிடைக்கும் மரியாதை!


மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் , வித்யாசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது அதிரடிப்படையினர் தடியடி நடத்தினர்.
=======

சட்டத்தில் உள்ள வழிமுறைப்படி அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு அரசியல்வாதிகள் செய்யும் போராட்டத்தை வேடிக்கை பார்க்கும் காவல்துறை!!!

நில மோசடி வழக்கில் திருச்சேங்கோடு நகராட்சி சேர்மன் நடேசன் கைது செய்யப்பட்டத கண்டித்து அவரது ஆதவாளர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 comment: